Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மேலும் 3 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயரும் ஆபத்து நேரலாம்! இப்படி ஐ.நா. மதிப்பீடு இலங்கையின் தற்போதைய மோதல் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது இவ்வருடம் மேலும் மூன்று லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயரக்கூடிய அபாயகரமான சூழ்நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகத் தனது கட்டமைப்புகளைத் தயார்ப் படுத்தியும் வருகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள இலங்கைக்கான பொதுவான மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டம் குறித்த அறிக்கையிலேயே இது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008இல் இலங்கையில் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் மோசமடையலாம் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள…

  2. இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட யார் காரணம்? : இந்தியா தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் புதுடில்லி: விடுதலைப்புலிகளுடன் அமைதி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, கடும் சண்டையில் இலங்கை ராணுவம் இப்போது இறங்கி விட்டது; ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீடித்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் பின்னணியில் இந்தியா இருந்தது பலருக்கும் தெரியாத ரகசியம். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையை இந்தியா, "அமைதி பார்வையாளராக' பார்த்து வருகிறது என்று தான் பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும்; சண்டையால் பலனில்லை என்று முடிவுக்கு வந்து, அந்த நாட்டுக்கு உதவ முன்வந்தது இந்தியா தான். தொடர்ந்து போர் நீடிக்கும்: அதிபராக ரணசிங்கே …

  3. திங்கள் 25-02-2008 17:46 மணி தமிழீழம் [தாயகன்] பேராதெனிய பல்கலைக்கழகத்தில் மோதல் - 11 மாணவர்கள் காயம் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவ அணிகளுக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கலை, மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களுக்கு இடையில் நேற்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து இந்த மோதல் ஆரம்பமாகி இன்று காலை கைகலப்பில் முடிவடைந்தது. காயமடைந்த 11 மாணவர்களில் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருந்த 9 மாணவர்கள் சிகிச்சையின் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  4. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மாளிகைப் பகுதிக்குள் காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் நுழைவதற்கு முயற்சித்த தமிழ் இளைஞர் ஒருவரை அரச தலைவர் மாளிகைக்குரிய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  5. இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் பௌத்த துறவிகள் சிலர் எதிர்மாறான செயற்பாடு [25 - February - 2008] * இன்றைய அவலத்திற்கு இதுவே காரணம்; கலாநிதி விக்கிரமபாகு கௌதம புத்தர், விடயங்களை ஆராய்ந்து உண்மையின் பிரகாரம் செயற்படுமாறே தமது சீடர்களுக்கு போதித்தார். ஆனால், எமது நாட்டிலுள்ள சில பௌத்த துறவிகள் இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் மாறாக செயற்படுவதே இன்றைய நிலைமைகளுக்கு காரணம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை திராவிட இயக்கத்தின் தலைவர் ஈ.மா. அருமைதாசனின் நினைவஞ்சலிக் கூட்டம் கடந்த புதன்கிழமை கொழும்பு புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்ரமபாகு …

    • 3 replies
    • 1.8k views
  6. மஹிந்த ஜனாதிபதியான பின்னர் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன- ஜெனீவா ஆய்வாளர் 25.02.2008 / நிருபர் எல்லாளன் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்திருப்பதாக ஜெனீவாவின் சிறிய ஆயுதங்கள் தொடர்பான ஆய்வுநிலையத்தின் பணிப்பாளர் ரொபேர்ட் முஹா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகாகுமாரதுங்க ஆகியோர் போல விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியுமென்ற பிடியைத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வைத்துக்கொண்டுள்ளார். எனினும், கடந்த கால அரசாங்கங்களைவிட வித்தியாசம் என்னவெனில் சமாதானப் பேச்சு மூலமான அரசியல் தீர்வுக்கான அனைத்து …

  7. ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ரம்பொடை சுரங்க பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது 2/25/2008 3:17:35 PM வீரகேசரி இணையம் - மத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப் பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாககத் திறந்துவைத்தார்.225 மீற்றர் நீளமான ரம்பொட சுரங்கப் பாதை ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ரூபா 2 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் 54 கிலோ மீற்றர் நீளமான கம்பளை – நுவரேலியா வீதியையும் 17 கிலோ மீற்றர் தூரமான கம்பளை – நாவலப்பிட்டிய வீதியையும் இணைக்கும் வகையில் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் இலகுவாக்கப்பட…

