ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
‘ஈரோஸை தாரை வார்க்கவில்லை’ எம்.எஸ்.எம்.நூர்தீன் ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணிக் கட்சியை யாருக்கும் தாரை வார்த்துக் கொடுக்கவில்லை. ஈரோஸ் கட்சிக்கு தெருவழிப் போக்கர்கள் ஒரு நாளும் சொந்தம் கொண்டாட முடியாது என அக்கட்சியின் செயலாளர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார். ஆரையம்பதியில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘ஈரோஸ் கட்சி பல தமிழ் இளைஞர்களின் தியாகத்தினால் உருவாகி வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியாகும். இக்கட்சியின் செயலாளர் பதவியில் நானே இருக்கின்றேன். வேறு எவராவது இந்தக் கட்சிக்கு செயலாளர் பதவியை…
-
- 0 replies
- 350 views
-
-
‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் ஈழ மக்களால் நேசிக்கப்பட்ட கணேஷ் மாமாவின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் (video in) Monday, May 9, 2011, 21:41 சிங்கள இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் படுகொலை செய்யப்பட்டர் . அவரின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் . ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார். போராட்டத்துக்காக ‘கலை’ வடிவில் போராடிய உண்மை கலைஞன்….எத்தனை படங்கள், குறும்படங்கள்…வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராடத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்தா உண்மை மனிதர்களில் இவரும் ஒ…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?’ தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் திகதி: 08.06.2009 // தமிழீழம் ‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?' தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (09.06.09) சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்திற்குத் தோழர் சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) தலைமை தங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரை வழங்குகிறார். தோழர் தியகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), தோழர் கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் அன்பு தனசேகரன் (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் நாதிகன் கேசவன் (தமிழ்த் த…
-
- 0 replies
- 1.4k views
-
-
‘உகண்டா பாலா’ சி.ஐ.டி.யினரால் கைது மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோது விமான நிலையத்தில் மடக்கி பிடிப்பு சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பாலா அல்லது ‘உகண்டா பாலா’ என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு பாலச்சந்திரன் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து வருகைதந்த சந்தேகநபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் மடக்கிப்பிடித்துள்ளனர். முல்லைத்தீவின் தெற்கு பிரதேசத்திலுள்ள மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியமை, வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தல், பணமோசடி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டவர் என்று இரகசிய பொலிஸ் திணை…
-
- 2 replies
- 1.5k views
-
-
‘உங்களை புரிந்துகொள்கின்றோம், எங்களை புரிந்துகொள்ளுங்கள்’ சிங்கள மக்களிடம் தமிழர் தரப்பு! தென்னிலங்கை சிங்கள மக்களிற்கான செய்தியாக ‘உங்களை புரிந்துகொள்கின்றோம் எங்களை புரிந்துகொள்ளுங்கள்’ எனும் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருமித்த குரலாக கொண்டு சேர்க்கும் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்வதற்கு தமிழர் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட, கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து யாழ். இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து, தற்போதைய இலங்கைத் தீவின் நெருக்கடியில் தமிழரின் வகிபாகம் தொடர்பாக ஆராய்ந்தனர். இதன்போது, வடக்கு கிழக்கு சார்ந்த சைவ ஆதீன முதல்வர்கள், கத்தோலிக்க குரு…
-
- 1 reply
- 354 views
-
-
‘உதயன்’ மீதான தாக்குதல்கள்: எடுத்த நடவடிக்கைகள் என்ன? ‘உதயன்’ மீதான தாக்குதல்கள்: எடுத்த நடவடிக்கைகள் என்ன? ‘உதயன்’ பத்திரிகை நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி உடனடியாக அறிக்கை கோரியுள்ளார் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க. பத்திரிகையாளர்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதன் ஊடாகக் கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவித்ததலும், ஆசியாவில் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவித்தலுக்குமான பன்னாட்டுக் கருத்தரங்கு கொழும…
-
- 0 replies
- 274 views
-
-
‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’ “நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். மேலும், “வடக்குக்கு ஒரு நீதியும் தென் மாகாணத்துக்கு ஒரு நீதியும் என இரண்டு விசேட நீதிகள் எதுவும் இல்லை. இந்நாட்டில் ஒரு சட்டமே உள்ளது. “இந்தக் காரணத்தால் தெற்கு மக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்ததைப் போன்று விரைவில் சிவாஜிலிங்கத்துக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார். கொழும்பில், இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/உத்தரவை-மீறினால்-கடும்-நடவடிக்கை/175-20…
-
- 2 replies
- 534 views
-
-
‘உயர்நீதிமன்ற வியாக்கியானம்; ஜனநாயகத்தின் வெளிப்பாடு’ அரசமைப்பின், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள வியாக்கியானமானது, நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 20ஆவது திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் - அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாக சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில்…
