Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்... இரண்டாம் நாள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமானது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினால், யாழ்ப்பாணத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அதேநேரம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் வட மாகாணத்தின் ஏனைய சில பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி…

  2. புதிய அமைச்சரவையில்... ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை, இணைத்துக் கொள்ள வேண்டுமாயின்.... உடனடியாக அறிவிக்கவும் – சஜித்திற்கு, கோட்டா கடிதம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானத்தை மாற்ற முடியாது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதாக முன்னர் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவை இன்னும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசி…

  3. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும்... நாடாளுமன்ற உறுப்பினர்களை, சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டா! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெறவுள்ள முதலாவது சந்திப்பு இ…

  4. புதிய பிரதமருடன்... இணைந்து, பணியாற்ற எதிர்பார்கின்றேன் – ஜனாதிபதி! இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281681

  5. ரணிலுடன், இணைந்து பணியாற்ற... எதிர் பார்ப்பதாக, அறிவித்தது அமெரிக்கா! புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது நியமனமும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவதும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதற்படி என அவர் கூறியுள்ளார். இலங்கை மக்களுக்கு தற்போது தேவையான தீர்வுகளை நீண்ட கால அடிப்படையில் பெற்றுக் கொடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பெறுமதியான நகர்வுகளை முன்னெடுக்கவும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தனது …

  6. “கோட்டா கோ கம போராட்டம்“ – பொலிஸார் நீதிமன்றத்தில், பொய்யான தகவலை முன் வைத்துள்ளதாக... குற்றச்சாட்டு! காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடையை நீக்குமாறு அவசர உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு, கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. தமது கோரிக்கையை ஆராய்வதற்காக வேறொரு நாளை ஒதுக்குமாறு பொலிஸாரால் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனூடாக பொலிஸாருக்கு இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிப்பதற்கான தேவை இல்லையென்பது புலப்படுவதாக பிரதம நீதவான் இதன்போது தெரிவி…

  7. நாடளாவிய ரீதியில்... அமுல் படுத்தப்பட்டிருந்த, ஊரடங்கு தளர்வு! நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின்கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் காலை வரை ஊரடங்கு …

  8. ஸ்பெயினில்.. 350க்கும் அதிகமான, பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்! ஸ்பெயினில் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் அறிவித்திருந்தார். இந்த மானியத்திற்காக அரசு 15 செண்ட் செலுத்தும் என்றும் பெட்ரோல் நிலையங்கள் 5 செண்ட் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த கொள்கை முடிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சிறு மற்றும் நடுத்தர பெட்ரோல் நிலையங்களுக்கு இதனால் பெருத்த இழப்பு ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பின. இதனால் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்க…

  9. ஜனாதிபதி, ரணில் ஆகியோர்.... மக்களின் தீர்மானத்தை, புறந்தள்ளி.... அரசியல் முடிவுகளை எட்டியுள்ளனர் – அநுர ஜனாதிபதி மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரணில் நியமிக்கப்படும் விடயமானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார். ஓமல்பே சோபித்த தேரர், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட சமயத்தலைவர்கள் இவ்வாறு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். https://ath…

    • 11 replies
    • 577 views
  10. ரணில் விக்ரமசிங்கவையும், அரசாங்கத்தையும்... ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை! பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281642

    • 6 replies
    • 456 views
  11. ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான ரணில் புதிய பிரதமரானார். News that Ranil Wickremesinghe is the new prime minister has been largely met with dismay and disbelief in Sri Lanka. His appointment is being viewed as yet another arrogant response by President Gotabaya Rajapaksa to weeks of protests over rising prices and shortages. Mr Wickremesinghe is seen as being close to the Rajapaksa family, and many think he has been chosen because he will be likely to guarantee their security. Protests flared up in early April in the capital, Colombo, and have grown in size and spread across the country. People are furious…

  12. திருகோணமலை, கடற்படை தளத்தில்... மஹிந்த, உள்ளிட்ட குடும்பத்தினர் ? முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்து அவர்கள் கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து குறித்த பகுதியை மக்கள் தற்போது முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1281102

  13. ‘எனது தந்தைக்கோ, எனக்கோ... நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை’ – நாமல் அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷலுக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார்” என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281629

  14. பிரதமர் பதவியை... ஏற்கத் தயார் – சஜித் பிரேமதாச, ஜனாதிபதிக்கு கடிதம். நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதியின் கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு இரண்டு வாரங்களுக்குள் 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி பதவி விலகினால் நாளை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தான் தயாராக உள்ளேன் என அந்தக் கடிதத்தில் அவர் தெரி…

  15. ரணிலை... பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை, தவறானது – ஓமல்பே சோபித்த தேரர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281640

  16. கோட்டாவை... பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக... பாரிய தொழிற்சங்க போராட்டம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நேற்றைய தினம் கைவிடப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக பதவியை இராஜினாமா செய்யுமாறு சமரசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். …

  17. மஹிந்த, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன்... உள்ளிட்ட, 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை உத்தரவு! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் பயணத் தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ மற்றும் சனத் நிஷாந்த உள்ளிட்ட 17 பேருக்கே இவ்வாறு…

  18. ஜனாதிபதி மீதான... நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து... 17ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதனையடுத்தே, திட்டமிட்டபடி மே 17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டியதன் அவசியத்தை கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதையடுத்து, இந்த தீர்மானம்…

  19. இலங்கைக்கான... அனைத்து, அத்தியாவசியப் பயணங்களையும்... ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் அறிவிப்பு! இலங்கையில் மோதல்கள் வெடித்ததையடுத்து, இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு சிங்கப்பூர் அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு பொருளாதார நெருக்கடி ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதியான ஆ…

  20. அமெரிக்க டொலர் ஒன்றின்... விற்பனை விலை, 380 ரூபாயாக பதிவு! இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (வியாழக்கிழமை) 380 ரூபாயாக பதிவாகியுள்ளது. https://athavannews.com/2022/1281596

  21. கோட்டாவின் கீழ்... எந்தவொரு பதவியையும், ஏற்கத் தயார் இல்லை – சரத் பொன்சேகா! தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையிலேயே தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவில் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “பொய்ப் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எந்தவொரு முயற்சியையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கோட்டாபய ராஜபக்ஷ தலைமையி…

    • 4 replies
    • 306 views
  22. இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடு ஸ்திரதன்மை அடைந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக அவர் இன்று உறுதி வழங்கியுள்ளார். இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உரை…

  23. ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து... வெளியேறினார் ஹரீன்! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அக்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார். இன்று(புதன்கிழமை) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் தற்போது சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281503

    • 3 replies
    • 231 views
  24. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் May 12, 2022 இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கும் வீதியால் சென்றவர்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. அத்துடன் வீதியால் வருகை தந்த விசேட அதிரடிப்படையினரும் அங்கு நின்ற புலனாய்வாளர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முள்ளிவாய்க்…

  25. நினைவேந்தல் வாரம் May 12, 2022 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பமாகின்ற நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆவண வெளியீட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது https://globaltamilnews.net/2022/176547

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.