ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இதுவரை காலமும் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து போரினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு அமைப்புகள் முகவர் நிலையங்கள் தமது மூடை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து இன்று முற்றாக வெளியேறுகின்றன வவுனியாவுக்குச் செல்கின்றன. வாகனத் தொடரணியாக வெளியேறும் ஐ.நா. தொண்டு நிறுவனப் பணியாளர்களுக்கும் வாகனங்களுக்கும் ஓமந்தை வரைக்கும் விடுதலைப் புலிகள் பாதுகாப்பு வழங்குவர். வாகனத் தொடரணி இன்று (செவ்வாய்) முற்பகல் 10 மணி தொடக்கம் கிளிநொச்சியிலிருந்து புறப்படும். இலங்கைக்கான ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ், மேற்படி ஏற்பாடு குறித்த தகவலை நேற்றிரவு தெரிவித்தார். ஐ.நா. அமைப்புகளின் வெளியேற்றம் குறித்து கோர்டன் வைஸ் மேலும் தெரிவித்ததாவது: கிளிநொச்…
-
- 0 replies
- 822 views
-
-
ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு வருமாறு, துணைப்படைக் குழுக்களையும் இந்திய அரசாங்கம் அழைத்திருப்பதாக, கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இம்மாதம் சந்திப்பை மேற்கொள்வதாக, இந்திய தலைமை அமைச்சர் மன்மோனக் சிங் கொழும்பில் உறுதியளித்திருப்பதால், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இந்தியா சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் துணைப்படை PLOTE குழுவின் தலைவர் சித்தார்த்தன், E.P.R.L.F வரதர் அணியின் தலைவர் சிறீதரன், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியையும் இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 3 replies
- 1.7k views
-
-
பல்லாயிரக்கணக்கான மக்களை நெருக்கடியில் தள்ளியுள்ள சிறிலங்கா அரசு: ஐரோப்பிய ஒன்றியம் [செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 03:26 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களை வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டது, அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான விநியோகங்களை முடக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிப்பணிகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் மைகேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களில் அப்பாவி மக்கள் பெரும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். அங்கு இடம்பெற்று வரும் மோதல்கள…
-
- 1 reply
- 855 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 559 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள தமிழ் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க இராணுவப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது அப்பாவி சிவிலியன்கள் பாதிக்கப்படக் கூடாதென இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனியிடம், இலங்கையின் யுத்த நிலவரம் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் வன்னிப் பிரதேசத்தில் உள்ள சிவிலியன்களின் நிலைமை குறித்து அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக அவர் …
-
- 8 replies
- 1.8k views
-
-
புலிகளின் விமானங்களை செலுத்துபவர்கள் வெளிநாட்டு விமானிகள் என்று கூறி சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் ஆங்கில ஊடகங்கள் - கலையரசன் - வவுனியாவிலுள்ள கட்டளையிடும் பிரதான இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் ஆட்லறி எறிகனை மற்றும் விமான தாக்குதல் முறையிலான மரபு வழி தாக்குதல் நடத்திய நாளில் இருந்து இதுவரை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அது பற்றிய உண்மைகளை மூடிமறைத்து வருகின்றன. விடுதலைப் புலிகளுடைய மரபுவழி தாக்குல் பாணியிலான முறைமைகளையும், குறிப்பாக புதிய தொழில்நுட்பமுறையிலான மிகவும் நுண்ணிய ஆய்வு ரீதியான தாக்குதல் என்பதனால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஆங்கில் ஊடகங்கள் தயங்குகின்றன. புலிகள் நடத்திய முன்னைய தாக்குதல்களும் ஆய்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டதுடன் கள ந…
-
- 1 reply
- 1.4k views
-
-
மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது கொமாண்டோ தாக்குதல்: 2 பேர் பலி [திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 02:11 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகா ஓயாப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பு மாவட்டத்தின் அதியுச்ச பாதுகாப்புப்பிரிவான மகா ஓயா பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் உந்துருளி அணி இன்று திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த அணியினை வழிமறித்த விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினர் மீது த…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவில் இந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் மேலும் இரண்டு மாகாண சபைகளை கலைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 627 views
-
-
ஆதாரம் வீரகேசரி இறந்த சடலம் வாதிடப்போவதில்லை தான் யாரென்பது குறித்து, இக்கட்டான சூழ்நிலையில் இழுத்தடிக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்குள் யாரும் மினக்கெடப்போவதில்லை சடலத்தினை யாரென்று நிரூபிக்க... மொத்தத்தில் பிரி"கேடி"யனின் பித்தலாட்டப்பேச்சுக்களை கேட்கும் காலம்.... நாளை அவன் கூறக்கூடும் இச்செய்திகளில் இளைஞர் என்று போடாதே......போடு பயங்கரவாதியென்று....
