ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142652 topics in this forum
-
இலங்கையில் சிறுவர் போராளிகள் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததனைத் தொடந்து சிறுவர் போராளிகள் முற்று முழுதாக கிடையாது என தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறுவர் போராளிகள் தொடர்பான நிலைமைகள் குறித்த அறிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் வரைவுத் திட்ட யோசனை அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87094/language/ta-IN/article.aspx
-
- 7 replies
- 916 views
-
-
By Robert Antony 2013-01-03 17:52:20 பிரதம நீதியரசரை விசாரிப்பதற்கான சட்ட அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றம் கூடும் போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவிப்பார். அதுவரை நாங்கள் எதுவும் கூற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இதுவரை காலமும் பதவி விலக்குவது தொடர்பில் ஒரு முறைமை பின்பற்றப்பட்டு வந்தது. அந்த முறைமை குறித்து தற்போது புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் ஆராயவேண்டியுள்ளது. சிலவேளை எட்டாம் திகதிக்கு முன்னரே பாராளுமன்றம் அவசரமாக கூடக்கூடிய சாத்தியம் உள்ளது…
-
- 0 replies
- 377 views
-
-
ஆஸி செல்வதற்காக சிறுநீரகங்களை விற்கும் இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக இலங்கை அகதிகள், தமது சிறுநீரகங்களைவிற்பனை செய்துவருவதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் நியூஸ்கோப் என்ற செய்திசேவை, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக தாம் மேற்கொண்ட ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகஅந்த சேவை குறிப்பிட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளின் ஆர்வலரான சாமுவேல் சந்திரஹாசன், இது தொட ர்பில்கூறும்போது, கடந்த மூன்று வருடங்களில் சுமர் 500 இலங்கை அகதிகள், 3000 டொலர்கள்என்ற விலைகளில், அவுஸ்திரேலியாவுக்கான தமது படகு பயணங்களுக்காக சிறுந…
-
- 0 replies
- 305 views
-
-
ஊடகவியலாளரை பலவந்தமாக இழுத்து சென்ற முன்னாள் ஓஐசி கொழும்பு நீதிமன்ற வளாகத்துக்குள் தன்னை புகைப்படம் எடுக்க முயன்ற ஊடகவியலாளர் ஒருவரை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் பிரதான சந்தேக நபரான முன்னாள் போதைப் பொருள் தடுப்பு பணியக பொலிஸ் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவா பலவந்தமாக இழுத்து சென்று பொலிஸில் ஒப்படைத்துள்ளார். வெலிக்கடை படுகொலை வழக்கில் இன்று (10) மதியம் ஆஜரான போதே ரங்கஜீவாவை ஊடகவியலாளர் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். இதன்போது அவரது பணிக்கு இடையூறை ஏற்படுத்திங ரங்கஜீவா குறித்த ஊடகவியலாளரை இழுத்து சென்றுள்ளார். தான் ஊடகவியலாளர் என்று தன்னை அடையாளப்படுத்திய போது இவ்வாறு ரங்கஜீவா செயற்பட்டதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் சோதனை ச…
-
- 1 reply
- 432 views
-
-
விமானப்படையால் புலிகளுக்கு ஏற்படுத்தக் கூடிய உச்சக் கட்ட இழப்பு எவ்வளவு ? நிலவரத்துக்காக களமுனையிலிருந்து கபிலன் வன்னியில் இலங்கை விமானப்படை கிளஸ்டர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் குழு வாங்கி வந்ததே இந்தக் கிளஸ்டர் குண்டுகள். இதற்கு முன்னர் இலங்கை விமானப்படையின் ஜெட் போர் விமானங்கள் எம்.கே-83 குண்டுகளையும், பதுங்கு குழிகளை அழிக்கின்ற லேசர் வழிகாட்டல் ஏவுகணைகளையுமே பயன்படுத்தி வந்தன. இப்போது விமானப்படை ரஷ்யாவிடம் இருந்து இரண்டு புதிய வகைக் குண்டுகளை கொள்வனவு செய்திருக்கிறது. அவற்றில் ஒன்று தான் கிளஸ்டர் குண்ட…
-
- 0 replies
- 2.8k views
-
-
நாரதர் கலகம் நன்மையில் முடியும் - மனோகணேசன் தெரிவிப்பு யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழர் பாரம்பரியத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தழிழர் பாரம்பரிய கலைநிகழ்வுகளுக்கே முதலில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் சிங்கள மாணவர்களும் கற்றலில் ஈடுபடுவதால் அவர்களின் கலை நிகழ்வுகளுக்கும் ஓரு குறிப்பிட்ட இடம் வழங்கி முன்கூட்டியே ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி நிரலில் இணைத்திருக்கலாம் எனவும் கெட்ட கலகம் நல்ல பலனைத் தந்துள்ளது என எண்ணுகிறேன் எனக் கூறினார் தொடர்ந்து பேசிய அமைச்சர் கலகம் …
-
- 0 replies
- 971 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதனை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் – சஜித் தரப்பு! by : Benitlas தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதனை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என சஜித் தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அனைவரும் நன்கு அறிவார்கள். சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கமைய அரசாங்கம் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் மீண்ட…
-
- 0 replies
- 299 views
-
-
ஆயுள் தண்டனை கைதி கண்ணதாசனை விடுவித்து கட்டளை! – விசாரணை நியாயமற்றது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போராளியும், யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறையின் முன்னாள் விரிவுரையாளருமான கண்ணதாசனை விடுவித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) கட்டளை வழங்கியுள்ளது. தண்டனையை எதிர்த்து கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டின் அடிப்படையில் அவரை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. இந்த மேன்முறையீட்டு வழக்கின் விளக்கம் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் எழுத்தில் வழங்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 13ம் திகதி வழக்கு வ…
