ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142710 topics in this forum
-
ஞாயிற்றுக்கிழமை, 30, ஜனவரி 2011 (22:39 IST) இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ் இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமாராவ் இன்று இலங்கை சென்றார். பெங்களூரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் இன்று மாலை நிருபமா ராவ் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபமா ராவ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘’ தமிழக மீனவர்கள் கொலையை தடுக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், எல்லை தாண்டும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சனையையும் தீர்ப்பதாக அமையும்’’ என்று கூறினார். nakkheeran
-
- 1 reply
- 578 views
-
-
காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி நாள் சாட்சியப்பதிவுகள் இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன்று கலை முதல் மாலை வரை சாட்சியமளிக்கும் பகுதிகளில் பொலிஸ் , புலனாய்வுத்துறை மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் காணப்பட்டனர். சாட்சியப்பதிவுகள் முடியும் வரை வெளியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் காத்திருந்தனர் புலனாய்வுத்துறையினர். இராணுவத்தினரால் வற்புறுத்தி சில மக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். சிறீலங்கா புலனாய்வுத்துறையின் பிரசன்னத்தினால் அச்சத்துடனேயே மக்கள் சாட்சியமளித்தனர். கரைய்ச்சி பிரதேச செயலகத்தை சேர்ந்த ஸ்கந்தபுரம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட 35பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 23பேர் வருகை தந்து தமது உறவுகள் காணாமல் போன…
-
- 0 replies
- 750 views
-
-
20 ஆவது திருத்தத்திலும் பொலிஸ், காணி அதிகாரங்கள் ஜனாதிபதி வசமே இருக்கும் (ஆர்.யசி) அதிகார பரவலாக்கல் என்ற பெயரில் தனி இராஜ்ஜிய அதிகாரங்களை வழங்க இணங்க மாட்டோம் என்கிறது ஜே.வி.பி. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுகின்ற போதிலும் மாகாண காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஜனா திபதி வசமே இருக்க வேண்டும். அதிகார பரவலாக்கல் என்ற பெயரில் தனி இராஜ்ஜிய அதிகாரங்களை வழங்க நாம் இணங்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன் னணி தெரிவித்துள்ளது. நாம் கொண்டுவரும் 20ஆவது திருத்த யோசனை நாட்டின் ஐக்கியத்தை சீரழிக்கும் ஒன்றல்ல என்பதை மாநா யக்க தேரர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தி…
-
- 0 replies
- 414 views
-
-
அடக்கி வாசிக்கும் இணைத்தலைமை! நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வாஷிங்ட னில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் ஒருநாள் கூட்டம் முடிந்து, வழமைபோன்று உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. எதிர்பார்க்கப்பட்ட பல ஊகங்களுக்கு மத்தியிலும் அந்த அறிக்கையில் கனதியாகவோ, காட்டமாகவோ எதுவும் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூற இயலவில்லை. கடந்தமுறை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், தெரி விக்கப்பட்ட முக்கிய விடயங்கள் மீள வலியுறுத்தப்பட்டா லும், மக்களை வாட்டும், வதைக்கும் தற்போதைய சூடான விடயங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து மிக அடக்கியே வாசிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடியொற்றி அவற்றை அங்கீகரிக்கும் அல்லது அவற்றுக்குத் தாளம் போடும் வகை யிலேயே இணைத்தலைமை நாடுகளின் கூட்…
-
- 0 replies
- 774 views
-
-
இலங்கையில் தனிநாடு ஒன்று அமைக்கப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்க போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரைத் தொடர்பாகவே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைத் தொடர்பில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை காணவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார். விசேட தேவையுடையோருக்காக அமெரிக்க யு.எஸ் எய்ட் நிறுவனம் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட மோட்டிவேசன் சரிட்டபல் ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நிதியுதவியளிக்கும் கட்டங்களுக்கான விசேச நிர்மாண உதவி திட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தே போதே …
-
- 8 replies
- 2.1k views
-
-
