ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142870 topics in this forum
-
செவ்விந்தியர், மஓரி போன்ற பண்டைய இனங்கள் போல சர்வதேசத்தவரால் பாதுகாக்கப்பட வேண்டிய இனத்தவர்கள் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள். அவர்களின் பாரம்பரியங்களும் அதேபோல் பாதுகாக்கப்பட வேண்டியவைகள். வெள்ளைக்காரர்கள் வன்முறையால் கொள்ளை அடித்துக் கையேற்ற அவர்களின் உரித்துக்களை வஞ்சகமாக அபகரித்துக் கொண்ட எம் நாட்டு சிங்கள மக்கள் தலைவர்கள், காலத்திற்கு ஒரு கருத்தை வெளிப்படுத்தித் தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கும் அவ்வுரித்துகளை திரும்பக் கொடாது ஏமாற்றி வருகின்றனர். **கலாநிதி ஆ.க.மனோகரன் எழுதிய "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும், ஒருவரலாற்றுப் பார்வை 1948 2007' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த ஞாயிறன்று மாலை கொழும்பு இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் நடைபெ…
-
- 0 replies
- 825 views
-
-
வன்னி மக்களுக்கு தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொதிகளில் பல உடைக்கப்பட்டு பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான தேர்வுத்தாள்கள் வரவேண்டிய நிலையில் இன்று ஓமந்தை சோதனை நிலையத்தை சிறிலங்கா படையினர் மூடி போக்குவரத்தை தடைசெய்திருந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 409 views
-
-
கிளிநொச்சியில் வெள்ளப்பெருக்கால் 18 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் அழிந்தும் சேதமாகியும் உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 392 views
-
-
கருணா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் அல்ல – கட்சியின் பொதுச் செயலாளர்: http://www.globaltamilnews.net/tamil_news....=2910&cat=1 பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் அல்ல என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் நந்தகோபன் உயிரிழந்ததைத் தொடர்ந்து தலைமைப் பொறுப்புக்கு உத்தியோகபூர்வமாக இதுவரையில் எவரும் நியமிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் உயர் பீடம் தலைமைப் பொறுப்பிற்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கருணாவினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சிப்பேரவை உற…
-
- 9 replies
- 2.1k views
-
-
வன்னிப் பகுதிக்கு உடை மற்றும் துணி வகைகள் கொண்டு செல்ல சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 626 views
-
-
கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு கடந்த மூன்று மாதங்களாக சிறிலங்கா அரசாங்கம் எரிபொருட்களை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 453 views
-
-
தமிழக மக்களால் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 378 views
-
-
வடகிழக்கு கடற்பரப்பில் மீண்டும் தாழமுக்கம் வெள்ளி, 05 டிசம்பர் 2008, 00:36 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] தாயகப் பகுதியான கிழக்கு கடற்பரப்பில் 750 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் உருவாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும், சுழல்காற்றும் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சிறிலங்காவின் மேற்கு. வடமேற்கு பகுதி நோக்கி நகர்வதாகவும் வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு கரையோரப் பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது. …
-
- 1 reply
- 799 views
-
-
இலங்கை பிரச்சனை: சொதப்பும் அதிகாரிகள்-ராமதாஸ் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2008, 10:55 டெல்லி: இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடுவதில் சிரமம் இருந்தால் இதை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு போக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் தற்போதுள்ள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் நிறைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இந்தப் பிரச்சனையின் ஆழம் தெரிந்த தமிழர்கள் இடம்பெறும் ஒரு ஆலோசனைக் குழுவை பிரதமர் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்ற குழுவில் இடம் பெற்ற ராமதாஸ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தெற்கைக் கவர்ந்திழுக்கும் போர் வெ(ற்)றிப் பொறி! [05 டிசம்பர் 2008, வெள்ளிக்கிழமை 9:05 மு.ப இலங்கை] ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு அடக்குமுறையாலும், ஆயுதப் பலத்தாலும் முடிவு கட்டத் தீர்மானித்துவிட்ட கொழும்பு அரசு, அதனால் போர் முனைப்பில் தீவிரமாக நிற்கின்றது என்பது இன்று வெளிப்படையானது. