ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
www.puthinam.com
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இயலாத தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா? என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்து நியாயம்தான் என்று ஆனந்த விகடன் வார இதழ் கருத்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
வன்னி மக்கள் மீதான படுகொலையை தடுத்து நிறுத்துமாறு அவசர வேண்டுகோள்- பா.உ.கஜேந்திரன் வன்னியில் உள்ள மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவரும் இனப் படுகொலைகளை தடுத்துநிறுத்த அவசர நடவடிக்கை எடுக்கும்படி கொழும்பிலுள்ள தூதரகங்களிடம் அவசர கோரிக்கை ஒன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்ப யாழ் மாவட்ட பா.உ செல்வராஜா கஜேந்திரன் விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள நோர்வே, அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம்க னடா ஆகிய நாட்டு துதரகங்களுக்கு அவர்மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ள அவசரகடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு. வன்னிமக்கள் மீதுஇடம் பெறும்மனித வன்னி மக்கள் மீது இடம் பெறும் மனித வதைகளை தடத்து நிறுத்தஅவசர நடவடிக்கை எடுக்கும் படிகோருகின்றேன் கடந்த ஒருவாரகாலமாக …
-
- 1 reply
- 848 views
-
-
இன்னொரு கடிதம்: கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்... அன்பிற்குரியவர்களே! அண்மையில் நான் ~ஒரு கடிதம்| எழுதினேன். அதற்கு வந்திருந்த கருத்துக்களில் பல கேள்விகளாகவும், சந்தேகங்களாகவும் இருந்தன. அவற்றை மனதில் கொண்டு இப்போது ~இன்னொரு கடிதம்| எழுதுகின்றேன். கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத்தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு மு…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஊடக அடக்கு முறையை எதிர்த்து இன்று கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி [ வெள்ளிக்கிழமை, 09 சனவரி 2009, 12:19.14 PM GMT +05:30 ] சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்தும் ஊடக சுதந்திரத்தை அடக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தின் அருகே இன்று நண்பகல் 12.15 மணியளவில் அனைத்து ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தின. பேரணியின் போது பதாதைகளைத் தாங்கியவாறு 'ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்' போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன.அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து காணப்பட்டனர். சுதந்திர…
-
- 1 reply
- 587 views
-
-
சேதுவை எதிர்ப்பவர்கள் இலங்கையின் ஆதரவாளர்கள்-கருணாநிதி வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2009, 12:04 [iST] சென்னை: இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கிற சில கட்சிகள் தான் சேது சமுத்திர திட்டத்துக்கு தடையை ஏற்படுத்தி வருவதாக முதல்வர் கருணாநிதி கூறினார். இவர்கள் கூட தமிழ்நாட்டில் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார். சென்னை துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் இந்தியாவிலேயே மிக நீளமான மேம்பால சாலைப் பணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அடிக்கல் நாட்டினார். இதில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், 2006ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகியுள்ள பகு…
-
- 6 replies
- 2k views
-
-
புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா படை லெப். கேணல் தர அதிகாரி பலி யாழ். குடாநாட்டில் இருந்து பின்வாங்கிச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி நேற்று வியாழக்கிழமை 53 ஆவது படைப்பிரிவின் ஒரு பகுதி தளபதியான லெப். கேணல் நலிந்த குமாரசிங்க கொல்லப்பட்டுள்ளார். பளையில் இருந்து முன்னேறிச் செல்லும் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து நலிந்த குமாரசிங்க சென்றபோது புலோப்பளையில் பொறிவெடியில் சிக்கி கொல்லப்பட்டார். இவரது ஜீப் வாகனம் சேற்றுப்பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தபோதே பொறிவெடி வெடித்துள்ளது. இவருடன் சமிக்ஞை அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். லெப். கேணல் நலிந்த குமாரசிங்க எயார் மொபைல் பிரிகேட்டின் 5 ஆவது …
