Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறுமியின் சங்கிலியை அபகரித்தவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு - யாழில் சம்பவம் By VISHNU 22 OCT, 2022 | 07:30 PM (எம்.நியூட்டன்) பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (22) சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. 15 வயதுச் சிறுமி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடுதிரும்ப வீதியில் நடந்து சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்துவிட்டு சிறுமியை கீ…

  2. சொந்த நிலம் இருந்தும் அகதி வாழ்க்கை : முகாம்களில் வசிக்கும் மக்களின் கோரிக்கை By Vishnu 23 Oct, 2022 | 01:57 PM மன்னார் நிருபர் யாழ் மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக நிலவன், பாலாவி, போன்ற அகதிகள் முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் 22 ஆம் திகதி சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் இன்னல்களை கேட்டறிந்தனர். இதன் போது அங்கு வசிக்கும் குடும்பத்தினர் கருத்துத் தெரிவிக்கும் போது, …

  3. 100,000 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருட்களைப் பராமரிக்க முடியாமல் சேமிப்பகம் ! உணவுத் திணைக்களத்தின் சேமிப்பக வளாகத்தை நவீனப்படுத்துவதற்கு 29 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவழிக்கப்பட்டது. இருந்தபோதிலும் 100,000 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருட்களைப் பராமரிக்க முடியாமல் போனது குறித்து கோபா குழு கவனம் செலுத்தியது. 1,00,000 மெட்ரிக் டன் அரிசி இருப்பு வைத்து பராமரிக்க ஆண்டுக்கு 2200 கோடி ரூபாய் தேவைப்படுவது தெரியவந்தது. உணவுத் துறையின் வேயங்கோட்டை சேமிப்பகத்தின் எண் 1, 7, 8, 9, 10, 13 ஆகிய ஆறு கிடங்குகள் 29 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கபீர் ஹாசிம் தலைமையில் கடந்த 20ஆம் திகதி (20) …

  4. ஈஸ்டர் தாக்குதல் : ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை. அதற்கு பதிலாக பொலிஸ் அதிகாரிகளுக்கு சுதந்திரம் வழங்குங்கள் – ரஞ்சித் ஆண்டகை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பொலிஸாருக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கந்தவல தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளின் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்…

    • 4 replies
    • 243 views
  5. ஐ.நாவின் ஆதாரங்களை திரட்டும் பொறிமுறையில் முன்னேற்றம் - தமிழர் உரிமைக்குழு வரவேற்பு By Nanthini 23 Oct, 2022 | 12:32 PM (ஆர்.ராம்) ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் விரிவான அறிக்கை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தின் (OHCHR), இலங்கைக்கான பொறுப்புக்கூறல் திட்டக்குழு, இலங்கையில் நடந்த சர்வதேச குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் அடைந்துவரும் முன்னேற்றத்தையும் தமிழர் உரிமைக்குழு வரவேற்பதாக அறிவித்துள்ளது. குறித்த குழுவின் தலைவர், நவரத்தினம் சிறீ நாராயணதாஸினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.நா. மனித உ…

  6. 22 ஆவது திருத்தமும் – புதிய மாற்றங்களும் – வாக்களிக்காதோரும்! October 23, 2022 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று முன்தினம் (21.10.22) நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்போது 21 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகக் கருதப்படுகிறது. அதனால் 22 ஆம் திருத்தமாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் 21 ஆம் அரசியலமைப்பு திருத்தமாகவே அரசியலமைப்பில் உள்வாங்கப்படுகிறது. இந்த திருத்தத்திற்கு, இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், மூன்றாவது வாசிப்பின் பின்னரான வாக்கெடுப்பின் போது 17…

  7. பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய சர்வதேசப் பொறிமுறை அவசியம் என சிவில் சமூகம் வலியுறுத்து பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக் கொண்டுவரவும் சர்வதேசப் பொறிமுறை அவசியம் என சிவில் சமூகப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூவிடம் அவர்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர். அதுமாத்திரமன்றி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கலை முடிவிற்குக் கொண்டுவர அமெரிக்க அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் வலி…