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா வடமேற்கு பாலமோட்டை-குஞ்சுக்குளம்-வன்னிவிளாங்குளம் பகுதிகளில் சிறிலங்கா படையினர்மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத்தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 955 views
-
-
கனடியத் தமிழர்களே புறக்கணிப்போம் கொன்று ஆட்டம் போடும் சிங்கள இன வெறி அரசின் கொண்டாட்டத்தை புறக்கணிப்போம் எதிர்வரும் செப்ரம்பர் 20-21 திகதிகளில் காபர்புறன் சென்ரில் கனடிய சிங்கள அரசின் ஆதரவில் இவ் கொன்று ஆட்டம் நடைபெற இருக்கிறது கனடியத் தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழருக்கெதிரான கொன்று ஆட்டம் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் தொலைபேசி அழைப்பினூடாக உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள் Sri Lankan Festival September 20-21, 2008 HABOUR FRONT CENTER தொலைபேசி இலக்கம் 416-973-4000 மின்னஞ்சல் info@harbourfrontcentre.com http://tamilthesiyam.blogspot.com/2008/09/blog-post_15.html
-
- 0 replies
- 1.7k views
-
-
அக்கராயன்குளத்தில் முன்னேறும் படையினருக்கு ஆதரவாக MI௨4 ரக உலங்கு வானூர்திகள் மூலம் இன்று மாலை 6:15 அளவில் வான் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக, சிறீலங்காவின் வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்தார். அக்கராயன்குளத்தில் சிறீலங்கா படையினரது 57வது படைப்பிரிவே இன்று காலை முதல் முன்னேற்ற முயறச்சியை மேற்கொண்டுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/akka...2008-09-15.html
-
- 0 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பெரும் அவதிப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பெரும் சிரமம் எற்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கி வந்த அரச சார்பற்ற நிறுவனங்களை வன்னிப் பகுதிகளிள் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து அங்கு பெரும் நெருக்கடிகள் எற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/tamileelam/kili...2008-09-15.html
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறையில் அதிரடிப்படையினரின் முகாம் மீது மோட்டார் தாக்குதல்: ஒருவர் பலி; ஐவர் காயம் [திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 08:05 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார் எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் கூறியுள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள உடும்பன்குளம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:10 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சி…
-
- 1 reply
- 696 views
-
-
சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளின் பின்னர் யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை முதன்முறையாக மடு தேவாலயத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 745 views
-
-
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் சிறீலங்கா விமானப்படைக்கு தொடர்ந்து இந்தியா தொழில்நுட்ப வசதியை வழங்க வேண்டும்.அது இந்தியாவுக்குரிய கடப்பாடாகும். அதனை உரிய காலத்திற்கு முன்னர் கைவிட முடியாது. இலங்கை அரசு தரப்பில் இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. இலங்கை விமானப்படையினரின் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் எமது நாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியிருந்தது. அந்த ஒப்பந்தம் இன்னும் காலாவதியாகவில்லை.அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்வரை, நடைமுறையில் உள்ளவரை, இந்தியாவின் தொழில்நுட்ப உதவிகள் தொடரவேண்டும். இது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுஇ
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை வேகமாக சென்று சுட்டுவீழ்த்துவதற்கு மிக்-29 ரக அதிவேக அதிரடி வானூர்திகளை இந்த வருடத்திற்குள் சிறிலங்கா அரசு கொள்வனவு செய்யவுள்ளதாக அறியவருகிறது. இது தொடர்பில் தெரியவருவதாவது: விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பறப்பில் ஈடுபடும்போது அவற்றை சுட்டுவீழ்த்தக்கூடிய வகையில் சிறிலங்கா வான் படையிடம் தற்போது எஃப்-7 ரக வானூர்திகள் உள்ளன. ஆனால்இ சடுதியாக வன்னியிலிருந்து வரும் புலிகளின் வானூர்திகளை இந்த எஃப்-7 ரக வானூர்திகள் கலைத்துச்சென்று தாக்க முயற்சித்தாலும்இ கட்டுநாயக்கா வான்படைத்தளத்திலிருந்து இவை செல்லும் முன்னர் புலிகளின் வானூர்திகள் குறித்த இலக்கை தாக்கிவிடும் அபாயமே தற்போது நிலவுகின்றது. ஆகவேஇ புலிகளின் வானூர்திகள் இல…
-
- 9 replies
- 1.8k views
-
-
சிறிகாந்தா அவர்கள் என்ன சொல்கிறார்? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 2.2k views
-
-
தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாம்பு தீண்டியதில் விஷம் ஏறிய நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் வைத்து அமைச்சரை பாம்பு தீண்டியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன வருமானத்திற்கு அதிகமான 450 மில்லியன் ரூபா சொத்து சேர்த்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த 13 ஆம் திகதி மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. http://www.tamilsk…
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பாரஊர்திகளை பெற்றுக்கொண்டுள்ள விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் 20 கிலோ மீட்டர் நீளமான யுத்த அகழிகளை வெட்டியிருப்பதாக வவுனியாவுக்குச் சென்றுள்ள நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் என சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது. இந்த வாகனங்களைப் பயன்டுத்தி விடுதலைப்புலிகள் புதிய பாதுகாப்பு வேலிகளை அமைத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வன்னியில் இருந்து கடந்த13 ஆம் திகதி இறுதியாக அரசசார்பற்ற நிறுவனங்கள் வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். வன்னியில் உள்ள ஏனைய நிறுவனங்கள் வவுனியாவுக்கு வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் இது குறித்து அந்த நிறுவனங்கள் தமது தலைமை பணியகத்திற்கு அறிவித்துள்ளதாக…
-
- 6 replies
- 2.2k views
-
-
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் - SEDOT தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற சிறிலங்காப் படைகளின் எறிகணை வீச்சினால் இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் அன்றாட வாழ்வைக்களித்து வருகின்றனர். இவர்களின் இன்னலைப் போக்க புலம்பெயர் வாழ் மக்கள் அவசரமாக உங்கள் கரங்களை நீட்டி பசியோடு இருக்கும் பாலகரையும் உறவுகளையும் காப்பாற்றுங்கள் இதேவேளை இந்த வேண்டு கோளிற்கு இணங்க சமூகப்பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (SEDOT) தற்போது இடம்பெயர்ந்து வன்னியில் நிற்கதியாக நிற்கும் எம் உறவுகளுக்கு புலம்பெயர் விடுத்த அவசரக் கரம்கொடுங்கள் என்ற திட்டத்திற்கு அமைவாக பேர்ன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயம் அறோ முர…
-
- 1 reply
- 950 views
-
-
பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவையான சந்தேஷய விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவுடன் நெருக்கமான ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சிங்களப் புலிகள் சந்தேஸயவை கைப்பற்றியுள்ளனர். 4 தசாப்தங்களுக்கு முன்னர் சிங்கள நேயர்களுக்கான செய்திகள் மற்றும் ஏனைய தகவல்களை வழங்குவதற்காக பிரித்தானியாவில் இருந்து பி.பி.சி சிங்கள சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதில் தற்போதைய தலைவராக உள்ள பிரியத் லியனகே புலிகளுக்கு பிரசாரத்தை வழங்க ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி வருகிறார் என அந்த இணையத்தளம் குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் சந்தேஸயவில் விடுதலைப்புலிகளின் தலைவர்களின் குரல்கள் …
-
- 0 replies
- 921 views
-
-
9/15/2008 2:53:14 PM கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டி பிரதேசத்தில் இன்று அதிகாலை முதல் கடும் மோதல்கள் இடம் பெற்று வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறிகண்டி நகரில் இருந்து மேற்குத் திசையில் சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் இந்த எறிகணை தாக்'குதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது, இராணுவத்தின் கடும் எறிகணை தாக்குதல்களையடுத்து, அந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும் அந்தப் பகுதியில் தொடர்ந்து கடும் சண்டைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எறிகணை தாக்குதல்கள் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்துக்கள் இன்று நடைபெறவில்லை என்றும் கிளிநொச்சியில் இருந்து இன்று வவுனியாவுக்கு வரவேண்டிய கிளிநொச்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியில் நிலம் விழுங்கியபடி முன்னேறும் சிங்களப்படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மகிந்தஅரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போரில் சிங்களப்படைகள் வெற்றிநடை போடுகின்றன என்று மகிந்தஅரசு பிரகடனங்களை விடுவித்து வருகின்றது. மேலெழுந்தவாரியாகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மகிந்த அரசின் வெற்றிப் பிர கடனங்களை நம்புகின்றனர். கண்ணால் காண்பதும் பொய் - காதால் கேட்பதும் பொய் - தீரவிசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பொருந்தும். போரில் பல்வேறு விதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து - அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது. வன்னிநில அமைப்பும் - புலிகளின் படைவலுவும் இணைந்து இந்தப் போர்க்களப்புரட்ச…
-
- 0 replies
- 2.2k views
-