ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
‘சட்டத்தைத் திருத்தும் வரையிலும் காத்திருக்க தேவையில்லை’ கவிதா சுப்ரமணியம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் எனும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக காத்திருக்கவேண்டிய தேவையில்லை என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அச்சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக சட்டத்துக்கு, அமைச்சர் ஒருவரை நியமிப்பதோடு, அலுவலகத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கையளிக்கப்பட்ட மகஜரை பெற்றுகொண்டு கருத்து தெரிவித்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் …
-
- 0 replies
- 165 views
-
-
எத்தகைய பேதமுமின்றி ‘சட்டம் எல்லோருக்கும் பொதுவானது’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தமது ஆட்சிக் காலப்பகுதியில் தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் எப்பொழுதும் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சுயாதீனமானதும், பாரபட்சமற்றதும், நடுநிலையானதுமான சட்ட முறைமையை நாட்டில் கட்டியெழுப்புவது முதன்மையானதாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். நேற்று (29) பிற்பகல் மூதூரில் இடம்பெற்ற மூதூர் …
-
- 0 replies
- 351 views
-
-
பிரித்தானிய ‘சனல் 4’ தொலைக்காட்சி சேவை ஊடகவியலாளரொருவர் சிறீலங்காவில் தங்கியிருப்பதாகக் கிடைக்கப் பெற்றுள்ள தகவலை அடுத்து கடந்த வாரம் பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளதாக நம்பப்படும் குறித்த ஊடகவியலாளரையும் அவரது மனைவியையும் தேடிக் கண்டுபிடிக்குமாறு பயங்கரவாத புலனாய்வு முகவர் அமைப்புகள் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுத்திருந்தன. இது குறித்து காவல்துறை புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கையில், குறித்த ‘சனல் 4’ ஊடகவியலாளர் கொழும்பில் தொடர்மாடி மனையொன்றை வைத்திருக்கும் அதேவேளை அவர் ஹில்டன் ஹோட்டல…
-
- 0 replies
- 413 views
-
-
‘சபைக்குள் பாலியல் தொந்தரவுகள்’ 'இலங்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையிலுள்ள அமைச்சர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும், பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர்" என்று, முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார். அனைத்து நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தினால் (IPU) நடத்தப்பட்ட புதிய சாதனை எனும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், “தேவையற்ற அழுத்தங்களை, சிலர் என்மீதும் திணித்தனர். காதலை வளர்த்துக்கொள்ளல், அவர்களுடைய அலுவலகங்களுக்கு அழைத்துக்கொள்ளல், உதவிகளைச் செய்தல், வெள…
-
- 1 reply
- 383 views
-
-
‘சப்றா தொடர்பில் விசாரணை நடத்தவும்’ யாழ்ப்பாணத்தில் முன்னர் இயங்கிய சப்றா என்ற நிதிக்கம்பனி தொடர்பில், விசாரணையை நடத்தவேண்டுமென, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (22) நிலையியற் கட்டளையின் கீழ், வடக்கில் மோசடிகளில் ஈடுபடும் சில நிதி நிறுவனங்கள் தொடர்பில் கேள்வியொன்றைக் கேட்டபோதே, டக்ளஸ் எம்.பி மேற்கண்ட விவகாரம் தொடர்பிலும் பிரஸ்தாபித்தார். கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே மேற்படி கேள்வியைக் கேட்டிருந்தார். அக்கேள்விக்கு, பிரதமருக்குப் பதிலாக, பதிலளித்த இராஜாங்க அமைச்சர்…
-
- 0 replies
- 309 views
-
-
‘சமஷ்டி என்பது அரசியல்வாதிகளால் கெட்ட சொல்லாக்கப்பட்டுவிட்டது’ சமஷ்டி என்பது, அரசியல்வாதிகளின் அரசியல் நலன்களுக்காக, தீய சொல்லாக்கப்பட்டு விட்டது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி என்பதற்கு, பெரும்பான்மை மக்களிடத்தில் காணப்படும் எதிர்ப்புத் தொடர்பில் கேட்கப்பட்ட போது பதிலளித்த முதலமைச்சர் சி.வி, “என்னுடைய கொழும்பு நண்பர்களுக்கு, சமஷ்டியின் நன்மை பற்றித் தெரியும். கவலைப்படாதீர்கள். அவர்களை நான் சமாளித்துக் கொள்வேன். “உண்மையான சமஷ்டி வழங்கப்பட்ட உடன், இந்த நாடு, செழிப்…
