ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142896 topics in this forum
-
மத்திய மலை நாட்டில் அனிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் வாழும் வீட்டுத் தொகுதி ஒன்றின் மீது கற்பாறை ஒன்று விழுந்ததன் காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 10 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் அனிவத்த பிரதேசத்தில் வசித்த ஐந்து தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் காயமடைந்த 10 பேரும் 2 சடலங்களும் வெளியெடுக்கப் பட்டுள்ளன. ஏனையவர்களை மீட்கும் பணயில் இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஸ்.செல்லம்மா (68), பிரதீப் ராஜ் (49), மற்றும் கண்டி சில்வெஸ்தர் கல்லூரியில் 4 ஆம் வகுப்பில…
-
- 0 replies
- 927 views
-
-
நல்லிணக்கமே எமது இலக்கு: அதுவே முதன்மை நோக்கமாகும் என்கிறார் பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ், வத்துகாமம் நிருபர்) நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே எமது அரசாங் கத்தின் முதலாவது எதிர்பார்ப்பாகும். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். எனவே சமாதானம், நல்லிணக்கத்தை பலப்படுத்தி புதிய வேலைத்திட்டத்துடன் நாட்டை முன் கொண்டு செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன் நாட்டுக்காக புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம் என்றும் அவர் குறிப்ப…
-
- 0 replies
- 228 views
-
-
மஹிந்தருக்கு கடுப்பை ஏற்படுத்திய சுரேஸ் எம்.பி! வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும் என்று உடும்புப் பிடியாக உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். இவர் ஏசியன் த்ரிபியூன் என்கிற ஆங்கில இணையத் தள பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் இதை வலியுறுத்தி உள்ளார். ஆனால் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்றுகூட தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தயார் என்றும் இருப்பினும் இலங்கை போன்ற சிறிய ஒரு நாட்டில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் அதைச் செய்ய தனிப்பட விரும்பவில்லை என்றும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. இந்நிலையில் ஏசியன் த்…
-
- 0 replies
- 1k views
-
-
சுயநல எண்ணம் கொள்ளாது மே-18இல் ஒன்றிணையுங்கள்!! சுயநல எண்ணம் கொள்ளாது மே-18இல் ஒன்றிணையுங்கள்!! தாயக மீட்புக்கான ஆயுதப் போராட்டம் உலக நாடுகளின் ஆதரவுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. போரில் தமது பிள்ளைகளை மாவீரர்களாகக் கொடுத்த பெற்றோர், உறவினர்கள், போரைத் தாங்கிய போராளிகள், மக் கள் அனைவரதும் மன எண்ணங்களைப் புரிந்து அனைவரும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே – 18 அ…
-
- 0 replies
- 326 views
-
-
‘புனுகுப் பூனை’க்குப் பொருத்தமான பதவி – பொன்சேகாவைக் கிண்டலடிக்கும் நாமல் அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “சரத் பொன்சேகாவை புனுகுப் பூனை என்று அழைப்பதுண்டு. அவருக்கு அமைச்சரவை மாற்றத்தின் மூலம், வன வாழ் உயிரினங்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்குப் பொருத்தமான அமைச்சுத் தான். ஆனால் விஜித் விஜிதமுனி சொய்சாவுக்கு கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கும் கடலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். அதேவேளை, தமக்கு வழங்கப்பட்டு…
-
- 0 replies
- 270 views
-
-
சிறுவர்களை இராணுவத்துடன் சேர்த்து இயங்கும் படையில் இணைகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
-
- 1 reply
- 1.1k views
-
-
முத்துக்குமாரின் தியாகத்தை ஈடு செய்ய காங்கிரஸை ஒழிப்போம் முத்துக்குமார் வீரவணக்க நாளில் அவரது சொந்த ஊரில் நடைபெற்ற நிகழ்வில் வீரவணக்கவுரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் தனது உரையில் முத்துக்குமாரின் தியாகத்தை ஈடு செய்ய காங்கிரஸை ஒழிப்போமென்றும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது தமிழக மக்களின் உரிமைகள் மீதான தடை என்றும் தெரிவித்துள்ளார். http://meenakam.com/
-
- 0 replies
- 377 views
-
-
