Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஹனா சிங்கர் மற்றும் சாரா ஹல்டனுடன்... கூட்டமைப்பு தனித்தனியே சந்திப்பு! ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோருடன் தனித்தனியான கலந்துரையாடலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தியுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு மற்றும் மார்ச் மாதத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை இடமபெற்ற ஹனா சிங்கருடனான சந்திப்பின்போது குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டிருந்தார். அத்துடன், நில அ…

  2. புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையினை, ஜனாதிபதி நீக்க வேண்டும்- துரைரெட்ணம் கோரிக்கை புலம்பெயர் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்கள் மீதான தடையினை முதலில் ஜனாதிபதி நீக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது, “இனவாதங்கள் பேசி தாங்கள் நினைத்ததை செய்துவிடலாம் என்ற இறுமாப்போடு இருந்த நிலையில், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றமை பெரிய விடயமாகும். இராஜ…

  3. இலங்கை மக்கள்... நவம்பர் மாதமளவில், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன இலங்கை மக்கள் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு மகத்தான சாதனை என்று அவர் சுட்டிக்காட்டினார். சமூகத்தில் வைரஸ் பரவுவது குறைந்து வருவதாகவும் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, தற்போதிருக்கும் நில…

  4. உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடையுத்தரவு- மயானத்தில் சென்று வழங்குமாறு பொலிஸாருக்கு மகன் தெரிவிப்பு தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு பொலிஸார் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறி பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இவ்வாறு பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நால்வருக…

  5. இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தையால் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்டதை தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று விஜயம் செய்திருந்தினர்.

  6. கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கெக்கரிக்காய் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர் தனது உற்பத்திக்களை சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக அவற்றை மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும் இதனால் தனக்கு பல இலட்சங்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயியான சுப்பிரமணிம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கெக்கரிக்காய் உற்பத்தி செய்த போது அவை நல்ல விளைச்சலை தந்ததாகவும், இந்த முடக்க காலத்திற்கு முன் கிலோ 50 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர் முடக்க காலத்தில் 10 ரூபா 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த விற்பனையும் இடம்பெறாமையால் பெருமளவு கெக்கரிக்காய்கள் பழுத்தும், பழுதடைந்தும் இருப்பதா…

  7. மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் விவசாயிகளுக்கும் பங்கு தந்தை ஒருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பண்டிவிரிச்சான் கோவில்மோட்டை பகுதியில் அமைந்துள்ள வயல் காணி தொடர்பிலேயே இந்த வாக்குவாம் இடம்பெற்றுள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக குறித்த வயல் காணியில் அப்பிரதேச விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்ற போதும் அந்த காணியை தமக்கு வழங்குமாறு மன்னார் மடு ஆலய நிர்வாகம் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. இந்நிலையில் மன்னார் மடு ஆலய நிர்வாகத்துக்கு எதிராக விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். எனினும் மாகாண காணி ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோரின் அனுமதியுடன் விவச…

  8. (நா.தனுஜா) அண்மையில் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் யாழ்.நெடுந்தீவிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் அதனை மறுத்திருக்கும் தூதரகம், நாளுக்குநாள் ஊடகப்பணியின் தரம் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் கவலை வெளியிட்டிருக்கின்றது. அதேவேளை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் பற்றிய இந்த பொய்யான செய்தியில் சீனத்தூதுவரையும் உள்ளடக்கியிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும் என்று இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் விமர்த்திருக்கின்றது. இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹமட் சாத் கட்டாக் கடந்த செவ்வாய்கிழமை (21 ஆம் திகதி) காலை 08.00 மணியளவில் அவரது குடும்பத்தினருடன் யாழ்.நெடுந்தீவிற்கு விஜ…

    • 4 replies
    • 569 views
  9. தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம்- கோவிந்தன் கருணாகரம் September 25, 2021 “தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம். அதற்கான வாய்ப்பை ஜனாதிபதியும், இந்த அரசும், இலங்கை பாதுகாப்புத் தரப்பும் எமக்கு வழங்குகின்றார்கள். அதனை சரியாகப் பயன்படுத்துவது எமது கரங்களில் உள்ளது. இந்த வாய்ப்புமிகு தருணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சரியான வழித்தடத்தைக் காண்பிக்க வேண்டும்” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். தமிழ்த் தேச…