  8. திங்கள் 25-02-2008 16:47 மணி தமிழீழம் [தாயகன்] மட்டக்களப்பு பெண் அமெரிக்காவில் கைது போலியான கடவுச்சீட்டு மூலம் அமெரிக்காவிற்கு நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் மட்டக்களப்பு பெண்ணொருவர் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 26 அகவையுடை சாமினி குமார் என்ற இந்தப் பெண் கனடியப் பிரசையான அஸ்வேவி ஜெகதீஸ்வரன் என்பவரது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் நாளன்று கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட பெண் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  9. கொழும்பில் இதுவரை 214 பேர் கடத்தப்பட்டுள்ளனர் - மக்கள் கண்காணிப்புக் குழு கொழும்பிலும், கொழும்பின் புறநகரிலும் இதுவரை 214 பேர் கடத்தப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்றுவரை 214 பேர் கொழும்பிலும் அதன் புறநகரங்களிலும் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட 214 பேர் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையினர் ஏதுவித தகவல்களையும் வெளியிடவில்லை என மக்கள் கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. கடத்தப்பட்டவர்களில் 99 விழுக்காட்டினர் தமிழர்கள் எனவும் இவர்களின் சுயவிபரங்களை திரட்டி வைத்துள்ளதாகவும் மக்கள் கண்காணிப்புக் குழு சுட்டிக்காட்டுகின்றது. இவ்வாறு காணாமல் போனோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக சிறீலங்கா…

  10. தமிழ் பேசும் புத்திஜீவிகள் குழு லண்டனிலிருந்து இங்கு வருகை "வெளிநாட்டில் வதியும் இலங்கைப் புத்திஜீவிகளின் குழு பிரிட்டன்' என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் பிரமுகர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஒரு வாரகாலமாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகின்றனர் என்று தெரியவருகின்றது. தமிழ் ஜனநாயகக் காங்கிரஸின் தலைவர் ஆர்.ஜெயதேவன், பிரிட்டன் இந்து ஆலயங்களின் சம்மேளனத் தலைவர் என்.சச்சிதானந்தன், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திருமதி ஆர்.பாலசுப்பிரமணியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிட்டன் பிரிவுத் தலைவர் கே.சுப்பையா, லண்டன் ஈழப்பசுபதீஸ்வரர் ஆலய அறங்காவலர் கே.விவேகானந்தன், டென்மார்க் தமிழ்ச் சமூக அமைப்பைச் சேர்ந்த அரு…

  11. எனக்கும் ஒருவிடயம் உதைக்குது அந்த நேரத்திலிருந்தே இராணுவம் தேவையில்லாமல் வெளிக்கிட்டு அல்லது வேவையில்லாமல் சண்டையைத்தொடங்கிப்போட்டு அடிவாங்கும்போது எல்லோரும் சொல்லுறவ அரசியல் லாபங்களுக்காக இராணுவத்திட்டங்களைப்போட்டா

  12. மன்னாரில் மையம் கொள்ளும் யுத்தம் [24 - February - 2008] -விதுரன்- வன்னியில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் பகுதிகளினுள் நுழைந்துவிட படையினர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சகல வளங்களுடனும் புலிகளுக்கெதிரான போரைத் தீவிரப்படுத்தினாலும் விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்ப்பால் படையினரின் வெற்றி சாத்தியப்படவில்லை. பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் படையினர் உள்ளனர். வன்னிக் களமுனையில் ஏதாவது பகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் கடந்த சில வாரமாக இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தினமும் பாரிய தாக்குதல்கள் நடைபெறுகின்றன. புலிகள் தங்கள் நிலைகளிலிருந்து பின் வாங்குகிறார்கள், தினமும் ஐம்பதிற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப…

  13. மன்னார் நகரத்தை அண்டி படையினரின் நிலைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி நேற்றுப் பலத்த ஷெல்இ பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்வுகளினால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றமடைந்து காணப்பட்டனர். இதேசமயம்இ,நேற்று மன்னார் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் படுகாயமடைந்த நான்கு இராணுவத்தினர் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட விருந்தனர். இதற்கிடையில் வடக்கின் கள முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பல்வேறு மோதல்களில் பத்து இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வவுனியா, முள்ளிக்குளப் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற…

    • 3 replies
    • 2.2k views
  14. Started by NMa,

  15. இலங்கைத் தமிழர்களின் "தமிழர் தாயகம்' குறித்து பகிரங்க விவாதமொன்றிற்கு வருமாறு அமெரிக்காவின் முன்னாள் உதவி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பேர்னாட் குணத்திலகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். பேர்னாட் குணதிலகவிற்கு தாம் எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: தமிழ், தாயகம் தொடர்பாக பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் என்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது போலஇ இலங்கை அரசு தமிழர்களை முதல்தர பிரஜைகளாக நடத்துகிறதென்றால் அவர்களுக்கு குறைபட்டுக் கொள்வதற்கு எதுவுமில்லை யென்றால் தனி நாடா அல்லது ஐக்கியமா என்பதை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவதற்…

    • 7 replies
    • 2.6k views
  16. புலிகளை ஒழித்துக்கட்டுவதாக அரசு சூளுரைத்தபோதும் வட பகுதி இராணுவ நடவடிக்கையில் மந்த நிலை [24 - February - 2008] விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் சூளுரையுடன் அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்கின்ற போதிலும் தசாப்தகாலமாக தொடரும் மோதல்களின் இறுதி முடிவு தொடர்பாக முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நிச்சயமற்ற தன்மையே காணப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் அரசியல்வாதிகளும் `பயங்கரவாதிகளை' அழித்தொழிக்கப் போவதாக உறுதியளித்திருக்கும் அதேசமயம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் வாபஸ் பெற்ற பின் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆயினும், புலிகளை அழித்தொழிப்பது தொடர்பான இராணுவத்தின் வீரப் பேச்சுகளில் இப்போது தணிவேற்பட்டுள்ளது. `நாம் வெற்றிகண்டு வர…