காலை உணவின்றி பாடசாலை செல்லும் குடாநாட்டு மாணவர்கள். யாழில் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாடு காரணமாக குடாநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் காலை உணவு உண்ணாமலே பாடசாலைக்கு செல்வதால் வகுப்பறைகளில் மயங்கி விழுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் பசிக் கொடுமை காரணமாக கல்வியில் நாட்டமின்றியிருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை தென்மராட்சி கல்விவலயத்தில் தற்போது மாணவர்கள் 50வீதமானோர் மட்டுமே பாடசாலைக்கு வருவதாகவும் ஏனையோர் கடுமையான பசிக்கொடுமை காரணமாக படசாலைக்கு வரவதில்லை எனவும் தென்மராட்சி கல்விவலயம் தெரிவிக்கின்றது. சிறுவர்களதும் மாணவர்களதும் இந்த அவலம் குறித்து சிறுவர் உரிமை அமைப்புக்கள் மௌனமாக இருப்பது. குடாநாட்டு மக்களை விசனமட…
-
- 0 replies
- 790 views
-
-
சன்சீ கப்பலில் சென்ற வன்னியில் ஈழநாதம் பத்திரிகையில் ஊடகவியலாராகவும், பணியாளராகவும் பணியாற்றியவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர். சன்சீ கப்பலில் சென்றவர்களில் வன்னியில் பத்திரிகைகள், மற்றும் புனர்வாழ்வுக்கழகத்தில் பணியாற்றியவர்களையும் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டனர். தற்போது ஈழநாதம் மற்றும் புனர்வாழ்வுக்கழகத்தில் பணியாற்றியவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அல்லர் என சட்டவாளர்கள் உறுதிப்படுத்தியதை அடுத்தே விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈழ நாதம்
-
- 1 reply
- 796 views
-
-
உரித்துக்களை எடுத்துரைக்கச் சென்ற வடமாகாண முதல்வர்,இரணைதீவு மக்களின் கேள்விகளை அடுத்து தனக்கு காணி அதிகாரம் இல்லை என ஒப்புதல் தமது காணிகளை மீளப் பிடித்துக்கொண்ட இரணைதீவுமக்களுக்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நிரந்தரமாக குடியேறுவதற்கான அனைத்துஉரிமைகளும் இருப்பதாக கூறிய வட மாகாண முதலமைச்சர் தனக்கு காணி அதிகாரம் இல்லை என்பதைமக்களின் கேள்விகளை அடுத்து பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கின்றார். 26 வருடங்களாக்கு முன்னர் தங்களைவிரட்டியடித்த ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு இரணைதீவில் மூன்று ஏக்கர் காணிகள் மாத்திரம்போதுமானது என்ற உண்மையை வட மாகாண சபை, ஆட்சி முடிவடைவதற்கு ஒருசில மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே அறிந்துகொண்டதாகவும்வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னே…
-
- 1 reply
- 229 views
-
-
கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Posted on January 1, 2023 by தென்னவள் 14 0 புதுவருட தினமான இன்றும் (ஜன 1) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2142ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம், அவர்களது போராட்ட பந்தலுக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி தேவை என்பதோடு அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், …
-
- 0 replies
- 287 views
-
-
புதிய திட்டம் தேவையில்லை: நோர்வே சமாதான முயற்சிகளில் பயன் எதுவும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்திருக்கும் வேளையில், இலங்கையின் சமாதான முயற்சி தொடர்பாக நோர்வே புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்று நோர்வே அறிவித்துள்ளது. சிறிலங்கா அரசுடனும் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கப்போவதாகவும் இருதரப்பினருக்கும் உதவத் தயாராக இருப்பதாகவும் எரிக் சொல்ஹெய்மின் பேச்சாளர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் சிறிலங்கா அரசு நோர்வேக்கு எழுதிய கடிதத்தில், சமாதான முயற்சிகளில் பயனெதுவும் இல்லை என்று விடுதலைப் புலிகள் தரப்பு அறிவித்த பின…
-
- 1 reply
- 943 views
-
-
இன்று தென் சூடான், நாளை தமிழீழ விடுதலை February 11, 2011 இரத்தம் சிந்தாமல், துன்பங்களை சந்திக்காமல் கிடைப்பது அல்ல விடுதலை. இப்பாரிய போராட்டங்களின் பின்னர் கிடைப்பதுவே உண்மையான விடுதலை. இழப்புக்களை சந்திக்காமல், இழப்புக்களின் வலியை உணராமல் விடுதலை பெறும் மக்கள் எத்தனை காலமாகினாலும் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் காண முடியாது. இவர்கள் இருண்ட வாழ்க்கையையே நடாத்திக்கொண்டிருப்பார்கள். பல போராட்டங்கள் செய்து விடுதலை பெறும் மக்கள், தாம் பட்ட துன்பங்கள் தமது எதிர்கால சந்ததிக்கு வந்துவிடக் கூடாதென்கிற நோக்குடன் துணிச்சலுடன் செயலாற்றி தம்மையும், தமது தேசத்தையும் உயர்த்துவதற்காக கடினமாக உழைப்பார்கள். இப்புதிய ஆண்டில் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகப்போகும் தென் சூடான் என்கிற புதியந…
-
- 1 reply
- 723 views
-
-