இந்த வருடத்தின் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெறும் பான் கீ மூனின் கனவு ஈழத் தமிழர்களின் விடயத்தினால் கனவாகி போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ஊடகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்த வருடம் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு வழங்கப்படும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு கண்ட தோல்வி, ஹெய்ட்டியில் கொளராவை தடுக்க நடவடிக்கை எடுக்கா மை, வடகொரியா மற்றும் தென்கொரியாக்களுக்கு இடையிலான பிரச்சினையில் தென்கொரியாவுக்கு சார்பாக செயற்பட்டமை போன்ற காரணங்களால் அவருக்கு இந்த விருதை வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோபல் பரிசின் ஆலோசகர்கள்…
-
- 1 reply
- 647 views
-
-
சர்வதேசத்திடம் நாட்டின் இறைமையை விட்டுக்கொடுக்க முடியாது: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க. சர்வதேசத்திடம் நாட்டின் இறைமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தின் மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போது அவர் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளை மீணடும் தடைசெய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேசத்தின் உதவியைப் பெற்று உள்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்துவோர் மீதும் அரசாங்கம் கவனம் செலுத்தி வ…
-
- 1 reply
- 804 views
-
-
இலங்கையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் சேவை : ஆரம்ப நிகழ்விலேயே குளறுபடி [ பிரசுரித்த திகதி : 2011-02-17 07:01:15 AM GMT ] இந்திய அரசாங்கத்தின் கடனுதவிடன் நேற்றைய தினம் ஆரம்பமான இலங்கையின் கடுகதி புகையிரத சேவையின் ஆரம்ப நிகழ்வில் சிக்கல்கள் ஏற்பட்டதாக பி.டி.ஐ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்ப நிகழ்விலேயே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து, ஒரு மணித்தியாலங்கள் தாமதமாகவே இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போக்குரவத்து அமைச்சர் குமாரவெல்கம இந்த நிகழ்வுக்கு ஒரு மணித்தியாலம் தாமதித்தே வந்துள்ளமையே இதற்கான காரணம். அத்துடன் இந்த நிகழ்வின் அடித்தள ஏற்பாடுகள் முறையாக இல்லாத காரணத்தினால், நிகழ்வில் கருத்து தெரிவிக்கவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
Feb 24, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் போர்க்குற்ற நபர்களை பான் கி-மூன் இரகசியமாகச் சந்திக்க காரணம் என்ன? வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச தரப்பினரை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி-மூன் நேற்று (23-02-2011) இரகசியமாகச் சந்தித்துள்ளமை புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஏற்பாட்டில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான அங்கத்தவர்களை சுட்டுப்படுகொலை செய்திருந்த, முன்னாள் படைத்தளபதியும், ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் இந்நாள் நிரந்தர துணை வதிவிடப் பிரதிநிதியுமான சவேந்திர சில்வா, மற்றொ…
-
- 2 replies
- 840 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு எந்த தகவலையும் இலங்கைக்கு இன்னமும் வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணி்ப்பாளர் சத்யா ரொட்ரிகோ தெரிவித்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனவே இந்திய பிரதமர் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறெனினும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் செய்வது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு எந்த விடயத்தையும் இலங்கைக்கு இன்னும் வழங்கவில்லை. தகவல்கள் வெளிவந்ததும் நாங்கள் அறிவிப்போம் என்றார். இலங்கைக்கு இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர…
-
- 0 replies
- 202 views
-
-
"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் [புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006, 06:04 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் "தேசத்தின் குரல்" மறைவு குறித்த இரங்கல் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உலகத்தமிழர் பேரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரத்துக்காக போராடும் இந்த இயக்கத…
-
- 0 replies
- 755 views
-
-