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அவர்களை நிரந்தரமாக அடிமைகளாக்கும் நோக்குக் கொண்ட இந்த இன அழிப்புப் போர், தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, அவர்களை நிரந்தர அகதிகளாக்கி, அவர்களின் சமூக, பொருளாதார வாழ்வையும், அடிப்படைக் கட்டுமானங்களையும் அடியோடு சீரழித்து, தமிழர்களுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறான பேரவலத்தைக் கொடுத்து நிற்கின்றது. தமிழர் தாயகப் பகுதிகள் மீது கொடூர ய…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐ.தே.க.வின் பிரதித் தலைவராக சஜித் நியமிக்கப்பட வேண்டும் - அலிக் அலுவிஹரே: ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அலிக் அலுவிஹரே தெரிவித்துள்ளார். கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பதற்கான சகல தகுதிகளும் சஜித் பிரேமதாஸவிடம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது யோசனை குறித்த எழுத்து மூல கோரிக்கையொன்றை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அலுவிஹரே அனுப்பி வைத்துள்ளார். கட்சியின் பிரதித் தலைவர் பொறுப்பிற்கு சஜித் பிரேமதாஸவை நியமிப்பதன் மூலம் கட்சிக்கு வலு சேர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பது இன்றியம…
-
- 0 replies
- 625 views
-
-
ACF தொண்டு ஊழியர்கள் படுகொலைச் சம்பவம் குறித்து பாதுகாப்பு தரப்பிலிருந்து முரண்பட்ட சாட்சியங்கள: மூதூரில் ஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 தன்னார்வ தொண்டர்கள் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு தரப்பினர் அளித்து வரும் சாட்சியங்கள் முரண்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு சாட்சியமளித்த அதிகாரிகள் மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். படுகொலைச் சம்பவம் குறித்து வடக்கு கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிற்கு 6ம் திகதி அறிவிக்கப்பட்டதாக நேற்றைய தினம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. எனினும்…
-
- 0 replies
- 577 views
-
-
யுத்த நிறுத்தம் குறித்து கலந்துரையாட விரைவில் பிரணாப் இலங்கைக்கு விஜயம் செய்வார் – கருணாநிதி: இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தம் குறித்த மகஜர் ஒன்றை தமிழக அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமரிடம் கையளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கூட்…
-
- 0 replies
- 511 views
-
-
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் ஜனநாயக செயற்பாட்டுக்கு பெரும் தடை என்கிறது - EPDP: http://www.globaltamilnews.net/tamil_news....=2975&cat=1 கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் ஜனநாயக செயற்பாட்டுக்கு பெரும் தடையாகும் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் அதிகரித்து வரும் படுகொலைகள் ஜனநாயகச் செயற்பாட்டுக்கு பெரும் தடையாகும். நடைபெறும் படுகொலைகளைச் செய்திகளாக அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைவதாகவும் தமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொளவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு விடுவிக்கப்பட்ட போது மக்கள் விடுதலை பெற்ற உணர்வோடும் எதிர்கால நம்பிக்கைகளோ…
-
- 1 reply
- 682 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்;தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கக்க கோரி, எதிர்வரும் 8ம் திகதி, அரவாணிகள் உண்ணாவிரத, ஒப்பாரி போராட்டம் நடத்தவுள்ளனர். இது குறித்து, அரவாணிகள் அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது : இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருக்கின்றன. குடும்பத்தை விட்டு, சமூதாயத்தை விட்டு அகதிகளாக வாழ்ந்து வரும் எங்களுக்கு அகதிகளுடைய கண்ணீரின் வலி தெரியும். அரவாணிகள் அமைப்பின் சார்பில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு, மேற்படி போரட்டம் நடைபெறவுள்ளது. உண்ணாவிரதத்தை கணிமொழி எம்.பி. ஆரம்பித்து வைப்பார். எமது ஒரு நாள் வருமானத்தை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணமாக வழங்க …
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசிடமும் பிரதமரிடமும் முறையிடுவது இதுவே கடைசித்தடவை. இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மக்களின் கடும் கோபத்தை மத்திய அரசு சந்திக நேரிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நேற்று தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் டில்லியில் பிரதமரை சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பேசியுள்ளனர். இச்சந்திப்பு குறித்து டில்லியில் நிருபர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள தா.பாண்டியன் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் : இலங்கையில் போர்நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்திடும் நடவடிக்கைகளை…
-
- 0 replies
- 935 views
-
-
தயவு செய்து youtube இல் காணொளிகளை தரப்படுத்துவதுடன் கருத்துகளையும் பதிந்து விடுங்கள்
-
- 0 replies
- 756 views
-
-
