ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை ( 21.01.2025) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். …
-
-
- 33 replies
- 1.8k views
- 1 follower
-
-
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என தெரிவித்து புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது இந்தநிலையில், இந்த மனுவை ஜனவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்துமாறு நீதியரசர்கள் இன்று உத்தரவிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்…
-
- 6 replies
- 490 views
- 2 followers
-
-
02 Jul, 2025 | 03:35 PM இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (02) அனுமதி வழங்கியுள்ளது. அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் என்பவரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், “இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்ட க…
-
-
- 5 replies
- 374 views
- 1 follower
-
-
அர்ஜுன மகேந்திரனுக்கு அனுப்பிய நீதிமன்ற அறிவித்தல் திரும்பிய வந்தது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் முன்னிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக ஆஜராகுமாறு மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனின் சிங்கப்பூரில் அவர் வசித்து வந்த முகவரிக்கு கோட்டை நீதிவான் அதிவேக அஞ்சல் சேவை ஊடாகவும் டி.எச்.எல். கூரியர் சேவை ஊடாகவும் அனுப்பிய உத்தரவு மீள திரும்பி வந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அர்ஜுன மகேந்திரன் வசிப்பதாக உறுதி செய்யப்பட்ட அவரது 20, கஸ்காடன் வீதி, 18/1, டெம்சன்…
-
- 1 reply
- 321 views
-
-
அர்ஜுன மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல் பிறப்பிப்பு:இலங்கையின் கோரிக்கையை ஏற்றது சர்வதேச பொலிஸ் (எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தலை பிறப்பித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக அர்ஜூன் மகேந்திரன் பெயரிடப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை அது குறித்த விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு நீதிமன்றம் ஊடாக பல த…
-
- 0 replies
- 148 views
-
-
அர்ஜுன மகேந்திரனின் தற்போதைய பதவியும் பறிக்கப்படும் (ரொபட் அன்டனி்) மத்திய வங்கியி்ன் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு பிரதமரினால் தற்போது வழங்கப்பட்டுள்ள பதவியிலிருந்தும் அவர் விலக்கப்படுவார். இந்த விடயத்தில் அவசரப்படவேண்டாம். பொறுத்திருங்கள். அர்ஜுன மகேந்திர இப்பொழுதான் நாடுதிரும்பியுள்ளார். அவர் கோட் சூட் மாற்றிக்கொண்டு வந்தவுடன் பதவிவிலக்கப்படுவார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்ட…
-
- 0 replies
- 186 views
-
-
அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் மூலம் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்தியதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே, 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பாணை உத்தரவை பிறப்பித்தார். https://athavannews.com/2024/1409898
-
- 0 replies
- 553 views
-
-
அர்ஜுன மகேந்திரனை ஒருபோதும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை : குற்றத்தை நிரூபிக்காமல் எவ்வாறு பதவி நீக்குவது இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை ஒருபோதும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குற்றம் நிரூபிக்கப்படாமல் எவ்வாறு ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவது எனவும் கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பல அலகுகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சி காலத்தில் மத்திய வங்கியில் காணப்பட்ட முரண்பாடுகள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. இதேவேளை பிணை முறி விவ…
-
- 1 reply
- 286 views
-
-
அர்ஜுன மகேந்திரனை காப்பாற்றவே தீவிர பொறுப்பு முகாமை சட்டம் கடன் செயற்பாடுகளில் மீண்டும் அவரை அனுமதிக்கும் நகர்வு கூட்டு எதிர்க்கட்சி,ஜே.வி.பி. சபையில் குற்றச்சாட்டு (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை காப்பாற்றி ஊழல் குற் றங்களில் இருந்து தப்பிக்க வைக்கவே தீவிர பொறுப்பு முகாமை சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருகின்றது. கடன் செயற்பாடுகளில் மீண்டும் அர்ஜுன மகேந் திரனை அனுமதித்து தீர்மானம் எடுக்கும் நகர்வுகளா என்ற சந்தேகம் எழுவதாக ஜே.வி.பி. மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். அர்ஜுன் மகேந்திரனை காப்பாற்றி சகல குற்றங்களில் இருந்தும் விடுவிக்கவே பிரதமர் அதிகாரங்களை கைப்பற்ற மு…
-
- 0 replies
- 240 views
-
-
அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய முடியுமா.! மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சந்தேக நபரான இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலை யில், சர்வதேச பொலிஸில் அங்கம் வகிக்கும் 192 நாடுகள் ஊடாக அவரைக் கைது செய்ய முடியும் என சட்ட மா அதிபர் சார்பில் நேற்று கோட்டை நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த 192 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் அர்ஜுன் மகேந்ரன் சிவப்பு அரிவித்தல் பிரகாரம் கைது செய்யப்பட்டால் அவரை உடனடியாக கைதிகள் பறிமாற்றம் ஊடாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான ஆவணங்களை தயார் செய்ய, கோட்டை நீதிமன்றில் உள்ள பிணை முறி மோசடி வழக்கின் கோவையையும் நேற்று நீதிவானின்…
-
- 0 replies
- 385 views
-
-
அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய உத்தரவு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அஜான் கார்திய புஜ்சிஹேவா ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகி இருக்காமையின் காரணமாகவே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறபித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜுன் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மத்திய வழங்கியின் ஆளுநராக…
-
- 1 reply
- 170 views
-
-
அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/31654
-
- 1 reply
- 249 views
-
-
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்…
-
- 5 replies
- 570 views
- 1 follower
-
-
அர்ஜுன மகேந்திரனை மீள்நியமிப்பதில் தீவிரமாக இருக்கும் பிரதமர் : ஜனாதிபதியுடனும் தொலைபேசியில் உரையாடல் (ரொபட் அன்டனி) மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக இது தொடர்பில் பல்வேறு பொது அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவருறது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொருளாதார கொள்கைகளை அர்ஜுன மகேந்திர…
