ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
அந்தப் பெற்றோர்கள் எந்த நேரமும் பயமும், பதட்டமுமாகவே இருந்தார்கள். என்ன ஆயிற்று அவர்களுக்கு? குடும்பத்தில் எதாவது பெரிய பிரச்சனையா? குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையா? அதெல்லாம் ஒன்றுமில்லை தங்கள் மகனுக்கு முழு ஆண்டுப் பரீட்சை நெருங்கிவிட்டது. பரீட்சைக்கு தயாராகிறார்கள் பெற்றோர்கள். அவர்களுக்கு வந்திருப்பது பரீட்சை ஜுரம் (Exam Fever) அவர்களின் பயமும், பதட்டமும் அவர்களின் ஒரே மகனையும் பற்றிக் கொண்டது. குடும்பமே மிரண்டு போய் கிடக்கிறது. சரி. அப்படி இருண்டு போய் கவலைப்படும் அளவிற்கு என்னதான் படிக்கிறான் அவன்? ஒன்றாம் வகுப்பு. இந்தக் காட்சி இந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. எல்லா நடுத்தர வர்க்கத்தின் நிலையும் இதுதான். தன் எதிர்காலம் கு…
-
- 1 reply
- 1k views
-
-
"பார் சிறுத்தலால் படை பெருத்ததோ- படை பெருத்தலால் பார் சிறுத்ததோ"- 24 ஆம் நாள் பேரணிக்கு திரண்டிடுக: முதல்வர் கலைஞர் [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 07:43 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சென்னையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (24.10.08) ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்படும் மனித சங்கிலி அணிவகுப்பில் "பார் சிறுத்தலால் படை பெருத்ததோ - படை பெருத்தலால் பார் சிறுத்ததோ" என்ற அளவில் தமிழர்கள் அணிதிரள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று புதன்கிழமை கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.9k views
-
-
இந்திய வம்சாவழி தமிழர்களின் கட்சியான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகிய சிங்களக் கட்சிகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வலியுறுத்தின. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 716 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அன்றைய தினம், விரிவுரைகளை பகிஷ்கரித்து, கறுப்பு பட்டி அணிந்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, வைத்தியசாலைகளில் சேவையாற்றும் மருத்துவர்கள் கறுப்பு பட்டிகளை அணிந்து பணிகளில் ஈடுபடுவர் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 709 views
-
-
வன்னியில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்றுவரும் கடும் சமரில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படையினர் காணாமல்போயுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை முதல் வன்னிக்களமுனையின் கிளிநொச்சி நோக்கியதான ஆறுமுனைகளில் படையினர் முன்நகர்வுகளை பெரும் பின்புல,வான் சூட்டாதரவுடன் முன்நகர்வை மேற்கொண்டிருந்தனர். இந்த முன்நகர்வுக்கு ஆரம்பத்தில் பெரித எதிர்ப்பெதனையும் காட்டாத விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகளின் மணல் அணைகளை தாண்டியபின்னர் படையினர் மீது தமது உக்கிர தாக்குதலை தொடுத்ததுடன் கண்ணிவெடிக்கள் புதைக்கப்பட்ட பகுதிக்குள் படையினரை அனுமதித்து அதற்குள் இருந்து மீளமுடியாத படி படையினர் கடும் தாக்குதல் நடத்திவருவதாகவும் படை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ள…
-
- 3 replies
- 3k views
-
-
அமர்க்களமாக நடந்திருக்க வேண்டிய தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், கண்டனப் பொதுக்கூட்டமும் முன்னணி நடிகர் _ நடிகைகள் யாருமே பங்கேற்காததால் மனக் கொதிப்புடனும் மன வருத்தத்துடனும் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த 19-ம் தேதி, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தினரைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. ஏக எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட மூத்த - இளம் இயக்குநர்கள் மட்டுமே பெரும் அளவில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பக்கபலமாகவும் தங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த இளம் இயக்குநர்கள், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத த…
