Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டம், மாற்றப்பட வேண்டும்! December 18, 2021 மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சிறந்த தருணம் வந்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுவதை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு GSP வரிச் சலுகையை மீள வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. …

  2. யாழ்ப்பாணத்தில் தொடரும் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் அண்மையில் மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பொலிஸாரின் தலையீட்டினால் இணக்கத்துடன் முடித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் …

  3. எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்பில் சிறிலங்கா தொடர்பில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல, "சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின்றி சிறிலங்கா போன்ற நாடுகளால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது. உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, அப்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் நான் முக்கியமானதொரு விடயத்தை சுட்டிக்காட்டிருந்தேன். அதாவது மண்டேலாவின் வழி, முகாபேயின் வழியென இரண்டு வழிகள் உள்ளன. மண்டேலாவின் வழியை தெரிவுசெய்யுமாறு கோரின…

  4. தனிநபரால் 500 ஏக்கர் காணி ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் வவுனியா பறண்நட்டகல் பகுதியில் தனி நபர் ஒருவர் 500 ஏக்கர் அரச காணியினை அத்துமீறி அபகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஏ9 வீதியில் பறண்நட்டகல் சந்தியில் மழையினையும் பொருட்படுத்தாமல் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் “எமது கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான 500 ஏக்கர் காணியினை தனிநபர் ஒருவர் அபகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார். பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருக்கு தெரியப்படுத்தியும் எமக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. …

  5. யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் மெலும் தெரிவிக்கையில், எங்களுடைய அமைப்பு குறித்த பாதீட்டை எதிர்க்கும். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். புதிய விடயம் அல்ல. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அது மிக விரைவில் வெளிவரும். ஊழல் செய்து தனிபர் உழைப்பதற்கான ஓர் இடமாக மாறியுள்ளது. இதனை மக்கள் மிக விரைவிலே உணர தொடங்குவார்கள். அந்த கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு ஒருநாளும் முடிவுக்கு வர முடியாது. ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடும் நிலைதான…

  6. யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில் இரண்டு லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது. அதனால், அவரது மீசை தீயில் கருகியது. இருந்த போதிலும் பெரியளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேவேளை நேற்று மாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு அருகில் முதியவர் ஒருவர் லைட்டர் மூலம் சுருட்டை பற்ற வைக்க முனைந்த போதிலும் , லைட்டர் வெடித்துள்ளது. நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடிப்புக்கள் வெடிப்பு சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ள நிலையில் , தற்போது சாவகச்சேரியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க…

  7. கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி , தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் 2 வருட கால விசாரணைகளின் பின்னர் , பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந…

  8. கொழும்பிலுள்ள உணவகங்கள் பலவற்றில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கொழும்பிலுள்ள பல உணவகங்கள் இன்றைய தினம் மூடப்பட்டிருந்ததாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போது எரிவாயு, மரக்கறி, அத்தியாவசிய பொருட்கள் என்பனவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடுகள் நிலவிவருவதால் மக்கள் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/shortage-of-lunch-in-colombo-restaurants-1639673655

    • 5 replies
    • 640 views
  9. டொலர் நெருக்கடியிலிருந்து மீள அரசாங்கம் போராட்டம் ; நிதி அமைச்சர் பசில் அவசரமாக டுபாய்க்கு விஜயம் (லியோ நிரோஷ தர்ஷன்) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை அதிகாலை டுபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிகாலை 2.55 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த எமிரேட்ஸ் விமானத்திலேயே நிதியமைச்சர் டுபாய் நோக்கி சென்றுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டார். நாடு எதிர்க்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை சீர் செய்யும் வகையில் நட்பு நாடுகளிடம் இலங்கை உதவிக்கரம் நீட்டிவருகின்ற நிலையில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளார். அது அவ்வாறிருக்க 2022 ஜனவரி மாதம் என்பது இலங்கைக்கு மிகவும் நெருக்கடியானதும் தீர்க்…

