ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
சஜித் பிரேமதாச நயினாதீவுக்கு விஜயம்! எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நயினாதீவுக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு விகாராதிபதியிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். இதன்போது, சஜித் பிரேமதாசவின் மனைவி ஜெலனி பிரேமதாச, மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, உமாச்சந்திர பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2022/1260891
-
- 0 replies
- 568 views
-
-
சீன வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு! சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சீனாவில் மருத்துவம் கற்கும் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் சுற்றுலா, முதலீடு, கொரோனா நிவாரணம் மற்றும் கொரோனா பிந்தைய ஏற்பாடுகள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அந்தப் பதிவில் கூறியுள்ளார். https://atha…
-
- 1 reply
- 340 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழ்மை) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பெண்களே நம் தேசத்தின் கண்கள் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் எழுச்சியோடு முன்னோக்கி செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரக…
-
- 0 replies
- 167 views
-
-
மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது- சஜித் நாட்டு மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது. என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று ( வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மக்களே சிந்தித்து பாருங்கள். மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளைப் பெறுவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். இன்று குடிக்க பால் மா இல்லை. சமைக்க அரிசி இல்லை. விவசாயிகளுக்கான உரம் இல்லை. மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது. எந்த நம்பிக்கையில் இப்படியான ஆட்சியா…
-
- 3 replies
- 348 views
- 1 follower
-
-
20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19வது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் – மைத்திரி! 20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19வது திருத்த சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகல் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘புதிய அரசொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்துவருகின்றோம். இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்தவுக்கு 24 மணிநேரத்துக்குள் அதிஷ்டம் அடித்தது. நாளை எமக்கும் அது நடக்கலாம். எனவே, எதற்கும் தயாராகவே இருக்க வேண்…
-
- 2 replies
- 470 views
-
-
நாட்டின் வரலாற்றில் இவ்வளவு கஷ்டமான காலம் இருந்ததில்லை- வாசு (சி.எல்.சிசில்) இவ்வாறானதொரு இக்கட்டான காலகட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் நினைவுகூரப்படவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “இந்த நாட்டின் வரலாற்றில் பிரதமர் என்ற பெயர் அழியாத எழுத்துக்க ளால் எழுதப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிகவும் வறிய, ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்து, அவர்களின் நலனுக்காக இந்நாட்டில் பல்வேறு சட்டங்களை இயற்றி, இந்த நாட்டின் தேசிய பாரம…
-
- 2 replies
- 397 views
-
-
பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம்! January 7, 2022 பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது , ” வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர். இவர்களுக்காக பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிப…
-
- 12 replies
- 802 views
- 2 followers
-
-
தலைநகரில் போராட்டத்துக்கு தயாராகும் வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள்! இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டது. இது தொடர்பில் இரண்டு மீனவ அமைப்புகளும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையி…
-
- 14 replies
- 638 views
-
-
சுசில் நீக்கப்பட்டமை குறித்து சிராந்தி மூலமே மஹிந்த அறிந்ததாகத் தகவல் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவே மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுசில் பிரேமஜயந்தவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடும் போது, நீங்கள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரிடம் தெரிவித்துள்ளார். சுசில் பிரேமஜயந்தவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்தமை குற…
-
- 6 replies
- 437 views
-
-
அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை கைச்சாத்து. Colombo (News 1st) ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக மியன்மாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சு மற்றும் மியன்மார் அரசாங்கத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி நாட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கும் நோக்கில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை கைச்சாத்து - Newsfirst
-
- 13 replies
- 753 views
-
-
Published by J Anojan on 2022-01-05 19:55:27 ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினக்கல்லான 'ஆசியாவின் ராணி' எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 2,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று முன்வந்துள்ளது. அந்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை. டுபாய் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலைய…
-
- 27 replies
- 2k views
- 1 follower
-
-
நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கு விடைகொடுத்துவிடுத்து புதிய ஆட்சியமைக்க நாம் எந்த நேரமும் தயாராகவே இருக்கின்றோம்.”-மைத்திரி அறிவிப்பு! நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கு விடைகொடுத்துவிடுத்து புதிய ஆட்சியமைக்க நாம் எந்த நேரமும் தயாராகவே இருக்கின்றோம்.” என ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில், புதிய அரசொன்றை அமைப்பதற்கான…
-
- 4 replies
- 456 views
-
-
யார் வராவிட்டாலும் வரைபில் கையொப்பமிட்டு இந்திய பிரதமருக்கு அனுப்புவோம்- வினோ எம்பி January 5, 2022 இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு அந்தவரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அனைத்து கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைபை தமிழரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