வணக்கம் தாயகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதான சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். இடம்பெயர்ந்த மக்கள் ஏற்கனவே தங்கள் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்து வந்ததுடன் இயற்கையின் அனர்த்தத்தினால் மழை வெள்ளம் காரணமாக தங்கள் இடம்பெயர்ந்துவரும் போது கொண்டு வந்த பொருட்களை அனைத்தையும் இழந்ததுடன் தங்கள் உயிரை மட்டுமே இயற்கையிடமிருந்து காக்கக் கூடியதாக இருந்த நிலையில் சிறிலங்காவின் வான்படையினர் இரவு வேளையில் வெள்ளக் காட்டின் நடுவே கிடைத்த சிறிய இடங்களில் படுத்துறங்குகையில் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டுவீச்சின் போது மக்கள் ஒரு இடமும் செல்ல முடியாது திகைத்து நின்றார்கள். பதுங்குகுழிகள் முற்றாக வெள்ளத்தால் நிறைந்த ந…
-
- 0 replies
- 893 views
-
-
தேசியத் தலைவர் இம் முறை நிகழ்த்திய மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி நட்புக் கரத்தை நீட்டியிருக்கிறார். இதைப் பற்றி பலர் பலவாறு எழுதி வருகிறார்கள். சிங்களத்தினதும், ஒட்டுக் குழுக்களினதும் ஊடகங்கள் எப்போதும் போன்று “விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள், அதனாற்தான் இந்தியாவின் தயவை வேண்டி நிற்கின்றார்கள்” என்று எழுதி வருகின்றன. தேசியத் தலைவர் இந்தியாவை நோக்கி பல முறை நட்புக் கரத்தை நீட்டியிருக்கின்றார். ஆனால் இந்திய அதிகார பீடம் தேசியத் தலைவரின் அழைப்பை ஒவ்வொரு முறையும் தவறாகவே அர்த்தப்படுத்தி இருக்கின்றது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியப் படையினர் கனரக பீரங்கிகள், டாங்கிகள், வானூர்த்திகள் சகிதம் தமிழீழ மண் மீது 10 ஒக்டோபர் 1987 அன்று போரைத் தொடுத்…
-
- 5 replies
- 1.8k views
-
-
சிறீலங்காவில் வாழ்ந்து கொண்டே சிறீலங்காவின் பயங்கரவாத அரசின், அதன் படைகளின் தமிழர் விரோத செயற்பாடுகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்த தமிழ் ஊடகவியலாளன் Tissainayagam த்தை விடுவிக்கக் கோரி சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) அறிக்கை விடுத்துள்ளது. அதன் அறிக்கையில் அது சிறீலங்கா அரசு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களை துஸ்பிரயோகம் செய்வதாகக் குற்றம் சாட்டி இருப்பதுடன் ஊடகவிலயாளர்களை அச்சுறுத்தி வருவதையும் ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. சிறீலங்கா அரசால் கைது செய்யப்பட்ட வேறு சில தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை இந்த ஊடகவியலாளருக்கு தமிழர் சார்ப்பு (குறிப்பாக புலம்பெயர் ஊடகங்கள்) ஊடகங்களால் அளிக்கப்படவில்லை என்பதும் வருந்தத்…
-
- 6 replies
- 2.2k views
-
-
சிறீலங்காவிற்கான வரிச்சலுகை நீடிப்பை ஐரோப்பிய ஒன்றியம் இடை நிறுத்தியது திகதி: 02.12.2008 // தமிழீழம் // [பாண்டியன்] சிறிலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவந்த வரிச்சலுகை (ஜீ.எஸ்.பி.) நீடிப்பை இடை நிறுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதனை கொழும்புச் செய்திகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்காக சிறிலங்கா அரசு பகிரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது. ஆனாலும் மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அக்கறை காண்பிக்காத நிலையில் இந்த வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியுள்ளதாக அறியவருகின்றது. இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டதால் சிறிலங்காவில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை வேலை வாய்ப்பை இழப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் எச்சர…
-
- 26 replies
- 4.3k views
-
-
தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று வழங்கப்பட்டன. கூட்டுறுவு சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் இப்பொருட்கள் நேற்றும், இன்றும் (வியாழன், வெள்ளி) மக்களுக்கு வழங்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டு;ள்ள தமிழகத்தின் நிவாரணப் பொதிகளில் உடுபுடைவைகள் அடங்கிய பொதிகள் இன்னமும் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 803 views
-
-
யுத்தம் இன்னமும் 50 வருடங்களுக்கு நீடிக்கும் அப்போது தமிழர் ஒருவரும் நாட்டிலிருக்க மாட்டார்கள் - சபையில் சம்பந்தன் எம்.பி. ஆதங்கம் வீரகேசரி நாளேடு 12/4/2008 9:21:00 PM - விடுதலைப் புலிகளுடன் இறுதிவரையிலும் போராடுவோம் என்று அரசாங்கம் கூறுவதைப் பார்த்தால் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் இன்னும் 50 வருடங்களுக்கு நீடிக்கும். அப்படி நீடித்தால் அச்சந்தர்ப்பத்தில் ஒரு தமிழர் கூட நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துவதற்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும். அல்லது தமிழ் மக்கள் அனைவரும் நாட்டை விட்டு தப்பித்து செல்ல வேண்டும். இந்த இரண்டு வழிகளை …
-
- 0 replies
- 602 views
-