ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
மோதலுக்கு உண்மையான காரணம் தண்ணீர் அல்ல' [02 - August - 2006] [Font Size - A - A - A] திருகோணமலையில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதலிற்கான உண்மையான காரணம் நீராக இருக்காது என யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். வடகிழக்கில் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மோதல்களை சுட்டிக்காட்டியுள்ள ஹென்றிக்சன் நீரே உண்மையான காரணமாக இருந்தால் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது என குறிப்பிட்டுள்ளார். கடற் புலிகளின் இலக்கந்தை தளம் நீரிற்காக தாக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.thinakkural.com/news/2006/8/2/i...ws_page7655.htm
-
- 2 replies
- 1.3k views
-
-
மூக்குக் கண்ணாடி கொடுப்பதில் தகராறு; பிரதமரின் மகன் தாக்கி ஒருவர் காயம்! புளத்சிங்கள தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவமொன்றில் கலந்துகொண்ட பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகன் விதுர விக்கிரமநாயக்க, நிகழ்ச்சி அமைப்பாளரொருவரைத் தாக் கிக் காயப்படுத்தினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்மால் சிபார்சு செய்யப்பட்ட சிலருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப்ப டாமையால் கோபமடைந்தே விதுர விக் கிரமநாயக்கா அந்த நிகழ்ச்சியின் அமைப் பாளர்களுள் ஒருவரை தாக்கினார் என்று தெரிய வருகின்றது. சம்பந்தப்பட்ட அமைப்பாளர் தமக் கேற்பட்ட காயங்களுக்கு வைத்திய சிகிச்சை பெற்றுக்கொண்ட போதிலும், விதுர…
-
- 5 replies
- 3.2k views
-
-
மாவிலாறு அணையைக் கைப்பற்ற 10 நிமிடம் நடையே உள்ளது - இராணுவப் பேச்சாளர் சேருநுவர மாவிலாறு அணையை திறப்பதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அணையை 10 நிமிடங்களில் செல்ல கூடிய தொலைவிலேயே உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள வெடிப்பொருட்களினால் இந்த தூரத்தை கடந்து செல்ல முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நேற்று அதிகாலை அடையாளம் காணப்பட்ட இடங்களின் மீது வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணையை மீடப்பது சுலபமான போதிலும் அதனை பாதுகாக்க படையினர் கடுமையான சிரத்தையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். கொழும்பில…
-
- 7 replies
- 2.5k views
-
-
மாவிலாறு அணை பிரச்சினை: பாலசிங்கத்துடன் எரிக்சொல்ஹெய்ம் ஆலோசனை [புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 08:30 ஈழம்] [ச.விமலராஜா] மாவிலாறு அணைக்கட்டுப் பிரச்சனை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் சந்தித்துப் பேசியுள்ளார். லண்டனில் கடந்த வியாழக்கிழமை இச்சந்திப்பு நடந்துள்ளது. இச்சந்திப்பின் போது கண்காணிப்புக் குழுவினருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்துள்ள கெடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மீதான பொருளாதாரத் தடைகளை செயற்படுத்தியும் விமானக் குண்டுவீச்சுக்களை நடத்தியும் வரும் சிறிலங்கா அரசாங்கமே தற்போதைய நிலைமைகளுக்கு காரணம் என்ற…
-
- 2 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 07:55 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் பிரகடனப்படுத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், மாவிலாறு அணைக்கட்டு விடயத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் யுத்தத்தை பிரகடனப்படுத்தவில்லை என்றார். "நீர் பிரச்சனைக்காக நாம் யுத்தத்துக்குச் செல்லவில்லை. மனிதாபிமான பிரச்சனைக்காக இதை மேற்கொண்டுள்ளோம். யுத்த நிறுத்தத்திலிருந்து நாம் விலகுவதாக இருந்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளபடியாக 14 நாள் முன் அறிவிப்பை நாம் அளிப்போம்" என்றார் கேகலிய ரம்புக்வெல. சேருநுவெர ராஜ மகா விகார…
