Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் இலங்கையை சாடுவதாக வெளிவிவகார அமைச்சு குற்றச்சாட்டு! இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள், கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான …

    • 2 replies
    • 307 views
  2. வடக்கில், இரணைப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தில் எடுத்த சர்ச்சைக்குறிய படத்தையும் அதன் விளக்கத்தையும் டுவிடரில் இருந்து மாற்றப் போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வடக்கின் இரணைப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய ஷெல் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தளமான டுவீட்டரில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. இந்த புகைப்பட்டத்தில் இலங்கைக்கு சென்றிருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்…

  3. உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை? [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியான ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்களுக்கு ஆசன ஒதுக்கீட்டை வழங்க கூட்டமைப்பின் தலைமை மறுத்துவிட்டதை அடுத்தே ஆளும் கட்சியில் இணைந்து தோ்தலில் போட்டியிட இவர்கள் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின…

    • 17 replies
    • 2.6k views
  4. பஷில் தலை­மை­யி­லான குழு­வினர் அடுத்த வாரம் வடக்­கிற்கு வடக்கு, கிழக்கில் தமது கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்­காக பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடுத்த வாரம் அப்­ப­கு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷில் ராஜபக் ஷ தலை­மை­யி­லான குழு­வி­னரே இவ்­வாறு விஜயம் செய்து கட்­சியின் செயற்­பா­டு­களை வடக்கு கிழக்கில் வியா­பிப்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளனர். எதிர்­வரும் 21, 22, 23 ஆம் திக­தி­களில் பஷில் ராஜபக் ஷ தலை­மையில் இவர்கள் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். முன்னாள் வட­மா­காண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்­தி­ர­சிறி மற்றும் முக்­கி­யஸ்­தர்­களே இவ்­வ…

  5. இன்று, கொழும்பில்... மாபெரும் போராட்டத்தை, நடத்தவுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி ! ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளது. கொழும்பின் இரண்டு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் பேரணி புறப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன்படி இந்தப் பேரணி இன்று பிற்பகல் 1:00 மணிக்கு மாளிகாவத்தை பொலிஸ் நிலையம் மற்றும் கொழும்பு பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகவுள்ளது. இந்த பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இன்று கொழும்பு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1271918

  6. விடுதலைப் புலிகளின் ஆயுதபல இழப்பிற்குப் பின்னர் தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை இந்தியா நோக்கி நகர்த்துவதற்குச் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு, 'இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தொடங்கிப் பலரும் நியாயம் கற்பிக்க முயன்று வருகின்றார்கள். 'இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது' என்று அடித்துக் கூறி, தமிழீழ மக்களை மீண்டும் இந்தியப் புதைகுழிக்குள் கொண்டு செல்ல முயலும் இந்த இந்திய தாசர்களின் எண்ணக் கருத்துக்கள் உண்மையானவைதானா? இந்தியாவைத் தவிர்த்து ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதா? என்று கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய அவசியம் எ…

  7. சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கெதிராக சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளபட்ட இன அழிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாமறிவோம். கடந்த கார்த்திகை மாதம் இலங்கை சென்ற பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருன், சர்வதேச சுயாதீன விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினார். எதிர் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐ.நா மனித உரிமைக்குழுவின் கூட்டத் தொடரில் பிரித்தானியாவும் பங்குபற்றும் நிலையில், அதன் முழு ஆதரவை பெற பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் செயற்படவேண்டும். கீழ்க்காணும் படிவத்தை பூர்த்தி செய்து, அழிக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு மறுக்கப்பட்ட நீதியை, பெற முயலும் பிரித்தானியத் தமிழர் பேரவையினரின் தொடர் முயற்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டுமாறு உரிமையுடன் கேட…

  8. டிஜிட்டல் தனித்துவ சட்டத்தை.. நடைமுறைப்படுத்த, இந்திய அரசின்... நிதியுதவியைப் பெற்ற தீர்மானம் ! இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் இந்திய ரூபாய்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இருதரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்…

  9. யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு நிலையம் வடமாகாண மக்களின் நன்மை கருதி கடவுச் சீட்டு வழங்கும் நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயகோன் தெரிவித்தார். கொழும்பைத் தவிர அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் கடவுச் சீட்டு வழங்கும் காரியாலயங்கள் இப்போது இயங்கிவருகின்றன. தற்போது இலங்கைக்கு அதிகளவில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளதால் கடவுச் சீட்டு வழங்கும் நடைமுறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கட்டுப்பாட்டாளர் கூறினார். http://www.sankamam.com/

