ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142899 topics in this forum
-
ஐ.நா செயலா, தமிழக முதல்வர் ஆகியோருக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர கடிதம் திகதி: 08.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] கிளிநொச்சியை ஆக்கிரமித்து சிறிலங்காப் படையினர் வன்னிப் பகுதியில் உள்ள மக்கள் மீது கொத்துக் குண்டுகளை வான் தாக்குதல்கள் மூலம் மக்களை படுகொலை செய்து வருகின்றனர். சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையின் உச்சகட்டமாகவே எமது மாணவர் ஒன்றியம் இதனைப் பார்க்கிறது. எனவே சிங்கள அரசின் திட்டமிட்ட இவ் இனப் படுகொலையை உடனடியாக தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிற்கும் தமிழக முதல்வரிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது. சங்கதி
-
- 0 replies
- 791 views
-
-
தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை [07 - January - 2009] வ.திருநாவுக்கரசு தமிழ்த் தலைமைகள் இந்திய அரசை நம்புவதில் நன்மை எதுவுமில்லை "கிளிநொச்சியைக் கைப்பற்றியதானது எமது வரலாற்றில் பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டு வந்த இராணுவ வீரகாவியத்தின் பதிவுகளில் மிக உச்சமான கௌரவம் கொண்டதாகும்' என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் மந்திரி பிரதானிகள் மத்தியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது உதாரணமாக துட்டுகைமுனு எல்லாளன் போரில் ஈட்டப்பட்ட வெற்றியினை விடவும், கிளிநொச்சியில் ஈட்டிய வெற்றி பிரமாதமானதென ஜனாதிபதி ராஜபக்ஷ கருதியுள்ளார் போல் தெரிகிறது. நிகரற்றதொரு வெற்றியென அதனைக் குறிப்பிட்ட அவர். அதேநேரத்தில் கிளிநொச்சியைக் கை…
-
- 4 replies
- 1.4k views
-
-
சென்னை: ஒரு நாட்டுக்குப் போவது என்பது சாதாரணமானதல்ல. கதவை உடைத்துக் கொண்டா போக முடியும். பேச்சுவார்த்தைக்கு இன்னும் இலங்கை தயாராகவில்லை என்று பிரணாப் முகர்ஜி இலங்கை போவது ஏன் தாமதமாகிறது என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கோபமாக பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பிரணாப் முகர்ஜி இலங்கை போவது ஏன் தாமதமாகிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு பாலு பதிலளிக்கையில், இலங்கை பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜி அங்கு சென்று பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது. இந்தப் பேச்சு வார்த்தைக்கு இலங்கை …
-
- 10 replies
- 1.9k views
-
-
இலங்கை பிரச்சினை குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆர்.நல்லக்கண்ணு [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 02:26.29 PM GMT +05:30 ] இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் இந்த பிரச்சினையில் தலையிடுவதன் மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுக் காண்பதில் தாம் எந்த விதமான தியாகங்களையும் செ…
-
- 0 replies
- 887 views
-
-
அவசரகால சட்டம் என்னும் அரக்கன் 96வாக்குகளால் நேற்று சிங்கள பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகளும் எதிராக 10வாக்குகளும் அளிக்கப்பட்டன. அந்த 10 வாக்குகளும் யாருடயது என்று பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்ப்பினுடயது. நேற்றைய வாக்கெடுப்பின்போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது தங்களின் சிங்கள விசுவாசத்தை காட்டிஉள்ளது. ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை அரசில் அங்கம்வகிக்கும் இ.தொ.காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் சபையில் இருக்காமல் தங்கள் டமிழ் விசுவாசத்தையும் சிங்கள விசுவாசத்தையும் சேர்த்து காட்டியுள்ளனர்.
-
- 0 replies
- 838 views
-
-
கல்கிசை பகுதியில் சற்று முன் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.இதனால் புகயிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளனவாம்.
