Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் தற்கொலை! யாழ்ப்பாணம் நகர் பகுதியில், மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நகர் பகுதியில் கடை ஒன்றினை நடத்தி வந்த 37 வயதான சி.சிவரூபன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமீப காலமாகவே மீட்டர் வட்டிக்கு வாங்கிய பணத்தினை செலுத்த முடியாத நிலையில் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த அவர் நேற்று (வியாழக்கிழமை) தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். வர்த்தக நோக்கத்திற்காக மீட்டர் வட்டிக்கு வாங்கிய பணத்தொகையின் வட்டி, அதிகரித்து திருப்பி செலுத்த வேண்டிய பணத்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றதால், அவர் இந்த முடிவினை எடுத்திருக்க கூடுமென அவரது உறவினர்கள் மரண விசாரணைக…

  2. யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்தம் தட்டுப்பாடு! Share on FacebookShare on Twitter யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில், இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரத்த வங்கி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையின் பின் புறமாக அமைந்துள்ள 12ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக, இரத்த வங்கிக்கு தினமும் காலை 08 மணி முதல் ம…

  3. அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் – சாணக்கியன்! அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாமல், நேற்றைய தினம் வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடாத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்ப…

  4. கல்முனை சந்தான்கேணியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க மாநகர சபை நடவடிக்கை! கல்முனை சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானக் காணியில் தனி நபர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்ற நிலப் பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட ஆலோசனைக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மாலை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இந்த விசேட ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது. மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதான எல்லைகளில் இடம்பெறும் அத்துமீறல்கள், அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் போன்ற விடயங்களை தடுத்து நிறுத்துவத…

  5. தோட்ட ஊழியர் மரணம் ; 40 இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்க உறுதி By T. SARANYA 14 OCT, 2022 | 03:07 PM நமுனுகல கனவரெல்ல தோட்ட ஊழியர் மரணம் தொடர்பில் தொழில் அமைச்சில் இன்று (14) பேச்சுவார்த்தை நடபெற்றது. பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சர் மனுச நாணயகார, அமைச்சின் செயலாளர், நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறுவாக இயக்குனர் பிரின்ஸ் குணவர்த்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் ராமேஸ்வரன் மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் நமுனுகல கனவரெல்ல தோட்ட ஊழியர் மரணத்திற்கு கம்பனி நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்பதுடன்,உயிரிழந்த இளைஞ…

  6. நிதி அமைச்சு, மத்திய வங்கிக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் 03 NOV, 2022 | 09:44 PM இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திறைசேறி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று (03) இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது. அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் எதிர்கால நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு இலங்கை முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மட்ட …

  7. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு By VISHNU 19 OCT, 2022 | 05:57 PM (எம்.மனோசித்ரா) நுகர்வோரின் நலனைக் கருத்திற் கொண்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய உணவு பொருட்கள சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது. அதற்கமைய இன்று (18) புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலுள்ள சகல சதொச விற்பனை நிலையங்களிலும் இப்புதிய விலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதன் புதிய விலை 490 ரூபாவாகும். மாவின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமைக்கமைய அதன் புதிய விலை 320 ரூபாவாகும். ஒரு கிலோ கிராம் நெத்தலியின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள…

  8. தொடர் மழைக்கான சாத்தியம் By NANTHINI 30 OCT, 2022 | 10:55 AM இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டல எல்லையில் ஒரு தளம்பல் நிலை காணப்படுவதால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை சற்று அதிகமாக பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஒக் 30) வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி காணப்படலாம். ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவில…

  9. எரிபொருள் விலையில் மாற்றமில்லை - அமைச்சர் காஞ்சன By T. SARANYA 03 NOV, 2022 | 02:36 PM விலை குறைப்பை எதிர்பார்த்து விற்பனை முகவர்கள் தமக்குத் தேவையான கொள்வனவுக் கட்டளைகளை (ஆடர்களை ) வழங்காததால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம் இருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானளவு எரிபொருள் கையிருப்புகளை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.l…

  10. வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதற்கான வரையறைகளில் தளர்வு - பதிவாளர் நாயகம் By T. SARANYA 03 NOV, 2022 | 01:01 PM (எம்.மனோசித்ரா) வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களுக்கிடையில் திருமணப்பதிவினை மேற்கொள்வதில் காணப்படும் வரையரைகளை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 2021 இலக்கம் 18 சுற்று நிரூபத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பி.அபேவர்தன தெரிவித்துள்ளார். குறித்த சுற்று நிரூபத்திற்கு அமைய இலங்கையர்கள் திருமணம் செய்வதற்கு தயாராகும் வெளிநாட்டவர்கள் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக சுகாதார அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு மே…