-
- 0 replies
- 165 views
-
-
‘உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஊடகவியலாளர்களே காரணம்’ “எனது உயிருக்கு, பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மேலதிக பாதுகாப்பை அரசாங்கத்திடம் கோரவேண்டிய நிலைமைக்கு நான் தள்ளப்பட்டேன், இவற்றுக்கெல்லாம் சில ஊடகவியலாளர்கள் தவறாகவும் மற்றும் திரிவு படுத்தியும், செய்திகளை வெளியிட்டமையே காரணமாகும்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளரான நடேஷபிள்ளை வித்தியாதரனினால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகையின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய முதலமைச்சர், “ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு நிமிடமும், உண்மையான மற்றும் சரியான தகவல்களை …
-
- 0 replies
- 189 views
-
-
‘உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழினம்’ தமிழ் பேசும் மக்களும், இந்த நாட்டில் வாழும் தேசிய இன மக்களே. அவர்களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களே. ஆனாலும், உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்’ என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (04) நடைபெற்ற சுகாதாரம் மற்றும் போசணை, சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “வட மாகாணத்…
-
- 0 replies
- 148 views
-
-
எஸ்.நிதர்ஷன் தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுமென உறுதிமொழி தருவார்களாயின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகுவேன் என முன்னாள் எம்.பியும் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழர்களின் கோரிக்கையை, ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்த் தரப்புகளை ஒன்றிணைத்து தயாரிக்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.பாடி விருந்தினர் விடுதியில், நேற்று(10) நடத்திய ஊடகவியலாளார் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய இனத்தின் மறு…
-
- 61 replies
- 5.2k views
-
-
ஒரு வளமான நிலத்தில் – வீரியமான விதையில் இருந்துதான் ஒரு செழிப்பான மரம் தளைக்க முடியும். http://nerudal.com/nerudal.37940.html அதுபோல்ஒரு வளமான – வீரியமான அரசியலில் இருந்துதான் ஒரு இனத்தின் வாழ்வியல் செழிக்க முடியும் எனும் அசைக்க முடியாத கருத்தியல் தளத்தில் நின்றவாறு இக்கட்டுரை முன்வைக்கப்படுகின்றது. இன்று உலகப் பரப்பெங்கும் பரந்துபட்டு வாழும் இனமாக தமிழினம் இருக்கின்றது. தமிழகம் – தமிழீழம் – மலேசியா – சிங்கப்பூர் – தென்னாபிரிக்கா – ஐரோப்பா – அமெரிக்கா என கண்டங்களெங்கும 34 நாடுகளுக்கு மேல் தமிழர்கள் வாழ்வு அமைகின்றது. அடிமைத் தமிழர்களாய் – அகதித்தமிழர்களாய் இறைமையற்ற வெற்று இனமாக முதலாம் உலக நாடுகள் முதல் மூன்றாம் உலக நாடுகள் வரை எமது இருப்பை தக்கவைத்…
-
- 0 replies
- 578 views
-
-
‘சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது. சிங்கள மக்களுக்கு இதை எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன். இலங்கையை கண்காணித்து, இலங்கை பற்றிய வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர்/அக்டோபரிலும், எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி/மார்ச்சிலும் சமர்பிக்கும்படியும், அதையடுத்து, இலங்கை திருந்தாவிட்டால் பொறுப்பு கூறல் தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர்/அக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும், ஐநா மனித உரிமை ஆணைக்குழு (UNHRC) தீர்மான…
-
- 0 replies
- 308 views
-
-
‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய முறை அறிமுகமாகிறது’ இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முதலாக இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அகில இலங்கை வை.எம்.எம். ஏ. பேரவை மற்றும் யன்ங் ப்ரென்ட்ஸ் அமைப்பு உட்பட சில அமைப்புகள் இனைந்து நடத்திய, புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் நிகழ்வு, கண்டி- மஹியாவையில் அமைந்துள்ள கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 296 views
-
-
‘உள்விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது’ – ராஜீவைத் தாக்கிய முன்னாள் கடற்படைச் சிப்பாய் MAR 13, 2015 | 1:49by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய சிறிலங்கா கடற்படைச் சிப்பாயான விஜித ரோகண விஜேமுனி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணம் குறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் விரும்புகிறேன். அவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால் அவர், எமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய…
-
- 0 replies
- 545 views
-
-
‘ஊரடங்கைத் தளர்த்தக் கூடாது’ கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த, கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை என்றும் மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தாலும் இலங்கையில் இப்போதைக்கு 7 நோயாளிக…
-
- 0 replies
- 262 views
-
-
‘எங்கட அம்மாவோட ஆசை, எங்கட அப்பாவோட ஆசை, எங்கட தலைமுறையின்ட ஆசை, எங்கட இனத் தின்ட ஆசை, விடியப்போகின்ற விடியலின்ட வெளிச்சத்தில எங்கட ஆசை நிறைவேறும், தமிழீழம் நிச்சயம் உதயமாகும்!’ - கிளைடர் குண்டுத் தாக்குதலின் கோரத்தில் உடம்பெங்கும் ரத்த சகதியாக ரணகளப்பட்டிருந்த நிலையிலும், வலி மறந்து முணுமுணுக்கிறான் அந்தச் சிறுவன். பிப்ரவரி 4-க்குள் முல்லைத் தீவு முழுவதையும் பிடித்தே தீருவோம் என்கிற வெறியில் வேகமெடுக்கும் இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாவதென்னவோ அப்பாவித் தமிழ் மக்கள்தான்! பிளேடால் பிரசவம்… கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்கள்தான் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவை. வட பகுதியின் நாலரை லட்சம் தமிழர்களு…
-
- 0 replies
