ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
இந்தியா, சீனாவை அடுத்து... அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம், 200 மில்லியன் டொலர் கடன் கோரியது அரசாங்கம் பருப்பு மற்றும் பால்மா இறக்குமதிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த கடன் தொகை கோரப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். சீனாவிடம் கோரப்பட்டுள்ள 2.5 பில்லியன் டொலர் கடனில் 1.5 பில்லியன் டொலரை மருந்துகள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கைத்தொழிலுக்கான மூல்பொருட்கள் இறக்குமதிக்காக செலவிடப்படவுள்ளது. அத்துடன், ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையை, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்த பயன்படுத்த எதிர்பார்ப்பதாக நிதி அமைச்…
-
- 8 replies
- 419 views
-
-
அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது. மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து. அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தத…
-
- 64 replies
- 3.6k views
-
-
புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இன்று பிற்பகல்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது இன்று காலை இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி, விக்டோரியா நுலாந்திடம் விளக்மளித்தார். …
-
- 3 replies
- 415 views
-
-
கொரோனாவால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கர்கள் பைடனை இராஜிநாமா செய்யுமாறு கூற மாட்டார்கள் -பந்துல -சி.எல்.சிசில்- 1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார மந்த நிலை இதுவாகும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். “உலகளாவிய பணவீக்கம் இன்று அதிகரித்து, எம்மைப் போன்ற சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்றார். கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயர்ந்த எண்ணம் க…
-
- 3 replies
- 320 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... வரலாற்றில், இடம்பெறுவார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பெறுவார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி செய்த செயல்களால் மதன’ உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்பதை மரியாதையுடன் நினைவுபடுத்துகிறேன். இந்த நாட்டு மக்களும், உங்களுக்கு வாக்களித்த மக்களும், எமக்கு வாக்களித்த மக்களும் காப்பாற்றப்பட்டனர். 200,000 பேர் இறப்பார்கள் என்றீர்கள். ஒக்ஸிஜன் இல்லை என்றீர்கள். நீங்கள் சொன்ன பொய்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது. எண்ணெய் கொண்…
-
- 3 replies
- 372 views
-
-
ஆசியாவின் சொர்க்கமாக இலங்கை மாறும்: சர்வகட்சி மாநாட்டில் ஆலோசனை வழங்கினார் சித்தார்த்தன் !! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்கினால் நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றலாம் என சர்வகட்சி மாநாட்டில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாட்டில் நிலவும் இன நெருக்கடியை, அடுத்தடுத்துவந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். சுயாட்சி அதிகாரத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைக் கோரிக்கைக்கு முன்னதாகவே எமது நாட்டின் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியும். என்…
-
- 6 replies
- 569 views
-
-
சர்வகட்சி கூட்டத்தில் பசில் ரணில் கடும் வாக்குவாதம் சர்வகட்சிகூட்டத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அரசாங்கம் நிதிவிடயத்தில் வெளிப்படைதன்மையுடன் செயற்படுவதை தன்னால் காணமுடியவில்லை என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியம் இலங்கை குறித்து சமர்பித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் இறுதி அறிக்கை இன்னமும் எங்களிற்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்,ஆனால் அதனை மறுத்த ரணில் இல்லை ஏற்கனவே அவர்கள் அ…
-
- 4 replies
- 563 views
-
-
எதிர்ப்பு பேரணி காரணமாக... ஹைலெவல் வீதி முழுவதுமாக முடக்கம் !! தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி காரணமாக விஜேராம சந்தியில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் ஹைலெவல் வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நுகேகொட தெல்கந்தவில் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1273104
-
- 0 replies
- 277 views
-
-
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களும் நிபந்தனைகளுடன் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - காரைநகரை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கடந்த மாதம் 24 ஆம் திகதி கைது செய்து யாழ்ப்பாணம் - மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர். அதனையடுத்து மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட…
-
- 0 replies
- 159 views
-
-
அரசின் சர்வகட்சி மாநாடு, பஸ் போன பிறகு கை காட்டும் வேலை அரசின் சர்வகட்சி மாநாடு, பஸ் போன பிறகு கை காட்டும் வேலை ஆகும் என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த அவர், இன்றைய அரசாங்கம், ஆரம்பம் முதல் இன்று வரை ஒரு தீர்மானத்தை கூட உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இன்று நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து நிற்கின்றது. முழு நாடும் கருப்பு சந்தையாக மாறி இருக்கின்றது. மொத்த பொருளாதாரமும் மீள கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. இந்நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கத்திடம் பல மாதங்க…
-
- 0 replies
- 181 views
-
-
தியாக தீபம் திலீபனின்... இறுதி வார்த்தைகளை, நாடாளுமன்றில் பகிர்ந்துகொண்டார் விஜித ஹேரத்! உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்திபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் 10 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர் அவர் உயிரிழந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறது என நாடாளுமன்ற உ…
-
- 3 replies
- 313 views
-
-
பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக நேற்றைய தினம் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார். 29 மில்லியன் டொலர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக அரசாங்கம் இலங்கையின் வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவிக்கு வந்த ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை மாத்திரமல்லாது கடற்படையையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார். இலங்கை மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி…
-
- 12 replies
- 697 views
-
-