-
- 0 replies
- 380 views
-
-
‘சமஷ்டி, ஒற்றையாட்சி பற்றிப் போதிக்கத் தேவையில்லை’ - எஸ். நிதர்ஷன் “சமஷ்டி என்றால் என்ன ஒற்றையாட்சி என்றால் என்ன என்பதெல்லாம் எனக்கு நன்கு தெரியும். அவற்றைப் பற்றி புரிந்து தெரிந்து உணர்ந்து கொள்ளாமல் நாங்கள் பேசவில்லை. அவற்றைப் பற்றி யாரும் எங்களுக்கு போதிக்கத் தேவையில்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன், அடைக்கலநாதனுக்கு சமஷ்டி பற்றிய அறிவு இருக்கின்றதா எனத் தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்டிருக்கும் கருத்துக்குப் பதிலளிக்கும் வகை…
-
- 1 reply
- 1.1k views
-
-
‘சம்பந்தனினதும் மாவையினதும் குடியுரிமையை பறிக்குக’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, தேசத்ரோகக் குற்றத்துக்காக அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார். அறிக்கையொன்றை நேற்று (05) வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மிகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார். அத்தேர்தலின்போது, …
-
- 0 replies
- 358 views
-
-
‘சம்பந்தனுக்குப் புகழாரம்’ நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ் நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, புகழ்ந்து பேசினார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நியூசிலாந்துக்கு வருகைதந்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர், ஒக்லண்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை, மெட் அல்பிரட் யுத்த ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து, கடந்த சனிக்கிழமை (01) மாலை, சந்தித்துக் கலந்துரையாடினார். அங்கு உரையாற…
-
- 1 reply
- 340 views
-
-
‘சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன்’ சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன் என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பத்தாவது நாளாகவும் இன்றும் (04) உண்ணாவிரதம் இருக்கும் சுலக்ஸன், திருவருள், தர்சன் ஆகியோரை நேற்று (03) நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வவுனியாவ…
-
- 2 replies
- 372 views
-
-
‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’ -எஸ்.நிதர்ஷன் “ஈழத் தமிழ் அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம்.அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம்” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். “தடுமாறும் தமிழ்த் தலைவர்களால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன?” என்ற தலைப்பில், கருத்தாய்வு நிலை கருத்துப் பகிர்வு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பா…
-
- 2 replies
- 554 views
-
-
‘சம்பவத்தை மூடி மறைத்திருந்தால் கடும் நடவடிக்கை’ அழகன் கனகராஜ் யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான உண்மைத்தன்மையை உயரதிகாரிகள் மூடி மறைத்திருந்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம், நேற்றுப் புதன்கிழமை அறிவித்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, யாழ். …
-
- 0 replies
- 212 views
-
-
‘சம்பிக்கவை வெளியேற்றவும்’ -ஏ.எச்.ஏ.ஹுஸைன் “இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் இனவாத அமைப்புகளின் ஆதாரமற்ற கருத்துகளுக்குத் துணைபோகும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு, அரசாங்கம் கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்து வெளியேற்ற வேண்டும்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில், நேற்று (25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போதும், பொது பல சேனா அமைப்புக்கு மிகப்பெரும் பலமாக இருந்தவர் சம்பிக்க ரணவக்க என்பதை நாடே அறியும். மஹிந்தவின் ஆட்சி வீழ்வதற்கு, அதுவு…
-
- 0 replies
- 176 views
-
-