-
- 30 replies
- 4.5k views
-
-
திருவாரூர்: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு பதவி விலக முன் வர வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார். திருவாரூர் வந்த மதுரை ஆதினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நெருக்கடி சரியான முடிவாகும். 28ம் தேதி மத்திய அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜாதி, மதம், அரசியல் பாராமல் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட முன் வரவேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உணவு, உடை, மருந்துகள் அனுப்ப மத்திய அரசு விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்பாணத்தில், திரிகோணமலையில், திருச்சேரத்தில்…
-
- 7 replies
- 2.6k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் மனித சங்கிலி பற்றி அவதூறு கிளப்புவோர், அறிக்கை விடுவோர், சிங்கள வெறியர்களிடமிருந்து தமிழ் இன மக்களைக் காத்திடும் முயற்சியைக் காயப்படுத்த முனைவோர், களங்கப்படுத்த நினைப்போர், திசை திருப்புவோர், அக்காள் தங்கைகளுடன் பிறந்தவர்களாக இருக்க முடியாது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: இலங்கைத் தமிழனுக்காக ஒரு துளி கண்ணீர் வடிக்கவும், மெல்ல உதடசைத்து ஆறுதல் கூறவும் வழியற்றுப்போய் விழியற்ற குருடர்களாய் இங்குள்ள தமிழினம் தவித்து கொண்டிருக்கிறது. எழுபது ஆண்டு காலமாக இலங்கை வாழ் ஈழத் தமிழர்கள், உரிமையற்றவர்களாக, உடைமைகளைப் பறி கொடுப்பவர்களாக, ஏன்; உயிரையும் கூட அர்ப்பணிப்பவர…
-
- 2 replies
- 1.7k views
-
-
கொழும்பு: இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் நானே முதல் ஆளாக களத்தில் நிற்பேன். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசியதாவது: பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை தமிழர்கள் இருக்கின்றனர். புலிகள் வேறு தமிழர்கள் வேறு அல்ல. நாங்கள் வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல. எது வன்முறை, எது உரிமை என்று பிரித்துப் பார்க்க வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தி போராடியபோது அதை ஆதரித்தனர். புலிகள் துப்பாக்கி ஏந்தினால் தவறு என்கின்றனர். இலங்கைக்கு …
-
- 11 replies
- 2.7k views
-
-
யாழ்.குடாநாட்டிலுள்ள சிறிலங்கா படையினருக்கு விநியோகங்களை மேற்கொண்டுவந்த பிரதான கப்பல்களில் ஒன்றான எம்.வி.நிமல்லவ விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழ்நாடு.கொமில் இருந்து இதை இனைத்தேன்
-
- 1 reply
- 1.7k views
-
-
http://au.youtube.com/watch?v=ZlqTpuE2-7o
-
- 0 replies
- 2.6k views
-
-
தாக்குதலை நிறுத்த இந்தியா கோரவில்லை : ராஜபக்ஷே தகவல் கொழும்பு : இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில், அப்பாவி மக்கள் பலியாகாமல் பார்த்துக்கொள்ளுமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். புலிகளின் கோட்டையான கிளிநொச்சியைக் கைப்பற்ற நடத்தப்படும் சண்டை உடனடியாக முடிவிற்கு வந்துவிடாது என்றும் அவர் கூறினார். கடந்த வாரம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது, இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துமாறு கோரிக்கை எதுவும் தன்னிடம் விடுக்கவில்…
-
- 0 replies
- 979 views
-
-
சீக்கியனை மட்டும் மன்னிப்பீர்கள்... தமிழனை மட்டும் தண்டிப்பீர்களா?: இயக்குநர் பாரதிராஜா கேள்வி [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:48 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக கோட்சே இனத்தை அழித்தீர்களா? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றது சீக்கியர் என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா? என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இருந்து வாரமிருமுறை வெளிவரும் ஜூனியர் விகடனுக்கு பாரதிராஜா வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்: "இராமேஸ்வரம் போராட்டம் எப்படி இருந்தது?" "இதுவரை நடிகர்கள் கலந்துகொண்ட நெய்வேலி போராட்டமாகட்டும், ஒகேனக்கல் போராட்டமாக இருக்கட்டும், காவேரிக்கான போராட்டமாக இருக்கட்டும்... அந்…