-
- 3 replies
- 1.1k views
-
-
மேலாதிக்கச் செருக்கோடு மேற்கொள்ளப்படும் செயற்பாடு திருகோணமலை மாவட்டம் மாவிலாறு எல்லைப் புறப் பிரதேசத்தில் இலங்கை அரசுப்படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் தற்போதைய மோதல்கள் முழு அளவிலான யுத்தமாக விரிவடையாது எனத் தாம் நம்புகின்றார் என்று யுத்த நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்ஸன் தெரிவித் திருக்கின்றார் யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்க கண்காணிப்பாளர்கள் பார்த்திருக்க விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றும் முனைப் புடன் மும்முனை நகர்வுக்கான பெரும் இராணுவ நடவடிக் கையை விரிவான ஏற்பாடுகளோடு அரசுப் படைகள் முன் னெடுக்கின்றன. விடாது வான் வழித் தாக்குதல்கள் நடக் கின்றன. விமானக் குண்டு வீச்சுக…
-
- 0 replies
- 980 views
-
-
மகிந்தபுர பதில் தாக்குதலில் 4 இராணுவத்தினர் பலி திருகோணமலை பிரதேசத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதல் நடவடிக்கையில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். திருகோணமலையின் தென்பகுதியில் சேசருநுவர பிரதேசத்தில் மகிந்தபுரம் மற்றும் செல்வநகர் இராணுவ முகாம்களிலிருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சிங்கள இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பகுதிகளின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவிலிருந்தே கட்டைபறிச்சான், தோப்பூர், செல்வநகர் மற்றும் மகிந்தபுர முகாம்களிலிருந்து மோர்ட்டார் எறிகணைத் தாக்குதல்களும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களு…
-
- 90 replies
- 15k views
-
-
தொடர்ந்தும் முற்றுகைக்குள் கப்பல்- மேலும் ஒரு டோராப்படகு தாக்கியழிப்பு: இளந்திரையன் [புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 05:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] தொடர்ந்தும் முற்றுகைக்குள்ளேயே சிறிலங்கா கடற்படையினரின் கப்பல் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது: திருகோணமலை துறைமுகத்திற்கு 854 சிறிலங்காப் படையினரை ஏற்றிவந்த கப்பலை புல்மோட்டை கடற்பரப்பில் தரையிறக்க முற்பட்ட போது கடற்புலிகள் கடுமையாக தாக்கியதனால் கப்பல் மீண்டும் சர்வதேச கடற்பரப்பினை நோக்கிச் சென்று விட்டது. குறித்த கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் திருமலை துறைமுகத்தில…
-
- 3 replies
- 2.2k views
-
-
மாவிலாறு அணைக்கட்டைத்திறந்து அதனை மூடமாட்டோம் என புலிகள் உறுதியளித்தால் தாக்குதல்கள் நிறுத்தப்படும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வீரகேசரி நாளேடு அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன் படிக்கையை கூட்டமைப்பு அரசாங்கம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது. விடுதலைப்புலிகள் மாவிலாறு அணைக்கட்டை திறந்து அதனை ஒருபோதும் மூட மாட்÷டாம் என்று உறுதியளித்தால் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற சகல விதமான தாக்குதல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படும். என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார் http://www.virakesari.lk/vira/html/pol_vie...ew.asp?key=100…
-
- 17 replies
- 5.8k views
-
-
