ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய பதில் பணிப்பாளர்கள் நியமிப்பு October 28, 2018 அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய பதில் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்தவகையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சரத் கோன்கஹவும் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பதில் தலைவராக வசந்த பிரியா ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/101086/
-
- 0 replies
- 355 views
-
-
சிறிலங்காவில் கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசாங்கம் ஊடக நிறுவனங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐரிஎன் என அழைக்கப்படும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர், ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரிஎன் செய்தி அறைக்குள் நுழைந்த ஒரு குழுவினர் அங்கிருந்த ஊடகப் பணியார்களைத் தாக்கியுள்ளனர். இதையடுத்தே, அரச ஊடக நிறுவனங்களுக்கு இராணுவ, பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, புதிய பிரதமராக பதவியேற்…
-
- 4 replies
- 933 views
-
-
அரச ஊடகங்களில் எனது குடும்பம் தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் பங்கேற்கும் நிகழ்வுகள் தொடர்பில் அதிகளவான பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊடக அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாமும், தமது தாயாரும், சகோதரர்களும் அண்மையில் இவ்வாறு ஒளிபரப்புச் செய்யப்பட்ட செய்தி ஒன்றை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளை வரிசைக் கிரமமாக அரசாங்க ஊடகமொன்றில் ஒளிபரப்புச் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார…
-
- 1 reply
- 938 views
-
-
அரச ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தலில் பக்க சார்பாக செயற்படுவதாக சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளதுடன் இந்த ஊடகங்களுக்கு எதிராக அடிப்படை உரிmம் மீறல் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனம், இலங்கை சுதந்திர தொலைகாட்சி நிறுவனம் ( ஐ.டி.என்), அசோசியேற்றட் பிரெஸ் ஆகியவற்றின் மீதே இந்த வழக்கு தாக்கலைசரத்பொன்சேகா செய்துள்ளார்.
-
- 1 reply
- 550 views
-
-
இலங்கை அரசின் ஊத்தியோகபூர்வத் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட அரச ஊடகங்களில் யுத்தம் ஓர் விளம்பரமாக காண்பிக்கப்படுகின்றது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த விளம்பரக் கட்சி ஒளிபரப்பாகின்றது என்றும் இதனைப் பார்க்கும் வடகிழக்கு மக்கள் பதறுவதாகவும் எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தின் சூடுபிடித்துள்ள நிலையில் தன்னை எப்படியாவது வெல்ல வைக்க வேண்டும் என்ற நோக்கில் அரச வளங்களை தீவிரமாகப் பயன்படுத்தி வரும் இலங்கை ஜனாதிபதி தனது தேர்தல் தேவைகளுக்காக அரச ஊடகத்தை அதிகமாக பயன்படுத்துகின்றார். அரச தொலைக்காட்சிகளில் யுத்த விளம்பரம் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பப்டுகின்றது. யுத்தத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி என்ற தோரணையில் ஒளிபரப்பாகும் இந்த விளம்பரம் தொடர்ந…
-
- 1 reply
- 688 views
-
-
அரச ஊடகம் பிரதமருக்கு ஆதரவாக பிரச்சாரம்- கபே குற்றச்சாட்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச ஊடகமொன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றதென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கபே இதனை குறிப்பிட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கபே தெரிவித்துள்ளதாவது, ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருடகால அரசியல் வாழ்க்கை பற்றிய தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் குறித்த அரச ஊடகம் அவரை ஊக்குவிக்கின்றது. இது அரச வளங்களை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கை ஆகும். எனவே இவ்விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/அ…
-
- 0 replies
- 187 views
-
-
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
அரச ஊழியர்களின் ஊதியம் தொடர்பான புதிய யோசனை அரச ஊழியர்களுக்கு வாரந்தோறும் சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை திரட்டும் சவாலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியதில்லை. மேலும் சம்பளம் வாங்குபவரும், சம்பளம் வாங்குபவரும் கடனில் சிக்காமல் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கும் முறைமை உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/235…
-
- 0 replies
- 616 views
- 1 follower
-
-
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியானது! அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கு அமைய அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65 ஆக மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு அரச உத்தியோகத்தரும் 55 வயதிற்குப் பின்னர் விரும்பினா…
-
- 0 replies
- 191 views
-
-
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை... 60ஆக அறிவிக்கும் அறிவிப்பு, வெளியிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1297151
-
- 1 reply
- 161 views
-
-
தவறான தீர்மானத்தை எடுத்தால் கிரீஸில் நடந்தது போல் VAT வரியை 13% - 23% ஆக அதிகரித்து அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீத்தினால் குறைக்க வேண்டிய நிலை வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று (14) நடைபெற்ற யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதிய பொருளாதார முறைமை தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளோம். ஆனால் நாம் புதிய பொருளாதார முறையுடன் நிலையாக முறைமையொன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அடைந்துகொண்ட ஸ்திரத்தன்மையை பலப்படுத்த வேண்டும். இதுவரையான பய…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
வரவு செலவுத் திட்டத்தில் உறுதி வழங்கியதற்கமைய அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமைச்சர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 150 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவெனவும் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஷஷவரவு செலவுத் திட்டத்தின் மூலமாக அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிக…
-
- 0 replies
- 629 views
-
-
27 DEC, 2023 | 09:21 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரச சேவையில் இருந்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரச ஊழியர்களுக்கு இருக்கும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வை குழுவின் பிரேரணைக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என அரச மாகாண அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் அமில பண்டார தெரிவித்தார். அரச ஊழியர்களுக்கு ஒருவருடத்துக்கு இருந்துவரும் விடுமுறை நாட்களை குறைப்பதற்கு துறைசார் மேற்பார்வை குழு முன்வைத்திருக்கும் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரச சேவையில் இருந்துவர…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