-
- 5 replies
- 2.3k views
-
-
இலங்கை பிரச்னையில் குலுங்கிய இங்கிலாந்து! இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார்' என்று அறிவித்ததோடு நிற்காமல் தமிழ்நாட்டின் உணர்வை உலகுக்கு எடுத்துக்காட்ட 'தமிழர் சங்கிலி' போராட்டத்துக்கும் வழி வகுத்தார் தமிழக முதல்வர். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, முதலில் அதை மத்திய அரசேகூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் வெளியுறவுத்துறைச் செயலாளரை விட்டு இலங்கைத் தூதரிடம் பேசச் சொன்னார்கள். தி.மு.க. இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறது என்பது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்ததற்குப் பிறகுதான் மத்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் நாட்டு மாணவர்களுக்கு நன்றிகள் -அவுஸ்திரெலியா இளையோர் அமைப்பு 21.10.2008 அன்பின் சொந்தங்களே, நீங்கள் அண்மையில் நடாத்திய போராட்டம் பற்றி அறிந்தோம்.உலகில் பலமான துடிப்பான சக்தி மாணவர் சக்தி என்பதனை நாம் அறிவோம்.அந்த சக்தி ஈழத்தமிழனுக்கு கண்ணீர்சிந்தும் போது அதனை வர்ணிக்க தமிழில் வார்த்தைகளை தேட எம்மால் முடியவில்லை. உங்களின் இனவுணர்ச்சிக்கு நாம் தலை வணங்குகின்றோம். ஈழத்தமிழன் அரசியல் அநாதை அல்ல என்பதை தமிழ்நாட்டு மாணவர் சமூகமும் ஒரணியில் திரண்டு நிற்கும் அரசியல் தலைவர்களும் மற்றும் தாய்த்தமிழக உறவுகளும் நிரூபித்து விட்டீர்கள். உலகில் தமிழின உணர்வு செத்து விடவில்லை இன்னும் உறுதியாக கொழுந்துவிட்டு எரிகின்றது என்பதை பார்க…
-
- 1 reply
- 910 views
-
-
கிளி. அக்கராயன்குளம் மற்றும் வன்னேறிக்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது படையிர் மீது மேற்கொள்ளபட் விஷ் வாயுத் தாக்குலினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தே.பா.ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 17ம் திகதி முதல அப்பகுதியில் தொடர்ந்து இடம் பெற்ற மோதல்களை அடுத்து வன்னனேரிக்குளம் முழுவதும் 19ம் திகதி மாலை படையினரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது இடம் பெற்ற மோதல்களிலலேயே படையினர் மீது விஷ வாயுத்தாக்குதல் நடத்தப்பட்டன. இவ்வாயுத் தாக்குதல்களினால் மூச்சுத்திணறலுக்கு உள்ளான படையினர் யாழ்ப்பாணம், மன்னார், மற்றும் அநுராதபுரம் போன்ற வைத்தியசாலைகளில் அனுமதிக்கடப்டுள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்து. இதே வேளை வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன்குளம் பகுத…
-
- 6 replies
- 3.6k views
-
-
காங்கேசன்துறை கடலில் கப்பல்கள் மீது கரும்புலித் தாக்குதல்! வினியோக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், புலிகளின் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், ஒரு படகு கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. - அத தெரன Meanwhile, Navy spokesperson, Commander DKP Dassanayke told defence.lk that 3 LTTE suicide vessels have come for the attack. Navy sailors providing security onboard the targeted vessels have engaged machine gun fire at the approaching suicide boats effectively, and destroyed two of them before ramming on the ships, he said. However, he added that one of the suicide boat have exploded in close proximity to Merchant Ship Nimalawa…
-
- 50 replies
- 11.9k views
- 1 follower
-
-
அன்று.. திராவிடனை கொன்றவனுக்கு தீபாவளி !!.. இன்று.. தமிழனை கொன்று குவிப்பவனுக்கு என்ன வழி??
