ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
வீரகேசரி நாளேடு - இந்தியாவிலிருந்து கேபிள் மூலம் மின்சாரத்தினை பெற்றுக்கொள்வதென்பது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். இதன் மூலம் எந்த நேரமும் எமது நாட்டை இருளில் மூழ்கடிக்கும் அதிகாரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விடும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். எமது நாட்டின் அரசியல், பொருளாதார பிரச்சினையில் நேரடியாக இந்தியா தலையிடும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் கலை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு, மதுரை மாவட்டத்தில…
-
- 0 replies
- 1k views
-
-
வீரகேசரி நாளேடு - வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலி;ருந்து வெளிமாவட்டங்களுக்கும் பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கான புதிய பாதுகுக்ப்பு நடைமுறைகள் கைக்கொள்ளப்படுவதாக இராணுவம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த நடைமுறைகள் குறித்து யாழ் பிராந்திய ஆயுதப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விளக்கமளித்துள்ளார். இந்தத் தகவலை பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அரச திணைக்களங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள், சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள், வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய 200க்கும் மேற…
-
- 0 replies
- 940 views
-
-
முல்லைத்தீவின் நாயாறு மற்றும் உடுப்புக்குளம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் வீடுகளும் கடைகளும் அழிந்துள்ளதுடன் பொதுநோக்கு மண்டபம் ஒன்றும் சேதமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 639 views
-
-
கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யான தகவல் என கல்முனை காவற்துறை பொறுப்பதிகாரியாக இருந்த டப்ளியூ.சீ.விஜயதிலக்க துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் காவற்துறை பதவிவேட்டில் எழுதிய குறிப்பில் தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விஜயதிலக்கவின் மரணம் தொடர்பாக நடைபெற்ற விசாரணைகளின் போது, இந்த பதிவேடு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது. விசாரணை கல்முனை நீதவான் எஸ்.எம் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்றது. காவற்துறை அதிகாரி என்ற வகையில் தான் எந்த தவறுகளையும் செய்யவில்லை. சட்டத்தை மதிக்கும் சிறந்த காவற்துறை அதிகாரிகளை உருவாக்கவே தாம் எப்பொழுதும் முயற்சித்து வந்ததாகவும் அத்து…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வான்வழித் தாக்குதல்களைக் கண்டிக்க மாட்டேன் என, T.M.V.P துணைப்படைக் குழுவின் துணைத்தலைவரும், கிழக்கின் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தெற்கிலும், சிறீலங்காவின் ஏனைய பாகங்களிலும் இவ்வாறான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் அவர் நியாயம் கற்பித்திருக்கின்றார். சார்க் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியாளர்கள் சந்திரகாந்தனைச் சந்தித்தபோதே, அவர் இந்தக் கருத்தினைக் கூறியிருக்கின்றார். விடுதலைப் புலிகளை அழித்து, வன்னியை மீட்கும் சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் அகப்பட்டுள்ள மக்களிற்கு ஒன்றும் செய்ய முடியாது எனவும், இது அவர்களின் நிர்ப்பந்தம் எனவும் அவர் கூறினார். htt…
-
- 0 replies
- 1.7k views
-
-
வீரகேசரி இணையம் 8/5/2008 11:11:47 AM - உலக சுகாதார அமைப்பின் கணிப்பீட்டின் படி இலங்கை மக்களின் ஆயுட்கால எல்லை 10 சதவீதம் வளர்ச்சி யடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2004 ஆண்டில் 69 ஆக காணப்பட்ட பெண் ஒருவருன் ஆயுட் காலம் தற்போது 79 ஆகவும் ஆண் ஒருவரின் ஆயுட்கால எல்லை 60 வதுலிருந்து 69 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் 2005 ஆம் ஆண்டில் 16.5 சதவீதமாக காணப்பட்ட மதுபானம் அருந்துவோரின் சதவீதம் தற்போது 7.1 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
-
- 12 replies
- 1.8k views
-
-
மன்னார் வவுனியா போர் அரங்குகளில் தற்போது படையினரின் முன்னகர்வு அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 16ஆம் திகதி விடத்தல்தீவைக் கைப்பற்றிய படையினர், அங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள இலுப்பைக்கடவையை 20ஆம் திகதி காலையில் கைப்பற்றியிருக்கின்றனர்.இன்
