ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
இராணுவ வீரர்கள் 10 ஆயிரத்து 369 பேருக்கு தரமுயர்வு இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, இராணுவ அதிகாரிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10 ஆயிரத்து 369 இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1243922
-
- 1 reply
- 327 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணசபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும்-பா.அரியநேத்திரன் October 9, 2021 வடக்கு கிழக்கில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாகவும் மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் வடக்கு கிழக்கு மாகாணசபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். 3000 பனை விதைகள் நடும் வாலிபர்கள் என்னும் தலைப்பில் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு ப…
-
- 3 replies
- 384 views
-
-
மோடி திறக்கவிருக்கும் உத்தரப்பிரதேச விமான நிலையத்திற்கு இலங்கையிலிருந்து முதல் விமானம் : ஜனாதிபதி உள்ளிட்ட பௌத்த தேரர்கள் பங்கேற்பு ஆர்.ராம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உள்ளடங்கலாக 125பேர் கொண்ட குழுவினருடன் இலங்கையிலிருந்து குறித்த விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளதாக இந்தியா ருடே மற்றும் த டைம்ஸ் ஒப் இண்டியா ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்…
-
- 0 replies
- 266 views
-
-
அராலி பகுதியில்... சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய, இராணுவ வீரர்கள்- விசாரணையை ஆரம்பித்துள்ள இராணுவத் தரப்பு யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கார் ஒன்றில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்துள்ளனர். இதனால் அவர்களை வழிமறித்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது, தாம் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். மேலும், தாம் இயக்கச்சி இராணுவ முகாமில் கடமையாற்றுபவர்கள் என்றும் தற்போது விடுமுறை…
-
- 0 replies
- 471 views
-
-
புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் மாகாண சபை தேர்தல் இல்லை நாடாளுமன்றில் புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் எந்தவொரு முறையிலும் மாகாண சபையை நடத்த முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்திலேயே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயற்பட்டு வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனினும், இந்த சட்ட நிலைமை ஒரு தடையாக இருப்பதை தினேஷ் குணவர்தன, குழு உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2021/1243872
-
- 0 replies
- 270 views
-
-
மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் நாளைய தினம் (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த யோசனையை முன்வைத்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த விலையை 100 ரூபாயினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண கோரியுள்ளார். இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடி…
-
- 0 replies
- 289 views
-
-
ரிஷாத்தின் பிணை கோரிக்கை : 14 ஆம் திகதியன்று வாதங்கள், சட்ட மா அதிபரும் இணக்கம் எம்.எப்.எம்.பஸீர் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை தொடர்பிலான வாதங்களை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இது தொடர்பிலான வழக்கு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் ரிஷாத் தரப்பின் சட்டத்தரணிகளின் இணக்கத்துடன் இந்த திகதி குறிக்கப்பட்டுள்ளது. நேற்றைய…
-
- 2 replies
- 358 views
-
-
சரத் பொன்சேகா... நரி, போல செயற்படுகின்றார்- சீ.பீ.ரத்னாயக்க முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார் என அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க மேலும் கூறியுள்ளதாவது, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச்செயலாளராக செயற்பட்டார். இவர்களின் ஆதரவு இருந்தமையினால்தான், அன்று சிங்கம்போல சரத்பொன்சேகா யுத்தத்தை முடித்தார். ஆனால், நாடாளுமன்றம் வந்தபின்னர் நரிபோல் செயற்படுகின்றார். பாரம்பரிய வைத்திய முறைமையை கொச்சைப்படுத்த…
-
- 0 replies
- 172 views
-
-
நான் சமர்ப்பித்த சட்ட மூலத்தை உபயோகித்து, மாகாணசபை தேர்தலை நடத்தலாம்- சுமந்திரன் நான் சமர்ப்பித்த சட்டமூலத்தை உபயோகித்து, சட்ட திருத்தத்தினூடாக மாகாணசபை தேர்தலை நடத்த முடியுமென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் முறை மறுசீரமைப்பு பற்றிய கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. குறித்த தெரிவுக்குழுவிற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இவ்…
-
- 0 replies
- 284 views
-
-
இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் ஜெனீவாவில் கனேடிய ஆதரவு : கவலை தெரிவித்தார் பீரிஸ் (எம்.மனோசித்ரா) ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் கனேடிய ஆதரவு குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் கவலை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. ஜெனீவா மற்றும் நியூயோர்க்கிலான இலங்கையின் அண்மைய பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்தும் உயர்ஸ்தானிகருக…
-
- 1 reply
- 371 views
-
-
Ebay எனப்படும் ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளில் பெண்களுக்கான நீச்சல் உள்ளாடைகள் விற்பனை செய்யப்படுவது தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம், உலக அளவிலான ஆயுதக் குழுக்களில் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் கடைபிடித்த ஒன்று என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் பலரும் பதிவு செய்திருக்கின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். அமெரிக்கா மீதான இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் உலக நாடுகளின் அடிப்படை கோட்பாடுகள் அடியோடு மாறிப் போயின. தேசிய இனத்துக்கான விடுதலைப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் கூட பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். இதனா…
-
- 7 replies
- 817 views
-
-
மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபை தேர்தல்; பஸில் ராஜபக்ஷ அறிவிப்பு October 9, 2021 நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் நேற்று அறிவித்தார். இந்திய வெளிவிவகார செயலர் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் பஸில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். இந்தப் பேச்சுகளின்போது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய மாகாண சபை தேர்தல் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தேர்தல் முறைமைகள்…
-
- 0 replies
- 186 views
-
-
காடுமண்டி தூர்ந்து கிடக்கும் புராதன ஆலயத்தை பார்க்க படையெடுக்கும் பக்தர்கள். பல நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் புராதன ஆலயமே இவ்வாறு காடுமண்டி புதர்பிடித்து சிதைந்து அழிவுற்ற நிலையில் காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட வயற் பிரதேசத்தில் இப்பழம் பெரும் ஆலயம் காணப்படுகிறது.அருகில் தற்போதைய ஆலயம் மரங்களால் நிறைந்த சோலையில் உள்ளது. பூரணை தினங்களில் அங்கு கூடும் பக்தர்களுக்கு அளவேயில்லை.அதனருகே புதிதாக கட்டப்பட்ட ஆலயம் விரைவில் குடுமுழுக்கு காணவிருக்கிறது. இந்நிலையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கடந்தவாரம் அங்கு விஜயம் செய்து இப்புராதன ஆலயத்தைப் பார்…
-
- 0 replies
- 409 views
-
-
வடக்கு – கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் கூட்டமைப்பிடம் உள்ளன. இரா.சாணக்கியன் வடக்கு – கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டை நடத்தி செல்ல வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். செலவு குறைவாக இருக்கவேண்டும். சாதாரணமாக கூறுவது என்றால் நாட்டில் பணம் இருக்க வேண்டும். உலகில் ஷ்டீவ் ஜொப்ஸ். பில்கேடஸ், ஜெக் மார்க் போன்ற மில்லியனர்கள், பி…
-
- 0 replies
- 368 views
-
-
யாழ்.போதனாவில் 62 பேருக்கு நிரந்தர நியமனம் October 8, 2021 யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றி வந்த 62 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது. குறித்த நியமன கடிதங்கள் சுகாதார உதவியாளர்களுக்கு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. https://globaltamilnews.net/2021/166996
-
- 0 replies
- 242 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் October 8, 2021 இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்குள் எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை அறுத்து எறிவதோடு படகுகளை சேதமாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் நிலையில் அவற்றை தடுக்க கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநகர் மீனவர்கள் கற்கட தீவுக்கு அருகில் மீன் ப…
-
- 2 replies
- 420 views
-
-
(நா.தனுஜா) இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/60698/thumb_world_bank.jpg இருப்பினும் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் சவால்கள் மற்றும் கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கங்களின் விளைவாக நடுத்தரகால மதிப்பீடுகள் மந்தகரமான நிலையில் காணப்படுவதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியப்பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளின் தற்போதைய பொருளாதார நிலைவரம், கொவிட் - 19 தொற்றுப்பரவலுக்கு முன்னராக காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பாரிய மாற்றங்களுக…
-
- 0 replies
- 223 views
-
-