  8. 22 ஆவது திருத்தம் கள்ளக் கூட்டத்தின் நாடகம் என்கின்றார் கஜேந்திரகுமார் புலம்பெயர் தமிழர்களை பாதிக்கும் 22 வது திருத்தச் சட்டம் என்பது ஆட்சியில் உள்ளவர்கள் தம்மை ஜனநாயகவாதிகள் எனக் காட்ட எடுத்த ஒரு நாடகம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த் தேசம் எனப் பேசுகின்ற போது தாயகத்தில் இருக்கின்ற சனத்தொகையுடன், புலம்பெயர் தமிழர்களும் அதன் ஒரு அங்கம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இரட்டை பிரஜாவுரிமை உடையவர்கள் நாட்டில் முக்கியமான பதவிகளுக்கு வருதை தடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திருத்தத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார். வவுன…

  9. இலங்கை அகதிகளை மூன்றாவது நாட்டிற்கு நாடு கடத்த பிரித்தானியா தீர்மானம் ! சாகோஸ் தீவுகளில் இருந்து புகலிடம் கோரி வரும் இலங்கை அகதிகள், அவர்கள் தானாக முன்வந்து இலங்கைக்குத் திரும்பாவிட்டால், அவர்களை பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்ப பிரித்தானியா தீர்மானித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாத பட்சத்தில், வேறு ஒரு அறியப்படாத நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. மொரிஷியஸ் மற்றும் பிரித்தானியாவில் உரிமை கோரப்படும் சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவான டியாகோ கார்சியாவில் உள்ள முகாமில் குறைந்தது 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்ப…

  10. அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் மூலம் சிறைக்கைதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றது – அம்பிகா சற்குணநாதன் சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் உருவாக்கியுள்ள புதிய விதிமுறைகள் தொடர்பில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தெரிவிக்கையில் தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்ப்பதற்கான அனுமதியை வாரத்தில் ஆறுநாட்கள் என்பதிலிருந்து ஒரு நாளிற்கு குறைப்பது என்ற விதிமுறை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை சிறைக்கூண்டிற்குள் இருக்கவேண்டிய நேரத்தை நாளொன்றி…

  11. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் நாளை மூடப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிடீமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏனைய மதுபானசாலைகளும் நாளை மூடப்படும். அந்தந்த பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார். https://athavannews.com/2022/1306602

  12. பயிற்சி கட்டணங்களை கூட செலுத்த முடியாத நிலையில் இலங்கை இராணுவம் - இந்திய அமைச்சர் By RAJEEBAN 21 OCT, 2022 | 12:04 PM இந்தியாவில் பயிற்சிக்கட்டணங்களை செலுத்த முடியாத நிலையில் இலங்கை இராணுவம் காணப்பட்டது என இந்தியாவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமை மிக மோசமாக காணப்பட்டது இந்தியாவில் பயிற்சிகளிற்கான கட்டணங்களை கூட செலுத்தமுடியாத நிலையில் இலங்கை இராணுவம் காணப்பட்டது என அஜய் பட் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளை தங்கியிருப்பதால் ஜனநாயக நாடொன்று எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இலங்கையின் அனுபவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார். …

  13. மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக்கொண்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் By VISHNU 22 OCT, 2022 | 01:53 PM உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்துதல் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல், (21) வெள்ளிக்கிழமை (ஒக்.21) உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தலைமையில் நடைபெற்றது. புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சினால், சமய ஸ்தலங்களை மையமாக…

  14. ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு : ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என்கிறார் வீரசிங்க வீரசுமன By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:28 PM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தி, ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வீரசிங்க வீரசுமன தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாற…

  15. மக்கள் நீதிமன்றம் செல்லலாம் - பைசர் முஸ்தபா By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:29 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) மாகாண சபைத் தேர்தல்களை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். குறித்த காலத்திற்குள் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்கழு நடத்தாது போனால் நீதிமன்றத்தை நாடும் உரிமை பொது மக்களுக்கு உண்டு என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா தெரிவித்தார். மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக நான் இருந்த காலத்தில் என்னால் தான் மாகாண சபை தேர்தல்கள் நடத்த முடியாது போனதாக என் மீது குற்றம் சுமத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட…