-
- 7 replies
- 2.2k views
-
-
வாடகை வாகனத்தில் செல்லும் அளவிற்கு 15ஆவது சார்க் மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எமக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். சார்க் மாநாட்டின் பாதுகாப்பு, ஆசன ஒதுக்கீடுகள் மற்றும் செலவுகள் தொடர்பில் சபையில் இன்று எழுந்த சர்ச்சையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச மாநாடுகளை நடத்துகின்ற போது சிறு சிறு தவறுகள் இடம்பெறும். எனினும், 15 ஆவது சார்க் மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாரா…
-
- 8 replies
- 1.9k views
-
-
சிறீலங்காவின் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமல் வெளிநாடுகளில் பட்டம் பெறுபவர்களின் பட்டங்கள் சிறீலங்காவில் எனிமேல் அங்கீகரிக்கப்படமாட்டாது என்று சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. பல மேற்குலகப் பல்கலைக்கழகங்கள் கணணி சார் மற்றும் வர்த்தகம், முகாமைத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்களை எந்தவித உயர்தர பரீட்சைப் பெறுபேறையும் அடிப்படைத் தகுதியாகக் கோராமல் வழங்கி வருவதுடன்.. ரஷ்சியா போன்ற நாடுகளில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமலே மருத்துவப் படிப்பைக் கூட தொடரக் கூடிய நிலை இன்றிருக்கிறது. A/Level qualification imperative - Warnapala The Ministry of Higher Education will never recognize the foreign degrees obtained by students who do not have the basic Advance …
-
- 10 replies
- 2k views
-
-
வெளிவிவகார அமைச்சிடம் இந்திய தூதரகம் கவலை தெரிவிப்பு 05.08.2008 / நிருபர் வானதி கொழும்பில் நடைபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுக்குனின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது கவலையை வெளிவிவகார அமைச்சிடம் தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனுக்கு சார்க் மாநாட்டின் போது விசேட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை வெளிவிவகார அமைச்சை கேட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற எம். கே.நார…
-
- 10 replies
- 2.2k views
-
-
வெற்றிலைக்கேணியில் படையினர் எறிகணைத்தாக்குதல்: பொதுமக்கள் இருவர் படுகொலை [புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2008, 01:27 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் வாடிகளை இலக்குவைத்து நாகர்கோவில் பின்தளத்திலிருந்து படையினர் இன்று புதன்கிழமை காலை 8:45 மணியளவில் செறிவான எறிகணைத்தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் மக்களின் வீடுகள், படகுகள் மற்றும் வலைகள் என்பனவற்றுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் ஒரு பிள்ளையின் தந்தையான தங்கவேலு குணேந்திரராசா (வயது 29), முள்ளியானைச் சேர்ந்த மூன்று ப…
-
- 0 replies
- 557 views
-
-
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்தம் -பலவீனத்தின் வெளிப்பாடா? இராசதந்திர நகர்வா? புலிகளின் இவ் அறிவிப்பானது சிங்களம் கூறுவதைப் போன்று விடுதலைப் புலிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு அல்ல. மாறாக தம்மிடம் இருக்கும் பலத்தைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் அசுர பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டின் ஒரு அங்கமே சுவிசில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் நிலவரம் பத்திரிகை கடந்த வாரம்(01.08.08) தனது ஆசிரியர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிறி லங்கா தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை ஒட்டி பத்து நாள் போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள். மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் விடுதலைப் பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாராளுமன்ற முறைமையை பலப்படுத்துவதற்கு 17வது திருத்தச்சட்டமூலம் அவசியம் என்பதால் அதனை அமுல்படுத்தவேண்டும் என சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார். 17வது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழு, திருத்தச்சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்கான மாற்றுவழிகளைப் பரிந்துரை செய்யவேண்டும் எனவும், அதனை அடிப்படையாகக் கொண்டு 17வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவத்தினால் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகள் பாராளுமன்றத்தின் ஊடாக அமுல்படுத்தப்படுவதில்லையென
