Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காங்கேசன்துறையில் இருந்து முருகண்டி வரை சேவையில் ஈடுபடும் யாழ் ராணி தொடருந்து இன்று முதல் புதியதொடருந்து பெட்டிகளுடன் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. யாழ் ராணி தொடருந்தானது ஆரம்பம் முதல் இன்று வரை பழைய பெட்டிகளுடனே தனது சேவையை மேற்கொண்டுவந்தது. இந்நிலையில், இந்தியாவின் உதவியுடன் யாழ் ராணி தொடருந்து புதிய பெட்டிகளுடன் தனது பயணத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இதேவேளை, யாழ் ராணி தொடருந்தானது காங்கேசன் துறையிலிருந்து அதிகாலை 6.00 க்கு தனது பயணத்தை தொடங்கி முறிகண்டி வருகை தந்த தொடருந்து மீண்டும் முருகண்டியில் இருந்து காலை 8.30 க்கு காங்கேசன்துறையை சென்றடையும். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நேரத்திலும் யாழ் ராணி தொடருந்து அரச உத்தியோகத்திருக்கும் ப…

  2. Nirosh / 2022 ஜூலை 28 , பி.ப. 07:09 - 0 - 120 FacebookTwitterWhatsApp அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, பலிவாங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்து வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் நாட்டில் மீண்டும் தூண்டுவதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பின் கதவு வழியாக வந்து தவறான வழியில் தான் ஜனாதிபதியாகிருந்தாலும், அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தாது நாட்டு மக்கள் கோர…

  3. சீன கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறித்து அறிந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த விடயமும் குறித்தும் இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது அவற்றை பாதுகாப்பதற்கான அனைதத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் விஜயம் - இந்தியா தெரிவித்துள்ளது என்ன? | Virakesari.lk

  4. ( எம்.எப்.எம்.பஸீர்) நாடளாவிய ரீதியில், இன்று (28) நிறைவடைந்த 36 மணி நேரத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் அந்த சம்பவங்களில் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரத்மலானை, கம்பஹா, அம்பலாங்கொடை பகுதிகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அம்பலாங்கொடையில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும் இன்று மாலை வரை இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. இரத்மலானை : நேற்று (27) இரவு இரத்மலானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இருவர், அங்கிருந்த மு…

  5. (எம்.ஆர்.எம்.வசீம்) பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது. அத்துடன் மக்கள் பலத்துடன் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் இந்த போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பாரிய நிலைமையாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்கள் ஆணைமூலம் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் போராட்டத்துக்குள் …

  6. ஆடி அமாவாசையை... முன்னிட்டு, கீரிமலை கடற்கரையில்... விசேட வழிபாடு! தந்தையை இழந்தவர்களுக்கு பிரதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம், கீரிமலை கடற்கரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள். அதேவேளை, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவமும் இன்றைய தினம் கீரிமலை கடற்கரையில் நடைபெற்றது. அதன் போதும் ஏராளமானான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபட்டு தீர்த்தமாடினர். ஆடி அமாவாசை விரதமானது இந்து சமயத்தைச் சேர்ந்த அனைவராலும் பக்தியுடன் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இந்நாளில் இந்துக்கள் சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் தீ…

    • 7 replies
    • 877 views
  7. விடுதலைப் புலிகள் அமைப்பின்... முன்னாள் உறுப்பினர் ஒருவர், பிணையில் விடுதலை. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் பொய் சாட்சியங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் சாட்…

  8. ஜனாதிபதியின்... இல்லத்தில், பணத்தினை எண்ணியவர் கைது! ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 14, மல் மாவத்தையினைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த சந்தேக நபர் கொழும்பு ஹுசேனியா வீதியிலுள்ள கடையொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தி…

    • 9 replies
    • 719 views
  9. குட்டிமணி, தங்கதுரையின்... 39 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு! 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மயூரன் மற்றும் கட்சியின் உறுப்பி…

  10. ‘குடு’ காரர்களே... தற்போது, காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க! ‘குடு’ காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் எனவே இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், காலி முகத்திடல் என்பது பொருளாதார கேந்திர நிலையம். சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட பகுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கிருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கலாம் எனவும் அமை…

  11. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை... அடக்குவதை விடுத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை... நிறைவேற்ற வேண்டும் – சாணக்கியன்! போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற…

  12. அமைச்சு பதவிகளுக்காக... கொள்கைகளை, விட்டுக்கொடுக்க முடியாது – சஜித்! அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்களை ஒடுக்கும் இந்த அரசாங்கத்துடன் கொடுக்கல், வாங்கல் இல்லை எனவும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித…

  13. அனைத்து... உப தபால் அலுவலகங்களும், இன்று மூடப்படுகின்றன! நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று(வியாழக்கிழமை) மூடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து உப தபால் அலுவலகங்களும் திங்கள், செவ்வாய், புதன், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை திறக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் நிலையங்கள் திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பதுடன் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறக்…

