Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மருந்து கொள்வனவு – 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை... வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவசரகால மருந்துகள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் உலக வங்கி மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் அமைச்சர் கூறியள்ளார். https://athavanne…

    • 6 replies
    • 495 views
  2. 237 மருந்துகளுக்கு... தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து தட்டுப்பாட்டினால் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இதய நோயாளிகள், இருமல் மற்றும் சளிக்கு கூட வழங்குவதற்கு தேவையான மருந்துகள் இல்லை என கூறினார். டொலர் நெருக்கடியானது முழு நாட்டையும் பாதித்துள்ள நிலையில், மருந்து தட்டுப்பாடு அரச, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் …

  3. கான்கள் மற்றும் பீப்பாய்களில்... எரிபொருளை பெற்றுக்கொண்டு, அதிக விலைக்கு விற்பனை; இதுவரை 68 பேர் சிக்கினர் !! அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பாக நாடாளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதுவரை மொத்தம் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களிடம் இருந்து 8025 லீற்றர் பெற்றோல், 726 லீற்றர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதிகப்படியான எரிபொருளை கொள்வனவு செய்து வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்பதன் மூலம் பலர் சட்டவிரோத வியாபாரங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கான்கள…

  4. வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த தீர்மானம் நிலுவையில் உள்ள வெளிநாட்டு சாதாரண கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1276400 கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரும் இலங்கை சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோர…

  5. இடைக்கால அரசாங்கம் தொடர்பில் இன்று முதல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் - நிமல் சிறிபாலடி சில்வா (இராஜதுரை ஹஷான்) இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடன் இன்று முதல் குழு அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு இடைக்கால அரசாங்கத்தின் ஊடாகவே தற்காலிக தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் [10.04.2022]இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தவறான அரசியல் மற்றும் …

    • 7 replies
    • 368 views
  6. ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டுவருவோம் - பிரதான எதிரணி அறிவிப்பு (நா.தனுஜா) தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, மறுபுறம் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டுவருவதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அதுமாத்திரமன்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதுடன் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, 19 திருத்தத்தில் காணப்பட்ட சிறந்த விடயங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவத்றகு நடவடிக்கை எடுக்கக்கூடிய இடைக்கால அரசாங்கத்துடனே…

  7. அரசாங்கத்துக்கு எதிரான... போராட்டக் களத்தில், ஒருவர் உயிரிழப்பு – கொழும்பில் சம்பவம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஷிராஸ் ஷிராஸ் என்ற ராப் இசைக்கலைஞர் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் பாடலைப் பாடிக்கொண்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழப்பிற்கான காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276360

  8. இம்மாதத்தில்... இரண்டாவது முறையாக, அதிக பணத்தை அச்சிட்டது... மத்திய வங்கி ! இலங்கை மத்திய வங்கி நேற்று திங்கட்கிழமை 33.31 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது. இம்மாதத்தில் மட்டும் மொத்தம் 152.21 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 465.89 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1276375

  9. சாந்த பண்டாரவிற்கு... புதிய அமைச்சு: துரோகமிழைத்து விட்டதாக, சுதந்திரக் கட்சி சாடல் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கட்சியின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். சசீந்திர ராஜபக்ச தனது இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பிரியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்க மறுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, அவர் தொடர்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை…

  10. ஜனாதிபதிக்கு எதிரான, குற்றப் பிரேரணை: கூட்டமைப்பாக... முடிவு செய்வோம் – சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்து தனித்து இல்லாமல் கூட்டமைப்பாக ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவ்வாறு எடுக்கப்படும் முடிவு பலமாக அமையும் என்றும் கூறினார். எந்தவிதமான பிரேரணை கொண்டுவந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என சித்தார்த்தன் தெரிவித்தார். மூன்று கட்சியும் இணைந்து தீர்மானம் எடுக…

  11. அரசாங்கத்திற்கு எதிரான... கட்சிகளை சந்தித்தார், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா !! தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்தவர்) கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பாட்டலி சம்பிக்க ரணவக்க அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் என பலர் கலந்துகொண்டனர். முன்னோக்கி நகரும் செயற்பாடுகளுக்கு இடையில் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இந்த …

  12. 19ஆவது திருத்தச் சட்டத்தை... அமுலாக்குவதை விட, பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதே முக்கியம் – ரணில். பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே தற்போதைய சந்தர்ப்பத்தில், முக்கியமானதாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 19ஆம் திருத்தச் சட்டத்தை மீள அமுலாக்கப்படுவது 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீள அமுலாக்குவது முக்கியம் என்றாலும்கூட, தற்போதைய சூழ்நிலையில் அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 19ஆம் திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றுக்கு அதிகாரம் பெற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் ஜனாதிபதியால் அமைச்சுப் பதவி வக…