-
- 0 replies
- 878 views
-
-
இலங்கை பிரச்சனையில் முறையிடுவது கடைசி முயற்சி: சோனியாகாந்திக்கு ராமதாஸ் கடிதம் சென்னை: முல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை (சோனியாகாந்தி) நான் அணுகி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், விடுதலைப்புலி போராளிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் போர் நடத்துகிறார்கள் என்ற போர்வையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
வட்டுவாகலில் விமானக்குண்டு வீச்சு உழவூர்தி எரிந்து அழிந்தது திகதி: 09.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நேற்று சிறிலங்கா விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இடம்பெயர்;ந்து சென்று கொண்டிருந்த உழவூர்தி ஒன்று எரிந்து அழிந்துள்ளது. இதேவேளை புதுக்குடியிருப்பு அரச அதிபர் பணிமனைக்குச் சொந்தமான ஊர்தி ஒன்று சேதமடைந்துள்ளது. sankathi
-
- 0 replies
- 962 views
-
-
விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா யோசனை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தத் தேவையில்லை என்று இலங்கைக்கு அமெரிக்கா யோசனை கூறியுள்ளது. தனி நாடு கோரி விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. தற்போது இலங்கை ராணுவத்தின் கை மேலோங்கியுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் கோட்டை என கருதப்படும் கிளிநொச்சி பகுதியையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவது தேவையற்றது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை மூலம் இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டம் இதுவாகத்தான் இருக்கும். விடுதலைப் புலிகளி…
-
- 5 replies
- 2.9k views
-
-
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக துணைச் செயலாளர் சி. மகேந்திரன்: 'இந்திய அரசின் பதில் என்ன?' இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி. மகேந்திரன், ஜனவரி 8ஆம் திகதி, தமிழக நாளேடு தினமணியில் "இந்திய அரசின் பதில் என்ன?" என்று தலைப்பிட்டு எழுதியுள்ள ஆசிரியத் தலையங்கப் பக்க கருத்து கட்டுரை: கிளிநொச்சி வீழ்ந்ததைப் பற்றியும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிடிபடப் போகிறார் என்பதைப் பற்றியும் பரபரப்பாக பேசுவதை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு, யுத்தத்தின் மறுபக்கத்தை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியமானதாகும். போரில் நேரடியாக ஈடுபடுபவர்களை விட பொது மக்கள் அடையும் துயரம் வார்த்தைகளால் சொல்லி மாளாது. ஆகாயத்திலிருந்து கொட்டப்படும் குண்டுகளிலிருந்து உயிர் காத்துக் கொள்…
-
- 0 replies
- 861 views
-
-
சிங்களத்தின் கனவுகள் ஓர் நாள் தொகுக்கப்படும் திகதி: 09.01.2009 // தமிழீழம் // விடுதலைப்புலிகளை இவ்வாண்டுக்குள் முற்றாக ஒளித்து விடுவோம் என சிறிலங்காவின் தரைப்படத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் ஒரு தடவை விதந்துரைத்துள்ளார். இதே போன்ற கருத்தை கடந்த ஆண்டும் முன்வைத்தார். ஆனால் அவர்களால் முடியாது போயவிட்ட நிலையில் 2009 பிறந்த போதும் பழைய பாணியில் இவ்வாண்டு முடிவதற்குள் புலிகளை ஒழித்துக் கட்டி விடுவேன் என ஊடகங்களிற்கு சொல்லி மகிழ்ச்சி அடைந்துள்ளார். சரத் பொன்சேகாவால் அது முடியுமா? அவரால் கடந்த ஆண்டு ஏன் அதைச் செய்யவில்லை? அவர்களால் முடியாது இனி எப்போதும் முடியாது இவ் ஆண்டுகளில் சிங்களப்படை சந்தித்த இழப்பு என்பது எவ்வளவு பெரியது? இதனை இவர்களால் விடுபட முடியாது தவ…
-
- 2 replies
- 3.1k views
-
-