2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைளால் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் தற்போது மீண்டும் குடியேறிவருகின்றனர். இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல வருடகால இடம்பெயர்வுக்குப் பின்னர் உரிமையாளர்களினால் சில காணிகளுக்கு மட்டும் திரும்ப முடிந்துள்ளது. மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி வருகின்றது. இடம்பெயர்வு தொடர்பில் தொடரும் போராட்டங்கள், சொந்த இடங்களுக்கு திரும்ப…
-
- 1 reply
- 595 views
-
-
‘சரணாகதி அரசியல் செய்யவில்லை’ -சண்முகம் தவசீலன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்வதன் நோக்கத்தை, அந்தக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தாங்கள், சரணாகதி அரசியல் செய்யவில்லை என அடித்துக்கூறும் செல்வம் அடைக்கலநாதன், தற்போதைய அரசாங்கத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார். சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும். அந்தச் சந்தர்ப்பங்கள் தான், எமக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாம், எமது மக்களுக்குத் துர…
-
- 0 replies
- 244 views
-
-
‘சரவணபவன், ஒரு சருகு புலி’ – சுரேஸ் - எஸ்.நிதர்ஷன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஒரு வியாபாரி. அதனை தவிர்த்துப் பார்த்தால் அவர் ஒன்றுமே இல்லாதவர். ஆகையால் அவரது மிரட்டல்களுக்கு அஞ்சத் தேவையில்லை. அவ்வாறு அஞ்சுகின்ற நிலைமையில் நாங்களும் இல்லை” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக 2 கோடி ரூபாய் நிதி அ…
-
- 0 replies
- 376 views
-
-
‘சர்ச்சையைக் கிளப்பியது ஒரே இனம்’ -எஸ்.நிதர்ஷன் அரச அலுவலகத்தில் வருட ஆரம்பத்தில் நடைபெறும் சத்தியப் பிரமாணத்தில், இந்த வருட சத்திய பிரமாணம் எடுப்பதில், தமிழ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களிடத்தே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அரச நிர்வாக முகாமைத்துவ அமைச்சால் புதுவருடத்தை முன்னிட்டு, அரச திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்ற அரசாங்க சேவை சத்தியப் பிரமாண உறுதிமொழி அறிவித்தல் குறிப்பில், ஒரே இனம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே, இத்தகைய சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அரச அலுவலர்கள் நேற்று (0…
-
- 0 replies
- 390 views
-
-
‘சர்வதேசத்துடன் பேசுவது மரக்கறி வியாபாரமா?’ - கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஷ்ணா ‘சர்வதேசத்துடன் பேசுவதென்பது, சந்தையில் மரக்கறி வியாபாரம் போன்று விலையைக் கூட்டிச் சொல்லிக் குறைப்பதல்ல. சர்வதேச அமைப்புகளுடன் பேசுகின்றபோது சரியானதைப் பேசவேண்டும், எதைக்கேட்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும். துப்பாக்கியென்றால்தான் சுடலாம், கத்தியால் சுடமுடியாது. கத்தியைக்காட்டி உன்னைச் சுடப்போகிறேன் என்றால் சிரிப்பார்கள்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசத் தொடர்பாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மட்டக்களப்பில் தெரிவித்தார். மட்டக்களப்பு, செங்கலடி சீனிப்போடியார் மண்டபத்தில் நடைபெற்ற மாணிக்க வாசகர் மற்றும் சம்பந்தமூர்த்தி ஆகியோரி…
-
- 1 reply
- 297 views
-
-
‘சலசலப்புக்கு நாம் அஞ்சோம்’ க.அகரன் “பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்), சலசலப்புக்கு அஞ்சாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசுக் கட்சியினுடனான கொள்கை முரண்பாடு காரணமாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் புதிதாக இணைந்துகொண்ட சிலர் தமிழரசுக் கட்சியால் உள்வாங்கப்பட்டு வரும் நிலையிலேயே, தான் இவ் அறிக்கையை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிடுவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. “தமிழ்த் தேசியக்…
-
- 0 replies
- 366 views
-
-
