Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இந்தியா துரிதமாக உதவியது ஆனால் உதவிக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களிற்கு சீனா பதிலளிக்கவில்லை என யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சமந்தா பவர் அங்கு இதனை தெரிவித்துள்ளார். புதுடில்லி ஐஐடியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான உதவும் மிக முக்கியமான நடவடிக்கைகளுடன் இந்தியா துரிதமாக பதில்நடவடிக்கையில் ஈடுபட்டது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார். ஆனால் சீனா கணிசமான நிவாரணத்தை என்ற வேண்டுகோள்களிற்கு இறுதிவரை பதில்அளிக்கப்படவில்லை எனவும் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். …

  2. இலங்கை சில நிபந்தனைகளில் பின்னடிப்பதால், ஐஎம்எப் உதவி தாமதமாகிறது. 1, படையினர், அரச சேவையில் உள்ளோரின் தொகை குறைத்து வீட்டுக்கு அனுப்புதல். 2, இலவச கல்வி, இலவச மருத்துவம் காத்திரமான குறைப்பு. முன்னர் சிறிமாவோ காலத்தில், ஆஸ்பத்திரி போனால், ஒரு ரூபாய் முத்திரை கொடுத்தே, டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு, நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை என்று வரக்கூடும் என்கிறார்கள். அதே போல் கல்விக்கும், நூறு முதல் ஐநூறு ரூபாய் வரை மாதம் அல்லது தவணைக்கு பாடசாலைக்கு கட்டுமாறு கோரலாம். இலங்கையில் பல்கலைக்கழக கல்வி கூட இலவசமானது. பிரிட்டனில் உள்ளது போல, மாணவர்களுக்கு அரசு கடன் கொடுத்து படிக்க வைக்கும் நிலை வரலாம். இவற்றுள் சகலதும் அல்லது …

    • 2 replies
    • 337 views
  3. எரிபொருளை... அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை, கைது செய்யும் பொலிஸாருக்கு... பணப் பரிசு! சட்டவிரோதமான முறையில் எரிபொருளினை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய 100 லீற்றர் வரையான பெற்றோல் அல்லது டீசலை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், 100 முதல் 500 லீற்றர் வரையிலான எரிபொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 02 இலட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது. அத்துடன், 500 முதல் 1000 லீற்றர் வரையான எரிபொருளைக் கைப்பற்றுவோருக்கு 03 இலட்சம் ர…

  4. அவசரகால சட்டம்... 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம். அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து குறித்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்காரணமாக குறித்த சட்டம் 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1292581

  5. மக்கள் பலத்துடன் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கவேண்டும் - வாசுதேவ நாணயக்கார (எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி தலைமையிலாள சர்வகட்சி அரசாங்கம் அமைத்தால் அதன் பொருளதாரா கொள்கையின் அடிப்படையிலேயே அதில் இணைவதா இல்லையா என தீர்மானிப்போம். மக்கள் பலத்துடன் ரணில் விக்ரமசிங்கை அந்த பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கின்றோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய லிபரல்வாதத்த…

    • 2 replies
    • 405 views
  6. ரணில் விக்கிரமசிங்கவின்... தனிப்பட்ட இல்லத்திற்கு, தீ வைத்த... 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேரை இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட காணொளிகள் ஊடாகவே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக இல்லத்திற்கு நுழைந்தவர்கள் மற்றும் இல்லத்திற்குள் நுழைய வழிவகுத்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் தலைமையகத்தினால் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான…

  7. ஸ்திரத்தன்மை , பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் - ஜனாதிபதி ரணிலுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து (எம்.மனோசித்ரா) இலங்கையின் நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடாகவும் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த பதவி காலம் இலங்கையின் அனைத்து பிரஜைகளினதும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் ஊட்டமளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.…