- 1.3k views
-
-
‘எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்’ – பெண் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்! Posted by admin On March 10th, 2011 at 9:51 am / No Comments இலங்கையில் சிறைச்சாலையில் மிக நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை இனியாவது விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்ப் பெண் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்; காலங்கள் பல கடந்தும் கவனிப்பார் யாரும் இன்றி, பயங்கரவாதம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் எவ்விதத் தீர்வும் இல்லாமல் எப்போது விடுதலை என்றுகூட அறியமுடியாமல் சிறைகளில் தினம் தினம் கண்ணீரும் கவலைகளுமே சொந்தமாகிப்போன நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். எங்களை…
-
- 0 replies
- 794 views
-
-
‘எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர்’ “காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள், உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடி வருகின்றோம். எங்களுக்கான எந்தத் தீர்வும் இதுவரை இல்லை. எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர்” என, கிளிநொச்சியில் 329ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் ஏ9 பிரதான வீதிக்கருகில் தொடர்ச்சியாக 329ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்கள், இன்று(14) தைப்பொங்கல் நாளன்றும் போராட்டக் கொட்டகைக்குள் நல்ல தீர்வை எதிர்பார்த்து காத்தி…
-
- 0 replies
- 381 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் தமிழர்களுக்கு எஜமான் மாறினாரே தவிர சுதந்திரம் கிடைக்கவில்லையென, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, அவர்கள் இன்று (04) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பிரிட்டிஸ்காரர்களின் கீழ் அடிமையாக இருந்ததை விட சிங்களவர்களின் கீழேயே அடிமைப்படுத்தல்கள் கூடுதலாக உள்ளனவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைமுகமாகவும் மெதுவாகவும் நடத்தப்பட்ட அடக்குமுறைகள், புதிய அரசாங்கம் பதவியேற்றதும் வெளிப்படையாகவும் தீவிரமாகவும் நடக்கின்றனவெனத் தெரிவித்துள்ள அவர்கள், இந்த நிலையிலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய தாங்…
-
- 0 replies
- 329 views
-
-
‘எதிர் அபிப்பிராயங்களை செவிமடுக்க தயார்’ எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. எந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம் என்றார். சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 72ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாக…
-
- 5 replies
- 884 views
-
-
‘எதிலும் நான் தலையிடவே இல்லை’ - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய தொலைக்காட்சியின் ஊடாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருக்கின்றார். ஏனைய நாடுகளுடன் நட்புற பேணப்படும் எனத் தெரிவித்த அவர், கடந்த ஒருவருட காலத்தில், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதித்துறையில் எவ்விதமான தலையீடுகளும் செய்யப்படவில்லை என்றார் “கடந்த நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தனது அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தி வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தியது” என்றும் தனதுரையில் தெரிவித்தார். சிங்கள மக்கள் வாக்களித்தனர் இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜ…
-
- 2 replies
- 647 views
-
-
‘எதையும் சாதிக்க முடியாது’ “வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடகாலம் இருக்கின்றது. ஆனால், அடுத்த முதலமைச்சருக்காக யாரை நியமிப்பது என்று, இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள். எவரும் முதலமைச்சராகலாம். ஆனால், எவர் முதலமைச்சரானாலும், தற்போதுள்ள அரசமைப்பின் கீழ் பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாது” என்று, வடமாகாணசபை உறுப்பினரும் மாகாணத்தின் முன்னாள் விவசாய அமைச்சரும் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உடுப்பிட்டி வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையத்தின் பவள விழாவும் புதிய கட்டடத் திறப்பு விழாவும், நேற்று (28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரி…
-
- 0 replies
- 373 views
-
-
கட்டுவாபிட்டிய தேவாலயம் மற்றும் ஏனைய தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக, உண்மையை அறிந்து கொள்வதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை நான் நன்கு அறிவேன் எனத் தெரிவித்த, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நான் எந்தவொரு சக்திக்கும் பயப்படமாட்டேன். நான் எப்பொழுதும் உங்களுடனேயே உள்ளேன் என தெரிவித்தார். கட்டுவாபிட்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்த்தியார் சிலை மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலையடுத்து, ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அங்கு வருகைத் தந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் பிரதேசவாசிகள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/எந்தவொரு-சக்திக்கும்-பயப்படமாட்டேன்/175-236363 …
-
- 0 replies
- 525 views
-
-
‘எந்தவொரு சுதந்திரமும்... பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம். பறிக்கப்பட இடமளிக்கக்கூடாது’ -பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் .- அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம் பறிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே பயங்கரவாத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்பட வேண்டும் என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. 1991 பிரகடனத்திற்கு அமைவாக செயற்படும…
-
- 0 replies
- 155 views
-