  11. பளையில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 11:36 AM யாழ். பளையில் துப்பாக்கி மற்றும் வாள் வைத்திருந்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் நேற்று முன்தினம் (01) கைது செய்துள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர் வீட்டில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று முன்தினம் மாலை குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, வாள் மற்றும் கைப்பற்றியுள்ளனர். கைதான சந்தேகநபர் நேற்று (02) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாக பளை பொலிஸார் …

  12. சீன போர்க்கப்பல்களுக்கு நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்தவும் – இலங்கையிடம் இந்தியா வலியுறுத்து. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனாவின் போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப இலங்கை அனுமதித்தமைக்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக பல ஆதாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகமானது சீன போர்க்கப்பல்களுக்கு இந்தியா அல்லது அமெரிக்க தலையீடு இல்லாமல் எரிபொருள் நிரப்புவதற்கு சரியான தீர்வை வழங்குகிறது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை கவனத்தில்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்காணிப்பைத் தவிர்ப்ப…

  13. எரிபொருள் நிலைய தொலைபேசிகளை திருடிய முன்னாள் இராணுவ கெப்டன் உள்ளிட் இருவர் கைது! By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 04:54 PM பிலியந்தலை கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் QR குறியீட்டை சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராணுவ கெப்டன் ஒருவரும் நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 80,000 ரூபா பெறுமதியான இரண்டு கைத்தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் அதன் முகாமையாளரால் செய்யப்பட்ட முறைப்ப…

  14. மக்களே அவதானம் ! எச்ஐவி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் By T. SARANYA 02 NOV, 2022 | 04:41 PM சிகை அலங்கார (சலூன்) நிலையங்களில் முடியைக் கத்தரிக்கும்போது எச்ஐவி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், 'சிகை அலங்கார (சலூன்) நிலையங்களில் முடி வெட்டும்போது அதற்குப் பயன்படுத்தப்படும் பிளேட் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது ஒருவருக்குப் பயன்படுத்தப்பட்ட பிளேட்டை மற்றொருவருக்குப் பயன்பட…

  15. இரு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை மீளப் பெற்ற கோட்டை நீதிமன்றம் By VISHNU 01 NOV, 2022 | 10:03 PM (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சர் நலின் தில்ருக் ஆகிய இருவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இன்று செவ்வாய்க்கிழமை (1) அதே நீதிமன்றால் மீளப் பெறப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக் கோவையின் 136 ( 1) ஆம் அத்தியாயத்தின் கீழ் , இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவை விசாரணைக்கு …

  16. 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளத்தை ஆரம்பித்தது ஐ.நா அபிவிருத்திச்செயற்திட்டம் By T. SARANYA 03 NOV, 2022 | 04:43 PM (நா.தனுஜா) இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளமொன்றை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டம், அத்தளத்திற்குத் தம்மால் இயன்ற நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கை மக்களுக்கு உதவமுன்வருமாறு உலக மக்களிடம் கோரிக்கைவிடுத்திருக்கின்றது. இதுகுறித்துத் தெளிவுபடுத்தி ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தி…

  17. ஜப்பானிய மொழியைக் கற்கும் இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வழங்குவது தொடர்பில் பேச்சு By NANTHINI 03 NOV, 2022 | 11:29 AM இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர் நேற்று (நவ 2) மலையகத்துக்கு விஜயம் செய்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் சந்திப்பினை மேற்கொண்டார். இ.தொ.கா. விடுத்த அழைப்பின் பேரில் தூதுவர், முதலில் கொட்டகலையில் உள்ள காங்கிரஸ் தொழிலாளர் ஸ்தாபனத்துக்கு வருகை தந்து, அங்கு இ.தொ.காவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பில் பேசப்பட்டது. …

  18. அரசாங்கம் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – துரைரெட்னம் அரசாங்கம் வடக்கு கிழக்கினை எடுப்பார் கைப்புள்ளைகள் போன்று பார்க்காமல் உடனடியாக இந்த காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கலந்துகொள்ளும் ஊடக சந்திப்பு நேற்று (புதன்கிழமை) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “வடகிழக்கை பொறுத்தவரையில் மாகாண சபை முறைமை தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் க…