-
- 0 replies
- 549 views
-
-
இலங்கையின் தென்பகுதியான தங்காலையில் இன்று காலை நில அதிர்வு ஒன்று உணரப்பட்டதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது.தங்கல்ல, பெலியத்த, ரன்ன, மற்றும் குடாவெல ஆகிய பிரதேசங்களில் இன்று காலை 5.45 மணிக்கு இந்த இலேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக உடமைகளுக்கோ உயிர்களுக்கே எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilseythi.com/srilanka/lanka-2008-08-06.html
-
- 0 replies
- 674 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத் தமிழீழ எம்.பி.க்களாகக் கருதி சார்க் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காததையிட்டு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய, இலங்கை அரசுக்கிடையிலான சீபா உடன்படிக்கை தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் புறக்கணிக்கப்பட்டதுடன், அவமதிக்கப்பட்டுள்ளனர். இது வெளிநாட்டு அமைச்சின் திட்டமிட்ட செயலாகும். சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் எந்தவொரு நன்மை…
-
- 0 replies
- 720 views
-
-
(2ம் இணைப்பு)கோத்தபாய - பசில் - பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு [திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 08:51 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசின் முக்கிய நபர்களாகக் கருதப்படும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய அமெரிக்க குடிமகன்கள் மூவருக்கும் எதிராக இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு (Tamils Against Genocide [TAG]) அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்…
-
- 5 replies
- 1.6k views
-
-
தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்தல் என்று ஒன்று கூடி "சார்க்' தலைவர்கள் விடுத்த அறிவிப்பு எள்ளி நகையாடத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது. நோயின் மூலகாரணியைத் தேடிக் கண்டு பிடித்து, அதற்கு வைத்தியம் செய்வதை விடுத்து, நோய் வெளிப்படுத்தும் குணங்குறிக்கு மருத்துவம் பார்க்கும் "அரைகுறை' வைத்தியர்களாகவே அவர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள். அது மாத்திரமல்ல, அந்த நோயின் விளைவாக வெளிப்படும் "பயங்கரவாதம்' என்ற பிரச்சினை மட்டுமே இந்த எட்டு நாட்டுத் தலைவர்களின் கண்களில் பட்டிருக்கின்றது. அதுபோன்ற மிக மோசமான இந்நோயின் மற்றொரு வெளிப்பாடு அவர்களின் கவனத்தை ஈர்க்காமை அவர்களை "அரைகுறை' வைத்தியர்களாகவே அடையாளம் காட்டி நிற்கின்றது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் நியாயம…
-
- 0 replies
- 533 views
-
-
மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு மே.ம.மு.தலைவரான கொழும்ப மாவ. எம்.பி. மனோ கணேசனுக்கு விடுத்;த அழைப்பை அவர் தவிர்த்துக் கொண்டார். கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த மன்மோகன் சிங்கை பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்தித்த போதும் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தச் சந்திப்புபக்காக குறுகிய நேரமே ஒதுக்கபட்டது. மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு தங்களுக்கு குறைந்தது அரை மணிநேரமாவது ஒதுக்க வேண்டுமெனவும் இந்திய வம்சாவளி மக்களினதும் பிரச்சினை குறித்து மட்டுமல்லாது நாட்டில் இடம் பெறும் இனப்படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணமால் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்காக தாங்கள் மக்கள் கண்காணிப்புக் குழுவொன்றை அமைத்திருப்பதால் அத…
-
- 8 replies
- 2.5k views
-
-
சறுக்கிய சார்க் மாநாடு இலங்கையில் கடந்த இருபத்தி ஏழாம் திகதி துவங்கி நடந்து வரும் சார்க் மாநாடுஇ உலகில் பல உறுப்பு நாடுகள் தங்களது பிராந்தியத்தை ஒட்டிய அண்டை நாடுகள் என பல அமைப்புகள் உள்ளது. நாம் அதிகம் அறிந்தது காமன் வெல்தஇ யூரோ ஆபிர்க்கன்இ பெடரேசன் ஆப் இஸ்லாமிக் நேசன்இ மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவை நாம் அறிந்தவை நாம் அறியாதவைகள் பல ஆம் சுமார் 260க்கும் மேற்பட்ட பல உலக நாடுகளில் கூட்டமைப்பு மற்றும் குழுக்கள் உள்ளது. இவற்றில் பல சனநாயக அமைப்பு கொண்ட நாடுகள். முக்கியமாக யூரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் கொள்கைகள் அனைத்தும் 5 வருடங்களுக்கு ஒருமுறை அந்த சமயத்தில் ஏற்படும் பொருளாதார மாறுதலுக்கேற்ப அந்தந்த நாடுகளில் முதலில் மக்களிடம் பொதுப்பார்வைக்கு வைக்கப்படு…