பிரச்சினைகளைக் கையாள்வதற்கான உத்தியாக இராணுவமயமாக்கலைப் பயன்படுத்துகிறது அரசாங்கம் - அம்பிகா சற்குணநாதன் (நா.தனுஜா) நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக ஓர் உத்தியாக அரசாங்கம் இராணுவமயமாக்கலைப் பயன்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், அது மனித உரிமைகள் மீறப்படுவதற்கு வழிவகுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்புநிலையங்களில் இராணுவத்தினர் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இராணுவப்பேச்சாளர் நேற்று செவ்வாய்கிழமை அறிவித்திருந்த நிலையில், இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய…
-
- 0 replies
- 185 views
-
-
சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வெறுமனே சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? ஒரு தரப்பை மட்டுமே பாதுகாப்பது தேசியமா அல்லது சகல இன மக்களையும் பாதுகாப்பது தேசியமா? பெரும்பான்மையின் தேவைகளை பூர்த்தி செய்வது தேசியம் என அர்த்தப்படுத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மு…
-
- 0 replies
- 152 views
-
-
வீதியினை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் வீதி மறியல் போராட்டம் கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி வேரவில் வீதியை புனரமைத்து தருமாறு கோரி பொது மக்கள் நேற்று (22) நீதி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்று காலை யாழ்ப்பாணம் மன்னார் ஏ32 வீதியினை பல்லவராயன்கட்டு பகுதியில் மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு போன்ற கிராம மக்கள் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கான தொடர்புகளுக்கு பிரதான வீதியாக காணப்படுகின்ற 22 கிலோமீற்றர் நீளமான பல்லவராயன்கட்டு தொடக்கம் கிராஞ்சி வேரவில் வரை செல்கின்ற வீதி மிக மோசமாக நிலையில் காணப்படுகிறது. வீதி புனரமைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டும் இதுவரை இழுபறி நிலையில் காணப்படுகிறது என்றும் எனவே பொது மக்களின் ச…
-
- 0 replies
- 164 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாதகத் தன்மை சிங்கள மக்களுக்குப் புரியாது - ஹர்ஷடி சில்வா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்கள மக்கள் யாரும் கைதுசெய்யப்படாததால் அதன் பாதக தன்மை சிங்கள மக்களுக்கு தெரியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பயங்கரவாத சட்டத்தின் பாதக தன்மை மற்றும் அதன் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் எவ்வாறான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது தொடர…
-
- 0 replies
- 692 views
-
-
இந்தியா வழங்கிய கடனை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தத் திட்டம்? இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனை தொகையை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தும் ஆயத்தம் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். 14,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ‘ஹோம் சொப்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதற்காக 8 இலட்சம் ரூபாவை வழங்கி, பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கு 2000 ரூபா கூப்பன் மூலம் இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் கடனை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் திட்டமொன்று உள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். http://www…
-
- 0 replies
- 210 views
-
-
மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். Tamilmirror Online || மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும்
-
- 7 replies
- 611 views
-
-
சர்வ கட்சி மாநாட்டில், அரசியல் பேசும் இடமல்ல – கப்ராலை சாடினார் ரணில் – மன்னிப்பு கோரினார் கோட்டா! இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று(புதன்கிழமை) கூடிய சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். சர்வகட்சி மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கப்ரால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலைமைக்கு முன்னாள் அரசாங்கம் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். கப்ராலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அவரின் குறித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவ…
-
- 1 reply
- 184 views
-
-
எரிபொருள் விநியோகத்தை... துரிதப்படுத்துமாறு, நாமல் கோரிக்கை! மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விநியோக நிறுவனங்களும் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1272971
-
- 3 replies
- 196 views
-
-
நிதியமைச்சரை... நீக்குவது குறித்து, நேற்று ஆளும்கட்சி கூட்டத்தில் கலந்துரையாடப் பட்டதா? நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நேற்று இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஆளும் தரப்பின் விசேட கூட்டம் இடம்பெற்றது. நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவில்லை என்றும் மாறாக அவரது நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன என்றும் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்…
-
- 1 reply
- 173 views
-
-
அரசின் சர்வகட்சி மாநாடு... பேருந்து போன பிறகு, கை காட்டும் வேலை ஆகும் – வேலு குமார் “அரசின் சர்வகட்சி மாநாடு, பேருந்து போன பிறகு கை காட்டும் வேலை ஆகும்.” என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இன்றைய அரசாங்கம், ஆரம்பம் முதல் இன்று வரை ஒரு தீர்மானத்தை கூட உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இன்று நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து நிற்கின்றது. முழு நாடும் கருப்பு சந்தையாக மாறி இருக்கின்றது. மொத்த பொருளாதாரமும்…
-
- 0 replies
- 190 views
-
-
ஜனாதிபதிபதி தலைமையில், நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில்... 26 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 26 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். எனினும் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாநாட்டை புறக்கணித்துள்ளன. https://athavannews.com/2022/1273054
-
- 0 replies
- 139 views
-
-
ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு இன்று – பிரதான கட்சிகள் சில புறக்கணிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த சர்வக்கட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதற்கமைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க முக்கியமான சில கட்சிகள் தீர்மானித்துள்ளன…
-
- 0 replies
- 124 views
-
-
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் இன்று !! தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளவர்கள் தெல்கந்த முதல் நுகேகொட வரை பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். பொதுமக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார். அரசாங்கம் மக்களின் இன்னல்கள் தொடர்பாக உணர்வற்ற முறையில் செயற்படுவதாக…
-
- 0 replies
- 369 views
-