    • 5 replies
    • 519 views
  10. (நா.தனுஜா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கான மிகமுக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமுள்ளது. இலங்கையில் மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை வரியின்றி ஐரோப்பிய சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச்சலுகையிலேயே தங்கியிருக்கின்றது. ஆகவே உரியவாறான நோக்கத்தைப் பூர்த…

  11. இலங்கையின் இரண்டு இராணுவத்தினருக்கு எதிரான அமெரிக்காவின் தடை இலங்கை யின் அரசியல் தலைமைக்கான ஒரு செய்தி – உலக தமிழர் பேரவை இலங்கைக்கு அமெரிக்கா தெரிவித்த செய்தியை ஆழமாக ஆராயவேண்டும் என வேண்டுகோள் விடு;த்துள்ள உலக தமிழர் பேரவைநாடு பயணித்துக்கொண்டிருக்கின்ற திசையில் அர்த்தமுள்ள மாற்றத்தை மேற்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை பல நெருக்கடிகளின் மத்தியில் சிக்குண்டுள்ளது என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை அது பயணித்துக்கொண்டிருக்கின்ற பாதை- அதிகளவு ஏதேச்சதிகாரம், இராணுவமயமாக்கல்கொண்டதாக காணப்படுகின்து- தமிழ் முஸ்லீம் இந்து சமூகத்தினர் மேலும் புறக்கணி;க்கப்படுகின்றனர்- பொதுமக்கள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளனர் இதன் காரணமாக நாட்டில் புதிய மோத…

  12. பெட்டா ரயில் நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஊடகங்களுக்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். வேலைநிறுத்தம் நடந்தால் டிக்கெட் ஏன் விற்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விடுமுறைக்கு ஏராளமான இடங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சுற்றுலா பயணி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எவரேனும் இலங்கைக்கு விஜயம் செய்ய வந்தால், தமது சொந்த வாகனத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றார் . பெருமாள் .

    • 13 replies
    • 934 views
  13. பட்டதாரிகளுக்கு இந்த மாதத்திற்குள் நிரந்தர நியமனம்! அரச சேவையில் பயிற்சியாளர்களாக இணைக்கப்பட்டுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார். இதுவரை 50,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அரச சேவை பயிற்சியில் இணைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களின் வி…

  14. (செய்திப்பிரிவு) சவூதி அரசாங்கம் தப்லீக் ஜமாத் அமைப்பினை தடை செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பாரதூரத்தன்மையை தற்போது விளங்கிக் கொண்டுள்ளதுடன், தவறுகளையும் திருத்திக் கொண்டுள்ளன. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெறுவதற்கு பிரதான காரணியாக உள்ள தப்லீக் ஜமாத் அமைப்பினை தடை செய்வது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபலசேனா அமைப்பில் வியாழக்கிழமை ( 16 )இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் ச…

    • 2 replies
    • 442 views
  15. இலங்கையில், காணி, பிறப்பு, இறப்பு பதிவுகள் இணையவழியே கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், இன்று முதல், காணி உறுதி, பிறப்பு, இறப்பு பதிவுகள் இணைய வழியே பெற முடியும். இது நாட்டில் உள்ள, சகல காணி பதிவக, பிறப்பு, இறப்பு பதிவக ஒன்றினைப்பதாக உள்ளது. ஆகவே, ஊரில், காணி, பூமி வைத்திருப்போர், கள்ள உறுதி பற்றி செக் பண்ணலாம். http://www.rgd.gov.lk/web/index.php?lang=en https://www.dailymirror.lk/latest_news/Online-system-to-receive-deeds-and-extracts-from-today-Register-General/342-227060 பிறப்பு சான்றிதலை, உறிதியை எடுத்து தா எண்டு உறவினரைக் கேட்டால், பொல்லால அடிச்ச காசு கேக்கினமே? இனி..... நேரா டவுண்லோட்பண்ணுங்க.... இரண்டு கிழமைக்கு…

  16. யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரொருவரே தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரிய அறிகுறிகளுடன் நேற்றிரவு 8 மணியளவில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.போதனா மருத்துவமனையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு மருத்துவ அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவருக்கு மலேரியாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டத…