‘சலுகைக்கோ, பணத்துக்கோ த.தே.கூ. சோரம் போகாது’ - கிழக்கு மாகாணசபை உறுப்பினர்; கோ.கருணாகரம் [Friday 2015-06-05 07:00] எந்த சலுகைக்கோ அல்லது பணத்துக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாது. வட, கிழக்கு தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை கிடைக்கும்வரைக்கும் கூட்டமைப்பின் பயணம் தொடரும். இதைத் தடுக்க எவராலும் முடியாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர்; கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். துறைநீலாவணை சமூக, பொருளாதார, கல்வி அபிவிருத்தி அமையத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமருத்துவமாது விடுதியின் நுழைவாயில் அழகுபடுத்தவுள்ளது. அதற்காக தனது சொந்த நிதியை கையளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்…
-
- 0 replies
- 348 views
-
-
‘சவால் விடுக்கும் தமிழ்த் தலைமைகள் இல்லை’ அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் தமிழ்த் தலைமைகள், தற்போது இங்கு இல்லை என, மட்டக்களப்பு மங்களராய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட் அம்பிட்டியே சுமனரத்ன தேரர், இன்று (29) தெரிவித்தார். மேலும் “நாட்டில், யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க, தமிழ்த் தலைமைகள் முன்வருவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சவால்-விடுக்கும்-தமிழ்த்-தலைமைகள்-இல்லை/175-199638
-
- 0 replies
- 313 views
-
-
‘சாப்பிட்டுவிட்டு முடிவெடுத்தால் அடிபணியோம்’ அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்... ? நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் முட்டாள்தனமான முடிவு என்கின்றனரே? ராஜித: முட்டாள்தனமான முடிவு குறித்து எனக்குத் தெரியாது. வைத்தியசாலையை அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். தேநீர் கடையைக் கூட நடத்தாதவர்களுக்கு அது பற்றித் தெரியாது. ? நன்கொடை செய்தது ஏன்? ராஜித: அவரிடம் கேளுங்கள். ? ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது? ராஜித: அவை அமைச்சரவைப் பத்திர…
-
- 0 replies
- 227 views
-
-
‘சாய்ந்தமருது அபிலாஷைக்கு சம்பந்தன் ஐயா உதவ வேண்டும்’ “சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தருவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா முன்வர வேண்டும்” என, சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா ஹாஜியார் வேண்டுகோள் விடுத்தார். சாய்ந்தமருது, கடற்கரை ஹுதா திடலில், மீனவ சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு (21) இடம்பெற்ற தனி உள்ளூராட்சி மன்றத்துக்கான மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மூன்று தசாப்த காலமாக சாய்ந்தமருது மக்கள் கோர…
-
- 1 reply
- 378 views
-
-
சார்க்’ அமைப்பினால் அதன் 28ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டுநாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைப்போட்டியில் யாழ். இந்துக்கல்லுரி மாணவர்களாகிய செல்வன் ஸ்ரீஸ்கந்தராஜா சிவஸ்கந்தஸ்ரீ முதலாம் இடத்தையும், செல்வன் ஜீவரட்ணராஜா ஷஜீவன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் இசுறுபாய, பத்திரமுல்லையில் அமைந்துள்ள ஜனகலகேந்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரு.நீயூமோல் பெரேரா மற்றும் ‘சார்க்’ நாடுகளின் இலங்கைக்கான தூதவர்களும் கலந்து சிறப்பித்தனர். http://tamil24news.com/news/?p=35502
-
- 1 reply
- 472 views
-
-
‘சி.வி விலகுவதை தெற்கு தலைவர்கள் தீர்மானிக்க முடியாது’ -எஸ்.நிதர்ஷன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பாக வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அது தொடர்பாக தென்பகுதி தலைவர்கள் தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் ஒதுங்க வேண்டும் என ஜாதிக கேல உறுமய தெரிவித்த கருத்து தொடர்பாக வினவிய போதே, அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சம்பிக்க ரணவக்க மிகவும் தனது இனவெறி தனத்தை பிரதிபலிப்பத்து வருக…
-
- 0 replies
- 252 views
-