ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த மூவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2022ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இடைநிறுத்தியுள்ளது. எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவருமே இவ்வாறு கட்சியின் பொறுப்புகளில் இருந்து உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் உயர் பீடத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டு வரவு -செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக, அவர்களிடம் விளக்கம…
-
- 0 replies
- 180 views
-
-
திறந்து வைக்கப்பட்டது “கல்யாணி தங்க நுழைவு” இலங்கையின் முதலாவது அதி நவீன தொழிநுட்பத்தின் கூடி கேபிள்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நேற்று(புதன்கிழமை) குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு “கல்யாணி தங்க நுழைவு” (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1252081
-
- 22 replies
- 1.9k views
- 1 follower
-
-
தேசிய எரிபொருள் வாயு நிறுவனத்தை ஸ்தாபிக்க அனுமதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமாக தேசிய எரிபொருள் வாயு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பெட்ரோலிய வளங்கள் சட்டத்தின் 5ஆம் பகுதியின் பிரகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குமான பொறுப்புகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1252122
-
- 0 replies
- 180 views
-
-
பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு! அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர நியமனம் வழங்கப்படுவோருக்கு மாதாந்தம் 41 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் 58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1252117
-
- 1 reply
- 153 views
- 1 follower
-
-
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டல்கள் வெளியாகின! ஜனாதிபதி சட்டத்தரணிகளின் நியமனத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2255/24 ஆம் இலக்கம் என குறிப்பிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி 2147/37 என இலக்கம் குறிப்பிட்டு வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1252125
-
- 0 replies
- 157 views
-
-
ஈஸ்டர் தாக்குதலுக்கு, பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை... இரத்து செய்ய தயாராகின்றது அரசாங்கம்? ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய களனி பாலத்தினை திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டு வந்து அதனை நிறைவேற்ற தயார் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என கட…
-
- 0 replies
- 154 views
-
-
நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்! நாட்டில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதத்தின் 17ஆம் திகதி வரை 5 ஆயிரத்து 275 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 4 ஆகும். 2020 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 579 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், க…
-
- 0 replies
- 148 views
-
-
(நா.தனுஜா) இலங்கையுடனான தமது வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையாக மனித உரிமைகளே காணப்படுவதாகவும் நிரந்தர சமாதானத்தை அடைந்துகொள்வதற்கான தேடலில் தமிழ் மக்களுக்கான ஆதரவை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ, இலங்கையிலிருந்து சென்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரிடம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் அடங்கிய சட்டநிபுணர் குழு கடந்த 13 ஆம் திகதி அமெரிக்கா பயணமானத…
-
- 0 replies
- 335 views
-
-
(எம்.நியூட்டன்) தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டத்திற்கமைய, கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயிறு பயிர்ச்செய்கைத் திட்டத்தினொரு கட்டமாக விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. யாழ். மாவட்டம் முழுவதும் 8 மில்லியன் ரூபா…
-
- 1 reply
- 354 views
-
-
டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (23) யாழ். மாவட்ட செயலகத்தில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்துக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் நுளம்புகள் சம்பந்தமான பூச்சியியல் ஆய்விலே டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளும் குடம்பிகளும் அதிகமாக காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய்…
-
- 0 replies
- 259 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) கிளிநொச்சி டிப்போ சந்தியில் சுற்றுவட்டப்பாதை அமைக்கும் சிறீதரன் எம்.பி.யின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றிய சிறீதரன் எம்.பி, டிப்போ சந்தியில் சுற்றுவட்ட சந்தியை அமைத்து சைகை விளக்குகளை பொருந்துமாறு தா…
-
- 0 replies
- 358 views
-
-
(நா.தனுஜா) தேசிய நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கான நடவடிக்கைகளின்போது புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் சர்வதேச நாடுகளின் அரசியல்போக்கு தொடர்பில் கவனம் விசேட கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் கனடா, பிரிட்டன் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளிலும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் படிப்படியாக அந்நாடுகளில் தமக்கென அரசியல் ரீதியான தலைமைத்துவத்தையும் இருப்பையும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஊக்குவிக்கின்ற நாடுகள் பெருமளவான புலம்பெயர் தமிழர்களைக்கொண்ட நாடுகளாக இருக்கின்றன என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அதும…
-
- 0 replies
- 286 views
-
-
உறவுகளை நினைவுகூர அனுமதி கொடுங்கள் - பிரதமர் முன்னிலையில் ஸ்ரீதரன் கோரிக்கை (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) உயிரிழந்த ஆத்மாக்கள் துயிலும் இல்லங்கள் மீது நீங்கள் சப்பாத்துக்கால்களால் மிதிக்கும்வரை இந்த நாட்டில் அமைதி,சமாதானம்,நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் இனவாதத்தை முதலில் தூக்கி எரிய வேண்டும். எமது மக்கள் இழந்த தமது உறவுகளை நினைவுகூர அனுமதி கொடுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் பிரதமர் முன்னிலையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான செலவினத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் …
-
- 0 replies
- 249 views
-
-