ஈச்சிலம்பற்று, வெருகல் பகுதிகளில் விமானக்குண்டு வீச்சு , ஷெல் தாக்குதல் இருவர் காயம் ; இராணுவம் முன்னேறவில்லை என்கின்றனர் புலிகள் வீரகேசரி நாளேடு மாவிலாறு பகுதியை சூழவுள்ள ஈச்சிலம்பற்று, வெருகல் பகுதிகளில் விமானப்படையினரது குண்டு வீச்சு விமானங்கள் நேற்றும் குண் டுத் தாக்குதல்களை மேற்கொண்டன. நேற்றுக் காலை 8.30 மணி முதல் நடைபெற்ற இந்த விமானக் குண்டு வீச்சில் இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மரங்கள் பலவும் முறிந்து விழுந்துள்ளன. இதனைவிட இப்பகுதிகளை நோக்கி படையினர் கடும் ஷெல் தாக்குதல்களையும் நேற்று மேற்கொண்டுள்ளனர். கல்லாறு இராணுவ முகாமிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. படையினர் விமானக் குண்டு வீச்சையும் ஷெல் தாக்கு…
-
- 0 replies
- 874 views
-
-
செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 23:59 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருமலை கடற்படைத் தளம் மீதான ஆட்டிலறித் தாக்குதலையடுத்து இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கை அவசர அவசரமாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாடியுள்ளார். முன்கூட்டியே நிரல்படுத்தப்படாதவகையில் அவசர அழைப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச, லெபனானில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளிற் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீட்பதில் இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்ததோடு, இன்று விடுதலைப்புலிகளால் திருக்கோணமலை கடற்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆட்லறித் தாக்குதல் அதனால் எழுந்துள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து இந்தியப் பிரதமருக்கு அறியத் தந்ததாகவும் தெரியவருகிறது. …
-
- 1 reply
- 1.2k views
-
-
திருமலைக் கடற்படைத் தளம் மீதான ஆட்லறித் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள சிறீலங்கா அரசு [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 23:04 ஈழம்] [தாயக செய்தியாளர்] வட-கிழக்குப் போரரங்கிற்கான பிரதான போக்குவரத்து மற்றும் விநியோகத் தளமாகவும் திருமலைப் பிரதேசத்திற்கான பாதுகாப்பிற்கான இதயநாடியாகவும் விளங்கிய திருமலைக் கடற்படைத் தளத்தின் மீதான ஆட்டிலறித் தாக்குதல் சிறீலங்காப் படைத்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள
-
- 0 replies
- 1.1k views
-
-
கண்காணிப்புக்குழுவில் இருந்து சுவீடனும் வெளியேறுமென அறிவிப்பு - பண்டார வன்னியன் Tuesday, 01 August 2006 09:31 யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து செம்ரெம்பர் முதலாம் நாளிற்கு முன்பாக தமது நாட்டுப் பிரதிநிதிகளை திரும்பப் பெறப்போவதாக சுவிடன் அரசு உத்தியோக பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீதான தடை அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளை வெளியேற்றுமாறு விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். http://sankathi.com/content/view/4155/26/
-
- 1 reply
- 1k views
-
-
இழப்புக்களை மூடிமறைக்க நேரடியாக கொழும்பு கொண்டுசெல்லப்படும் காயமடைந்த படையினர் - பாண்டியன் Tuesday, 01 August 2006 20:11 திருகோணமலை கடற்படைத் தளம் மீதான உக்கிர ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்களை மூடிமறைக்கும் நோக்குடன் படுகாயமடைந்த படையினரை நேரடியாக கொழும்பிற்கு கொண்டுசெல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. கடற்படையினர் தரப்பில் 30 பேரளவில் படுகாயமடைந்ததாக படைத்தரப்பு அறிவித்திருந்தது. ஆனால் இவர்களில் அறுவர் மாத்திரமே திருமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். மற்றைய காயமடைந்த படையினர்; இரு தடவைகளில் உலங்குவானூர்திகள் மூலமும், மருத்துவக் காவு வண்டிகள் மூலமும் நேரடியாகக் கொழும்பிற்குக் கொண்டு…
-
- 2 replies