    • 1 reply
    • 183 views
  8. சர்வதேச நாணய நிதியத்திடம் எந்த உதவியையும் இலங்கை எதிர்பார்க்க முடியாது - ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் (நா.தனுஜா) இலங்கை அதன் அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீளும் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார உதவிச்செயற்திட்டம் இலங்கைக்குக் கிட்டப்போவதில்லை என்று ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டெபோரா ப்ரோட்டிகம் தெரிவித்துள்ளார். 'நாட்டின் அனைத்து விடயங்களும் தொடர்ந்து நெருக்கடி நிலையில் இருக்கும்போது சர்வதேச நிதியத்தினால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாது. எனவே ஸ்திரமான அரசாங்கம் அமைக்கப்பட்டு, நிதியமைச்சரொருவர் நியமிக்கப்படும் வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு யாரும் இருக்கப்ப…

  9. கோட்டாபய ராஜபக்ஷவின்... பயண அனுமதி காலத்தை, மேலும் நீடித்தது... சிங்கப்பூர் அரசாங்கம் ! இரண்டு வாரங்களுக்கு முன்பு தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயண அனுமதி, மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டதை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு தப்பி ஓடியிருந்தார். ஜூலை 14 ஆம் திகதி, மாலைதீவில் இருந்து சவுதி விமானத்தில் சாங்கி விமான நிலையத்திற்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டது. சிங்கப்பூர் வந்த சிறிது நேரத்திலேயே, அவர் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் 15 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தால் உத்தியோகப்ப…

  10. 22வது... திருத்தச் சட்டமூலம், இன்று நாடாளுமன்றத்தில்! அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 19 ஆவது திருத்தத்தில் உள்ள சில சரத்துகளை மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ள அதே வேளையில் 20வது திருத்தத்தை இரத்து செய்வதை இந்த சட்டமூலம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜூன் 24 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த சட்டமூலம் ஜூன் 20 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடாமல் தடுப்பது, அமைச்சர்களை நியமிப்பதற்கான புதிய நடைமுறை உள்ளிட்டவை இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைப்பது …

  11. நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ஆளும்கட்சி உறுப்பினர்கள், கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவு. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்திற்கு கட்டாயம் வருகை தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை ஒரு மாதம் நீடிக்கும் திட்டத்தை நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என்பதால் அவர்களது வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கு பெற்ற வாக்குகளை அவசரகால சட்டத்தை நிறைவேற்றும் பிரேரணைக்கு கிடைக்காது என அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1292479

  12. களவாடிய துப்பாக்கிகள் எங்கே?" நேருக்கு நேர் அனுரவிடம் கேட்ட ஜனாதிபதி ரணில் : ஆடிபோன அநுர

    • 12 replies
    • 888 views
  13. இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரான காலப் பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சமையல் எரிவாயு வரிசைகள் பெருமளவு குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. சமையல் எரிவாயு விநியோகத்தை தற்போது …

  14. கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இல்லை (வீடியோ) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தாம் நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தேவையான வீசா பெற்று அந்த நாட்டுக்கு சென்றுள்ளதால் அவர் தலைமறைவாக இருப்பதாக நான் நம்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=163791

    • 9 replies
    • 1.2k views
  15. ஜனாதிபதி ரணில் - சீனாவுக்கு பயணம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார் . மேலும் கொழும்பிலும். அம்பாந்தோட்டையிலும் சீனாவின் ஆதரவுடன் கூடிய பரந்த துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் பீய்ஜிங், இலங்கைக்கு உதவ முடியும் என இலங்கை தூதுவர் பாலித கொஹொன குறிப்பிட்டுள்ளார் . இதேவேளை சீனா தொடர்பில், புதிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். htt…

  16. அதிவேக நெடுஞ்சாலைகளின், நாளாந்த வருமானம்... 70 வீதத்தால் வீழ்ச்சி! எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் நாளாந்த வருமானம் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரச்சபையின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நாளாந்தம் 30 மில்லியன் ரூபாய் வரை வருமானம் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், தற்போது அது 8 மில்லியன் ரூபாவரை குறைவடைந்துள்ளது. இலங்கையில் இரு மாதங்களுக்கு மேலாக எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கின்றது. எரிபொருளை பெறுவதற்கு பல நாட்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அதிகளவான பயணிகள் தூர இ…

  17. தமிழக அரசாங்கத்திடம் இருந்து... ஒருதொகை மனிதாபிமான, உதவிப் பொருட்கள் கையளிப்பு. இலங்கைக்கு தமிழக அரசாங்கத்திடம் இருந்து 3.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மனிதாபிமான உதவி பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த உதவிப் பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகரினால் இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் குறித்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான மருந்துகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த பொருட்களின் மதிப்பு 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இந்…

