ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
By VISHNU 10 AUG, 2022 | 09:10 PM (நா.தனுஜா) கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் இருந்து இன்று 10 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியேறிய போராட்டக்காரர்கள், இப்போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்துடன் மேலும் வலுவான முறையில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் ஒன்றுசேர்ந்து முன்நோக்கிப்பயணிக்கும் என்று அறிவித்துள்ளனர். காலிமுகத்திடல், கோட்டா கோ கம' போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் கடந்த 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக அகற்றுமாறு கோட்டை பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். பொலிஸாரின் அவ்வறிவிப்பிற்கு எதிராக போராட்டக்காரர்கள் சிலரால் மேன்முறையீட்டு நீதிமன்றில்…
-
- 0 replies
- 181 views
-
-
மின் கட்டணம் 75% இனால் அதிகரிப்பு! (வீடியோ) மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அதனடிப்படையில் நாளை (10) முதல் 75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் 198 ரூபாய் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், 60 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணம் 200 வீதத்தினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அது 600 ரூபாவை விட குறைந்த தொகையாகவே இருக்கும் என அவர்…
-
- 5 replies
- 546 views
- 1 follower
-
-
யாழில்... பலசரக்கு கடைகளில், மரக்கறி விற்க.. தடை விதிக்க கோரி போராட்டம்! யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்து உள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட செங்குந்தா சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தைக்கு வெளியே , சந்தை சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பில் வியாபாரிகள் தெரிவிக்கையில், சந்த…
-
- 4 replies
- 814 views
-
-
எண்ணெய், துறைமுகம், மின்சார சபை ஊழியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் ; வருடத்துக்கு மூன்று போனஸ் : எஸ்.பி.திஸாநாயக்க -சி.எல்.சிசில்- எண்ணெய் கூட்டுத்தாபனம் உட்பட நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் வருடத்துக்கு மூன்று போனஸ் வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். எரிபொருள், எரிவாயு கிடைக்காதது அரசாங்கத்தின் தவறே தவிர மக்களின் தவறல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளத்தைப் பெற்று வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டி…
-
- 0 replies
- 158 views
-
-
நாட்டை மீட்பது பற்றிப் பேசாமல் அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது குறித்து பேரம் பேசுகின்றனர் : உதய கம்மன்பில -சி.எல்.சிசில்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் தற்போது அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதில் போட்டி நிலைமையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான முன்மொழிவுகளை விவாதிப்பதற்குப் பதிலாக அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது தொடர்பில் இன்று பேரம் பேசப்படுவதாக அவர் கூறினார். பதவிகளைப் பகிர்வது பற்றிப் பேசாமல் நாட்டைக் காப்பாற்றுவது பற்றிப் பேசுவதே இன்று செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் இன்னு…
-
- 0 replies
- 185 views
-
-
அவசரகாலச் சட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பரிசீலனைக்கு பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனுக்கள் நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுக்கள் தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படும் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட…
-
- 0 replies
- 126 views
-
-
மஹிந்த மற்றும் பசில் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை இன்று (10) இரண்டாவது நாளாக பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=164348
-
- 0 replies
- 147 views
-
-
புதிய கூட்டணியின் பெயர் 21 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து வௌியேறிய 10 சுயேட்சை கட்சிகளின் புதிய கூட்டணியின் பெயர் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சர்வகட்சி அரசாங்கம் அமைச்சுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் அல்ல, மாறாக இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து அனைவரும் வெளியேறக்கூடிய ஒரு திட்டத்தை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 196 views
-
-
1,321 சந்தேக நபர்கள் இதுவரையில் கைது இதுவரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனையின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 155,502 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் 44,777 லீற்றர் பெற்றோல் மற்றும் 20,208 லீற்றர் மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மொத்தம் 1,387 சோதனைகளில், 1,321 சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். http://tamil.adaderana.lk/news.php?ni…
-
- 0 replies
- 144 views
-
-
சீனாவுடனான நட்புறவை... உறுதியாக, வைத்துக் கொள்ள விருப்பம் – அமைச்சர் அலி சப்ரி. சீனாவுடனான நட்புறவை உறுதியாக வைத்துக்கொள்ள விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கம்போடியாவில் இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீவுடனான இரு தரப்பு சந்திப்பின் போதே இதனை தெரிவித்திருந்தார். சீனாவின் இராணுவக் கப்பலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஒரே சீனா கொள்கைக்கான இலங்கையின் உறுதியான ஒத்துழைப்பை அமைச்சர் சப்ரி வெளியிட்டுள்ளார். இதேவேளை இரண்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவென்பதும் குறிப…
-
- 1 reply
- 388 views
-
-
தமிழரிடையே சுயநிர்ணய தேர்தல் நடப்பதை இந்தியா உறுதி செய்யவேண்டும் - சிவாஜி இந்தியா அப்படி ஆதரவு தர முன்வருமா என்ற கேள்விக்கு பதில் தரும்போது, இது இனிமேலும், ஈழத்தமிழர் விவகாரம் அல்ல. இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரம். மிக தீர்க்கமாக சீனா சிங்கள தேசத்தினுள் உள்புகுந்து விட்டது என்கிறார் அவர். இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரமாகியபோதே, பாகிஸ்தான் இரண்டாகி, பங்களாதேசம் உருவாக்கியது என்றார், சிவாஜிலிங்கம். யுத்த காலத்தின் போது இந்தியாவில் இருந்த சிவாஜிலிங்கம், யுத்தம் முடிந்த பின்னர், இலங்கை திரும்பி, மீண்டும் இந்தியா செல்ல முனைந்த போது, இரண்டு தடவைகள் காங்கிரஸ், திமுக அரச காலத்தில், சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். டெலோவினை சே…
-
- 0 replies
- 177 views
-
-
