Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மாநகர சபைக்கு 20 இலட்சம் செலுத்த வேண்டும் January 20, 2022 யாழில் வருடாந்தம் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது , யாழ்.மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிதியில் 20 இலட்ச ரூபாயை ஏற்பாட்டாளர்கள் இதுவரை மாநகர சபைக்கு வழங்கவில்லை என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இறுதியாக …

  2. அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியானது! அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கு அமைய அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65 ஆக மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு அரச உத்தியோகத்தரும் 55 வயதிற்குப் பின்னர் விரும்பினா…

  3. வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு திடீர் இடமாற்றம்! வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இன்று (வியாழக்கிமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார். மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாராக மாற்றம் பெற்றுள்ளார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பா. செந்தில்நந்தனன், பேரவைச் செயலக செயலாளராக மாற்றம் பெற்றுள…

  4. தமிழக மீனவர்களின் படகு மூழ்கடிப்பு ? – காரைநகரில் நாளை போராட்டம்! இலங்கை கடற்படையின், வேக படகு மோதியதில், தமது படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாகவும் , படகில் இருந்த 7 மீனவர்களும், கடலில் மூழ்கிய நிலையில் சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளதாகவும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் தமிழக மீனவர்கள் தெரிவிக்கையில், இராமேஸ்வரம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்றைய தினம் புதன் கிழமை புறப்பட்ட மீனவர்கள், கச்ச தீவுக்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த வேளை , இலங்கை கடற்படையினர் தமது வேக படகில் வந்து மீனவர்களை துரத்தினர். அதன் போது , தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த வஸ்தியான் என்பவருக்கு சொந்தமான ப…

  5. (எம்.மனோசித்ரா) இறக்குமதி செய்யப்படவுள்ள சீன அரிசி , சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு , 'உண்மையாகவே அது குறித்து தெரியாது' என்று அமைச்சரவை பேச்சாளர்கள் மூவரும் குறிப்பிட்டனர். மேலும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 19 ஆம் திகதி புதன்கிழமை அன்று இடம்பெற்ற போது , 'சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதா?' என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப் பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார். வர்த்தகத்துறை…

  6. (நா.தனுஜா) இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்பதுடன் அங்கு மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக நாம் போராடவேண்டியது அவசியமாகும். இவ்விடயத்தில் இலங்கை அதிகாரிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைகளை விதித்தல் உள்ளடங்கலாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருப்பதுடன் இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்று பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையுடன் இணைந்ததாக பிரித்தானியப் பாராளுமன்றத்தினால் ஜனவரிமாதம் 'தமிழ் மரபுரிமை மாதமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினையும் கொண்டாடும் வகையிலேயே இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டர் நகரிலுள்ள மத்திய …

  7. ”13 ஆவது திருத்தம் தொடர்பில் எங்களுடனேயே பேச வேண்டும்”: அரசாங்கம்! 13 ஆவது திருத்தம் தொடர்பில் பிரச்சனைகள் இருந்தால் இந்தியாவுடன் பேசாது இலங்கையுடனேயே பேச வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில், இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பிலவே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை என்பது இந்தியாவின் காலனித்துவ நாடு அல்ல. இதனால் பிரச்சனைகள் இருந்தால் இங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள அர…

  8. ’செழுமையை நோக்கி செல்கிறது இலங்கை’ இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், சில மாதங்களுக்கு முன்னர் இருந்த பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் நாடு செழுமையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதாரத்திற்கு ஆசிர்வாதம் வழங்கும் விசேட நிகழ்வு கண்டி மல்வத்தை விகாரையில் நேற்று (15) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் நாங்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டோம் எனவும் மேலும் 500 மில்லியன் டொலர் கடனையும் செலு…

  9. (இராஜதுரை ஹஷான்) அனல் மின் நிலையத்தையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு மின்சாரத்துறை அமைச்சு தள்ளப்பட்டுள்ளது என மின்சாரத்துறை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சாரத்துறை அமைச்சுக்கு மின் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதால் மின் உற்பத்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. மின்சார சபை டொலர் வழங்கினால் தான் டொலர் விநியோகிக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட முடியாது. நாட்டில் எரிபொருள் இறக்குமதி மற்றும…