  17. கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர சோதனை ! கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று அதிகாலை முதல் நண்பகல் வரை விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வெளியிடங்களிலிருந்து கொழும்புக்குள் வந்த பஸ்கள் உட்பட சகல வாகனங்களும் பயணிகளும் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டதுடன

    • 0 replies
    • 828 views
  18. Started by nunavilan,

    கொசோவோ பாடங்கள் [24 - February - 2008] முன்னாள் யூகோஸ்லாவிய சம்மேளனத்தில் எஞ்சியிருக்கும் பெரியநாடான சேர்பியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு அல்பேனிய இனத்தவர்களை அதிகப்பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ மாகாணம் கடந்த வாரம் செய்த சுதந்திரப் பிரகடனம் அரசொன்றை அங்கீகரிப்பதில் இருக்கக் கூடிய தகுதிகள் பற்றி உலகில் இன்று பரந்தளவில் விவாதங்களை மூளவைத்திருக்கிறது. கொசோவோவை சுதந்திரநாடாக முதன்முதலில் அமெரிக்கா அங்கீகரித்திருக்கின்றமையும

    • 1 reply
    • 1.3k views
  19. வடக்கிலும் விரைவில் மாகாணசபை தேர்தல் அமைப்பாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி அறிவிப்பு 2/24/2008 7:20:19 PM வீரகேசரி நாளேடு - நாட்டை பிரிக்காது, காட்டிக் கொடுக்காது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கமைய தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள் ளப்படும். புலிகளின் தலைவர் பிரபாகரனே 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்த தடைபோட்டவரா வார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்திய பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். அதேபோல் வடக்கிலும் விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்…

  20. ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை அம்பலப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. ஒன்பது போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் சிறீலங்காப் படையினருடன் ஏற்பட்ட மோதல்களில் வீரச்சாவடைந்துள்ள ஒன்பது போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 22-02-2008 அன்று… 1) லெஃப்ரினன்ட் கலைச்சுடர் அல்லது தங்கமலர் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், 8ஆம் வாய்க்கால், மாணிக்க பிள்ளையார் கோவிலடி, உருத்திரபுரம், கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கந்தசாமி கேமனா, 2) கப்டன் கடலொளியன் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை நிலையான முகவரியாகக் கொண்ட சாமித்தம்பி கோவிந்தன், 21-02-2008 அன்று… 1) வீரவேங்கை செல்வக்கதிர் என்றழைக்கப்படும் 5ஆம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்த சாமிந…

  22. தெற்கில் பாடசாலைகள், பேருந்து மற்றும் தொடருந்து வண்டிகளின் பாதுகாப்பிற்காக பொதுமக்களில் இருந்து 1,50,000 பேரைத் திரட்டி சிவில் பாதுகாப்புப் பிரிவொன்றை ஆரம்பிக்க மஹிந்த அரசு தீர்மானித்துள்ளது. 'தற்போது உள்ள சிவில் பாதுகாப்பு அமைப்பை மேலும் விருத்தி செய்து ஒரு கிராமத்தில் பத்துப் பேர் வீதம் இவ் வமைப்பில் சேர்த்துக் கொள்ள அரசு தீர்மானித்துள்ளது' என்று மக்கள் பாதுகாப்புப்க் கமிட்டியின் இணைப்பாளர் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். 25 மாவட்டங்களில் 322 பிரதேச சபை காரியாலயங்களுடாக இப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 14,913 கிரமசேவையாளர் பிரிவினூடாக முதற் தடவை 1,49,130 இளைஞாகளை சிவில் பாதுகாப்பு கமிட்டிக்கென சேர்த்துக் கொள்ளப்படுவாhகள்…

    • 2 replies
    • 969 views
  23. இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிககை எடுக்த் தூண்டுவதற்குமாக இன்று முதல் பெரும் பிரசாரப் போர் ஒன்றை மேற் கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது என கூறப்படுகின்றது. இனப்பிரச்சினைத் தீர்விற்காகன அரசியல் யோசனையாக அரசைமைப்பின் 13 வது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன் வைத்தமைக்கு இந்தியவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக்குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. இலங்கையில் இந்தியாவின் புதிய நடவடிகககைளினால் ஏற்படக்கூட…

    • 14 replies
    • 3.5k views
  24. மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக பிள்ளையான் குழு உறுப்பினர்கள் இருவரும் தற்கொலைதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் களுவாஞ்சிகுடியில் மட்டக்களப்பு – கல்முனை வீதியின் அற்புதப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பிள்ளையான் குழு அலுவலகத்தில் கடமையாற்றும் ரொகான்,ஜெகன் என்பவர்களே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் களுவாஞ்சிகுடியில் இருந்து கல்லாறு முகாமுக்கு சென்றுகொண்டிருந்தபோது துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் இவர்கள் மீது தற்கொலை…

    • 12 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.