இறைவன் தண்டனை வழங்குவான் படுகொலை செய்யப்பட்ட லசந்தவிற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்குதல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர் எனவே லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது கஷ்டம் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லசந்த விக்கிரமதுங்கவின் 12 வது நினைவேந்தல் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் இன்று (08) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாற…
-
- 1 reply
- 722 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளின் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. ஹோட்டல்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கின்றபோதிலும் அவை அவர்களது நாளாந்த தேவைக்கு பற்றாக்குறையாக காணப்படுவதன் காரணத்தினாலேயே விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எரிவாயு தட்டுப்பாடு : 15 ஆயிரம் ஹோட்டல்கள் மூடல் | Virakesari.lk
-
- 1 reply
- 286 views
-
-
மகிந்தவிற்கு கோட்டாபயவின் இரகசிய எச்சரிக்கை! எண்ணப்படும் நாட்கள் இலங்கையின் அரசியலமைப்பில் 13வது திருத்தம் இருக்கின்றது. அதை நாங்கள் இந்தியாவின் தீர்வாக கருதவில்லை. அதை கருதவும் முடியாது ஆனால் அது தான் இலங்கை அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஒரே ஒரு அரசியல் பரவலாக்க சட்டம்* என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் *மனோ கணேசன்* தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 306 views
-
-
கொள்கலன்களை விடுவிக்க 5 மில்லியன் டொலர் துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க இலங்கை மத்திய வங்கி 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. மிகுதி கொள்கலன்களை திங்கட்கிழமை விடுவிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/கொள்கலன்களை-விடுவிக்க-5-மில்லியன்-டொலர்/175-288854
-
- 0 replies
- 290 views
-
-
வடக்கு ஆளுநரை பயன்படுத்தி புதிய நாடகங்கள் நடைபெறுகிறது – தி.நிரோஷ் நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் தெரிவித்தார். யாழ் ஊடக மையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை அரசு இப்போது என்ன செய்கிறது என்றால் ,மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை கிள்ளி எறிந்து அதையும் மத்தியின் கீழ் தந்திரமாக எவ்வாறு கையகப்படுத்தலாம் என்று செயற்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தி வரும் ஆயுதம் தான் உள்ளூராட்சி சபைகள். உள்ளூராட்சி சபைக…
-
- 0 replies
- 198 views
-
-
(இராஜதுரை ஹஷான்) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்காவிடின் நாடளாவிய ரீதியில் மாலை 6 மணிமுதல் 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகிப்பதை கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இடை நிறுத்தியுள்ளதால் இலங்கை மின்சார சபை இத் தீர்மானத்தை அறிவித்துள்ளது. களனிதிஸ்ஸ மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளிலும்,நாட்டில் வெவ்வேறு பகுதிகளிலும் சுமார் 2 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்பட்டது. களனிதிஸ்ஸ மின்நிலையம் இன்றைய தற்க…
-
- 14 replies
- 834 views
-
-
பொதுமக்கள் சேவை ஸ்தாபனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை எழுத்தாளர் Staff Writer 09 Dec, 2021 | 7:01 PMColombo (News 1st) வட மாகாணத்திலுள்ள பொதுமக்கள் சேவை ஸ்தாபனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு பொறுப்புக்கூறல், கடமையுணர்வு மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பில் ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பாணையொன்றை அனுப்பியுள்ளார். 09.12.2021 எனும் திகதியிடப்பட்டு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் இந்த குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் கோர்ப்புகளை மற்றுமொருவருக்கு அனுப்பி, தமது வேலையை இன்னுமொருவர் செய்யும் வரை அதிகாரிகள் பார்த்துக்கொண்டு இருக்கின்றமை தொடர்பில் குறித்த குறிப்பாணையில் சுட்டிக…
-
- 0 replies
- 218 views
-
-
வடக்கு மாகாண ஆளுநரின் எச்சரிக்கை சிறுபிள்ளைத்தனமானது - ந.ஸ்ரீகாந்தா வடக்கில் மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான காணி அளவீடுகளுக்குத் தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) எச்சரிப்பது சிறுபிள்ளைத்தனமானது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா (N.Srikantha) தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீடுகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட மக்களும் அரசியல் செயற்பாட்ட…
-
- 0 replies
- 201 views
-
-
யாழில் எரிவாயுக்கு நீண்ட வரிசை January 7, 2022 யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை முதல் யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன்போது, முதல் வருகைதரும் 300 பேர்களுக்கு மட்டும் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனும் பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2022/171506
-
- 3 replies
- 546 views
-
-
(நா.தனுஜா) பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு சட்டமா அதிபர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராகவும் தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (7) காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பிலுள்ள உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதிவழியிலான கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு கப்பம் பெறும் நோக்கில் 5 மாணவர்கள் உள்ளடங்கலாக 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று 13 வருடங்கள் கடந்து…
-
- 0 replies
- 180 views
-
-
திருகோணமலை எண்ணெய் குதங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (06) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த ஒப்பந்தத்தில், திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் Trinco Petroleum Terminal (Pvt) Ltd ஆகியன கைச்சாத்திட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியா வசமிருந்த 99 எண்ணெய் குதங்களில், 85 எண்ணெய் குதங்கள், இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், அவர் குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கைச்சாத்தானது தி…
-
- 1 reply
- 403 views
- 1 follower
-
-
கடினமான நேரங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் January 7, 2022 கடினமான நேரங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பின்னா் , அவா் இதனைத் தொிவித்துள்ளாா். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஜெய்சங்கர், நம்பகமான நண்பரான இந்தியா இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கவும். நெருங்கிய தொடர்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டதாக ருவிட்டாில் பதிவு செய்துள்ளார். இதேவேளை, இது தொடா்பில் கருத்துரைத்துள்ள இந்திய வெளிவிவகார …
-
- 6 replies
- 578 views
- 1 follower
-