  10. சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற... எமக்கு நீங்கள் உதவுங்கள் – ஜெய்சங்கரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை! இலங்கை அரசுடன் உங்களுக்கு உள்ள நல்லுறவை பயன்படுத்தி, முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரினை இன்றைய தினம்(திங்கட்கிழமை) சந்தித்து பேசியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு இந்திய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார், ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த…

  11. சிறீலங்காவின் 66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய சுயதொழில் நிலையத்தின் உரிமையாளரான அராலி தெற்கை சேர்ந்த 56 வயதான தம்பிப்பிள்ளை மகேந்திரராசா மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் படுகாயமடைந்த உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.சத்துருசிங்க தெரிவித்தார். குறித்த நபர் வீட்டில் இருந்தபோது வந்த இனந்தெரியாத நபர்கள் “ஏன் தேசியக் கொடியை ஏற்றினாய்”, “நீ ஆமி, பொலிஸுடன் சேர்ந்தால் பெரிய கொம்பனா?” என கேட்டு தன்னை அடித்ததாக குறித்தநபர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்த சம்…

  12. குகுலே கங்கை வான் கதவு திறப்பு : தாழ் நில மக்களுக்கு எச்சரிக்கை நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் குகுலே கங்கையின் வான் கதவொன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் புலத்சிங்கள, அகலவத்த, மதுராவல மற்றும் இங்கிரிய உள்ளிட்ட தாழ்நில பிரதேச மக்களை அவதானமாக இருக்கமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/24962 நாட்டில் மண்சரிவு அபாயம் நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் …

  13. பதவி விலகினார் நாமல் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/125232

  14. இலங்கையின் தேர்தல் களம் இப்போது கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து வரப்போகின்ற மூன்று வாரங்களில் மேலும் வேகம் கொள்ள இடமுண்டு. சிறிலங்கா, தமிழீழம் என்ற நிலப்பரப்பு அடிப்படையில, 2010 ஏப்ரல் 8ம் திகதிய நாடாளுமன்றத் தேர்தலின் பரப்புரைகள் நடைபெறவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைவிட, சுயேட்சைக் குழுக்களே அதிகளவில் களத்தில் இறங்கியிருப்பதை இந்தத் நேரத்தில் பார்க்கலாம். வாக்காளர்களைவிட வேட்பாளர்களே அரசியலில் அக்கறை கொண்டிருப்பதை இதனூடாக அவதானிக்கலாம். ஆனாலும், சுயேட்சைக் குழு ஒனறு கூட, எந்தத் தேர்தல் மாவட்டத்திலும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முதலிடத்தக்கு வரக்கூடிய சாத்தியமில்லை. அல்லது, எந்தவொரு சுயேட்சை வேட்பா…

    • 2 replies
    • 1.1k views
  15. எமது நிபந்தனைகளை மதிக்காவிட்டால் பேச்சுக்களுக்கு இடமில்லை! – பசிலுக்கு சுமந்திரன் பதிலடி. [Tuesday, 2014-02-11 10:02:55] அரசாங்கமும், ஜனாதிபதியும் எமது நிபந்தனைகளை மதிக்காத வரையில் பேச்சுகளுக்கு இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்க முடியாத எமக்கான கோரிக்கைகளை இனிமேலும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளின் மூலம் வென்றெடுக்க முடியாது. சர்வதேசத்தின் உதவியே எமக்கான வழிமுறையென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்- அரசாங்கத்தின் வார்த்தைகளில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. 2011ஆம் ஆண்டு அர…

  16. தேரர்­களை அரசியல் தலைவர்களே தீர்வுக்கு வழிப்­ப­டுத்­த­வேண்­டும் Share அர­சி­யல் தீர்­வுக்கு தமி­ழர் தரப்­பில் இருந்து எந்த எதிர்ப்­பும் இல்லை. மாறாக பௌத்த தேரர்­க­ளும் தென்­னி­லங்கை இன­வா­தி­க­ளுமே தீர்வுக்கு எதிர்ப்­புத் தெரி­விக்­கின்­ற­னர். அவர்­களை தெற்கு அர­சி­யல் தலை­வர்­களே வழிப்­ப­டுத்த வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னும் பேசி உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­ய­தும் உங்­க­ளின் பொறுப்பு” இவ்­வாறு பசில் ராஜ­பக்­ச­வி­டம் நல்லை ஆதீன குரு முதல்­வர் ஸ்ரீலஸ்ரீ சோம­சுந்­தர தேசிக பர­மாச்­சா­ரிய சுவா­மி­கள் எடுத்­து­ரைத்­தார். இரண்டு நாள் பய­…

