ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
ரணில் ஜனாதிபதி ஆவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் – டலஸ் தேர்தலில் தோற்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட நினைத்திருக்க மாட்டார் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், 44 வருடங்களுக்கு முன்னர் அரசியலமைப்பை உருவாக்கிய போது, இவ்வாறான சம்பவம் நிகழும் என ஜே.ஆர்.ஜயவர்தன எண்ணியிருக்க மாட்டார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 44 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்து தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்ற ஜே.ஆரின் மருமகன், பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவியேற்க அரசியலமைப்பே காரணம் என குறிப்பிட்டு…
-
- 2 replies
- 641 views
-
-
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிப்பு! அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1306417
-
- 1 reply
- 164 views
-
-
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கை தீவிரம்! உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரேரணை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 8,719 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000ஆக குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். உறுப்பினர்களைக் குறைத்து, அதன் மூலம் மீதமாகும் நிதியை நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும…
-
- 0 replies
- 128 views
-
-
இறந்தவர்களின் பெயரில் உறுதி முடிப்பு; ஒருவர் விளக்கமறியலில் – நொத்தாரிசு உள்ளிட்டவர்களை மன்றில் முற்படுத்த உத்தரவு October 20, 2022 யாழ்ப்பாணம் நகரில் போலியான உறுதி நிறைவேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட காணி மோசடி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரில் மறைந்த தம்பதியரின் சார்பில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியின் மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது செய்தனர். சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தி…
-
- 2 replies
- 275 views
-
-
கட்டணம் செலுத்தாமை – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல் 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல், 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது. குறித்த கப்பலானது கடந்த மாதம் 10ஆம் திகதி நாட்டை அண்மித்த நிலையில், இதுவரையில் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை. இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான கட்டணத்தை இதுவரை செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எக்ஸ்ரோ எனப்படும் இந்த மசகு எண்ணெய் ஊடாக டீசல் மற்றும் பெட்ரோலை அதிகளவில் உற்பத்தி…
-
- 7 replies
- 802 views
- 1 follower
-
-
வாகரையில் கட்டுத்துவக்கு மீட்பு By DIGITAL DESK 5 21 OCT, 2022 | 07:39 PM மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள 5 ஆம் வட்டார கிராமத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கொன்றினை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர். வாகரை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியதனை அடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற அதிரப்படையினர் அதனை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைதுசெய்து வாகரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபர் மற்றும் கட்டுத்துவக்கினை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்…
-
- 1 reply
- 375 views
- 1 follower
-
-
திரவியங்கள் நிறைந்த மெலிஞ்சிமுனை கடலுக்கு ஆபத்து - நேரடி ரிப்போர்ட் By NANTHINI 19 OCT, 2022 | 01:31 PM (லியோ நிரோஷ தர்ஷன்) ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மெலிஞ்சிமுனை கடல், அங்கு வாழும் மீனவர்களினதும், அவரது குடும்பங்களினதும் பசியாற்றும் தாயாகவே உள்ளது. இயற்கையின் சீற்றங்கள் எந்தளவு காணப்பட்டாலும், எந்தவொரு மீனவரையும் வெறுங்கையுடன் கரைக்கு அனுப்பாத கருணை நிறைந்த சிறு கடலாகவே மெலிஞ்சிமுனை கடலை அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல்லின மீன் இனங்கள், நண்டு மற்றும் இறால் என பல கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கான கருக்களை சுமக்கும் அரிய வகை பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் நிறைந்…
-
- 2 replies
- 560 views
- 1 follower
-
-
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கையில் சீனக் கப்பல் By DIGITAL DESK 5 21 OCT, 2022 | 11:47 AM எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கைக்காக சீன கப்பலொன்று இலங்கை வந்துள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை இரண்டாக வெட்டி அந்த இரண்டு பகுதிகளையும் சீன மீட்பு குழுவினர் இலங்கையிலிருந்து எடுத்து செல்வார்கள் என இலங்கை கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. காலநிலை சீரடைந்ததும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகும். கப்பலின் சிதைவுகள் காணப்படும் பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://w…
-
- 1 reply
- 195 views
- 1 follower
-
-
மே மாதம் 9ஆம் திகதி கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்திற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அனுமதி! படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நிட்டம்புவில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த நிலையில், கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். …
-
- 1 reply
- 164 views
-
-
நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் சிறீதரன்! மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்திப்பொன்றை மேற்கொண்டார். சிறீதரன் தமிழகத்துக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1305437
-
- 19 replies
- 1.2k views
- 1 follower
-
-
இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன - ஜனாதிபதி By T. SARANYA 21 OCT, 2022 | 11:50 AM இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத் தொகுதி (Mireka Tower) திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டுக்காக பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட கட்டமைப்புக…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதிலேயே தங்கியுள்ளது-விஜயதாச ராஜபக்ஷ சர்வதேசம் எதிர்காலத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றமை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன என தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை தவிர இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதி…
-
- 0 replies
- 182 views
-
-
அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் பல மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் 25ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன், 24ஆம் திகதி சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 24ஆம் திகதி தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும் இன்றைக்குள் சம்பளம் வைப்பிலிடப்பட வேண்டும். ஆனால் நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு திறைசேரியில் இருந்து பணம் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமையை கருத்திற்கொண்டு, நிதியமைச்சின் ஒதுக்கீட்டைப் பெற்…
-
- 0 replies
- 117 views
-
-
வாகன உதிரிப் பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் By T. SARANYA 21 OCT, 2022 | 04:17 PM வாகன உதிரிப்பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களில் தளர்த்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் கட்டுப்பாடுகளை தளர்த்தும் பணியை மேற்கொள்ளும் என இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (21) தெரிவித்தார். நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகஸ்ட் 23 அன்று 1,465 பொருட்களின் இறக்குமதியை இடை நிறுத்துவது…
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு 21 OCT, 2022 | 03:54 PM 2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதியும், கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/138157
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
டிசம்பர் ஜனவரியில் பொருட்களின் விலைகள் குறையலாம் - மத்திய வங்கி ஆளுநர் By RAJEEBAN 21 OCT, 2022 | 12:31 PM பணவீக்கம் உச்சநிலையை அடைகின்றது என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் எனவும்தெரிவித்துள்ளார். பணவீக்கம் உச்சநிலையை அடைவதை நாங்கள் காண்கின்றோம் என கருதுகின்றேன் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். அதேவேளை நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடிக்குதீர்வை காண்பதற்கு நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பர் மாதம் 69.8 வீதமாக அதிகரித்து காணப்பட்டது, இது இலங்கை முன்னொhருபோத…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
''காமினி திசாநாயக்க ஒரு இனவாதி'' - சிறிதன் எம்.பி.க்கும் மயந்தவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் By Digital Desk 5 21 Oct, 2022 | 09:17 AM (இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்) முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க ஒரு இனவாதி என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்ததால் அவருக்கும் சபைக்கு தலைமை தாங்கிய காமினி திஸாநாயக்கவின் மகனும் ஐக்கிய மக்கள் சக்ததியின் உறுப்பினருமான மயந்த திஸாநாயக்கவுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. சபைக்கு தலைமை தாங்கும் ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டு நீங்களும் இனவாதம் பேசுகின்றீர்கள்..அந்த ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டு இவ்வாறு உ…
-
- 0 replies
- 226 views
-
-
மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு! வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வடக்கு அந்தமான் தீவு…
-
- 0 replies
- 280 views
-
-
மட்டக்களப்பில் யானைகளினால் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்! மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் இன்று ( வியாழக்கிழமை) புகுந்த யானைகளினால் ஆலயத்தின் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் பயன்தரு மரங்களும் அழிக்கப்படடுள்ள. 35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் உள்ள சிறி நாராயணன் ஆலயத்திற்குள் புகுந்த யானைகளே இந்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆலய திருப்பணிவேலைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தின் கதவு மற்றும் தென்னை மரங்கள் மின் இனைப்பு பெட்டி ஆகியவற்றினை முற்றாக உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதேபோன்று காட்டுயானையினால் இ…
-
- 0 replies
- 183 views
-
-
வெளிநாடுகளில் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான மருந்து இலங்கையில் இல்லை – மருந்தக உரிமையாளர்கள் சங்கம் இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான மருந்து திரவங்கள் இலங்கையில் பயன்பாட்டில் இல்லை என்று தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகளை கருத்திற்கொண்டு உயர்தர மருந்துகளை மாத்திரமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த வாரம், காம்பியாவில் ஒரு வகை இருமல் மருந்து காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்…
-
- 0 replies
- 121 views
-
-
80 அழகிகளை இலங்கைக்கு கொண்டுவரும் டயானா கமகே 80 நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே நேற்று (19) தெரிவித்தார். மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தலைமையில் நாட்டின் புகழுக்காகவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும் இநிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 80 நாடுகளிலிருந்து வரும் அழகிகள் 2 வாரங்கள் நாட்டில் தங்கியிருப்பதுடன் கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, ஹபரணை, எல்ல, அறுகம்பே, மிரிஸ்ஸ உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கும் விஜயம…
-
- 1 reply
- 347 views
-
-
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற படகுகள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இருந்…
-
- 1 reply
- 664 views
-
-
பதவிகளை ஏற்காது மக்கள் நலனுக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் - சஜித் By NANTHINI 20 OCT, 2022 | 05:08 PM (எம்.மனோசித்ரா) பதவிகள் எதனையும் ஏற்காமல், மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். அதற்கு அரசாங்கம் மக்கள் மீது பிரயோகிக்கும் அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மஹரகம பல் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (ஒக் 19) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்க…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக ஏமாற்றம் - தொழிலாளர்கள் போராட்டம் By T. SARANYA 20 OCT, 2022 | 04:30 PM (க.கிஷாந்தன்) தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக இன்று அறிவித்ததை அடுத்து இத்தோட்டத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டதோ…
-
- 0 replies
- 579 views
- 1 follower
-
-
அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்கள் ஸ்தாபிக்கப்படும் - சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் By T. SARANYA 20 OCT, 2022 | 01:41 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டின் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்களை ஸ்தாபிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளரும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்களை அமைப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் அனைத்து சிறைச்சாலை நூலகங்களுக்கும் தேவையான புத்தகங்கள் கிடைத்துள்ளது. மேலும் கை…
-
- 1 reply
- 156 views
- 1 follower
-