  14. இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பொதியை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனா ஒரு பெரிய கடன் வழங்குநராக உள்ளது. இந்நிலையில், கடன் மறுசீரமைப்பில் இலங்கை சீனாவுடன் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் கூறியுள்ளார். ரொயிட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை சீனாவிற்கு 6.5 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும் IFF (Institute of Internati…

  15. இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்! (newuthayan.com)

    • 13 replies
    • 604 views
  16. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் 63 வயதான மூதாட்டி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் 15 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:– வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலைப் பகுதியில் மீன் விற்றுவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மூதாட்டியை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாகத் தெரிவித்து குறித்த சிறுவன் தனது சைக்கிளில் ஏற்றியுள்ளான். அதன் பின்னர் பொன்னாலை காட்டுப் பகுதிக்குள் குறித்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கழுத்தை நெரித்து வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளான். மூதாட்டி சிறுவனின் கைகளைக் கடித்துவிட்டு கூக்குர…

  17. யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி, மாண…

  18. இலங்கை சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சீனா பெரிய கடன்வழங்கும் நாடு இலங்கை கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் சாதகமான விதத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் ஆசிய பசுபிக்கிற்கான இயக்குநர் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 22 மில்லியன் மக்களை கொண்ட நாடு அதன் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத பொருளாதார அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பலமாத எரிபொருள் உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டினை தொடர்ந்து உருவான பாரிய மக்கள் எழுச்சி காரணமாக முன்னைய ஜனாதிபதி பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆறு தடவை பிரதமராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதிய…

  19. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை ஏந்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ ஒன்றில், குறித்த நபர் படுக்கையில் படுத்திருந்தவாறு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை போர்வையாக பயன்படுத்துவதைக் காட்டுகிறது. அத்தோடு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தீயிட்டு அழிப்பதாகவும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. ஜூலை 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் கொடியை எடுத்துச் சென்ற நபர் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேக நபர் கொடியை இடுப்பில் கட்டிக்கொண்ட…

  20. இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இந்தியா துரிதமாக உதவியது ஆனால் உதவிக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களிற்கு சீனா பதிலளிக்கவில்லை என யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சமந்தா பவர் அங்கு இதனை தெரிவித்துள்ளார். புதுடில்லி ஐஐடியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான உதவும் மிக முக்கியமான நடவடிக்கைகளுடன் இந்தியா துரிதமாக பதில்நடவடிக்கையில் ஈடுபட்டது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார். ஆனால் சீனா கணிசமான நிவாரணத்தை என்ற வேண்டுகோள்களிற்கு இறுதிவரை பதில்அளிக்கப்படவில்லை எனவும் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். …

  21. இலங்கை சில நிபந்தனைகளில் பின்னடிப்பதால், ஐஎம்எப் உதவி தாமதமாகிறது. 1, படையினர், அரச சேவையில் உள்ளோரின் தொகை குறைத்து வீட்டுக்கு அனுப்புதல். 2, இலவச கல்வி, இலவச மருத்துவம் காத்திரமான குறைப்பு. முன்னர் சிறிமாவோ காலத்தில், ஆஸ்பத்திரி போனால், ஒரு ரூபாய் முத்திரை கொடுத்தே, டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு, நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை என்று வரக்கூடும் என்கிறார்கள். அதே போல் கல்விக்கும், நூறு முதல் ஐநூறு ரூபாய் வரை மாதம் அல்லது தவணைக்கு பாடசாலைக்கு கட்டுமாறு கோரலாம். இலங்கையில் பல்கலைக்கழக கல்வி கூட இலவசமானது. பிரிட்டனில் உள்ளது போல, மாணவர்களுக்கு அரசு கடன் கொடுத்து படிக்க வைக்கும் நிலை வரலாம். இவற்றுள் சகலதும் அல்லது …

    • 2 replies
    • 337 views
  22. நீதிமன்றில் ஆஜராகுமாறு... முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை ! எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாட்டையும் மக்களையும் இந்த நிலைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு எதிராக விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேற்படி மனுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும்…

    • 5 replies
    • 487 views
  23. அவசரகால சட்டம்... 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம். அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து குறித்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்காரணமாக குறித்த சட்டம் 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1292581

  24. எரிபொருளை... அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை, கைது செய்யும் பொலிஸாருக்கு... பணப் பரிசு! சட்டவிரோதமான முறையில் எரிபொருளினை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய 100 லீற்றர் வரையான பெற்றோல் அல்லது டீசலை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், 100 முதல் 500 லீற்றர் வரையிலான எரிபொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 02 இலட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது. அத்துடன், 500 முதல் 1000 லீற்றர் வரையான எரிபொருளைக் கைப்பற்றுவோருக்கு 03 இலட்சம் ர…

  25. ஸ்திரத்தன்மை , பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் - ஜனாதிபதி ரணிலுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து (எம்.மனோசித்ரா) இலங்கையின் நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடாகவும் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த பதவி காலம் இலங்கையின் அனைத்து பிரஜைகளினதும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் ஊட்டமளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.…

    • 1 reply
    • 183 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.