  13. சுயாதீனமாக... செயற்பட தீர்மானித்த, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்... இராஜாங்க அமைச்சராக, பதவிப் பிரமாணம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கரிம உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர் நேற்று (திங்கட்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சாந்த பண்டாரவும் ஒருவர் என…

  14. கொழும்பு – காலி முகத்திடலில்... 4ஆவது நாளாகவும், தொடரும் போராட்டம்! அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. அதிகளவானோர் காலி முகத்திடலிலும் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடியும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடாரங்கள், உணவு, …

    • 12 replies
    • 2.2k views
  15. அரசுக்கு எதிரான செயற்பாடு – தமிழ் தரப்புக்கள்... நிபந்தனையின்றி ஆதரவளித்தால், வீதியில் இறங்குவோம்: சிவாஜி நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் நம்…

  16. எரிபொருள் தட்டுப்பாடு – சுற்றுலாப் பயணிகளும் போராட்டம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். https://athavannews.com/2022/1276273

    • 12 replies
    • 736 views
  17. 21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை... வெறும் 226 பேர், அழித்துவிட்டனர் – குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது : சங்கக்கார சாடல் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்களுக்கு உடனடி தீர்வுகள் அவசியம் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இடம்பெற்ற நேர்காணலில் பேசிய சங்கக்கார, 21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை வெறும் 226 பேர் மட்டுமே அழித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். நாம் அனைவரும் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வைத்துள்ளதாகவும் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதைவிட மோசமாக அவர்கள் தங்கள் சொந்த மக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு…

    • 2 replies
    • 452 views
  18. கோட்டாவின் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், சிலாபம் நகரில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. ஆதரவான குழுவினருக்கும் எதிரான குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. எனினும், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நிலைமையை கட்டுப்படுத்திவிட்டனர். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழு…

    • 5 replies
    • 815 views
  19. இந்திய ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளது என்ன? 1 உங்கள் செய்தியை தெரிவித்துவிட்டீர்கள் – இனி அமைதியாகயிருங்கள் – தொடர்ந்து போராடுவதால் பிரயோசனமில்லை இலங்கை மாத்திரமல்ல- பாக்கிஸ்தானை பாருங்கள் அனேகமான நாடுகள் நிதிநெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. – கொவிட் பாதித்தது- – சுற்றுலாப்பயணிகள் வரவில்லை – இலங்கையில் தற்போது காணப்படுவது எரிபொருள் நெருக்கடியே – தவறான நிர்வாகமும் காரணம் – மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உரிமையுள்ளது – — இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்கியுள்ள பேட்டியி…

    • 3 replies
    • 460 views
  20. ஜனாதிபதி பதவி விலகவேண்டும் அல்லது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைக்கவேண்டும்- ரணில் தற்போது அதிகார மையம் என்பது இந்த இளைஞர்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின் கரங்களில் காணப்படுகின்றது ————— ஜனாதிபதி பதவி விலகவேண்டும் அல்லது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க நாட்டில் தற்போது அதிகாரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் இளைஞர்களின் கரங்களிற்கு சென்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார் சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உங்களால் எங்களிற்கு வர்ணிக்க முடியுமா? …

    • 3 replies
    • 334 views
  21. மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும் ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க கோருவோம். 225 எம்பீகளில் மனசாட்சிபடி வாக்களிக்கும் எம்பீகள் யார், மனசாட்சியை மறந்துவிட்டு வாக்களிப்பவர்கள் யார் என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்களும், வெளியே போராடும் மக்களும் அறிந்துகொள்ளலாம். முதலில் இவரது அதிகாரங்களை பிடுங்க வேண்டும். அதைவிடுத்து …

    • 0 replies
    • 154 views
  22. நாட்டு மக்களுக்கு... விசேட உரையாற்றுகின்றார், பிரதமர் மஹிந்த !! நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் மக்களுக்கு உரையாற்றவுள்ளார். https://athavannews.com/2022/1276258

  23. கட்டுநாயக்க... விமான நிலைய ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டம் ! கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை 9:30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள பிரச்சினை மற்றும் மேலதிக கொடுப்பனவு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது தொழிற்சங்க கோரிக்கைகளும் இல்லாமல் அனைத்து விமான நிலைய ஊழியர்களும், வேலைநிறுத்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். பணிப் புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றாலும் விமான நிலையத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இதுவரை இடையூறு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1276255

  24. பிரதமரை... பதவி நீக்கம் செய்யுமாறு, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை – ஜனாதிபதி நிராகரிப்பு! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சரியான பதிலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த கோரிக்கையை நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதும் ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய நிறைவேற்று சபையொன்றை உருவாக்கி புதிய பிரதமரை நியமித்து நிறைவேற்று சபையின் பணிப்புரையின் பேரில் எதிர்கால தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில்…

  25. அத்தியாவசியப் பொருட்கள் எங்கே? – யாழில் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் எங்கே, வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://athavannews.com/2022/1276259

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.