Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வண. பலாங்கொட காஷ்யப்ப தேரர் கைது வணக்கத்துக்குரிய பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அலரி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (24) சென்றுள்ளார். இதன்போதே வணக்கத்துக்குரிய பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=164872

    • 0 replies
    • 235 views
  2. துமிந்த, ஜீவந்த, ஸ்டாலின், நளின் ஆகியோருக்கு பிணை ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் நளீன் குணவர்தன ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=164865

    • 0 replies
    • 283 views
  3. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொடரும் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் சம்பவங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த மாதம் தெல்லிப்பளை பகுதிக்கு புதுமுக மாணவர்களை அழைத்து பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில்…

  4. கோட்டா... இன்று, நாடு திரும்ப மாட்டார்? முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்றைய தினம்(புதன்கிழமை) மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அவர் இன்றைய தினம் நாடு திரும்ப மாட்டார் என கூறப்படுகின்றது. பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே இவ்வாறு காலதாமதமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. புலனாய்வு பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் சென்று திரும…

  5. இந்தியாவிற்கும்... இலங்கைக்கும் இடையில், கப்பல் சேவை! இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் உத்தேச கப்பல் சேவை இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில பேரவையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காரைக்கால் துறைமுகத்துக்கும், காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையே படகு சேவையை ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, புதுச்சேரி துறைமுகத்தில் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பலை இயக்குவதற்கும், பிற தொடர்புடைய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் நிறுவனங்களிடமிருந்து, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. htt…

  6. "எக்ஸ்பிரஸ் பேர்ள்" கப்பலில் இருந்து... வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு, 90 கோடி ஒதுக்கீடு! தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 293 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுப் பொருட்கள் மன்னாரில் இருந்து ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையான கடற்பரப்பில் பரவியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, சமுத்திரபாதுகாப்பு சம்மந்தமான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதற்கான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வா…

  7. மீண்டும்... ஐக்கிய தேசிய கட்சியில், இணைந்து கொள்ளும்... சஜித்தின் சகாக்கள்! ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உட்பட 200 இற்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அரசியல் செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு சென்ற அவர்களின் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாக…

  8. 367 இற்கும் மேற்பட்ட.. பொருட்களின் இறக்குமதிகளுக்கு, தற்காலிக தடை! 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1295899

  9. வெளிநாட்டு நாணயத்தாள்களை வைப்பிலிடுவதற்கு ஒருமாத பொதுமன்னிப்புக் காலம் By VISHNU 23 AUG, 2022 | 09:04 PM (நா.தனுஜா) வெளிநாட்டு நாணயத்தாள்களைத் தம்வசம் வைத்திருப்பவர்கள் அவற்றைத் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக்கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக்கணக்கில் வைப்பிலிடுவதற்கு அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வணிகருக்கு விற்பனை செய்வதற்கு நிதியமைச்சரால் கடந்த 15 ஆம் திகதியிலிருந்து அமுலுக்குவரும் வகையில் ஒருமாத பொதுமன்னிப்புக்காலம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வங்கிக்கட்டமைப்பினுள் உள்வாங்குவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி வெளிநா…

  10. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக... "தேசிய பாதுகாப்பு" தொடர்பான புதிய சட்டம்! பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறித்த சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1295854

  11. கோட்டாபய கடற்படை முகாமிற்காக... மீண்டும் காணியை, சுவீகரிக்க நடவடிக்கை ! முல்லைத்தீவு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமிற்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் திரண்டு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 617 ஏக்கர் நிலம் உள்ளடங்குகின்ற குறித்த கடற்படை முகாமில் பெரும்பாலான பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களாகும். இதில் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக நில அளவை செய்து காணியை நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவந்தன இருப்பினும் பொதுமக்களின் எதிர்ப்பால் அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்றும் அளவீடு செய…

    • 3 replies
    • 546 views
  12. கடல் அரிப்ப்பால் அழிந்துவரும் திருக்கோவில் பிரதேசமும் மற்றும் வளங்கள்! By Shayithan.S ( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்துக்கு முன்னாலுள்ள கடல் பகுதி மற்றும் திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடல் பகுதிகள் இந்த கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றது. கடந்த ஒரு வார காலமாக இடம் பெற்று வரும் இந்த கடல் அரிப்பில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் அடித்து செல்லப்பட்டு இருக்கின்றன. அது போல ஏனைய மரங்களையும் கடல் காவு கொண்டிருக்கிறது சுமார் 100 அடி பரப்பு கடலுக்குள் காவுகொள்ளப்பட்டு இருக்கின்றது . மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களது …

  13. அரசாங்கத்தில் இணைய முடியாது : பாராளுமன்ற குழுக்கள் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவோம் - ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பில் சஜித் By T Yuwaraj 23 Aug, 2022 | 06:14 AM (எம்.மனோசித்ரா) பாராளுமன்ற குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் முற்போக்கான முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரச கொள்கையாகப் பயன்படுத்துவதை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிர…

  14. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது அவசியம் - சட்டத்தரணி அம்பிகா 22 Aug, 2022 | 09:18 PM (நா.தனுஜா) பொலிஸாரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் போன்ற மிகமோசமான சட்டங்களின் விளைவுகள் என்பன நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் 'ஜனநாயகவாதியாக' கருதப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீண்டும் பழைய அடக்குமுறைகளை நடவடிக்கைகளையே பிரயோகிக்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான விடயமாக இருக்கக்கூடும். ஆனால் இதனாலேயே நாம் தனிநபர்களுக்கு அப்பால் செல…