  17. இலங்கை கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம: கோப்புப் படம் கொழும்பு: இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன், எங்கள் நேரம் கடந்து விட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டுகிறது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர…

    • 4 replies
    • 478 views
  18. தமிழ்தேசிய கூட்டமைப்பின்-- (கொக்குவிலில்) நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரடி ஒலிபரப்பு நேரடி ஒலிபரப்பைக் கேட்க இங்கே அழுத்துங்கள்: Live Broadcast

  19. குளோபல்தமிழ்ச்செய்தியாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தமது பிள்ளையை தேடிச் சென்ற தனது கணவனை இராணுவத்தினர் அடித்துக் கொன்றதாக யாழ். அரச செயலகத்தில் பெண்மணி ஒருவர் சாட்சியமளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காணாமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்.அரச செயலகத்தில் நடைபெற்றுவருகின்றது. அதில் சாட்சியமளித்த ஐயம்பிள்ளை புரணம் என்ற பெண் தனது சாட்சியத்தில், மானிப்பாய் பகுதியில் மிதிவண்டி திருத்தும் கடை வைத்திருந்த தன்னுடைய மகன் ஐயம்பிள்ளை நிரூபன் (வயது 20) என்பவரும் அவருடன் நின்றிருந்த இளைஞர்கள் இருவரும் 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி மானிப்பாய் கஜபா முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட…

  20. ‘பெரும்பான்மை தலைவர்களை இசையச் செய்வது முயல்கொம்பானது’ “புதிய அரசமைப்பு விடயத்தில் பெரும்பான்மை இனத் தலைவர்களை இசையச் செய்வதென்பது, முயல்கொம்பான விடயமாகும்” என, இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு, வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) நடைபெற்ற கலைவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த நாட்டிலே தற்போது புரட்டப்பட்டிருக்கின்ற புதிய பக்கங்கள், எமது கனவை நனவாக்குகின்ற செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டின் நடவடிக்கைகளின் முற்றுப்புள்ள…

  21. இலங்கை பொருளாதார நெருக்கடியால் சிக்கலை எதிர்கொள்ளும் யாழ்ப்பாண மீனவச் சமூகம் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 40 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் வட பகுதியில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரது நிலை இதுதான். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியும் எரிபொருள் தட்டுப்பாடும் யாழ்ப்பாணத்தின் மீன் பிடித் தொழிலையே முடக்கியிருக்கிறது. இலங்கை வடக்கு மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் மீன் பிடித் தொழில் மிக முக்கியமான தொழிலாக இருந்துவருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 21,200 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் …

  22. முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்த அவர் அங்கேயே தடுத்து வைக்கப்பட்டு இன்று மாலை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இவ்வாறு திருப்பி அனுப்பப்படுவதற்கான காரணங்கள் எதனையும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. SOURCE: http://www.eelamweb.com

  23. விசாரணைக்குழு அமைக்கப்படுமானால் த.தே.கூ. வின் ஆலோசனை பெறப்பட வேண்டும்: சுரேஷ் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக சர்வதேச விசாரணையொன்று கொண்டு வரப்படுமானால் அப்பொறி முறையினூடான விசாரணை சிறப்புடையதாக அமையும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். அவரிடம் ஜெனிவா மாநாடு பற்றி கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் இன்னுமொரு பொறிமுறை பற்றியும் கூறப்படுகிறது. ஆனால் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு அமைய விசாரணை மேற்கொள்ளப்படுமானால் அதுவே கனதியாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைப்பேரவையினால் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்படும் போது…

  24. பசில் ராஜபக்ஷவிற்கு... ஆசி வேண்டி, பூஜை வழிபாடுகள்! பசில் ராஜபக்ஷவிற்கு ஆசிவேண்டி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அத்துருகிரியவிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(புதன்கிழமை) போதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சரொருவரும் அவரது மனைவி, முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் களுத்துறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் உட்பட பலரும் இந்த பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. சில் ராஜபக்ஷவிற்கு நெருக்கமான சிலரும் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ தற்போது குணமடைந்துள்ள நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக குறிப்பிடப்படுக…

  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமாம்! – பிரதிஅமைச்சர் சரத் வீரசேகரவின் ஆசை. [Thursday, 2014-03-06 07:59:22] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென பிரதி அமைச்சர், சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கல்கிரியாகம பாதுகாப்புப் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறது. தமிழ் மக்களின் நலன்களுக்காக அந்தக் கட்சி எதனையும் செய்யவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டுக்கு நட்பான வகையில் செயற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=105038&category=TamilNe…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.