- 1.6k views
-
-
போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு: வைகோ [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 20:25 ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில் போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு பக்க பலமாக இருப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் ம.தி.மு.க கட்சி விழா ஒன்றில் நேற்று திங்கட்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் போராடி வருகிற நிலையில், தற்போது அங்கும் மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. போர் மூண்டால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தாய்த் தமிழகத்தையே திரட்டுவோம் என்றார் வைகோ. http://www.eelampage.com/?cn=27929
-
- 2 replies
- 1.4k views
-
-
புல்மோட்டைக் கடற்பரப்பில் உக்கிர மோதல்: கடற்படையின் கலன்கள் விடுதலைப் புலிகளால் முற்றுகை. திருமலை புல்மோட்டைக் கடற்பரபில் விடுதலைப் புலிகளின் கடற்படையினருக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெறுகின்றது. இன்று மாலை 6.30 மணிக்கு இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் நடைபெறுவதாக திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. புல்மோட்டைக் கடற்பரப்பில் நகர்ந்து கொண்டிருக்கும் சிறீலங்கா கடற்படையினரின் கடற்கப்பலை சுற்றிவளைத்த கடற்புலிகள் கப்பலை சுற்றி வளைத்து தாக்குதலை நடத்துகின்றனர். கடற்படையினரின் கப்பலை மீட்கும் முயற்சியில் 6 சிறீலங்கா டோரா அதிவேக பீரங்கிக் கடற்கலன்கள் தாக்குதலைத் தொடுத்து வண்ணம் உள்ளன. எனினும் விடுதல…
-
- 23 replies
- 4.9k views
-
-
வவுனியாவில் ஒட்டுப்படையினரால் பெண் சுட்டுக்கொலை. வவுனியா வேப்பங்குளப் பகுதியில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து தாக்குதலாளிகளால் கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நகரப் பகுதியில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. வனியா தெற்று இலுப்பைக் குளப் பகுதியில் சிறீலங்கா துணைக் குழுவினர் நடத்திய தாக்குதலில் குடும்பப் பெண் பலியாகியுள்ளார். நள்ளிரவைக் கடந்து இன்று அதிகாலை இலுப்பைக்குளம் கோவிற்குளம் பகுதிகளுக்கு உள்ள வீடுகளுக்கு உட்புகுந்த துணைக்குழுவினர் பெருமளவு சொத்துக்களை களவாடியுள்ளனர். துணைக்குழுவினர் சூறையாடலை தடுத்து நிறுத்த முயன்ற குடும்பப் பெண்ணை கோரமான முறையில் சுட்டுக்கொன்றுள்ளன…
-
- 1 reply
- 1.7k views
-
-
மிசன் வோட்டர் செட் நடவடிக்கையில் 7 இராணுவ அதிகாரிகள் பலி! சிறீலங்கா படையினர் நடத்திய ஒப்பிரேசன் மிசன் வோட்டர் செட் நடவடிக்கையில் கொல்லபட்ட 20 இராணுவத்தினரில் 7 பேர் அதிகாரிகள் என சிறீலங்கா படைத் தலைமையகம் உறுதி செய்துள்ளது. ஒரு மேஜர் தர அதிகாரியும் ஒரு கப்டன் தர அதிகாரியும் 5 கோப்பிரல் தர அதிகாரிகளும் ஏனையவர்கள் சாதாரண படையினர் எனவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 6 replies
- 1.8k views
-
-
சிறுப்பிட்டி சங்கக் கடை கவலரன் தீக்கிரை. கரவெட்டி இமையாணன் பகுதியைச் சோந்த கௌரூபன் படு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சிறுப்பிட்டி சங்கக் கடை சந்தியில் இருந்த இராணுவக காவலரன் இனம் தெரியாதவர்களினால் தீயிடப்பட்ட கொழுத்தப் பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இராணுவத்தினர் குறிப்பிட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை பொது மக்கள் கண்டு கொண்டதைத் தொடாந்து இராணுவத்தினர் குறிப்பிட்ட காவலரனுக்கு கடந்த இரண்டு நாட்களாக வருவதில்லை இத்தகைய நிலமையில குறிப்பிட்ட இராணுவ காவலரன் தீயிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலையைத் தொடர்ந்து பாரிய அளவில் பொது மக்கள் ஆத்திரமுற்று இருப்பதுடன் பதட்டமான நிலமையும் அப்பகுதியில் காணப்படுகின்றது. http…