  17. வடக்கில் வேலை வாய்ப்பின்மை உச்ச நிலையில் வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருக்கின் றனர் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. சாதாரண தரம் கல்வி கற்றவர்களில் 7.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். ஒட்டுமொத்தமாக இலங்கையில் உயர் தரம் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களில் 9.1 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் தொழில் …

  18. தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காக காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் திருவுருவச்சிலை திறந்துவைப்பு December 16, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டுகாலப் பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காக குரல்கொடுத்த நிலையில் காணாமல்போயிருந்த அருட்தந்தை ஜோன் ஹேர்பட் அவர்களின் திருவுருவச்சிலை இன்று மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. ஊரணி சந்தியில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் இந்த சிலை இன்று காலை திறந்துவைக்கப்பட்டது. இலங்கை ஜேசுசபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழாவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார். இந்த த…

  19. எழிலன் உட்பட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தவணையிடப்பட்டது December 16, 2021 விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 2009ம் ஆண்டு போர் நடைபெற்ற காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டதாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் இன்று (16) அறிவிக்கப்படவிருந்த நிலையில், மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆயாராகிய மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், …

  20. இலட்சக்கணக்கான துப்பாக்கி ரவைகள் தொடர்ந்தும் மீட்பு ShanaDecember 16, 2021 கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் அடங்கிய இரு பெட்டிகளை மீட்டுள்ளனர்.இதுதொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக குறித்த பகுதி கிராம அலுவலர் கோணாமலை சேகர் முன்னிலையில் நேற்று (15) முற்பகல் 9 மணி முதல் அ…

  21. மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களாக காலையிலும் மாலையிலும் இருவர் பதவியேற்பு! மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் இரு ஆணையாளர்கள் சம்பிரதாயப்பூர்வமாக இன்று(புதன்கிழமை) தமது பதவிகளை பொறுப்பேற்று கொண்டதையடுத்து ஒரே நாளில் இருவர் ஒரே பதவிக்கான கடமையை பெறுப்பேற்ற வரலாற்று சாதனை இடம்பெற்றுள்ளது. மாநகரசபை ஆணையாளராக் கடமையாற்றி வந்துள்ள எம்.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக பொறியியலாளர் ந.சிவலிங்கம் ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டு அவர் இன்று காலையில் தனது கடமைகளை சம்பிரதாயப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து பிற்பகல் புதிய ஆணையாளராக கடமைகளை பொறுப்பேற்ற பொறியியலாளர் ந.சிவலிங்கத்துக்கு பதிலாக மீண்டும்…

  22. சிங்கப்பூரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் ஜனாதிபதி ! சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்த அவர் நாளையதினமே நாடு திரும்ப இருந்தார். ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில் நேற்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதனை அடுத்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்று (புதன்கிழமை) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமானார் மறுபுறம் ஜனாதிபதியின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டுமென ஆளுங்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஜனாதிபதியின் செயலாளர் …

    • 4 replies
    • 456 views
  23. வவுனியா நெடுங்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இன்று (15) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா - நெடுங்கேணி - சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த நபர் ஒருவர் அவர் மீது நாட்டுத்துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். குறித்த பெண் விவசாய காணியிலிருந்து உணவருந்துவதற்காக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது வீட்டுக்கு அண்மித்த பகுதியில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் 34 வயதுடைய பாலசுந்தரம் சத்தியகலா என்ற ப…

  24. கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காகதற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனுக்கு,, விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது. தமது இல்லத்துக்கு, கொஹுவளை வலய பொலிஸ் நிலையம் மூலமாக, கொண்டு வந்து தரப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தால், அதை தமிழ் மொழியில் அனுப்புமாறும், அதுவரை அதை ஏற்று தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது என்றும், தமிழ் மொழியிலான ஒரு மின்னஞ்சல் பதில் கடிதத்தை, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, மனோ க…

  25. யாழ். மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றம் – கூட்டமைப்பு எதிர்ப்பு! யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான பாதீடு இன்று (புதன்கிழமை) மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதே வேளை, தம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.