-
- 15 replies
- 1.8k views
- 1 follower
-
-
வருட ஆரம்பத்திலேயே கொத்துக் குண்டுகளை வீசி தமிழர் படுகொலையை அரசு ஆரம்பித்துள்ளது திகதி: 04.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கொத்துக் குண்டுகளை வீசி மக்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்துள்ளது என்று திருமலை தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2008 ஆம் ஆண்டு இறுதியிலும் 2009 ஆம் ஆண்டு முதலாம் இரண்டாம் நாள் வரையிலும் சிறிலங்கா இனவாத அரசும் படைகளும் எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களை வன்னிப் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது நடத்தி பதினேழு பேரைப் பலி கொண்டதுடன் எழுபது பேர் வரையில் காயப்படுத்தப்பட்டுள்ளனர். பத்துப் பேர் அதிதீவிர சிகிச்சை…
-
- 0 replies
- 563 views
-
-
தைத்திருநாளை கொண்டாடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி ஜகசூரிய ஆகியோர் இன்று திங்கட்கிழமை யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். யாழ். ஆனையிறவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதி மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். இதன்போது, கிளிநொச்சி சென். திரேசா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும், அம்பாறை மாவட்ட இசை கலைஞர்களின் 'முகமூடி தயாரிப்பு' எனும் தொனிப்பொருளிலான நாடகமும் இடம்பெற்றன. இதேவேளை, ஆனையிறவு இராணுவ முகாமிற்கு அருகாமையில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பொங்கல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எர…
-
- 1 reply
- 353 views
-
-
யாழ்ப்பாண சாந்தினி வயிறு நிறைய போதைப் பொருளுடன் சென்னையில் கைது http://tamil.oneindia.com/news/tamilnadu/jaffna-woman-carries-rs-2-50-cr-durgs-her-belly-261965.html வயிற்றுக்குள் 2.5 கோடி "போதை".. "அயன்" சாந்தினி அதிரடி கைது! சென்னை: அயன் படத்தில் பார்த்திருப்போம்.. சிறிய டியூப் மாத்திரைக்குள் போதைப் பொருட்களை நிரப்பி அதை வாயில் போட்டு விழுங்கி விடுவார்கள். பிறகு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று அங்கு மலமிளக்கி கொடுத்து வெளியில் எடுப்பார்கள். அதே பாணியில் கொழும்பிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண்ணை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொழும்பு நகரிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை ஆறரை மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த வி…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஐக்கிய தேசியக்கட்சியை வழிநடத்த நான் தயார்- ருவான் கட்சி உறுப்பினர்கள் என்னை விரும்பினால் ஐக்கிய தேசியக்கட்சியை வழிநடத்த தயாரென அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ருவான் விஜேவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டு மக்களின் இதயங்களை வென்றெடுக்கக்கூடிய ஒருவரை கட்சியின் புதிய தலைவராக உறுப்பினர்கள் தெரிவு செய்ய வேண்டும். மேலும் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கும் நபருக்கும் இது பொருந்தும். அந்தவகையில் தலைமை மற்றும் தேசிய பட்டியல் இரண்டையும் பொறுத்தவரை கட்சி சர…
-
- 0 replies
- 313 views
-
-
முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமையலாம்! [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 03:35.51 AM GMT +05:30 ] வன்னிப் போர்முனை விரித்த வலை புதியது,புரியாதது! பல எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்களின் தலையில் ஏறித் தாண்டவமாடிக் கொண்டது இந்தப் போர்முனை. பலமான ஒரு மையப்பகுதியாக விளங்கியது கிளிநொச்சி. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியின் முக்கிய தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான காரணம் என்ன? அதன் அறம் புறம் என, உள்ளடகப்பட்ட விடயங்கள் என்ன? வடபோர்முனையில் ஸ்ரீலங்கா இராணுவம் இதுவரை சந்திக்காத பேரிழப்புக்களைச் சந்தித்த போதும் கிளிநொச்சி மண்ணை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான முழுக் காரணம் என்ன?…
-
- 10 replies
- 3k views
-
-
மேலும் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை மேலும் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டளர் நாயகம் நிஹால் ரணசிங்க கூறினார். இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டத்தை மாதாந்தம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய கட்டடத் தொகுதியில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன் கடந்த வருடத்தின் மார்ச் மாதம் முதல் தற்போது வரை 1400 இற்கும் மேற்பட்டவர்களு…
-
- 0 replies
- 365 views
-
-
வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் மாபெரும் இன அழிப்பு படையெடுப்பில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறிலங்கா முப்படைகளும் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய அகோரமான குண்டுத் தாக்குதல்களில் 66 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 14 பேர் நேற்று நடைபெற்ற பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 73 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 462 views
-
-
19ஆவது திருத்தம் தொடர்பில் ஆலோசனை By General 2013-02-03 09:08:10 அரசியலமைப்புக்கு 19ஆவது திருத்தம் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் முறையில் மாற்றம் கொண்டு வருவது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவது, பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நிர்ணயிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=2833