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 138 இந்திய மீனவர்களையும் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா கண்டிப்பாகக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, நேற்றுக் காலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்போது இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்ட எஸ்.எம்.கிருஸ்ணா, அவர்களை விடுதலை செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இந்த நடவடிக்கை குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை அமைச்சர் பீரிஸிட…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்களத் தலைமைத்துவம் – சிக்கலில் சிக்கியிருக்கின்றது- கூறுகிறார் விக்கி.!! சிங்களத் தலைமைத்துவம் சிக்கல்களைச் சந்திக்கும் இந்தத் தருணத்தில்தான், ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்து கொண்டி ருக்கும் இடர்களைப் பற்றி எல்லாம் உலகறியச் செய்ய வேண்டும். சுயாட்சியை வழங்க அவர்களே முன்வர வேண் டும். ஒரு கட்டத்தில் தமது தேவையின் நிமித்தம் எமக்குரிய சுயாட்சி உரிமையை அவர்கள் கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்…
-
- 2 replies
- 416 views
-
-
விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாப் பயன்படுத்துவதில்லை - அரசின் குற்றச்சாட்டுக்கு இளந்திரையன் மறுப்பு. விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டுவதற்கு சிறீலங்கா அரசுக்கு எதுவித அருகதையும் இல்லை. யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்கு, யுத்த சூழலைக் கண்காணிப்பதற்கு என சர்வதேச சமூகத்தின் ஒப்புதலின் பேரிலும் இரு தரப்பினரும் ஏற்றக் கொண்டதற்கு அமைய இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் இருக்கின்றார்கள். கண்காணிப்புக் குழுவினரை நடுநிலமையாளர்கள் என அனைவராலும் ஏற…
-
- 1 reply
- 724 views
-
-
Feb 25, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்கா அரசை விமர்சிக்கும் இணையத்தளங்களை தாக்கி அழிப்பதற்கு சீனாவின் சைபர் தொழில்நுட்பம்! சீனாவின் சைபர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதுடன் சீனாவின் இரண்டு சைபர் தொழில்நுட்ப நிபுணர்கள் நிரந்தரமாக பணியாற்றி வருவதாக புலம்பெயர் ஆங்கில இயைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: ஈபுவத் என்ற இணையத் தளத்தின் சிங்களத் தளத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் சைபர் பிரிவினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சீர்செய்வதற்கு துரித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இலங்கைக்கு வெளியே இருந்து இயக்கப்படும் இந்த இணையத்தளம், அரசாங்கத்தின் ஊ…
-
- 0 replies
- 824 views
-
-
இலங்கையிலும் ஒரு சோமாலியா இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுகின்ற இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க தேசமாகக் கட்டியயழுப்புவதற்கு அரசு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. விமானநிலையம் அமைத்தல், அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு, மாடி வீட்டுத் திட்டம் என அந்தப் பட்டியலை நீடித்துக்கொண்டே செல்லலாம். திவிநெகும, மகநெகும என பல வேலைத்திட்டங்களை மஹிந்த சிந்தனையின் கீழ் அரசு முன்னெடுத்தாலும் அவை பின்தங்கிய பகுதிகளுக்கு உரிய வகையில் சென்றடையவில்லை என்பது கசப்பான உண்மையாகும். எனவே, அத்தகைய பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை அரசினதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் கவனத்துக்குக் கொண்டுவந்து மக்கள் குறை தீர்க்கும் ந…
-
- 0 replies
- 418 views
-
-
பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்க இலங்கை துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் (நா.தனுஜா) மனித உரிமைகள் மற்றும் நாட்டின் பிரஜைக்கான அடிப்படை சுதந்திரம் என்பவற்றை பேணுவதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்நகர்வுகள் பாராட்டுக்குரியவை. எனினும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமங்களுக்குட்படுத்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், 2015 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தல், மக்களின் காணிகளை விரைவாக விடுவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை துரிதமான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்க வேண்டும் …
-
- 0 replies
- 357 views
-