-
- 0 replies
- 1.1k views
-
-
'நாமே வெல்வோம்" எனும் மாவீரர் நாள் உரை இந்த மண் எமது மண்: தமிழர்கள், அந்தப்ப+மியின் ப+ர்விகக் குடிகள்: அமெரிக்கப் ப+ர்வீகர்களான செவ்விந்தியர்களின் தலைவன் சியால்த் உணர்ந்து சொன்னது போல 'இதே ப+மி எங்களின் தாய். நாங்கள் இந்த ப+மியின் ஒரு அங்கம். அது எங்களில் ஓர் அங்கம். வாசமலர்கள் எங்கள் சகோதரிகள். மானும், குதிரையும், ராஜாளி பறவையும் எங்கள் சகோதரர்கள், பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. ஓடைகளிலும், ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல: அது எங்கள் மூதாதையரின் இரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" - அதுபோல 'இந்த மண்ணிலே தான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன.…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழர் விரோத 'இந்திய' பிரதமர் மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் இன்று 07.01.2009 நாளை காலை 11 மணி அளவில் சென்னை நினைவரங்கம் (மெமோரியல் ஹால் ) அருகில் மன்மோகன்சிங் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இலங்கை சிங்கள இனவெறி அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இவ்வினப்படுகொலையை எதிர்த்து ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களஅரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்திய அரசின் விரிவாதிக்க கண்ணோட்டமும், தேசிய இன ஒடுக்குமுறையை உறுதிபடுத்த தொடர்ந்து சிங்கள இனவெறி அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதோடு போரையும் இந்திய அரசுதான் நடத்தி வருகிறது. சிங்கள அரசோ தட…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பு - கல்கிசையில் இரயில் பாதைக்கு அருகில் சிறிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. - அத தெரண.
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 3.3k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமத்தில் உள்ள பழைய கண்டி வீதி ஊடாக சிறிலங்கா படையினர் நேற்று மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் ஏழு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 553 views
-
-
"கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை' [06 - January - 2009] கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார். நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சி…
-
- 7 replies
- 2k views
-
-
இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுதது நிறுத்துமாறு வலியுறுத்தி - இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுதது நிறுத்துமாறு வலியுறுத்தி இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி நேற்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். சென்னை மெமோரியல் மண்டபம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்று, இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார். அவர் மேலும் பேசுகையில், "கிளிநொச்சியை சிறிலங்கா அரசு கைப்பற்றி விட்டதாக, இராணுவம் கூறுகிறது. அங்கு மக்களே இல்லை என்றும் கூறுகிறார்கள். அப்படி என்றால்…
-
- 0 replies
- 654 views
-
-
கட்டளை தளபதி கேர்ணல் தீபன் அவர்களின் வேண்டுகோள்
-
- 2 replies
- 5.4k views
-
-
வன்னியில் சிங்களவர் வாழ்ந்தமைக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளனவாம்! - புதுக்கதை அவிழ்க்கின்றது ஹெல உறுமய [07 ஜனவரி 2009, புதன்கிழமை 10:15 மு.ப இலங்கை] வன்னியில் அதிகமான சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு சுமார் 1,500 பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. அதேபோல் சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1,500 வாவிகள் அங்கு உள்ளன - என்று ஜாதிக ஹெல உறுமய நேற்று நாடாளுமன்றில் கூறியது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரரே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:- மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்குக் கிடைத்த மிகச் சிறந்த ஜனாதிபதி. அவரால் மாத்திர…
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு இனி ஒரு எழுச்சி என்பது.. அது அவர் காணும் பகல் கனவாகவே அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அதன் தலைவருக்கோ இனி என்றும் விடிவு ஏற்படாதென இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றிரவு (06.01.2008)தொலைக் காட்சிச் சேவையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த இரண்டரை வருட காலத்தில் கிழக்கிலும் வடக்கிலும் இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் 15,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்படடனர். இலங்கை இராணுவத்தின் தரப்பில் இரண்டாயிரம் பேரே உயிரிழந்தனர். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் புலிகளின் ஆட்பலம் சுமார் இரண்டாயிரமாகவே இருந்தது. ஆனால் அதே ஆண்டில் மேற்க…
-
- 3 replies
- 2.3k views
-
-
