ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
யாழில்... ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய... 10 பேர் கைது! யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார்…
-
- 14 replies
- 695 views
- 2 followers
-
-
திருக்கோணேஸ்வரர் ஆலயம், தொல்லியல் என்ற பெயரில்... ஆக்கிரமிக்கப்படவில்லை – அரசாங்கம்! திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே, அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை குறிப்பிட்டார். திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் காணிகள் அபகரிக்கப்பட்டு புதிய வியாபாரத்தளங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முன்வைத்தார். இதன்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை கொண்டிருந்த திருக்கோணேஸ்வரம் இன்று 18 ஏக்கர் காணியை மாத்திரமே கொண்டிருப்பதாக அவர் …
-
- 1 reply
- 209 views
-
-
தேசிய சபையின்... நியமனங்கள் தொடர்பான, அறிவிப்பு! நாடாளுமன்றில் கடந்த 20ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். இதன்படி, சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார் என்றும் பிரதமர், அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர்,அரசாங்கக்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசியசபையில் செயற்படுவார்கள் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார். இதன்படி, டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், சிசிர ஜெயகொடி டிரான் அலஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்…
-
- 1 reply
- 153 views
-
-
தியாக தீபம் திலீபனின்... உண்ணாவிரதத்திற்கும், பேரணிக்கும்... பொதுக்கட்டமைப்பு அழைப்பு! தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் அனைத்து தமிழ் உறவுகளும் செய்ய வேண்டும் என தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்புக்கும் அரசியல் கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன் பின்னர் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் கூட்டாக ஊடக சந்திப்பை நடாத்தி இந்த கோரிக்கையை விடுத்தனர். ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தவத்த…
-
- 0 replies
- 75 views
-
-
நாளொன்றுக்கு... 08 முதல் 10 மணிநேரம், மின்வெட்டு அமுல்படுத்தப்படும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு. ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேரம் வரை மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் இணைந்துகொண்டபோதே ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “எங்களிடம் 28ம் திகதி வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது. பிரச்சினை என்னவென்றால், 28ம் திகதிக்கு பின்னர் நிலக்கரி தீர்ந்துவிட்டால் 3 மின் உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டும். சுமார் 820 மெகாவொட் இழப்பு ஏற்படும். இன்றோ நாளையோ நமக்குத் தேவையான நிலக…
-
- 0 replies
- 75 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி... ஜோ பைடனை, சந்தித்தார்... அலி சப்ரி! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை சமர்ப்பிக்கவுள்ளார். ஐ.நா. உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1300657
-
- 0 replies
- 279 views
-
-
போராட்டத்தின் மூலமே... ஊழலை, நிறுத்த முடியும் – சரத் பொன்சேகா. நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட்டைச் சிதைக்கச் செய்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மெழுகுவர்த்தியில் இருந்து வானொலி, தொலைக்காட்சி என ஒவ்வொரு பொருளின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஐஎம்எப் என்று மட்டும் சொல்கிறதே ஒழிய, மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசிடம் தீர்வு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க…
-
- 0 replies
- 107 views
-
-
மத்தள விமான நிலையத்திற்கு... மாதாந்தம், 100 மில்லியன் ரூபாய் நட்டம் – நிமல் சிறிபால டி சில்வா. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு ( MRIA) மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வருங்கால முதலீட்டாளர் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்தால் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கொரோனா தொற்றுநோய் மற்றும் நாட்டில் பரவலான போராட்டங்கள் போன்ற பல காரணங்களால் விமானப் போக்குவரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இரத்மலானை மற்றும் பல…
-
- 0 replies
- 148 views
-
-
வடக்குக்கான ரயில் சேவை ஜனவரி முதல் 5 மாதங்களுக்கு நிறுத்தப்படும் - போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன By T YUWARAJ 22 SEP, 2022 | 10:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) இந்தியாவின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதன்போது ஜனவரி மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு வடக்கிற்கான ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கிற்கான ரயில் சேவைகள் …
-
- 1 reply
- 669 views
- 1 follower
-
-
