ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி திருமதி. அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல தவறான அறிக்கைகள் கவலையளிப்பதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, இலங்கை அரசாங்கம் பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை திருமதி. சற்குணநாதனின் சாட்சியம் முற்றாகப் புறக்கணிக்கும் அதே வேளையில், குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்ந…
-
- 1 reply
- 354 views
-
-
(நா.தனுஜா) இலங்கையில் பாதுகாப்புப்படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தியிருப்பதாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது. பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் டொனியா அன்டோனியஸியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமன்டா மில்லிங், இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்…
-
- 1 reply
- 502 views
-
-
தொடர்ந்தும் ஒட்சிசனை வழங்க வேண்டிய நிலையில் பெரும்பாலான கொவிட் தொற்றாளர்கள் Published by T. Saranya on 2022-02-03 19:47:24 (எம்.மனோசித்ரா) தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத நிலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான தொற்றாளர்களுக்கு தொடர்ந்தும் ஒட்சிசனை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபணர் ஹர்ஷ சதிஷ்சந்திர தெரிவித்தார். நாட்டில் தற்போது பிரதான வைரஸாக ஒமிக்ரோன் காணப்படுகிறது. கொழும்பின் நிலைமையை அவதானிக்கும் போது , வைரஸ் பிறழ்வுகளை அறியும் பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும் போது 90 சதவீதத்திற்கும் அதிகமான ஒமிக்ரோன் பரவியுள்…
-
- 0 replies
- 155 views
-
-
Published on 2022-02-04 13:07:45 யாழ். வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். மீனவர்கள் கடந்த 31 ஆம் திகதி முதல் பருத்தித்துறை - பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவ…
-
- 0 replies
- 196 views
-
-
சுதந்திர தின வைபவத்தில் மயங்கியவர்களால் பரபரப்பு! வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் 74வது சுதந்திர தின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை கோலாகலமாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த மாணவர்கள் மற்றும் ஊரகாவற்படை வீரர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் திடீர் என மயக்கமடைந்து விழுந்தனர். இதனால் குறித்த நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. அதிக நேரம் வெயிலில் நின்றமையால் அவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக அவர்களுக்கு முதலுதவி…
-
- 2 replies
- 360 views
-
-
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்! இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது. 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை நடைபெறவுள்ளன. ‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் இம்முறை சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் நடைபெறுவதுடன் நாட்டில் கொரோனா தொற்று நிலைமை காணப்படுவதனால் சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தேசத்தின் அபிமானத்தை காக்கும் வகையில் வழக்கம்போன்று எவ்வித குறைபாடுகளுமின்றி கம்பீரமானதாகவும் எளிமையான முறையிலும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்ச…
-
- 1 reply
- 212 views
-
-
வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம் – பிரதமர்! வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74வது தேசிய சுதந்திர தினம் உதயமாகியுள்ளது. வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம். ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான இத்தகைய போராட்டங்கள் இராணுவ ரீதியாகவும் அரசியல் …
-
- 2 replies
- 284 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்! இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று(வியாழக்கிழமை) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் வைத்து இதனை ஆரம்பித்து வைத்துள்ளார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரிய கையெழுத்து போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், “இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் மிக மோசமான சட்டமாக இருக்கின்றது. 6 மாத காலத்திற்கு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது 42 ஆண்டுகளாக இருக்கின்றது. விசேடமாக தமிழ் இளைஞர்களை…
-
- 1 reply
- 202 views
-
-
நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – கோட்டாபய ராஜபக்ஷ! தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் மத, ஊடக சுதந்திரம் இருக்கின்றது. கருத்து சுதந்திரம் இருக்கின்றது. பொறுப்புகளை நிறைவேற்றாமல் எவரும் உரிமைகளை பற்றி பேசக்கூடாது. அரசியல், பொருளாதாரம் நாட்டில் பலமாக இருக்க வேண்டும். நாட்டின் தலைவர் ஒருவர், பிரச்சினைகளை தினசரி எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஒரு இலக்கை நோக…