செய்தி பிரணாப் முகர்ஜியை இப்போதும் அனுப்ப தயார்; ஆனால் இலங்கை அரசு விரும்பவில்லை: டி.ஆர். பாலு [ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 12:31.43 PM GMT +05:30 ] பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப நாங்கள் இப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால் அதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை. இலங்கை அரசு விரும்பாமல் நமது அமைச்சரை அங்கு அனுப்ப முடியாது என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார். இது குறித்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்னொருவர் வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்ல நாம் விரும்பினால், நம்மை வரவேற்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அவர்களே விரும்பாவிட்டால், நாம் எப்படி அவர்கள் வீட்டுக்குச் …
-
- 19 replies
- 2.8k views
-
-
அரசியல் தீர்வின் அவசியத்தை விரைவு படுத்தியுள்ளது-கிளிநொச்சியை கைப்பற்றியமை குறித்து பிரிட்டன் அறிக்கை வீரகேசரி நாளேடு 1/7/2009 8:47:29 AM - கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டிய அவசியம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் மலோ பிரஷன் பிரபுவும் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த டக்ளஸ் அலெக்சாந்தரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அரச படையினரால் புலிகளின் முன்னாள் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடக்கம் அனைத்து விடயங்களையும்நாம் உன்னிப்பாக அவதானித்து …
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் ஈழ ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை: திருமா ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த தமிழ் ஈழ ஆதரவு கட்சிகளுடன் 10ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கிளர்ந்துள்ள வெகுமக்களின் உணர்வுகளை குவிமய்யப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிதலைவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் சந்தித்து கலந்தாய்வு செய்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரை சந்தித்து பேசியிருப்பதுடன் மேலும் சில தலைவர்களை சந்தித்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சரான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 588 views
-
-
கிளிநொச்சியில் உள்ள முரசுமோட்டை பகுதியில் சிறிலங்கா படையினரின் தொடர் எறிகணைத் தாக்குதல்களினால் இரு பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 428 views
-
-
சிறிலங்கா படையினர் பாதைகளை மூடியிருப்பதால் வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நோயாளர் ஒருவர் தருமபுரம் மருத்துவமனையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
வன்னியில் இரண்டரை லட்சத்திற்கும் குறைவான மக்களே இருக்கின்றனர் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இராணுவக்கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியில் 2 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் குறைவானவர்களே இருக்கக்கூடும் என அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வன்னியிலுள்ள மக்கள் தொகைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதõவது: என்னால் எண்ணிக்கையைக் கூற முடியாது. ஆனால், நிச்சயமாக இரண்டரை லட்சம் மக்கள் அங்கில்லை. இந்தவிடயத்தில் நான் விஞ்ஞானபூர்வமான ஒரு ஆய்வை மேற்கொண்ட…
-
- 0 replies
- 1.9k views
-
-
-வீரகேசரி இணையம் 1/7/2009 10:10:59 AM- அம்பாறை மாவட்டத்தில் வெள்ளைவான்களில் வந்த ஆயுததாரிகளினால் இரு இளைஞர்கள் வெவ்வேறு இடங்களில் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றுக்கு ஆட்டோவில் சென்ற திருக்கோவில் வினாயகபுரத்தைச் சேர்ந்த 25 வயதான வர்ணகுலசூரிய பெர்னாண்டோ என்பவரும், கல்முனை கடற்கரை வீதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் கிரிதரன் வயது 25 என்பவருமே இவ்வாறு கடத்தப்பட்டவர்களாவார். இவர்களில் பெர்னாண்டோ என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருந்த வேளையில் கருணா குழுவின் தொல்லைகளினால் அக்கரைப்பற்று காவல்நிலையத்தில் சரணடைவதற்காக தாயாருடன் ஆட்டோவில் சென்ற வேளையில் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்.…
-
- 0 replies
- 583 views
-
-
வன்னி நிலம் வளையாது - ஓர் மீள் பார்வை [நிலவரம்] தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்களாகவும் யுத்த மோகம் கொண்டவர்களாகவும் சமாதானத்தை அடைவதற்கு தடையான சக்தி என்றும் பிரச்சாரப்படுத்தி வருகின்ற சிங்களப் பேரினவாதம் தன்னடைய தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் நோக்கில் பல வியாக்கியானங்களுக்கு அப்பால் உறுதியான பலத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளை உண்;மையில் தமிழ்மக்களையும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்திருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த தமிழ்தேசிய கூட்டமைப்…
-
- 0 replies
- 2.2k views
-