-
- 0 replies
- 889 views
-
-
கிளைமோர் வைத்து ஈ.பி.டி.பினர் பொதுமக்களிடம் அகப்பட்டனர். யாழ்ப்பாணம் அரியாலை கனகரெட்னம் வீதியில் கிளைமோர் வைத்த ஈ.பி.டிபி யினர் பொது மகக்ளிடம் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார்கள். கடந்த வியாழக்கிழமை நண்பகல் நேரம் இராணுவப் பொலிஸ் பாதுகாப்புடன் தினமுரசு பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இருவர் கனகரெட்னம் வீதியில் உள்ள சங்கக் கடை மற்றும் தனியார் கடைக்கு அண்மையாக உள்ள அரச மரத்தில் கிளைமேரைப் பொருத்திவிட்டுச் சென்றுள்ளார்கள். அதனைக் கண்னுற்ற அப்பகுதி மக்கள் திரண்டு சத்தமிட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் வைத்த கிளைமோரை வைத்த ஈ.பி.டி.பி.யினர் பொது மக்கள் முன்னிலையில் எடுத்துச் சென்றுள்ளார்கள். இன்று யாழ்ப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
2 ஆம் இணைப்பு) திருமலை கடற்படைத் தளம் மீது எறிகணைத் தாக்குதல்- டோராப்படகு தாக்கியழிப்பு: 8 கடற்படையினர் பலி [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 14:52 ஈழம்] [புதினம் நிருபர்] திருகோணமலை நகரில் உள்ள சிறிலங்கா கடற்படை தலைமையக தளம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணிமுதல் நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையினரின் டோராப்படகு மீது விடுதலைப் புலிகளின் ஐந்து தாக்குதல் படகுகள் நடத்திய தாக்குதலில் டோராப் படகு முற்றாக அழிந்துள்ளது. இதில் எட்டு கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடற்படைத் தலைமையகத்துக்குள் 36 எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின…
-
- 44 replies
- 7.9k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 11 ஆம் திகதி அமெரிக்கா விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 11 ஆம் திகதி வெள் ளிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்கவில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார். சுமார் மூன்று வார காலங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில உத்தியோகபூர்வமான சந்திப்புக்களையும் மேற்கொள்ளவிருக்கின் றார் . ஜனாதிபதியுடன் அமை ச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கலாக சுமார் 100பேரை இக்குழுவினர் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கையி லிருந்து புறப்படவிருப்பதுடன் ஜனாதிபதி 10 ஆம் திகதி காலை அமெரிக்கா புறப்படவிருப்பத…
-
- 0 replies
- 1.4k views
-
-
களுத்துறையில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறி எரிகிறது. தென்னிலங்கை களுத்துறை பகுதியில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியுள்ளது. இன்று நள்ளிரவு 11:30 மணிக்கு களஞ்சியம் வெடித்து சிதறி எரிகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. பதிவு.கொம்
-
- 4 replies
- 2.3k views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ஊர்தி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதில் 18 படையினர் கொல்லப்பட்டிருக்காலாமென ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாகப் பயணித்த படையினரின் ஊர்தியே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும், வீதியோரக் குண்டோ அல்லது கண்ணிவெடியோ இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமெ
-
- 3 replies
- 1.8k views
-
-
:arrow: திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலன் புலிகளின் குரலுக்கு வழங்கிய கருத்துப்பகிர்வு..
-
- 25 replies
- 8.7k views
-