இனி பிழைக்குமா ஈழத் தமிழினம்? - ரவிக்குமார் எம்.எல்.ஏ. 'இலங்கைப் போர் முனையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது?' என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது! புலிகளின் நிர்வாகத் தலைமையிடமாகச் செயல்பட்டு வந்த கிளிநொச்சி, இவ்வளவு சீக்கிரம் வீழ்ந்துவிடுமென இலங்கை அரசே கூட எதிர்பார்க்கவில்லை. இலங்கை ராணுவத்தின் பிடிக்கு கிளிநொச்சி வருவதற்கு முன்பு வரை அங்கே கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்தது. சிங்களப் படையினர் பலர் கொல்லப்பட்டு ஏராளமானோர் காயமடைந்திருந்தார்கள். இலங்கை ராணுவம் மரணக் கண்ணிக்குள் சிக்கிக் கொண்டுவிட்டதாக ராணுவ நோக்கர்கள் கருத்து தெரிவித்துவந்தார்கள். ஆனால், எவரும் எதிர்பார்க்காத விதமாக கிளிநொச்சியை புலிகள் காலி செய்துவிட்டு பின்வாங்கிச் சென்றிருக்கிறார்கள…
-
- 12 replies
- 3k views
-
-
சிறிலங்காவின் குடிமக்கள் அனைவரும் உடனடியாக பதிவு செய்தாக வேண்டும் என்று சிறிலங்கா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 376 views
-
-
மகிந்த ராஜபக்சவினால் உதயம் உருவாகி விட்டதாக வர்ணிக்கப்படும் கிழக்கின் மோசமான நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
வவுனியா பெரியகுளத்தில் முச்சக்கர வாகனத்தில் வந்த ஆயுததாரிகளால் 30 வயது பொதுமகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் எழுதிய சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை என்கிற கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில் வியாழனன்று நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தகத்தை வெளியிட, முதல் படியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார். அப்போது நல்லக்கண்ணு பேசியதாவது: இந்த நூலில் இலங்கையில் ரத்தக் கண்ணீர் என்ற தலைப்பில் அங்கு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து செழியன், 1983_ல் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. இன்றைக்கு ரத்தக் கடலே அங்கு ஓடுகிறது. பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவில்லையே ஏன்? என்று கேட்டால், ராஜபக்சே விரும்பாதபோது அழையா விருந்தாளியாக ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழீழ மற்றும் பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி மலேசியாவில் உள்ள பல்லின மக்களையும் உள்ளடக்கிய இலங்கைப் போருக்கு எதிரான கூட்டமைப்பு பெரும் மெழுகுவர்த்திப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் நிகழ்த்தி வரும் எறிகணைத் தாக்குதல்களை கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 377 views
-
-
சிறிலங்கா படையினரின் தொடர் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்தாக்குதல்களால் முரசுமோட்டை ஆயுர்வேத மருத்துவமனை, நவஜீவனம் சிறுவர் இல்லம் ஆகியன கடுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலையை நானும் எனது அரசாங்கமும் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் என இலங்கை ஜனாதிபதி மகிந்த கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளரும் பலவருடங்களுக்கும் மேலாக எனக்கு மிகவும் அறிமுகமான எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான திரு.விக்கரமதுங்கவின் அகால மரணம் எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. இக்காட்டு மிராண்டித் தனமான நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விசாரித்து உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துமாறு நான் பொலிஸாரை பணித்துள்ளேன். கவலையான இச்சந்தர்ப்பத்தில் திரு.விக்கிரமதுங்க அவர்களின் குடும்பத்தாருக்கும் சண்டே லீடர் பத்திரிகை அல…
-
- 13 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி கல்வி வலயத்தில் 73 பாடசாலைகள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 487 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த ஆனையிறவை ஆக்கிரமித்து விட்டதாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 411 views
-
-
கிளிநொச்சி போய் விட்டது , ஏன் எல்லமே பொகுது என்று கவலயுலன் இருக்கும் எம் உரவுகலுக்கு இது நல்ல பதில் தரும் என்று நினைகிறேன் இந்த வருடம் எமக்காகும் http://www.tamilkathir.com/news/803/58/04-...view_audio.aspx
-
- 8 replies
- 2.6k views
-
-
"சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-