  10. இலங்கையில் மனித உரிமைகளை உறுதிசெய்ய பிரிட்டன் ஆதரவளிக்கும்! இன்று கொழும்பு வரும் அமைச்சர் அறிவிப்பு January 19, 2022 மனித உரிமைகளை உறுதிசெய்ய பிரிட்டன் ஆதரவு: இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதி செய்வதை முன்னிறுத்தி செயல்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்குவதில் பிரிட்டன் உறுதியாக இருப்பதாக அந்த நாட்டின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று வருகைத தரவுள்ள அவர் தனது, அறிவிப்பில், “கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களையும் சந்திப்பதற்குத் திட்டமிட்டிர…

  11. கிளிநொச்சியில் கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை கம்பன் கழகத்தின் சிந்தனைக்கு அமைவாக இளைஞர்களை வளப்படுத்தும் கம்பன் கலைக்கூடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், யாழ். மாநகர சபை மேஜர் மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், வடமாகாண அவை தலைவர் உள்ளிட்ட பலர் வர…

    • 9 replies
    • 807 views
  12. பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தவில்லை. கடந்த வருடம் அரச தலைவர் செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாத இறுதியில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டமைப்பும் அதற்கா…

    • 11 replies
    • 1.1k views
  13. மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமனம்! மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் தொடர்பாக வைத்தியர் ஜி.சுகுணன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “சுகாதார சேவைகள் பணிப்பாளரால் எனக்கு கடிதம் ஒன்றின் ஊடாக தேவை கருதி மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவை பதில் பணிப்பாளராக கடமையாற்றுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் என்னை கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பதவியில் இருந்து உடனடியாக இடமாற்றம் பெற்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்டேன். மேலும் எனது பதிவிக்காலத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு உச்சக்கட்டத்தில…

  14. ‘ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது’ தமுகூ தலைவர் மனோ கணேசன்! “அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக ஒருசில ஆங்கில, தமிழ், சிங்கள ஊடகங்களிலும், ஒருசில தமிழ் அரசியல் தரப்புகளாலும் வெளியிடப்பட்ட ஊகங்கள் இன்று பொய்த்தன. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசாங்கத்தின் கொள்கை நோக்கை விளக்கி இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய நீண்ட உரையில், தேசிய இனப்பிரச்சினையை, பொருளாதார பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் தனது கொள்கை மாறவில்லை என்பதை தெளிவாக கோடிட்டு காட்டினார். ஜனாதிபதிய…

  15. அரசியல் தீர்வுக்கு மோடியை நாடிய தமிழ் தலைவர்கள் – அபிவிருத்தி பணிகளே நல்லிணக்கம் என்கின்றார் ஜனாதிபதி நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதை உறுதிசெய்ய இந்தியாவின் உதவியை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் பேசும் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்தது. இலங்கையில் அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட பல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் அதற்கு அப்பால் அர்த்தமுள்ள …

  16. Editorial / 2022 ஜனவரி 18 , பி.ப. 07:35 - 0 - 61 FacebookTwitterWhatsApp "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்.'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பெசில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சீறி விழுந்து கூறியிருக்கிறார் சம்பந்தன் 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் அவர் ஆற்றிய கொள்கை வ…

    • 15 replies
    • 750 views
  17. (எம்.மனோசித்ரா) இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது. http://www.newswire.lk/wp-content/uploads/2022/01/image_0d0e07851b.jpg இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை உறுதி செய்யும் வகையில் டெல்லி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இ…