  16. அரச நிறுவனத் தலைவர்களுக்கு உணவுகளை பெற்றுக்கொள்வது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:37 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) அரச நிறுவனங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து உணவுகளை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாகவே பல்வேறு அரச நிறுவனங்களில் குறிப்பாக பணிப்பாளர் சபை கூட்டங்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து உணவுகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது பொருத்தமானதல்ல எனவும், செலவு…

  17. ஐஸ் போதைப்பொருள் வர்த்தகம் : பிரதான போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் கைது By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:20 PM (எம்.வை.எம்.சியாம்) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் தொடர்ச்ச…

  18. PTAயின் கீழ் கைதாகியுள்ள யாழ்.போதனாவின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபனுக்கு அச்சுறுத்தல் October 22, 2022 பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் எஸ். சிவரூபனுக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய கால பகுதியில் சுமார் 300 வரையிலான கொலை , பாலியல் வன்புணர்வு , சித்திரவதைகள் உள்ளிட்ட வழக்குகளில் சட்ட வைத்திய அதிகாரியாக முக்கிய சாட்சியமாக உள்ளார். குறித்த வழக்குகளில் எதி…

  19. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் தமிழர்களுக்கு வழங்க கூடாது – சரத் வீரசேகர. இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமித்த தன்மையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் பிரிவினைவாதிகளுக்கு உண்டு என குற்றம் சாட்டியுள்ளார். 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த ஆதரவு வழங்கப்போவதில்லை என சரத் வீரசேகர தெர…

  20. 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று! 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளதுடன், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நிபந்தனைகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.…

  21. ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கை முன்கொண்டுசெல்ல முடியாதாம் ! By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 10:37 AM (எம்.எப்.எம்.பஸீர்) ச.தொ.ச. ஊழியர்களை கடமைகளிலிருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் இணைத்தமையினூடாக அரசுக்கு 4 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு, எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்கொண்டு செல்ல முடியாது என அடிப்படை ஆட்சேபனம் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை பரிசீ…

  22. இராணுவ ஜீப் விபத்து : கப்டன் தர அதிகாரி பலி, 3 பேர் காயம் By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 11:43 AM வெலிக்கந்த பகுதியில் இராணுவ ஜீப் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் இராணுவ விசேட அதிரடிப்படையின் கப்டன் தர அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இன்று சனிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிஃபென்டர் ரக ஜீப் கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்ல பகுதியில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த டிஃபென்டர் வண்டி திருகோணமலையில் இருந்து மதுரு ஓயா நோக்கி பயணித்துள்ளது. இதன் போதே குறித்த விபத்து…

  23. முதியவருக்கு உதவச் சென்றவர் மதில் இடிந்து விழுந்து உயிரிழப்பு - கொழும்பில் சம்பவம் By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 12:12 PM (எம்.வை.எம்.சியாம்) கொழும்பு- கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள வீட்டின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த மதில் நேற்று இரவு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜோசப் வீதியில் அமைந்துள்ள வீட்டின் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டின் அயல் வீட்டில் உள்ள முதியவருக்கு உதவி செய்யும் நோக்கில் குறித்த வீட்டிற்கு வருகை தந்துள்ளதோடு குறித்த முதியவரை வீட்டின் பின்புறத்தில் உ…

  24. யாழ். புங்குடுதீவில் தென்னிலங்கையை சேர்ந்தவருக்கு கடல்பண்ணை அமைக்க அனுமதி : எதிர்ப்பில் மீனவர்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்றொழில் அமைச்சினால் தென்னிலங்கையைச் சேர்ந்த நபருக்கு முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள சிறீமுருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களை ஏமாற்றியே இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் வேலணை பிரதேச சபை உறுப்பினரொருவர் இருப்பதாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர். மேற்படி கடலட்டை பண்ணை அமைக்கப்படுமானால் இப்பகுதியிலுள்ள கடல் வளங்கள் முழுமையாக அழிக்கப்படலாமென்றும் குடும்பத்தோடு தற்கொலை செய்வதனை தவிர வேறு வழியில்லையென்றும் அம்மீனவர்கள் அச்ச…

  25. போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் -விசாரணையில் கையை அறுத்துக்கொண்டாா் October 22, 2022 போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன் , தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவன் போதை ஊட்டிய பாக்குடன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பில் அறிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுத்து பாக்கினையும் மீட்டு இருந்தனர். அதனை அடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு சம்பவம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.