-
- 3 replies
- 1.5k views
-
-
வவுனியா - குஞ்சுக்குளம்இ நவ்வி பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி நகர்வை மேற்கொண்டிருந்தனர். இந்த நகர்வை தீவிர தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் முறியடித்துள்ளனர் முன்நகர்விற்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளனர். புலிகளால் கைப்பற்றப்பட்டவை படையினரின் உடலம் ஒன்று கிளைமோர் -1 ரி 56-2 வகை துப்பாக்கி -1 ரவை கூடுகள் -5 நடுதர ரவைகள் -150 தொடுகம்பி சுருள் -1 குண்டு -1 ரவை கூடு தாங்கி அணிகள் -2 தலை கவசம் -1 தண்ணீர் கலன்கள் -4 பை -1 புலிகளின் குரல்
-
- 0 replies
- 820 views
-
-
மாரிகாலத்தில் வன்னி களமுனையில் எதிர்மறையான மாற்றம் ஏற்படும். நெப்போலியனை ரஷ்யா விரட்டியடித்ததைப் போன்று வன்னியில் நுழையும் படையினர் விரட்டியடிக்கப்படுவர் என்று த.தே.கூட்டமைப்பின் யாழ். பா.உ ஸ்ரீகாந்தா தெரிவித்தார். இக் கொடிய யுத்தம் முன்னெடுக்கபட்டால் அழகிய இலங்கை நாடு பாரிய அழிவை சந்திப்பதை தடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாரளுமன்றில் நேற்று கடல் சார் தீர்ப்புத் தடைசட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவறு தெரிவித்தார். மேலும் : பரந்து விரிந்த ஐரோப்பாவை கட்டியாண்ட நெப்போலியன் ரஷ்;யாவை கைப்பற்ற முயன்றபோது, மொஸ்கோவினால் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று வன்னியினுள் நுழையும் படையினர் விரட்டியடிக்கப்படுவர். எதிர்வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைப் படைநடவடிக்கை குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை: இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் முதன்முறையாக இந்தியப் பிரதமருக்கு நேரடியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எனில் இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன? (செய்திகளில் வெளிவராத முக்கிய தகவல்கள்) [ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 02:30.08 AM GMT +05:30 ] இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள், இலங்கையின் பாதுகாப்பு உயர்தரப்பை எச்சரித்துள்ளனர். “சார்க்” மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்த இந்தியப் புலனாய்வுத் துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்புத்துறை உயர்தரப்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கைத் தரப்பால் தற்போதைய யுத்தம் தொடர்பாகப் பெரும…
-
- 9 replies
- 3.8k views
-
-
பிரித்தானியாவில் கடனட்டை மோசடிகளில் ஈடுபடும் தனி நபர்கள், அல்லது குழுக்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன், தண்டனையில் இருந்து தப்புவதற்காக, விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி வருகின்றனர். இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது, சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் பிரித்தானிய காவல்துறையினர் மத்தியில் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. லீசெஸ்ரர்சையர் (Leicestershire) பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் (Abdul Samad Mohamed Raik) என்ற முஸ்லீம் நபர், கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக, பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி நாளேடு - 15ஆவது சார்க் உச்சிமாநாட்டின் ஆரம்ப விழாவிற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மண்டபத்தில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார். நானே ஆசனத்தைக் காண்பித்து அமரச் செய்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சார்க் மாநாட்டின் பாதுகாப்பு, ஆசன ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் சபையில் எழுந்த சர்ச்சையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, வெளிவிவகார அமைச்சர் கூறியதன் பிரகாரம் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிக்கு கௌரவமளித்திருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, பிரேமதாஸ ஆகியோரின் காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு …
-
- 1 reply
- 1.6k views
-
-
த.தே.தொலைக்காட்சியின் ஈழக்கிழவன் http://www.nettamil.tv/play/Eelam_Videos/E...ilavan_29072008 நன்றி- நெற் தமிழ்
-
- 0 replies
- 1.9k views
-