-
- 2 replies
- 224 views
-
-
அர்ஜுன மகேந்திரன் 'புன்னகை பொய்யர்' மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஒரு ''புன்னகை பொய்யர்'' என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட் டர் ஜெனரல் தப்புல டி லிவேரா வர்ணித் தார். அத்துடன் அர் ஜுன மகேந்திரனை பொய்யாக உரையா டக் கூடியவர் என வர்ணித்த அவர் அவரது சாட்சியத்தில் பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். சாட்சி குறுக்கு விசாரணைகளின் இடை நடுவே அர்ஜுன மகேந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின் கேள்விகளுக்கு சிரித்தவாறு (சற்று அலட்சியப் போக்கில்) பதில் அளித்துக் கொண்டிருந்த போது கடும் தொணியில் சாட்சிக் கூண்டை நோக்கி அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 309 views
-
-
அர்ஜுன மகேந்திரன் பொறுப்புமிக்க எந்த அரச பதவியிலும் இல்லை : அரசாங்கம் அர்ஜூன மகேந்திரன் தற்போது அரசாங்கத்தின் எந்தவொரு உத்தியோகப்பூர்வ பதவியிலும் இல்லை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். அவர் ஒருசில அமைச்சர்களை சந்தித்துப் பேசலாம். ஆனால் அவர் எந்தவொரு பொறுப்புமிக்க பதவியிலும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கேள்வி: மத்தியவங்கியின் முன்னாள் ஆளு…
-
- 0 replies
- 500 views
-
-
அர்ஜுன மகேந்திரன் விரைவில் சிறைக்கு செல்வார்;சந்திரிகா ஆருடம் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன மகேந்திரனுக்கு விரைவில் சிறைக்குச் செல்லநேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆருடம் வெளியிட்டுள்ளார். கம்பஹா மாவட்டம் – மீரிகம பல்லேவல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் கல்வித்துறையையும் ராஜபக்ச குடும்பம் வியாபாரமாகவே பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கை மத்திய வங்கிக்கு 11,145 மில்லியன் ரூபா …
-
- 1 reply
- 425 views
-
-
March 7, 2019 அர்ஜுன மஹேந்திரனை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு இலங்கை காவற்துறையினருக்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளதுடன் இரண்டு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். அத்துடன் இதற்காக “இன்டர்போல்” சர்வதேச காவற்துறை உதவியையும் தாம் நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதை குறிப்பிட்டார். http://globalt…
-
- 0 replies
- 391 views
-
-
தெமட்டகொடவில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் உள்ள துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்திற்குள் வருகை சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவ்வாறு இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://globaltamilnews.net/2018/101071/
-
- 6 replies
- 547 views
-
-
அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர நான் தேர்தலில் வெற்றிபெற்றால், மத்திய வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் ”என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அனுராதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது ரணில் விக்கிரமசிங்க என்னை அவமதித்து பேசினார். அநுர இதற்கு பதிலளியுங்கள் என ரணில் கூறும் பொழுது அவரது வார்த்தை தவறியதை அனைவர…
-
- 3 replies
- 408 views
-
-
அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்குச் சென்றது குற்றப்புலனாய்வுப் பிரிவு பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்கு பிணைமுறி தொடர்பில் விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு சென்றுள்ளது. வங்கிக்கணக்குகள் மற்றும் வங்கிக்கணக்கு ஆவணங்கள் தொடர்பாக பரீட்சிப்பதற்காகவே ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அங்கு சென்றுள்ளது. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த 5 தினங்களாக ஆஜராகியுள்ளார். பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினால் மேற்…
-
- 0 replies
- 405 views
-
-
December 20, 2018 மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் திடீர் நோய்வாய்ப்பட்டதால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இன்று அவர் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், இதன் பின்னர் அவரை பொரல்லையில் உள்ள வைத்திய பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 339 views
-
-
பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்கு(Arjun Aloysius) சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ்(Perpetual Treasuries) நிறுவனத்திற்கு எதிரான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களம் நேற்று(05.01.2024) பிற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம், 2025 ஜனவரி 05ஆம் திகதி பிற்பகல் 4.30 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை நீடிப்பு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவ…
-
- 0 replies
- 125 views
-
-
அர்ஜுன் அலோசியஸ் வெளிநாடு செல்லத் தடை ; நாட்டைவிட்டு தப்பிச் செல்லலாம் என சி.ஐ.டி. அறிவித்ததால் நடவடிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையுடன் தொடர்புடைய பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதானிகள் நால்வருக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனனாய்வுப் பிரிவு இன்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குறித்த மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதனால் குறித்த நால்வரும் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அறிவித்ததை தொடர்ந்தே அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேப்பச்சுவல் ட்ரசரீஸ்…
-
- 0 replies
- 243 views
-
-
அர்ஜுன் அலோஷியஸ், கசுன் பலிசேன கைது பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியல் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இருவரது வீடுகளுக்கும் இன்று (4) காலை சென்றிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைக் கைது செய்ததாகத் தெரியவருகிறது. பிணைமுறி விவகாரத்தில் அர்ஜுன் அலோஷியஸ், அர்ஜுன மகேந்திரன் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை சந்தேக நபர்களாக நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர்கள் இருவரும் குற்ற…
-
- 2 replies
- 324 views
-