திருக்கோணேஸ்வரர் தேவாரத்தை சபையில் பாடிய ஸ்ரீதரன் எம்.பி By T YUWARAJ 22 SEP, 2022 | 09:07 PM (இராஜதுரை ஹஷான், எம்,,ஆர்.எம்.வசீம்) பாராளுமன்றத்தில் ''நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி'' என்னும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான தேவாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஸ்ரீதரன் சபையில் உரத்துப் பாடினார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை திருகோணமலை திருக்கோணேஸ்வரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனால் இந்த தேவாரம் உரத்துப் பாடப்பது. தனது உரையை ஆரம்…
-
- 1 reply
- 392 views
- 1 follower
-
-
இலங்கை பணவீக்கம் ஆகஸ்டில் 70.2% ஆக பதிவு - யாருக்கெல்லாம் பாதிப்பு? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவி வரும் வேளையில், கடந்த ஆகஸ்டு மாதம் அந்நாட்டின் ஆண்டு பணவீக்க விகிதம் 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை காட்டிலும் உணவுப் பொருட்களின் விலை 84.6 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2.20 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கை இந்த ஆண்டு அந்நிய செலவாணி பற்றாக்குறையை எதிர்கொண்ட வேளையில், அந்நாடு, நிதி மற்றும் அரசியல் ரீதியாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. எரிபொர…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
தமிழர்களின் தொன்மை வாய்ந்த அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன - தவராசா கலையரசன் By T YUWARAJ 22 SEP, 2022 | 09:08 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த கடும்போக்கான பேரனவாதத்தை தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தொடர்வார்களா, ஒருபுறம் புலம்பெயர் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை எடுக்கப்படுவதுடன். மறுபுறம் தமிழர்களின் தொன்மை வாய்ந்த அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றமை நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். கடும் இனவாத போக்கினை கொண்ட கிழக்…
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
முடிந்தால் பலாலி விமான நிலையத்திற்கு ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள் : விமான சேவைகள் அமைச்சர் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை By VISHNU 22 SEP, 2022 | 09:10 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) இந்தியாவுடன் கலந்துரையாடி பலாலி விமான நிலையத்திற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார். அவ்வாறு விமானத்தை கொண்டு வந்தால் அங்கிருந்து விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கின்றோம் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத…
-
- 5 replies
- 343 views
- 1 follower
-
-
பேராதனை பல்கலைகழக மாணவன் தற்கொலை - பகிடிவதையா காரணம்? By RAJEEBAN 22 SEP, 2022 | 03:39 PM பேராதனை பல்கலைகழக மாணவனின் தற்கொலை பகிடிவதை குறித்து மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளது. பேராதனை பல்கலைகழக மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நாட்டின் பல்கலைகழகங்களில் பகிடிவதை குறித்த விவாதங்களை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. பேராதனை பல்கலைகழகத்தில் உளவியல் கற்றுக்கொண்டிருந்த 24 வயது மாணவன் காணாமல்போய் ஐந்து நாட்களின் பின்னர் மகாவலி ஆற்றின் கரையோரம்21 ம் திகதி மாலை சடலமாக மீட்கப்பட்டான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேப்பரிசோதனை முடிவுகள் இன்னமும் வெளியாகத போதிலும் குறிப்பிட்டமாணவன் சக மாணவர்களால்…
-
- 1 reply
- 381 views
- 1 follower
-
-
30 வருடங்களுக்கு பின்னர்... திருகோணமலை துறைமுகத்தில் இருந்து, கனிய மணல் ஏற்றுமதி. திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1300529
-
- 4 replies
- 370 views
-
-
சங்கிலியன் தோரண வாயில், புனரமைப்பு பணிகள்... ஆரம்பம்! யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்ககா 2.3 மில்லியன் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி பங்களிப்பினை யாழ்ப்பாண மரபுரிமை மையம் வழங்கவுள்ளது. குறித்த தோரண வாயிலின் பாதுகாப்பு , புனர்நிர்மாணம் மற்றும் நில வடிவமைப்பு ஆகிய செயற்திட்டமே முன்னெடுக்கப்படவுள்ளது. சங்கிலியன் தோரண வாயில் அல்லது சங்கிலித்தோப்பு வளைவு என அழைக்கப்படுவது யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எ…
-
- 3 replies
- 418 views
-
-
போர்க் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள 58 இராணுவ அதிகாரிகளை தண்டிக்கும் சர்வதேச பொறிமுறையை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வன்னி நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத் தளபதிகள் ஐரோப்பாவில் உள்ள 26 நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளுக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றால் கைது அவ்வாறு குறித்த நாடுகளுக்குச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் சர்வதேச சட்டம் பொருந்தும் 100 நாடுகளுக்கு மனித உரிமைகள் பேரவையால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை கொல்லும் நடவடிக்கைய…