தடைசெய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனும் பேசுவது அவசியம் - மஹிந்த சமரசிங்க (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) புலம்பெயர் தமிழ் அமைப்புகளை மட்டுமல்ல சிங்கள, முஸ்லிம் புலம்பெயர் அமைப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தடைசெய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவன் மூலமே அவர்களின் நிலைப்பாடு என்னவென்பது தெரிந்துகொள்ள முடியும் எனவும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ…
-
- 0 replies
- 317 views
-
-
வடக்கு மாகாண பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சர் கணேசநாதன் நியமனம் வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின், பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரி. கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு, போக்குவரத்து தலைமையகம் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய பிரிவுகளின் பனிப்பாளராக கடமையாற்றிய அனுபவமிக்க ரி.கணேசநாதன், இறுதியாக வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய அவர், வட மாகாணத்தில் பொது மக்களுடன் நெருங்கி…
-
- 0 replies
- 214 views
-
-
யாழ்.மந்துவில் பகுதியில் புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் பெருமளவு மீட்பு! November 24, 2021 மாவீரர் வார கால பகுதியில் யாழில். விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருட்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (23.11.21) மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் வடக்கு ஜே/346 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்த தென்னந்தோப்புக்குள் இருந்தே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணிக்குள் விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உட்பட பெருமளவான வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப…
-
- 3 replies
- 387 views
-
-
பருத்தித்துறை மாவீரா் தின ஏற்பாடுகளிலும் படையினரால் அச்சுறுத்தல் November 23, 2021 பருத்தித்துறை முனைப்பகுதியில் கடந்த வருடங்களில் மாவீரா் தின நினைவேந்தல் நடைபெற்ற இடத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் சிரமதானப் பணிகள் நடைபெற்றது. அதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினா் மற்றும் புலனாய்வாளா்கள் குவிக்கப்பட்டிருந்தனா். அவா்கள் அங்கு சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவா்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியும், வாகன இலக்கங்களையும் பதிவு செய்துள்ளனா். அத்துடன் சிரமதானம் முடிந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளா்கள் தத்தமது வாகனங்களில் திரும்பிய வேளையில் மோட்டாா்சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் படையினா் மற்ற…
-
- 0 replies
- 238 views
-
-
புதிய அரசியலமைப்பு வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் – பிரதமர் புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”உலகளாவிய கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கினோம். மக்களின் பாதுகாப்பிற்காக நாம் உரிய நேரத்தில் சகல தீர்மானங்களையும் மேற்கொண்டோம் என்பதனை நாம் உங்களுக்கு…
-
- 0 replies
- 353 views
-
-
இலங்கையில் முதன்முறையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று திறப்பு! இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் இந்தப் புதிய பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய களனி பாலம் ‘கல்யாணி பொன் நுழைவு’ (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதை திறக்கப்பட்ட பின்னர் கொழும்பு நகரம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பன ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டதால் கொழும்பு நகருக்குள் நுழையும் வா…
-
- 0 replies
- 661 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகள் – பிரித்தானியா கவலை! 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம், தமிழ் மற்றும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள் உட்பட பல குழுக்களைத் தடைசெய்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகளுடன் சிறுபான்மை குழுக்களை அரசாங்கம் ஓரங்கட்டுவது தொடர்கிறது என தெரிவித்துள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையானத…
-
- 0 replies
- 195 views
-
-
உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி இரசாயன உரம், பீடைக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் இரசாயன உரம், பீடைக்கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1251958
-
- 12 replies
- 780 views
-
-
பூநகரி பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், ஆளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துடனான பிரதேச சபை அமர்வு, பூநகரி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளை தலைமையில், இன்றுகாலை 10 மணிக்கு, ஆரம்பமானது. இதன்போது, 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது, ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும், குறித்த வரவு - செலவுத் திட்டத்துக்கு கிடைத்திருந்தது. 11 பேர் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்களில் 10 பேரும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர். தவிசாளர் மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசிய கட…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் இதில் மௌனமாக இருக்காது, துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செய்ய முன்வர வேண்டும்-சிவாஜிலிங்கம் குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறுகையில், “மாவீரர் நாளை அனுஷ…
-
- 0 replies
- 184 views
-
-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன்,இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, நேற்று (2021.11.21) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வட்…
-
- 1 reply
- 302 views
-
-
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த குழு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்! ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நௌபர் மௌலவி இந்த ஆண்டு நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும் தலைமைத்துவத்தின் காரணமாக திட்டமிட்டபடி நடக்க முடியாமல் போனமை விசாரணைகளில் தெரியவந்ததாக தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார் மேலும் நௌபர் தற்போது காவலில் உள்ளார் என்றும் விரைவில் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2021இல் திட்டமிடப்பட்ட தாக்குதல…
-
- 0 replies
- 399 views
-