-செல்வநாயகம் கபிலன் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடத்தனை - பொற்பதி வீதியை புனரமைப்பதற்கு 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனரமைப்பு பணிகள் 2015 ஜனவரி மாதம் தொடக்கம் ஆரம்பமாகும் எனவும் பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூபாலசிங்கம் சஞ்ஜீவன் திங்கட்கிழமை (27) தெரிவித்தார். 3.7 கிலோமீற்றர் நீளமான மேற்படி வீதியானது பாரியளவில் சேதமடைந்து போக்குவரத்தில் ஈடுபடமுடியாத அளவிற்கு உள்ளது. 3 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 500இற்கும் மேற்பட்ட மக்களின் பிரதான வீதியாக இவ்வீதி காணப்படுகின்றது. வீதி சேதமடைந்திருப்பதால் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் உள்ளிடட பலர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளமையால் மேற்படி வீதி மேலும…
-
- 0 replies
- 289 views
-
-
வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி!! வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசிதழ் கடந்த 4ஆம் திகதி அரச தலைவரின் பதில் செயலர் சுமித் அபேசிங்கவினால் வெளியிடப்பட் டுள்ளது. வடக்கு அபிவிருத்திக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புச் செயலணி அமைக்கப்படும் என்று, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போத…
-
- 2 replies
- 561 views
-
-
Friday, March 11th, 2011 | Posted by thaynilam வடக்கில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் பெண்கள் வடக்கில் நிலக் கண்ணிவெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்கள், தமது குடும்பங்களின் பிரதான வருவாய் ஈட்டுனர்களாக காணப்படுவதாக வடக்கில் கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களில் ஒன்றான டெனிஸ் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள பெண்களுக்கு வருமானம் திரட்ட குறுகிய வாய்ப்புகளே காணப்படுவதாகவும், இதனால், அங்குள்ள பெண்கள் பலர் கண்ணிவெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் சிறந்த வருவாயைப் பெற்றுக்கொள்வதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் பெண்கள் குழு கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் குடும்பத் தல…
-
- 0 replies
- 528 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக்காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தடையாகவுள்ளதென்ற ஜனாதிபதியின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கெளரவமானதொரு தீர்வை நோக்கிப் பயணிப்பதற்கு ஜனாதிபதி தயாரானால் தாமும் சில நிபந்தனைகளுடன் பேச்சுக்குத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைத் தம்மிடமிருந்த அந்நியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி தீவிரம் காட்டி வருகின்றார் என்றும் சம்பந்தன் எம்.பி. குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடை பெற்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். அவர் அங…
-
- 0 replies
- 431 views
-
-
முல்லைத்தீவில் கிபிர் தாக்குதல். இன்று காலை 7.15 மணியளவில் சிறீலங்காவின் கிபிர் விமானங்கள் முல்லைத்தீவு கரையோர பகுதிகளில் குண்டுதாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்திகளை வெளியிட்டுள்ளன. இத் தாக்குதல் தொடர்பாள சேதவிபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை. -pathivu-
-
- 1 reply
- 1k views
-
-
படைக்குறைப்பு என்பது பொய் – 13 ஆயிரம் பேரைப் புதிதாக சேர்க்கிறது சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், வடக்கு, கிழக்கில் பல முகாம்கள் விலக்கப்படவுள்ளதாகவும், வெளியான செய்திகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவம், இந்த ஆண்டில், சுமார் 13,193 படையினர் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘வடக்கு கிழக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் பல பிரிவுகள் விலக்கிக் கொள்ளும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு வெளியான செய்திகள் தவறாகும். பொதுமக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கும் அதிருப்தி அரசியல…
-
- 0 replies
- 264 views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றி தமிழர் தரப்பிலிருந்து தெளிவான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் நாடாளுமன்றில் நேற்று ஹக்கீம் அறிவிப்பு. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் நிபந்தனையின்றி ஆதரவு தரவேண்டும் என்றுகொருவதை ஏற்க முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கிற்குள் முஸ்லிம்களுக்கு வழங்கபடும் அதிகாரம் என்ன என்பது பற்றித் தமிழர் தலைமைகள் தெளிவான உறுதி மொழிகளைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இணைப்புக்கு ஆதரவு கோரினால் ஒருபோதும் நிபந்தனைகளற்ற முறையில் முஸ்லிம்கள் இணைப்புக்கு ஆதரவு வழங்க முன் வரமாட்டார்கள். சுடர் ஒளி தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி நன்றி சுடர் ஒளி 11 ஜன 2007