-
- 2 replies
- 449 views
-
-
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன - இன்னமும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை- ஜனாதிபதி 22 Sep, 2022 | 10:45 AM சர்வதேச நாணய நிதியத்துடன் இன்னமும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சபாநாயகர் மூலமாக ஜனாதிபதி இதனை நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பணியாளர் மட்ட உடன்படிக்கை மாத்திரம் சாத்தியமாகியுள்ளது சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று குழு அதற்கு அனுமதி வழங்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் இறுத…
-
- 1 reply
- 217 views
-
-
அரசாங்க ஊழியர்களின்... ஆடை தொடர்பாக, சுற்றுநிருபம்! அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பிலான சுற்று நிருபத்தினை தயாரிப்பதற்குரிய ஆலோசனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும்போது, பெண்கள் சேலையும் கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கு பொருத்தமான உடையையும் அணிய வேண்டும் என சுற்…
-
- 0 replies
- 622 views
-
-
சுற்றுலாத் துறையை, ஈர்க்கும் முகமாக... ‘Save the Sri Lankan Smile’ பிரசாரம் ஆரம்பம்! இலங்கை சுற்றுலாத்துறையின் பங்குதாரர்கள், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு விரைவான மற்றும் பயனுள்ள மீட்சியைக் கொண்டுவரும் நோக்கத்துடன் “Save the Sri Lankan Smile” பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த பிரச்சாரத்தின் மூலம் எதிர்வரும் குளிர்காலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை எதிர்பார்க்கிறது. இந்த பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்த ஆண்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா வருவாயையும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வருகையையும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார். சுவிஸ் ஏ…
-
- 0 replies
- 186 views
-
-
IMF உடன் கலந்துரையாடுவதற்காக... இலங்கை பிரதிநிதிகள் குழு, அமெரிக்காவுக்கு செல்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தேச கடன் வசதிகள் தொடர்பாக அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது. அடுத்த மாதம் 6ஆம் திகதி அமெரிக்காவின் வொஷிங்டனுக்குச் செல்லும் அவர்கள், அங்கு மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர். இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். வெளிநாட்டு கையிருப்பு குறைப்பு உட்பட பல பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான நீண்டகால கடன் வசதிக்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை ஏற்கனவே எட்டியுள்…
-
- 1 reply
- 137 views
-
-
முட்டை ஒன்றின் விலை... 75 ரூபாய் வரை, அதிகரிக்க வாய்ப்பு! நாட்டில் எதிர்வரும் காலப்பகுதியில் முட்டையொன்றின் விலை 75 ரூபாய் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடைக் காரணமாக, நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாக தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் கோழிகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதால் முட்டை மற்றும் கோழி இறைச்சித் தொழிற்துறையை மீள முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மேலும் காலம் எடுக்கும் என அந்தச் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யு சிறில் தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சு முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவத…
-
- 0 replies
- 169 views
-
-
"டொலரை" செலுத்தியவர்களுக்கு மட்டுமே... சிலிண்டர் விநியோகம்: புதிய எரிவாயு சிலிண்டர்கள்... சந்தைக்கு, விநியோகிக்கப்பட மாட்டாது -லிட்ரோ உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே இதற்கு காரணமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, வெளிநாடுகள…
-
- 5 replies
- 368 views
-
-
வாழைச்சேனை மாங்கேணி கடற்கரையில் 18 வயது இளைஞனின் சடலம் மீட்பு By T YUWARAJ 21 SEP, 2022 | 05:18 PM வாழைச்சேனை காயங்கேணி - மாங்கேணி கடற்கரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி மத்தி மாங்கேணி கடற்கரையில் நேற்று மாலை (20) இளைஞன் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்நிலையில்.அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுட…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
மதிய உணவிற்காக தேங்காய் துண்டுகளை பாடசாலைக்கு கொண்டுசென்ற மாணவி By DIGITAL DESK 5 21 SEP, 2022 | 04:34 PM மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு சென்ற சம்பவம் இலங்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பிட்ட மாணவி பாடசாலையின் மாணவர் தலைவி என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தினால் கவலையடைந்த ஆசிரியர்கள் பாடசாலையில் மதிய உணவை வழங்க தீர்மானித்துள்ளனர். குறிப்பிட்ட பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரை கற்க்கும் மாணவகர்களிற்கு மதிய உணவு வழங்கப்படுவது வழமை அன்று தரம் மூன்றில் கல்விகற்கும் மாணவர்கள் வழமையை விட அதி…
-
- 2 replies
- 269 views
- 1 follower
-