    • 3 replies
    • 409 views
  18. Published on 2022-01-18 19:26:40 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் இன்று 18- 01-2022 மாலை 5.00 மணிக்கு கையளிக்கப்பட்டது. இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டது. இதன்போது, சம்பந்தன், நீதியரசர் விக்னேஸ்வரன், தமாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேக்ஷ் பிரேமசந்திரன், சுமந்திரன், சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த இந்தியப் பிரதமருக்கான கடிதம் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நகர்வாக கருதப்படுகிறது. இந்தியப் பிரதமருக்கான கடிதம் கையளிக்கப்பட்டது | Virake…

  19. சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – டக்ளஸ்! சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “”நன்றிக்கு தலை வணங்குதல் என்பது தொன்று தொட்டு நிலவி வரும் தமிழர் பண்பாட்டு வழிமுறையாகும். உழுதுண்டு வாழும் உழவர் மக்களின் விளை நிலங்கள் யாவும் செழித்து வளர உதவிய சூரியனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதோடு மட்டுமன்றி, எமது மக்கள் தம் வாழ்வெங்கும் தம்மோடு கூடவே இருந்து தம் இன்ப துன்…

  20. முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்தியா உறுதி! முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை ஏனைய சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா முன்னெடுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, நாட்டில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வளர்ச்சி திட்டங்களை செயற்படுத்துவது பற்றியும் முதலீடு செய்வது பற்றியும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படு…

    • 12 replies
    • 832 views
  21. ”எனது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள்களுக்கு இடமில்லை” என்கிறார் ஜனாதிபதி!!! January 18, 2022 தனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பொதுமக்களைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை இன்று (18.01.22) ஆரம்பித்து வைத்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் தெ ளிவுப்படுத்தி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி…

    • 1 reply
    • 286 views
  22. தமிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம் – சிறிதரன் உலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும் இழந்து வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து நிற்கின்ற தழிழர்களின் வாழ்வை கட்டி எழுப்ப வேண்டிய காலகட்டத்துக்குள் நாங்கள் நிற்கின்றோம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் . முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள போரினல் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வை கட்டியெழுப்பும் மக்கள் நலன் காப்பகத்தின் பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துளள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “உலகப் பந்தில் தன்னுடைய முகவரியை இழந்து கட்டுமானங்களையும…

  23. முதலில் தம்மை, குடும்பத்தை பற்றி அல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட “டொம்லின் பூங்கா” மற்றும் “சஹஸ் உயன” நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா ஆகியவை நேற்று (16) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக இந்தப் பூங்காக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. டொம்லின் பூங்காவின் நினைவு பலகையை பிரதமர் திறந்து வைத்தார். பிரதமர் அங்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் முதன்மை ஆலோசகர் எம்.எம்.ஜே.இ.ஜி.ப…

  24. ஆதிவாசிகளின் பொங்கல் விழா இன்று நடைபெற்றது ShanaJanuary 16, 2022 (ரூத் ருத்ரா) ஆதிவாசிகளின் பொங்கல் விழா இன்று வாகரை குஞ்சங் கல் குளத்தில் அவர்களுக்குரிய கலாச்சார நிகழ்வுகளுடன் இன்று நடைபெற்றது. ஆதிவாசிகளின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச மக்கள் பங்கு கொண்டு தங்களது கலாச்சார ரீதியில் மண் பானையில் பொங்கல் இட்டு சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்தனர். இதன்போது சிறுவர்கள் மற்றும் பொற்றோர்களுக்கான மரபு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்று போட்டி நிகழ்சிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்வர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பின்னர் மேற்படி கிராம மக்கள் இவ் பொங்கல் விழாவ…

  25. போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பதை பிரிட்டன் தாமதிப்பது ஏன் ? - எலியற் கொல்பர் கேள்வி (நா.தனுஜா) ஏனைய நாடுகளில் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள இலங்கையின் சில இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கலாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் தடைவிதிப்பதற்கு ஏன் காலதாமதமாகின்றது என்று பிரிட்டனில் இயங்கும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் எலியற் கொல்பர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரிட்டனில் வாழும் பரந்தளவிலான மற்றும் செல்வாக்குமிக்க தமிழ்ச்சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கவேண்டுமெனில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகத் தடைவிதிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தும் இழுத்தடிப்பு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.