அரசாங்கத்தின் மொத்த செலவு... 47,943 கோடியால், அதிகரிப்பு ! நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின்படி, இந்த வருட அரசாங்கத்தின் மொத்தச் செலவு 47 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுக்காக, கடந்த நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, மொத்தச் செலவு, 2 இலட்சத்து ஒன்பதாயிரத்து 664 கோடியே 65 இலட்சத்து 58 ஆயிரமாகும். இருப்பினும் திருத்தச் சட்டமூலத்தின்படி மொத்தச் செலவு 3 இலட்சத்து 27 ஆயிரத்து 587 கோடியே அறுபத்தைந்து இலட்சத்து 58 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அத…
-
- 0 replies
- 159 views
-
-
வடக்கு, கிழக்கில்... இராணுவத்தினரது அடாவடித்தனம் – சிறிதரன். வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவில் முன்பள்ளி பாடசாலைகளின் பெயர்கள் இராணுவத்தினரது தலையீட்டுடன் மாற்றப்படுவதாக நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதனால் அங்கு கல்வி நிலைமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் இது வெறுக்கத்தக்க விடயம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு முன்பள்ளிகளின் பெயர் இராணுவத்தின் தலையீட்டுடன் மாறப் பட்டுள்ளமையை சிறிதரன் சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிவடைந்…
-
- 0 replies
- 369 views
-
-
ஜனாதிபதி தெரிவின் போது... உறுப்பினர்கள் சிலர், அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தபட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேயஸ்ரீ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த அச்சுறுத்தலினால்தான் அவர்கள், ஜனாதிபதி தெரிவின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். வாக்களிக்காவிட்டால் விளைவுகளை எத…
-
- 3 replies
- 273 views
-
-
ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், ரஷ்ய - இலங்கை உறவை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=163764
-
- 62 replies
- 4.1k views
-
-
இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் போர்க்கப்பல் - காரணம் என்ன? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுவான் வாங் 5 இன்று (09.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ். தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் ப…
-
- 6 replies
- 520 views
- 1 follower
-
-
By T YUWARAJ (நா.தனுஜா) சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இலங்கையின் சந்தையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காண்பித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இதுவரை சுமார் 10,000 சர்வதேசக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கியிருப்பதுடன் தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாக கடல்சார் விவகாரம் மற்றும் 'ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்ட' அபிவிருத்தி தொடர்பான சுயாதீன ஆய்வாளரான யசிறு ரணராஜா 'ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்டம்' என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எழுதியிருக்கும் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதன்ப…
-
- 3 replies
- 332 views
-
-
By T. SARANYA (இராஜதுரை ஹஷான்) சமையல் எரிவாயுவின் விலை குறைப்பை தொடர்ந்து உணவு பொதியொன்றின் விலையை 10 வீதத்தினாலும், தேநீர் கோப்பை ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாண் உள்ளிட்ட வெதுப்பக (பேக்கரி) உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்தார். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டதை தொடர்ந்து உணவு பொதி உள்ளிட்ட சிற்றுண்டிசாலை உணவு பொருட்களின் விலையினை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத…
-
- 0 replies
- 283 views
-
-
காலி முகத்திடலில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு (வீடியோ) காலி முகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெற்ற இடத்தில் கூடாரம் கட்டிய சிலர் தொடர்ந்தும் அங்கு தங்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கடந்த நாட்களை ஒப்பிடுகையில் இன்று மிகக்குறைவான கூடாரங்களே எஞ்சியுள்ள நிலையில் இன்று 123வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. மக்கள் இன்று (09) காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட தளத்தில் தங்கியுள்ள வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் நேற்று தெரிவித்தார். எவ்வாறாயினும், இன்று பிற்பகல் …
-
- 1 reply
- 216 views
-
-
By T. SARANYA 08 AUG, 2022 | 04:35 PM (எம்.நியூட்டன்) வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோமென்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அன்னராசா இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடற்றொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் அதில் தங்கி வாழும் மக்கள் …
-
- 1 reply
- 289 views
-
-
ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் By Rajeeban 09 Aug, 2022 | 10:37 AM ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள கடிதத்தில் மனித உரிமை கண்காணிப்பகம் தனது முக்கிய மனித உரிமை கரிசனைகளை வெளியிட்டுள்ளத…
-
- 1 reply
- 170 views
-
-
இலஞ்ச ஊழல் வழக்கு – ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்லத் தடை இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறும் நீதிபதி உத்த…
-
- 0 replies
- 154 views
-
-
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது, குறித்த மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/198944
-
- 0 replies
- 132 views
-
-
சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவசரவேண்டுகோளை சீன தூதரகம் விடுத்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் செல்வது குறித்து இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இலங்கையின் முக்கிய அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை சீன தூதரகம் கோரியுள்ளது. கப்பல் பயணத்தை தாமதிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்த வேண்டுகோள் கிடைத்ததும் இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை தூதரகம் கோரியுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கப்பல் விவகாரம்- இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்க…
-
- 1 reply
- 238 views
-
-
சர்வகட்சி அரசாங்கம்... எந்தளவு காலத்துக்கு, நீடிக்கும்? – எதிர்க்கட்சி கேள்வி. அரசாங்கம் அமைக்கும் சர்வகட்சி எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது தொடர்பாக ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுவரை அது வெளிப்படுத்தப்படாமல் இருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக பல கட்சிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ள போதும் கால வரையறை தொடர்பில் எவரிடமும் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டினார். எந்தவொரு கட்சியாலும் அரசாங்கத்துக்காக குறுகிய காலத்துக்கு மட்டுமே ஒத்துழைப்பை வழங்க முடியும் என்றும் லக்…
-
- 1 reply
- 220 views
-