அரச ஊழியர்களின்.. ஆடை தொடர்பான, புதிய சட்டம் விரைவில்! அரச ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பத்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கிடைத்த அமைச்சு தொடர்பில் ஊடகவியலாளர்கள் நாடாளுமன்றத்தில் வைத்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பத்திக் கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பத்திக் ஆடை அணிந்தே நாடாளுமன்ற்திற்கு வருகைத்தந்திருந்தார். இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு ஆடை தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும…
-
- 2 replies
- 441 views
-
-
அரச ஊழியர்களின்... ஓய்வு பெறும் வயது எல்லையில், மாற்றம். அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து . எனினும் தற்பொழுது 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைந்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1285454
-
- 0 replies
- 179 views
-
-
அரச ஊழியர்களின்... சம்பளம், குறைக்கப்பட மாட்டாது என அறிவிப்பு! அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விசேட சுற்றறிக்கை நிதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278730
-
- 0 replies
- 110 views
-
-
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்துடன் எதிவரும் 10 ஆம் திகதி சம்பளம்! அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரவிக்கப்படுகின்றது. இதில், 2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில், அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடக்கப்பட்டள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதாவது, அரச ஊழியர்கள் தற்போது பெறும் சம்பளத்துக்கு அதிகமாக 10,000 ரூபாய் கொடுப்பனவும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியமும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகர…
-
- 0 replies
- 295 views
-
-
அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும்!- ரணில் அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு கால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் சம்பளத்துடன் சேர்க்கப்படும். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலானது உங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும். கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டி நல்லாட்சியை ஏற்படுத்தினார். அவருடன் இணைந்து செயற்படக் கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதா அல்லது அவருடன் முரண்பட்டுக் கொள்ளக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதா என்பதனை தீர்மானிக்க வேண்டிய அவசியம் எழுந்த…
-
- 0 replies
- 244 views
-
-
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூட அரசாங்கத்திடம் பணமில்லை; லக்ஸ்மன் கிரியல்ல அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடிய அளவிற்குக் கூட அரசாங்கத்திடம் பணமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஏற்றுமதித் துறையில் நாடு பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. பல மாவட்டங்களிலும் காணப்பட்ட ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் பாரியளவில் ஆடைக் கைத்தெழிற்சாகைலள் மூடப்பட்டுள்ளதுடன் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடிய அளவிற்குக் கூட அரசாங்கத்த…
-
- 0 replies
- 585 views
-
-
கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்த பின்னர் அரச சேவைக்காக புதிய சம்பள கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை உருவாக்கவில்லை என்றால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டு மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படக் கூடும் என அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே கூறியுள்ளார். அரச ஊழியர்களுக்கு இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட 10 ஆயிரம் கொடுப்பனவு மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. இந்த கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் போது தற்போது காணப்படும் சம்பள வீதம் மாறக்கூடாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியிருந்தது. எவ்…
-
- 0 replies
- 410 views
-
-
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்முறையும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 2015ஆம் ஆண்டைவிட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய ஐந்தாவது தடவையாக அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் பத்தாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. http://athavannews.com/அரச-ஊழியர்களுக்கு-மகிழ்-4/
-
- 1 reply
- 550 views
-
-
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மேலதிக கொடுப்பனவினை வழங்க அனுமதி! தகுதி வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்க திரைசேறி அனுமதி வழங்கியுள்ளது. திரைசேறியினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து சட்ட ரீதியான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து ஊழியர்களுக்கும் 2019ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை செலுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொடுப்பனவு செலுத்த தகுதியுள்ள நிறுவனங்களுக்கு, கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கமைய, அவர்களின் 2018 …
-
- 3 replies
- 571 views
-
-
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன? எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களிலிருந்து வேலைசெய்யும் பணியாளர் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமது பணிகளை மேற்கொண்டு நேரகாலத்தோடு வீடுகளுக்குச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி குறி…
-
- 0 replies
- 199 views
-
-
அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்! “எதிர்வரும் ஆண்டு முதல் அரச பணியாளர்களின் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக” நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் தேர்தல் பிரசார பணிகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டில் பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் போது அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அவர்கள் முன்னிலையாகவில்லை.ஆனால் ஜனாதிபதி பாதகம் ஏற்படாதவாறு பொருளாதார அபிவிருத்தி ந…
-
-
- 15 replies
- 720 views
- 1 follower
-
-
அரச ஊழியர்களுக்கு, 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு. அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளது. புதிய அரசின் 100 நாள் திட்டங்களுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் .இதில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பும் இடம்பெறவுள்ளது. நன்றி உதயன்.
-
- 0 replies
- 1.5k views
-