-
- 0 replies
- 277 views
-
-
புதிய அரசியல் கட்சியொன்றை தற்போது பதிவு செய்ய முடியாது – மஹிந்த தேசப்பிரிய குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு புதிய அரசியல் கட்சியொன்றை தற்போது பதிவு செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கரையோரப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் சந்தித்து தம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியொன்றை பதிவு செய்ய முடியாது எ…
-
- 0 replies
- 278 views
-
-
அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர் பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார். தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “எதிர்காலத்தை வளமாக்குவதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது இதுவொரு பொதுவான நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய நிலைமையில் உலகத்திலே என்றுமில்லாத வகையில் விமான நி…
-
- 31 replies
- 2.6k views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கம்: பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு.! புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான 9 பேர் கொண்ட நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் நேற்று (செப்-02) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் நிபுணர் குழுவில் தமிழ் - முஸ்லீம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீ…
-
- 0 replies
- 643 views
-
-
வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட அனுமதியோம்-ஞானசாரதேரர் வடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான இனம் சிங்கள இனமே அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என பொதுபலசேனாவைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். வவுனியா நகரில் நேற்று பொதுபல சேனா ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகெதண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது பெரும்பான்மை இனத்தனவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம். மேலும் வடக்கில் விகாரைகள் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது அவை அனைத்தும் மு…
-
- 2 replies
- 327 views
-
-
மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற விக்கியின் கருத்துக்கு, டயனா கமகே கடும் எதிர்ப்பு மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அன்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்க்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது, மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றதொரு கருத்தை அவர் கூறியிருந்தார். அத்தோடு, வடக்குக் கிழக்கில் பௌத்தர்கள் இல்லாத காரணத்தினால், புத்தர் சிலைகளை நிறுவி வழிப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவரது…
-
- 50 replies
- 4.1k views
-
-
யேர்மன் நாட்டில் உள்ள பல ஊடகங்களின் மின்னஞ்சல் முகரிகளும் சுருக்கமான மாதிரி கடிதம்: மேலே உங்கள் பெயரை போட்டு இதை அனுப்பி வையுங்கள்!! மின்னஞ்சல் முகரிகள்: info@ard.de; info@zdf.de; redaktion@tagesschau.de; zured@daserste.de; Info@3sat.de; 3sat@orf.at; 3sat@sf.tv; 3sat@ard.de; 3sat@swr.de; info@phoenix.de; kika@kika.de; christiane.rohde@kika.de; info@rtl.de; kontakt@sevenoneintermedia.de; info@sat1.de; info@n24.de; fernsehen@wdr.de; redaktion@wdr.de; ndr@ndr.de; fernsehen@ndr.de; info@ndr.de; info@dpa.com; presse@dpa.com; frankfurt-redaktion@ap.org; berlin-redaktion@ap.org; aktuelles@ddp.de; apa@apa.at; chefredaktion@apa.at; info@bild.de தொடர்புப்படிவங்கள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் செயலகம் ஈடுபட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில், நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர்களில் இருவருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும், ஈ.சரவணபவன் ஆகிய இருவருக்குமே சிறிலங்கா அதிபரின் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மட்டும் பங்கேற்று, …
-
- 1 reply
- 469 views
-
-
வட மாகாண அபிவிருத்திக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது வட மாகாண அபிவிருத்திக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரையில் 435 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாலங்கள் அமைத்தல், படகு தயாரிப்பு, மீன்பிடித் துறைமுகங்களை அமைத்தல், வீதிப் புனரமைப்பு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். http:…
-
- 4 replies
- 394 views
-
-
தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பத் தயாராகும் 2,508 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் 2,508 இலங்கைத் தமிழர்கள், நாடு திரும்புவதற்குத் தயாராக உள்ளதுடன். அவர்கள் தாயகம் திரும்புவதற்கு இந்திய அரசாங்கத்தின் கப்பல் சேவையை எதிர்பார்த்துள்ளனர். தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளின் இந்தப்பட்டியல் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், கையளிக்கப்பட்டுள்ளதாக ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனர் எஸ்.சி.சந்திரகாசன் தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் சுஸ்மா சுவராஜை சந்தித்த போது, அவர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, தாயகம் தி…
-
- 15 replies
- 911 views
-