  15. அதிகளவில் உணவு விலைகள் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆம் இடம்! உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. லெபனான், ஜிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி நாடுகளுக்கு அடுத்ததாக இலங்கை உள்ளதாக உலக வங்கி மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 6 மாதக் காலப்பகுதியில் உணவுப் பொருட்களில் விலைகள் 200 வீதம் வரையான விலைகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  16. கோட்டா... மற்றும் குடும்பத்தினர், பாதுகாப்பாக திரும்புவதற்கு... இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு. கோட்டாபய ராஜபக்ஷ, சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் சில சலுகைகள் மற்றும் நன்மைகளுக்கு உரித்துடையவர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடு திரும்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம் அச்சுறுத்தல் நிலைமையை மதிப்பிடுவதற்கும், பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் குடும்பம் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அரசாங்கம் போதிய …

    • 2 replies
    • 322 views
  17. "நீல உடை" அணிந்த... யாழ். மாநகரசபை ஊழியர்கள், மீண்டும் பணியில். நல்லூர் மகோற்சவ திருவிழாக்களின் போது, நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நல்லூர் மஹோற்சவம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், “நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆலய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் தற்போது …

  18. நாட்டின் ஜனநாயகம்... முற்றாக, அழித்துவிடும் – அமெரிக்கா விசனம். பயங்கரவாதத்தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையதாக அமையாத சட்டங்களைப் பயன்படுத்துவது நாட்டின் ஜனநாயகத்தை முற்றாக அழித்துவிடும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்திருந்தார். இந்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகம் குறித்துத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …

  19. "பயங்கரவாதத் தடைச் சட்டம்" குறித்து.. பிரித்தானியா கவலை! பயங்கரவாதத் தடைச் சட்டப் பயன்பாடு குறித்த தகவல்கள் தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கரிசனை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளிற்கான மதிப்பிற்கு முரணான விடயம் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சட்டத்தை பயன்படுத்துவதில்லை என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1295794

  20. By VISHNU (எம்.நியூட்டன்) நல்லூர் ஆலய சூழலை சுத்தமாக பேண உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லூர் ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வருவோரில் சிலரின் செயற்பாடுகள் பக்தர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆலய வீதியில் அங்க பிரதிஷ்டை செய்யும் அடியவர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்க பிரதிஷ்டை செய்யும் வீதி சுத்தமாக இருக்க வேண்டும். பொறுப்பற்ற சிலர் வீதிகளில் உணவு மீதிகளை வீசி செல்கின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , மாலை திருவிழாவிற்கு வரும் சிலர் ஆலய வீதிகளில் தாம் உண்ட உணவுகளின் மீதிகள் , கச்…

  21. By T. SARANYA தற்போது மட்டக்களப்பு வாவியின் பெரும்பாலான நீர்ப்பரப்பு “பூங்கறை” எனும் ஒருவித பச்சைப் படையால் சூழப்பட்டுள்ளதால் வாவி மாசடைந்து கொண்டு வருகின்றது. இதன் காரணமாக சில இடங்களில் துர்நாற்றமும் வீசுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வாவியில் வலைவீசி மீன் பிடிக்க முடியாமலுள்ளதாகவும் இந்தப் “பூங்கறை”யில் ஒரு வித பசைத் தன்மை உள்ளதால் அதில் வலைகள் ஒட்டிக் கொள்வதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். வருடாவருடம் இத்தகைய “பூங்கறை” எனும் பச்சை படர்தல் வாவியின் மேற்பரப்பில் சில நாட்களுக்குப் படர்ந்து பின்னர் இயற்கையாகவே மறைந்து விடுவதாகவும் ஆனால் இந்த வருடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தப் “பூங்கறை”ப் பச்சைப் பட…

  22. By T. SARANYA இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் திருகோணமலையை சேர்ந்த 06 குடும்பங்கள் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். குறித்த 06 குடும்பங்களை சேர்ந்த 16 பேரிடமும் தமிழக கடலோர காவல் படையினர் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை தஞ்சம் கோரி சென்றவர்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் 16 நபர்களில் ஒருவர் கி…

  23. By RAJEEBAN ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ள புலம்பெயர் அலுவலகம் சர்வதேச அளவில் அனைத்து புலம்பெயர் சமூகத்தினரையும் உள்வாங்கியதாகவும் முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை கருத்தி;ல் கொண்டதாகவும் காணப்படு;ம் என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் சாகல ரட்நாயக்க இந்த அலுவலகத்தை அமைக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன எனவும் தெரிவித்துள்ளார் மோர்னிங்கிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் அலுவலகம் ஒருங்கிணைப்பிற்கான மத்திய நிலையமாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் அலுவலகம் என்பது புலம்பெயர் பிரிவுகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் இலங்கை தொடர்பில் அவர்களுடன் ஈடுபாடுகள…

    • 5 replies
    • 756 views
  24. இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த சுற்றிவளைப்பின் போது இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த இந்திய மீனவர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறைக்கு அழைத்து செல்லப்பட்டதோடு அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்…

  25. இலங்கை திரும்பும் தினத்தை ஒத்தி வைத்தார் கோட்டாபய! தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதும், அவர் அந்தத் தீர்மானத்தை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே இம்மாதம் திட்டமிடப்பட்ட கோட்டாப…

    • 7 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.