(எம்.நியூட்டன்) யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வில்வம் பழ யோகட் பானத்தின் கண்டுபிடிப்பாளர் உரிமத்தைக் கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சார்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், உற்பத்தி உரிமத்தைப் பெற்றுக்கொண்ட முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் சி.தவசீலனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வின்போத…
-
- 0 replies
- 443 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது எனவும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களை முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரைத்துள்ளதுடன், விகிசாதாரப் பிரதிநிதித்துவமே நாட்டுக்குப் பொருத்தமானது எனவும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கோட்பாடுகள் மாற்றப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் நிறைவேற்று ஜனாதிபதி முறையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற விசேட குழுவில் தமது யோசனைகளை முன்வைத்துள்ளது. பாராளுமன்ற …
-
- 0 replies
- 385 views
-
-
பல மில்லியன்கள் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட வீதி சேதம் - மக்கள் விசனம் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி பல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு நான்கு வருடங்கள் முடியும் முன்னரே வீதி முற்றாக தேசமடைந்து சாதாரண துவிச்சக்கர வண்டியில் கூட பயணிக்க முடியாத நிலையில் காணப்படுவது தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியானது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வீதியானது பொது மக்களின் நீண்டகால கோரிக்கை்கு அமைவாக முதற்தடவையாக காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட வீதி காபெற் வீதியாக புனரமைப்புச் செய்ய…
-
- 9 replies
- 573 views
- 1 follower
-
-
வடக்கில் நீர்வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு 14 கோடி – நீடித்த நன்மைகளை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பெருந் தொகையினை சரியான முறையில் பயன்படுத்தி பயனாளர்கள் தங்களுடைய வாழ்வை வளப்படுத்திக் கொள்வதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்ய முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கடலட்டை வளர்ப்பு, கடல் பாசி செய்கை மற்றும் கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புகின்ற தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்து பயனாளர்களுக்கு ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செ…
-
- 0 replies
- 182 views
-
-
திருக்குமார் நடேசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது பெண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (08) முற்பகல் ஆஜரான முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமார் நடேசன் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். கடந்த தினம் வௌியான பெண்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கடந்த தினம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பெண்டோரா ஆவணங்களில் திருக்குமார் நடேசனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஆணைக்குழுவில் ஆஜ…
-
- 0 replies
- 185 views
-
-
இந்தியாவிற்கு வாக்குறுதியளித்தது போல் 13ஆம் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? ; எதிர்க்கட்சி கேள்வி (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தேசிய ரீதியில் எந்த பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காது 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு வாக்குறுதியளித்துள்ளதா? இந்தியாவிற்கு வாக்குறுதியளித்தது போல் 13ஆம் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? என பிரதான எதிர்க்கட்சி சபையில் கேள்வி எழுப்பியது. எனினும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை சபையில் ஆளுந்தரப்பினர் முன்வைக்கவில்லை. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மீதான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஒ…
-
- 1 reply
- 263 views
-
-
யாழில்... பல்வேறு நீர்வழங்கல் திட்டங்கள், பிரதமரினால் ஆரம்பித்துவைப்பு! ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, அலரிமாளிகையில் வைத்து இன்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 6 கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5000 க்கும் அதிகமான பாவனையாளர்கள் சுத்தமான குடிநீரினை பெறவுள்ளனர். அத்துடன் தாளையடி…
-
- 5 replies
- 450 views
-
-
LTTE இன்... புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர், சென்னையில் கைது! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டிலேயே குறித்த சந்தேகநபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் போராளி அமைப்பின் மீள் உருவாக்கம் கருதியே இந்த ஆயுதக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில், சென்னை, வல்சரவாக்கத்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்…
-
- 6 replies
- 817 views
-