  10. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வெளிப்படுத்தச் செய்யும் பொது முயற்சி ஆரம்பம் வடக்கு-கிழக்கைப் பிரதேசவாரியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இது தொடர்பில், கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் ஒன்றிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ளச் செய்யும் சந்திப்புகளை நடாத்துவதில், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் முயற்சியோடு மதத்தலைவர்களும் இணைந்து ஊக்குவித்தோம். சில கூட்டங்களைத் தலைமையேற்றும் நடாத்தியிருந்தோம். …

  11. பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் ஆத்திரமூட்டும் செயல்கள் அரசியல் சுயநிர்ணயத்திற்காக போராடுவதற்கு மக்களை மேலும் உறுதியளிக்கும் – நீதியரசர் விக்னேஸ்வரன் இறந்தவர்கள் எந்த அளவுக்கு அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதையே தற்போதைய பொலிஸாரின் செயல் காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள், மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நினைத்தால் அவர்களே ஏமாற்றப்படுவார்கள்.அதாவது இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் அரசியல் சுயநிர்ணயத்திற்காக போராடுவதற்கு மக்களை மேலும் உறுதியளிக்கும் என மேலும் தெரிவித்துள்ளார். …

  12. கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் இலங்கை திறக்கப்படுகிறது! September 25, 2021 ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டதைப் போல் இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஒக்டோபர் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நாடு திறக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாககியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, நியூயோர்க் சென்றுள்ளார். அதனால், கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணியின் நேற்றைய (24.09.21) கூட்டம் நடைபெறவில்லை. எனினும், ஒக்டோபர் முதலாம் திகதிக்குப் பின்னர் நாட்டை திறப்பதற்கு தேவையான கட்டுப் பாடுகளை ஆராய்ந்து அறிக்கையிடுமாறு கடந்த கூட்டத்தின் போது, விடயதானத்துக்குப் பொறுப்பானவர்களிடம் ஜனாதிப…

  13. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு... மரண சான்றிதழ் வழங்கப்படும் என, ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1240472

  14. (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தல், சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்னவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது சட்டவிரோத போ…

  15. (நா.தனுஜா) ஒரு விடயத்தை பிறிதொரு விடயமாகத் திரிபுபடுத்தும் போக்கிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விலகிக்கொள்ளவேண்டும். நாம் அல்குர்-ஆனில் உள்ள ஏதேனுமொரு விடயத்தைக்கூறினால், அது மக்காவிலோ அல்லது மதினாவிலோ அருளப்பட்டது என்றுகூறி அதிலிருந்து விடுபட்டுக்கொள்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கென ஏதேனுமொரு மதரீதியான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக அதனைப் பயன்படுத்துகின்றீர்கள். ஆகையினால் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டிலிருந்து விலகி, உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுங்கள் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பொதுபலசேனா அமைப்பு கோரிக்கைவிடுத்திருக்கின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அர்கம் நுராமித்தினால் கையெழுத்திடப்ப…

  16. தமிழ் தலைமைகள் முட்டுகொடுத்த கடந்த அரசாங்கத்தினால் ஒரு அரசியல் கைதியை கூட விடுதலை செய்ய முடியவில்லை. ஆனால் தற்போதைய எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் 16 தமிழ் அரசியல் கைதிகள் ஒரே தடவையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு விடயமாக இருந்தாலும் சரி இராணுவ முகாம் காணிப்பிரச்சனைகள், மேச்சல் தரை பிரச்சனை உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு மிக நீண்ட நாட்களாக புரையோடிக்கிடக்கின்ற தீர்க்கமுடியாத ஏனைய அனைத்து பிரச்சனைகளையும…

  17. (நா.தனுஜா) ஜனாதிபதி தற்போது புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் கூறுகின்றார். ஆனால் எமது நாட்டுமக்களிடம் அவர் கடந்த காலத்தில் எத்தகைய கதைகளைக் கூறினார் ? மக்கள் மத்தியில் அவர் எமது நாட்டுமக்களுக்கு கூறுவதென்ன ? இவ்வாறு சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் அரசாங்கம் இருவேறு கொள்கைகளையே கையாள்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந…