  19. யாழில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள இடங்களுக்கு சுகாதார வசதிகளுக்கு ஏற்பாடு By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 11:32 AM கடந்த சில நாட்களாக பெய்த கடும்மழை காரணமாக இடம் பெயர்ந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் திலிப் லியனகே, அவர்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 12 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து காக்கைதீவு மீனவ சமூக மண்டபத்தில் நேற்று முன்தினம் இருந்து (01) தங்கவைக்கப்பட்டுள்ளனர். …

  20. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு இலங்கை வலுவான முன்னேற்றம் காண்பது அவசியம் - ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் வலியுறுத்தல் By T. SARANYA 03 NOV, 2022 | 10:05 AM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீள்பிரயோகம் குறித்து கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான கண்காணிப்புப்பொறிமுறை மற்றும் அதில் உள்ளடங்கும் விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருப்பதுடன் அவ்வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை பூர்த்திசெய்யவேண்டிய கடப்பாட்டில் வலுவான முன்னேற்றம் அடையப்படவேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். அரச நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைக…

  21. தமிழர்களின் காணிகளை அடாத்தாக பிடிப்பதை பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது – வேலன் சுவாமிகள் Posted on November 2, 2022 by தென்னவள் 9 0 சிங்கள அரச பேரினவாதம் நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வலி. வடக்கு காணி அபகரிப்புக்கு எதிராக இன்று (02) போராட்டம் இடம்பெற்றது. இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு தமிழர…

    • 5 replies
    • 309 views
  22. பௌத்த உறவுகளை மேம்படுத்த 15 மில்லியன் டொலர் – இந்தியாவுடன் பேச்சு 15 மில்லியன் டொலர் இந்திய கடனுதவியின் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் இணங்கியுள்ளன. இந்த விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் கலந்துரையாடியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் யாழ் கலாசார நிலையத்தின் செயற்பாடு உள்ளிட்ட முன்னுரிமை திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. குறித்த நிதியில் இருந்து நாடு முழுவதும் உள்ள துறவிகளை பயிற்றுவிக்கும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிரிவேனாக்களில் சூரிய சக்தி வசதிகளை நிறுவுவது …

  23. யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா! இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுடைய பிறந்த நாள் நேற்று (திங்கட்கிழமை) யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் பட்டேலின் கண்காட்சியை யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவலிங்கராசா திறந்து வைத்து பார்வையிட்டனர். தொடர்ந்து, ஒற்றுமை மனித சங்கலியும் அதனை தொடர்ந்து ஒற்றுமை ஓட்டம் கலாச்சார மையத்திலிருந்து யாழ் இந்திய துணைத் தூதரகம் வரை இடம்பெற்றது. https://athavannews.com/2022/1308123

  24. எமது போராட்ட வழிமுறைகளை நாமே தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் Posted on November 2, 2022 by தென்னவள் 9 0 எமது மக்களின் இருப்பும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் பட்சத்தில் எமது போராட்ட வழிமுறைகளை நாமே தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என ஐனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கில் காணி அபகரிப்பு போராட்டத்திற்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ரதை தொடர்ந்து ஐனாதிபதிக்கான மகஜர் தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் வழங்கப்பட்டது குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை தீவின் பூர்வீக இனமான தமிழினம், வரலாற்று ரீதியாக தம்மை தாமே ஆளும் தனி இராசதானியாகவே வாழ்ந்து வந்தனர். …

    • 0 replies
    • 360 views
  25. நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களிடம் கட்டணம் அறவிடும் முறையை அறிமுகப்படுத்தியது கொத்தலாவல வைத்தியசாலை By RAJEEBAN 02 NOV, 2022 | 09:02 AM நிதி அமைச்சு அதிக வருமானத்தை உழைக்குமாறு கேட்டுக்கொண்டது நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து பணத்தை அறவிடுமாறு உத்தரவிட்டுள்ளது - நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களிடமிருந்து கட்டணம் அறவிடும் முறையை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக மருத்துவமனை ஆரம்பித்துள்ளது. நோயாளியுடன் தங்கியிருப்பவர்களிடமிருந்து 350 ரூபாயை அறவிடும் நடைமுறையை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக மருத்துவமனை ஆரம்பித்துள்ளது. இதனை உறுதி செய்துள்ள மருத்துவமனையின் மருத்துவ விநியோகத்திற்கான இயக்குந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.