-
- 1 reply
- 1.4k views
-
-
ஈழததமிழர் குறித்த தமிழக மக்களின் அக்கறையுணர்வுகள் அபரிமிதமாக வெளிப்பட்ட போதும், இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆயினும், இந்தியாவைச் சீண்டிப் பார்க்கும், நகர்வுகளிலும், சினங்கொள்ள வைக்கும் வார்த்தைகளை உரைப்பதிலும், சிங்கள அரசுசார்ந்தோர் ஆளாளுக்கு, அள்ளிக்கொட்டுகின்றார்கள். இந்தியாவின் இந்த மெளனம் ஏன்?, இந்தியாவின் இந்தத் தயக்கம் ஏன், என்பது பலரிடத்திலும் உள்ள கேள்வி. கேட்டோம், தமிழகத்தில் , தமிழீழமக்களின் விடுதலையை நேசிக்கும் சக்திகளில் ஒன்றான தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் மாநிலச் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞலர் ஆர்வலனிடம் கேட்டோம். ஆச்சிரியம் தந்தது அவர் பதில். காரணம், தமிழீழ விடுதலையை நேசிக்கும் சக்திகள்…
-
- 0 replies
- 1.6k views
-
-
பல ஆண்டுகளாக ஈழத்திலே மண்ணின் மைந்தர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதை ஒரு முறை கூட கண்டிக்காத இங்குள்ள பார்ப்பன சிங்கள அரசின் கைக்கூலியான இந்திய மார்க்சிசுடு கம்யூனிசு கட்சியானது ஈழத்தமிழர் போராட்டத்தினையும் . தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதையே தொழிலாக கொண்ட இந்து பத்திரிக்கையினை கண்டித்து தமிழர்கள் போராட்டம் நடத்தியதை CPI(M) ¸கட்சியின் மாநிலக்குழு கண்டிக்கிறது. பெரியார் தி.க. மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் எல்லாம் சமூக விரோத அமைப்புகளாம் பகுத்தறிவைப்பரப்பும் பெரியாரியவாதிகள் காட்டுமிராண்டிகளாம். நம் நாட்டில் தமிழர்க்கு எதிரி பார்ப்பனர்கள்( cpi(m) , rss பிரிவுகள்) தமிழீழத்திலே தமிழர்களுக்கு எதிரிகள் சிங்களவர்கள் இரண்டு பார்ப்பனியர்களையும்…
-
- 1 reply
- 2.3k views
-
-
தமிழர்கள் எரிமலையாக கிளம்பிவிட்டனர் என்று நேற்று மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் "பற்றி எரிகிறது தமிழ் ஈழம்" என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார் அவர் தமது உரையில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு: தமிழர்கள் உள்ளத்தால் அனைவரும் ஒருவரே என்ற உணர்வில் நாம் கூடியிருக்கின் றோம். பெரியார் திடலிலி ருந்து எந்தப் பிரகடனம் புறப் பட்டாலும் அது எல்லா இடங் களுக்கும் போய்ச் சேர்ந்து வெற்றி வாகை சூடும். ஈழத்திலே இன்றைக்கு எப்படிப்பட்ட கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன? சிங்களவர்களின் கொடுமை, கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் …
-
- 0 replies
- 1.2k views
-
-
பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராதாகிருஸ்ணன் கூறியிருக்கும் கருத்துக்கள் இவைகள். பாஜகவை ஈழ ஆதரவுக் கட்சியாக சித்தரிக்க முனைந்த யாழ் கள உறவுகள் கட்டாயம் இதைப் படித்து தெளிவு பெற வேண்டும். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். இதில் பாஜகவும் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும். தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, மின் வெட்டு, போன்ற பிரச்சனைகளை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளது. இலங்கையில் ஈழ தமிழர்களின் போராட்டம் பின்னடைவுக்கு விடுதலைப் புலிகளே காரணம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசிச போக்கு தான் இந…
-
- 14 replies
- 3.2k views
-
-
வன்னியில் இடம் பெயர்ந்தோர் நிலவர அறிக்கை http://www.tamilnaatham.com/pdf_files/2008...ot_20081022.pdf
-
- 0 replies
- 889 views
-
-
எந்தவொரு நாட்டின் இனப்பிரச்சினையும் இராணுவ ரீதியாக தீர்க்கப்பட்டதாக சரித்திரம் இல்லை என இந்தியாவின் பிரபல எழுத்தாளரும், முன்னாள் உயர்பாதுகாப்பு அதிகாரியுமான கேணல் அனில் அதலே தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செவ்விந்திய பழங்குடியினர் மொத்தமாக இனப்படுகொலை செய்யப்பட்டதனைப் போன்று துரதிஸ்டமான முடிவுகள் மட்டுமே இராணுவ தீர்வின் மூலம் எட்டப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த நடவடிக்கைளின் மூலம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே காரணம் என குற்றம் சுமத்துவது அடிப்படையற்றதென அவர் தெரிவித்துள…
-
- 0 replies
- 1.6k views
-