-
ஐ.தே.க.வும் தம்மால் தயாரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை அடுத்த மாதம் சமர்ப்பிக்கிறது. இனப்பிரச்சனை தீர்வுக்கு தம்மால் தயாரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தினை ஐக்கிய தேசிய கட்சியும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அனைத்து கட்சிக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.என். சொக்சியும், ஜி.எல்.பீரிசும் கலந்து கொள்வார்கள் எனவும் தமது தீர்வுத்திட்டம் ஒஸ்லோ மற்றும் டோக்கியோ பிரகடனங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகவும் கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் மகிந்த ராஜபக்சவை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க அமைதிப் பேச்சுக்களின் தேக்கநிலை தொடர்பாக கலந்துரையாடியிருந்தார். அதன் போது …
-
- 1 reply
- 771 views
-
-
இலங்கையிலுள்ள மிக விசாலமான நீச்சல்தடாகம் அம்பாந்தோட்டை துறைமுகம் : ரணில் விக்கிரமசிங்க _ வீரகேசரி இணையம் 3/12/2011 3:33:08 PM அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தைப்பற்றி பெருமை பேசுகின்றது. ஆனால் ஒருபடகு கூட இத்துறைமுகத்திற்கு வரவில்லை. இது வெறுமனே இலங்கையிலுள்ள மிக விசாலமான நீச்சல்தடாகம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மல்வானை நகரில் இடம்பெற்றதேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் காலி முகத்திடலுக்கு முன்னால் இருந்த இராணுவ தலைமையகம் சீனாவின் 'கதிக்"; என்ற நிறுவனத்திறகு விற்கப்பட்டுள்ளது. இன்று அரசாங்கம் வெளிநாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலமாக மின்சாரம், எரிவாயு போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. சமு…
-
- 1 reply
- 1.1k views
-
-
Facebook Twitter Google Plus Pinterest LinkedI File Photo பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் சிரேஸ்ட்ட தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ டெல்லி செல்கிறார்.. ராஜீவ் கொலை வழக்கின் முக்கிய சதிகாரர் இத்தாலியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ந…
-
- 0 replies
- 354 views
-
-
(எம்.மனோசித்ரா) சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி எமது நாடு சிறப்பாகவுள்ளதாக வெளிநாட்டு தூதுவர்களிடமும், இராஜதந்திரிகளிடமும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம். கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளே இதற்கு காரணமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது இலங்கை பாரிய நெருக்கடி மிக்க நாடாக காணப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளால் இந்த நிலைமை ஏற்பட்டத…
-
- 3 replies
- 567 views
-
-
நாட்டின் ஒரு பகுதியை பிரித்துக் கொடுக்க தென்னிலங்கை மக்கள் ஒரு போதுமே விரும்பமாட்டார்கள். இந்த நாட்டில் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்காக அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க அம்பாந்தோட்டையில் 150 வீடுகளை கடல்கோளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார். சர்வதேச `கெயர்' நிறுவனம் இந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தொடர்ந்து பேசுகையில்; "சமாதானப் பேச்சுவார்த்தைகளை குழப்பியது யார்? அரசாங்கமா விடுதலைப் புலிகளா என்பதை நாடு அறியும். அரசாங்கம் சமாதானப் பேச்சுகளுக்கு எப்போதுமே தயாராகவுள்ளது. ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாளை ஐபிசி தமிழில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் உருத்திரகுமார், மாலை ஆறு மணி முதல், புலம்பெயர் எம்மவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக தெரிகிறது. நாடுகடந்த அரசு பற்றிய விமர்சனங்கள், கேள்விகளை ஐபிசி தமிழுக்கு மின்னஞ்சலில் அனுப்பும்படி ஒலிபரப்புகிறார்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்கள், ஐயப்பாடுகள், ஆதங்கங்களை கண்டிப்பாக அவரின் கவனத்துக்கு கொணரலாம். தமிழ் மக்களின் ஸ்தம்பித்திப் போயுள்ள அரசியல் அபிலாசைகளை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு முன்னகர்த்தப் போகிறார்கள் என்பதை அறிய நாமும் ஆவலுடன் உள்ளோம். பி.கு: நம்மளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்கள் உறவினர்களோ அன்றி நண்பர்களோ அல்ல, அப்படி இருப்பினும் அதற்காக இக்கட்டமைப்புக்கு ஆதரவளிக்கவில்லை. இன்று தாயகத்தில் …
-
- 18 replies
- 2.7k views
-