  18. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் - மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில்மோட்டை பகுதிக்கு, நேற்று (22) மாலை, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கோயில்மோட்டை பகுதியில், சுமார் 40 வருடங்களாக, அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வரும் நிலையில், குறித்த அரச காணியை, தங்களுக்கு வழங்க வேண்டுமென, கோவில்மோட்டை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் என பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வடமாகாண ஆளுநர், குறித்த காணியை கோயில்மோட்டை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரிக்கைவிடுத்திருந்தார். எனினும், குறித்த காணி, தங்களுக்கு வேண்டுமென்று, மடு தேவாலய பரிபாலன சபையினர் கோரி வந்ததுடன், க…

    • 8 replies
    • 917 views
  19. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவர்! September 24, 2021 தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஸ விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனத் தெரிவித்த இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஸ இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை எனக் கூறியுள்ளார். ராஜபக்‌ஸ குடும்ப பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மணல் அகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். கிராமிய விளையாட…

  20. அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் (நா.தனுஜா) உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு நீதிகோரி, நேற்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமெரிக்கவாழ் இலங்கைப்பிரஜைகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச்சபைக்கூட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் தலைநகர் நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமான நிலையில், பொதுச்சபை அமர்வின் இரண்டாம் நாளான நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலகத்தலைவர்கள் முன்நிலையில் உரையாற்றினார். இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற…

    • 10 replies
    • 1k views
  21. போராட்டக்காரர்களை புலனாய்வாளர்கள் அச்சுறுத்துவதும் பயங்கரவாதமே! அரசியல் கைதிகளுக்கு நேர்ந்த அவல நிலையின் வேதனை காயும் முன்னே மீண்டும் தமிழர்களின் நெஞ்சில் அரச பயங்கரவாதத்தின் கால்களை வைத்திருப்பது தமிழர்களுக்குச் சுதந்திரமான எதிர்காலமே இல்லை என்பதையே சுட்டி நிற்கிறது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்(Ma.Sakthivel) தெரிவித்துள்ளார். அவரால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும், “தமிழர்களின் அமைதியான வாழ்வுக்கான அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து சமயங்கள் போற்றும் அகிம்சையை வாழ்வாக்கி உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகியான திலீபன் நினைவாக விளக்கேற்றக்…

  22. உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது என்பது எமது அடிப்படை உரிமை – சீ.வீ.கே.சிவஞானம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரை யாழ். பொலிஸார் கைது செய்த சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது என்பது எமது அடிப்படை உரிமை, அதிலும் அகிம்சை வழியில் எமது இன விடுதலைக்காக உண்ணா நோன்பு இருந்து ஆகுதி ஆகிய தியாகி திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்துள்ளார். திலீபனை நின…

  23. விளம்பரம் இலங்கைத் தமிழர்களின் பொது கொள்கைகள் பற்றிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கையொப்பமிடப்பட்ட தமிழர்களின் பொது கொள்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட மற்றும் கண்காணிக்கப்பட்ட வாக்கெடுப்பிற்கு அமைய இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் வருமாறு, இலங்கையில் வடக்கு கிழக்கு பிர…

  24. இணக்கப்பாடின்றி... நிறைவடைந்த, பிரதமர் உடனான சந்திப்பு – ஜனாதிபதியை சந்திக்கும் பங்காளிக்கட்சிகள்! கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளும் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அத்துடன் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உரிமம் இலங்கை வசமே இருக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகள் முடிவெடுத்திருந்தன. இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற…

  25. உலகுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வது, அனைத்து அரச தலைவர்களதும் நோக்கமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி! உலகளாவிய சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, உணவுக் கட்டமைப்பை மிகச் சிறந்த நிலையான முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்வது அத்தியாவசியம் என தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்துச் செயற்படுவது அவசியமெனக் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் உணவுத் திட்ட மாநாட்டில், இணையவழியூடாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரின் ஓர் அங்கமாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால், இந்த உணவுத் திட்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.