-
- 2 replies
- 376 views
-
-
பெப்ரவரி 4 குருந்தூர் மலைக்கு செல்லும் கூட்டமைப்பு! வழிபாட்டு சுதந்திரம் கோரி பெப்ரவரி 4 குருந்தூர் மலைக்கு செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாளைய தினம் பிரித்தானிய அரசாட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த 74 வது ஆண்டு நிறைவை தலை நகரத்திலும் வேறு இடங்களிலும் கொண்டாடுகிறார்கள். இந்த சுதந்திரமானது ஆரம்பத்திலிருந்தே நாட்டில் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக வாழ்வோருக்கு உரித்தானதாக மட்டுமே இருந்து வருகிறது. பிரதிநிதித்த…
-
- 1 reply
- 286 views
-
-
மீனவர்கள் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை – STF குவிப்பு February 3, 2022 பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி கடந்த திங்கட்கிழமை முதல் சுப்பர் மடம் பகுதியில் மீனவர்கள் வீதியை மறித்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை பருத்தித்துறை காவல்துறையினர் , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ,மீனவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடு…
-
- 0 replies
- 187 views
-
-
யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு துணி! February 4, 2022 யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு நிற துணி கட்டப்பட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் சிவில் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக, பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு செல்வதற்காக, தமது வாகனங்களை பல்கலைக்கழகத்தில் தரித்துவிட்டு செல்ல முற்பட்ட நிலையில், பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மாணவர்கள் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டதோடு, பரமேஸ்வரா ஆலயத்திற்கு செல்பவர்களிற்கும் பாதுகாப்ப…
-
- 0 replies
- 317 views
-
-
போராட்டக்களத்திற்கு சென்ற சுமந்திரனும், சாணக்கியனும்! February 3, 2022 தமிழக மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் ஆதரவு தெரிவித்துள்ளனர். யாழ்.குடா நாட்டின் கரையோர பகுதிகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் யாழ்.மாநகரிலும் ஆதரவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4வது நாளாக இன்றும் முழு வீச்சுடன் இடம்பெற்று வர…
-
- 27 replies
- 1.9k views
-
-
"தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவோம்" - கொந்தளிக்கும் யாழ். மீனவர்கள் - டக்ளஸ் தேவானந்தாவை முற்றுகையிட்டு வாக்குவாதம் ரஞ்சன் அருண் பிரசாத் (யாழ்ப்பாணம்), பிரபுராவ் ஆனந்தன் (நாகப்பட்டினம்) பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தங்களுடைய கடற்படை தடுக்கத் தவறினால், அந்த மீனவர்களை நாங்களே தாக்குவோம் என்று இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் வகையில் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால், மீனவர்கள் கோ…
-
- 14 replies
- 919 views
- 1 follower
-
-
Editorial / 2022 பெப்ரவரி 03 , பி.ப. 01:48 - 0 - 460 இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் நடத்தப்படும் விசேட ஆராதனை, இம்முறை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இதுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. மற்றும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு பணியாற்றிய இருவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, அசாதாரண முறையில் இவ்விருவரையும் கைது செய்தமை, ஆகிய கா…
-
- 1 reply
- 298 views
-
-
Published on 2022-02-03 13:15:05 (நா.தனுஜா) வெளிவிவகார அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அதில் காணப்படக்கூடிய மிகமோசமான சரத்துக்களை இல்லாமல்செய்யவில்லை. மாறாக அச்சட்டத்திலுள்ள மோசமான சரத்துக்களை நீக்குவதுடன் அதனை எமது நாட்டின் அரசியலமைப்பிற்கும் சர்வதேச நியமங்களுக்கும் அமைவானதாக மாற்றியமைக்கக்கூடியவகையில் திருத்தங்களை மேற்கொள்வதானது நாட்டின் நன்மதிப்பை உறுதிசெய்வதற்குக் குறைந்தபட்ச பங்களிப்பை வழங்கும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 1 reply
- 333 views
-
-
Published by J Anojan on 2022-02-03 16:12:49 (இராஜதுரை ஹஷான்) தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக ஒரே நாடு-ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வெலிகட சிறைச்சாலையில் இருந்த வேளையில் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிறைக்கைதிகள் என்னுடன் சுமுகமான முறையில் பழகினார…
-
- 2 replies
- 335 views
-
-
தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்களமக்கள் முன்வரவேண்டும்- தமிழர்தாயக சங்கம் February 3, 2022 தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்களமக்கள் முன்வர வேண்டும் என்று வவுனியாவில் கடந்த 1812 வது நாளாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று (03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “பயங்கரவாத சட்டத்தை நீக்குவதற்கு ஜிஎஸ்பி பிளஸைப் பயன்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம்…
-
- 0 replies
- 200 views
-
-
சிறீலங்கா சுதந்திர தினம் – தமிழர் தேசத்தின் கரிநாள் . தமிழீழ விடுதலைப் புலிகள் February 2, 2022 மதிப்புக்குரிய தமிழீழ மக்களே ! மாசி 4ம் திகதி, ஈழத் தமிழர்களாகிய நாம் காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிக்கிக் கொண்ட அவலத்தின் ஆரம்ப நாளாகும். இதனால் சிறீலங்கா சுதந்திரம் அடைந்த நாளை தமிழீழத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் கரிநாளாக தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றார்கள். பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசு இயங்கிய காலத்தைத் தவிர, இன்றைய நாள் வரை விடுதலைக் காற்றைத் தமிழ் மக்கள் சுவாசித்ததே கிடையாது. ஏறத்தாழ 442 ஆண்டுகள் காலனித்து…
-
- 25 replies
- 1.5k views
-
-
பசில் ராஜபக்ஷவினை அமெரிக்கா விசாரணை செய்ய வேண்டும் – சுரேஸ்! கள்ள சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கறுப்பு சந்தையில் டொலர்களை வாங்கி வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்க பிரஜையுமான பசில் ராஐபக்ஷ கூறியிருப்பது தற்போது சர்சையாகியுள்ளது. …
-
- 0 replies
- 312 views
-
-
நாடளாவிய ரீதியில் “ஒரு இலட்சம் வேலைத்திட்டம்“ இன்று ஆரம்பம் – அரசாங்கம் இலங்கையை வளமான நாடாக மாற்றவும் அனைத்து பிரஜைகளின் வருமானத்தை வலுப்படுத்தவும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தித் திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. “ஒரு இலட்சம் வேலைத்திட்டம்“ என அழைக்கப்படும் இந்த அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய வகையில் இன்று காலை 8.52 மணிக்கு இடம்பெறவுள்ளது. இலங்கையை வளமான நாடாக மாற்றும் இலக்கை நோக்கி “கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள்” திட்டம் செயற்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள 33…
-
- 5 replies
- 331 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்திடம் ஆதரவைக் கோரிய இலங்கை – மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு! நிதியமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வேறு காரணங்களுக்காக ஆலோசனை கோரப்படவில்லை எனவும் இதுவொரு வழமையான செயற்பாடாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவைக் கோரியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். அதற்கிணங்க நிபுணத்துவ குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதா…
-
- 0 replies
- 239 views
-
-
”தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும்” ஐநா பிரதிநிதியிடம் யாழ். மாநகர முதல்வர் யாழ்ப்பாணம் சென்றுள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும் மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் மாநகர முதல்வர் பி மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் இ. த. ஜெயசீலன் ஆகியோர் பங்குபற்றினர் இக்கலந்துரையாடலில் ஐநாவுக்கான வதிவிடப் பிரதிநிதியிடம் மாநகர முதல்வர் பின்வரும் கருத்துக்களை ஆணித்தரமாக தெரிவித்தார். கொடிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை போரை நிறுத்தும் எம…
-
- 0 replies
- 205 views
-
-
யாழ்.மாவட்ட செயலகம் முற்றுகை – கண்டி வீதி போக்குவரத்து ஸ்தம்பிதம்! February 3, 2022 யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மாவட்ட செயலகத்தின் இரண்டு பிரதான வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருந்து மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் மாவட்ட செயலகத்தின் இன்றைய செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டிருந்தது. அத்தோடு மாவட்ட செயலகத்திற்கு முன…
-
- 1 reply
- 348 views
-
-
இரா. சம்பந்தனின் அவசர கடிதம்! ஜெனீவாவிற்கு பறந்தது! February 3, 2022 ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதரக உயர் ஸ்தானிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கடந்த 31ஆம் திகதியன்று கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். மேன்மை தாங்கியீர், 46/1 தீர்மானத்தின் ஏற்பாடுகளுக்கமைய மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரினால் மேற்கொள்ளப்படும் எழுத்துமூல விளக்கத்திற்குப் பின்னர் இலங்கையின் நிலமை ஆராயப்படும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ((U.N.H.R.C) 49வது கூட்டத்தொடருக்கான ஒரு முன்னோடியாக இலங்கைப் பாராளுமன்றத்திலிருக்கும் மிகப் பெரிய தமிழ் அரசியல் கட்சியின் …
-
- 3 replies
- 408 views
-