-
- 7 replies
- 2.2k views
-
-
கொழும்பு மகசின் சிறைச்சாலையின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 00:45 கொழும்பு மகசின் சிறைச்சாலையின் ஒரு பகுதி நேற்றுறு இடிந்து விழுந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த மகசின் சிறைச்சாலையின் சமையலறை கட்டிடம் நேற்று இடிந்து விழுந்துள்ளதாகவும் அவ்வேளையில் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கைதிகள் 15 பேரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. சமையலறை முற்றாக இடிந்து விழுந்துள்ளதால் கைதிகளுக்கான உணவு வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் கைதிகளை தடுத்து வைத்துள்ள சிறைச்சாலையின் ஏனைய பகுதிகளும் இடிந்து விழலாம் என்ற அச்சத்துடன் கைதிகள் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது. tam…
-
- 0 replies
- 784 views
-
-
மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும் - பொ.கஜேந்திரகுமார் எச்சரிக்கை 06 Mar, 2023 | 11:28 AM மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன், நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பல…
-
- 0 replies
- 673 views
-
-
புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் தாக்குதல்களை அரசு தொடரும்: கெஹெலிய ரம்புக்வெல. கிழக்கு மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டில் இருந்து மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அரசு பாரியளவு வெற்றியீட்டியுள்ளது. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டிற்குள் சிக்கும் மக்களை இனவேறுபாடின்றி மீட்டெடுப்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும். இவ்வாறு அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றுகையில் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கிழக்கில் மூவின மக்களையும் இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல…
-
- 0 replies
- 825 views
-
-
அரசியலை விட்டு விலகமாட்டேன் – விஜயகலா திட்டவட்டம் அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன். விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற வேண்டும் என்று ஏன் கூறினீர்கள் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “இந்தவிடயம் தொடர்பான விசாரணைகள் முடியும் போது இதற்கான பதில் கிடைத்து விடும். எனினும், இனவெறுப்பை தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிடவில்லை. நான் அமைச்சர் பதவியை இழந்திருக்கக் கூடும், ஆனாலும், அரசியலை விட்டு விலக மாட்டேன். தொடர்ந்து மக்களைப் பிரதிநிதித்துவ…
-
- 0 replies
- 210 views
-
-
மட்டக்களப்பின் மற்றொரு கிராமமும் பறிபோகிறது! Posted by admin On April 13th, 2011 at 10:24 pm / மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கெவிலியமடு தமிழ் கிராமம் முழுமையாக சிங்களவர்களிடம் பறிபோகும் நிலை உள்ளதாக இக்கிராமத்தில் குடியேறியுள்ள தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கெவிலியமடு எல்லைக் கிராமத்தில் பூர்வீகமாக வசித்து வந்த தமிழ் மக்கள் கடந்த 83யூலை இனக்கலவரத்தின் பின்னர் முழுமையாக இடம்பெயர்ந்ததோடு 2004ம் ஆண்டு சமாதான காலத்தில் குடியேறிய சில குடும்பத்தினரும் இறுதியுத்த காலத்தில் முழுமையாக வெளியேறியிருந்தனர். இன் நிலையில் 27ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தவருடம் குடியேறிய தங்களுக்கு இத…
-
- 0 replies
- 867 views
-
-
புதிய அரசமைப்பு வரைவு புதனன்று சமர்ப்பிக்கப்படும் புதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் உப பிரிவு 6இன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, மேற்படி புதிய அரசமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில், பல்வேறு கட்சியினர் வழங்கிய யோசனைகள் அடங்கிய குறிப்பொன்றும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, அவர் க…
-
- 0 replies
- 322 views
-
-
இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை - இந்தியா அவதானம் Published By: NANTHINI 22 MAR, 2023 | 05:14 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு இந்திய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் இந்தியா - இலங்கைக்கு இடையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையில் டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை பெற்றுக்க…
-
- 0 replies
- 589 views
- 1 follower
-