    • 2 replies
    • 267 views
  18. தமிழ் மக்களை... பொருளாதார ரீதியாக, பலப்படுத்த நடவடிக்கை- சி.வி.விக்னேஸ்வரன்! தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக சில உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெறவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை. அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டால் பெரிய பாதிப்பு எமக்கு ஏற்படும். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்போது கூட்டுப் பொறுப்புடைமை மற்றும் கடப்பாடு போன்றன இருக்கின்றது. அதனடிப்படையில் …

    • 3 replies
    • 401 views
  19. ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கை பெற்ற அந்நியச் செலவாணி 50 வீதத்தால் வீழ்ச்சி -சி.எல்.சிசில்- 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து இந்த நாடு பெற்ற தொகை 1.6 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. இது 51.6 வீத சரிவாகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 478.4 மில்லியன் டொலருடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வெளிநாட்டுப் தொழிலாளர்கள் அனுப்பிய தொகை 274.3 மில்லியன் டொலராகும். வெளிநாட்டு தொழிலாளர் விசாரணைகளின்படி ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியன் டொலராக இருந்ததுடன் மே மாதத்தில் 304 மில்லியன் டொலராக உயர்ந்தது. ஆனால் ஜூ…

    • 0 replies
    • 331 views
  20. சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில் அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து எமக்கு இதுவரை அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை. ஏனைய எதிர்கட்சிகளுக்கும் அதிகாரபூர்வ அழைப்புகள் வரவில்லை. ஆகவே அதற்குள் “பேச்சுகள் நடக்கின்றன; அமைச்சர்கள் ஆகிறார்கள்” என்பவையெல்லாம் வெறும் சுவாரசிய செய்திகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி நம்புகிறது என கூட்டணி தலைவர் மனோ க…

    • 0 replies
    • 166 views
  21. மீண்டும் நாட்டில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் (காணொளி) மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னதாக கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்படி, பாதுகாப்பு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைப்பிடுத்தல், அவசியமற்ற நடமாட்டத்தை க…

  22. மேலும் 12 மாதங்களுக்கு தொடரும் எரிபொருள் நெருக்கடி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு ! 12 மாதங்களுக்கு தொடரும் எரிபொருள் நெருக்கடி தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினாலேயே எரிபொருள் அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினர். மேலும், அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாகவே அடுத்த 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/543-6/

  23. தேசிய சபையொன்றை நிறுவ... எதிர்க்கட்சி நடவடிக்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேசிய சபையொன்றை நிறுவ எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை(26) முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். தேசிய சபைக்கு வரும் சிறந்த முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1292348

  24. கறுப்பு ஜூலை நினைவுநாள் காலிமுகத்திடலில் அனுஷ்டிப்பு ! தமிழ் மக்களின் படுகொலையை ஆற்றுகை மூலம் வெளிப்படுத்திய கலைஞர் ! தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனக்கலவரங்களின் 39 ஆவது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு , ஜூலை 23 ஆம் திகதி நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன்போது கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும், அழிக்கப்பட்டும், வடக்கு நோக்கி அகதிகளாகவும் விரட்டியடிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு பெரும் எண்ணிக்கையானோர் படுகாயம் அடைந்தனர். 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜே.ஆர். ஜெ…

    • 10 replies
    • 651 views
  25. மொட்டு கட்சியிலிருந்து டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட 16 பேர் விலக தீர்மானம் July 24, 2022 சிறீலங்கா பொதுஜன பெறமுன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் முன்மொழிந்த மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் உட்பட குழு மொட்டு கட்சியில் இருந்து வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பேராசிரியர் சரிதா ஹேரத் மற்றும் கலாநிதி நாலக கொடஹேவா உட்பட 16 பேர் பொதுஜன முன்னணியில் இருந்து விலகி எதிரணியில் சுயாதீன குழுவாக அமர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.ilakku.org/from-the-podujana-paru…

    • 10 replies
    • 719 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.