ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
கொழும்பு, நோக்கிய... ஆசிரியர் – அதிபர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி இடைநிறுத்தம் ! சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா தொற்றின் நிலைமையை கருத்திற்கொண்டு வைத்தியர்கள் ஆலோசனை மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்டு வந்த ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பஸ்யாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் வெளிப்புறப் போராட்டங்கள் நிறுத்தப்படும் இருப்பினும் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகும் முடிவு தொடரும் என்…
-
- 0 replies
- 168 views
-
-
கிழக்கு பல்கலைக்கு முழு முடக்கம்!! கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றும் பல பணியாளர்களுக்கு கடந்த வாரமும், இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்ததை அடுத்து அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீடாதிபதிகள் உட்பட சுமார் 60 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெர…
-
- 0 replies
- 171 views
-
-
பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் தமது தொழிலிற்கான அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் தமது தொழிலிற்கான அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டும் எனும் நடைமுறையினை கட்டாயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்தும் அளவிற்கு வைரஸ் தாக்கம் காணப்படுகிறது. அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளமையால், அவர்களது போக்குவரத்த…
-
- 0 replies
- 102 views
-
-
யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதியினால் உதவித் திட்டம் வழங்கிவைப்பு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் போராளிகள் ஆகியோருக்கு உதவித் திட்ட நிதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தனியார் விடுதியில், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் குறித்த உதவித் திட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் முயற்சியின் பயனாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் நிதிப் பங்களிப்பில் 15 ம…
-
- 0 replies
- 114 views
-
-
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப விழா ஒத்திவைப்பு! புதிய பல்கலைக்கழகமான வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வு மறு அறிவித்தல் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் புதிய பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் ஆரம்ப ஆரம்ப விழாவை எதிர்வரும் 11 ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்தார். கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்திற் கொண்டு அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விழாவை மறுஅறிவித்தல் வரையில் ஒத்தி வைக்க தீர்மானிக்கப்…
-
- 0 replies
- 159 views
-
-
பா.நிரோஸ் எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி இருந்தார், அவர், ஒரு பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு மனவேதனையை தருகிறது. புற்றுநோயால் எனது தங்கை மரணமடைந்த போது, எவ்வாறு துன்பப்பட்டடோமே, அவ்வாறான துன்ப, வேதனையை நாம் அனுபவிக்கிறோம் என் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். ஹிஷாலியின் தாயாரும் அவரது குடும்பத்தாரும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்த ரிஷாட், தனது வீட்டில் ஹிஷாலியின் துன்புறுத்தப்பட்டதாகவும், நாய் கூடு போன்ற ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், ஹிஷாலியின் தாயார் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ரிஷாட் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தின் இன்றைய (05) அமர்வில் கலந்துக…
-
- 17 replies
- 1.7k views
-
-
Tamilmirror Online || உயிரைக் கொல்லும் களுபோவில கதை
-
- 6 replies
- 788 views
-
-
இலங்கையில் தற்போது கொரோனா வைரசின் டெல்டா திரிபு மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கிறார். கொழும்பு மாநகர எல்லைக்குள் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களில், 75 சதவீதம் பேருக்கு டெல்டா திரிபு தொற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார். டாக்டர் சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் தளத்திலேயே இந்த பதிவை வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஜுலை முதல் வாரத்தில் 19.3 சதவீதமாக இருந்த டெல்டா திரிபு, இறுதி வாரத்தில் 75 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வர…
-
- 2 replies
- 318 views
-
-
கொழும்பின் முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டின் மீதும், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, மிரிஹான, நுகேகொட, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய இடங்களிலும் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த சமூக ஊடகப் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த வதந்திகளில் உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சாவேந்திர சில்வாவும் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ச…
-
- 0 replies
- 231 views
-
-
‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில்... ஹிஷாலினியின், அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்! நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழுவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, ஹிலாலினியின் அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ச…
-
- 20 replies
- 1.8k views
-
-
கொரோனா வைரஸ் வியாபித்திருக்கும் நிலையில், நாட்டை முழுமையாக முடக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலைமையை கவனத்தில் எடுத்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பணித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற கொவிட-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். “கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. எனினும், நாட்டை மூடிவதற்கான இயலுமை இல்லை” என்றார். ஏற்பட்டிருக்கும் நிலைமை தொடர்பில் ஆகக் கூடுதலான அவதானத்தை செலுத்தி, தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். Tamilmirror Online || …
-
- 0 replies
- 250 views
-
-
11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – வசந்த கரன்னகொட குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி! தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வேண்டாம் என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணி…
-
- 1 reply
- 584 views
-
-
தடுப்பூசி பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள் August 6, 2021 கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் ‘சினோபாம்’ தடுப்பூசி நேற்று ஏற்றப்பட்டது. அந்த வகையில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 36 தமிழ் அரசியல் கைதிகளும் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர். தடுப்பூசியை எற்றல் தொடர்பான மருத்துவர்களின் விளக்கமளிப்புக்களுடன் கைதிகளுக்கு ஊசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அரசியல் கைதிகளின் உறவுகள் குரலற்றவர்களின் குரல் அமைப்புக்குத் தெரிவித்தனர். கோவிட் 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் படிவம் ஒன்று நிரப்பப்பட்டு கையொப்பம் பெறப்பட்ட பின்னரே அவர்களுக்கான ஊசி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது த…
-
- 0 replies
- 216 views
-
-
ஹிஷாலினி... தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள், ரிஷாட் வீட்டில் உள்ள... 16 கமராவிலும் பதிவாகவில்லை – பொலிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சிசிரீவி கமராக்கள் எவற்றிலும் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட சிசிரீவி ஆய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று குறித்த கமராக்களை பரிசோதித்திருந்த நிலையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கமராக்கள் செயலிழந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்குள் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கமராக்களே இவ்வாறு செயலிழந்து காணப்பட்டதுடன், அதற்கான காரணம் குறித்து தற்போது விச…
-
- 1 reply
- 271 views
-
-
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு – 10 இலட்சம் கொள்கலன்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை! நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடையடுத்து, 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவ…
-
- 0 replies
- 159 views
-
-
தோட்டப்புற சிறுவர்களை... பணிகளில் இருந்து, நிறுத்த நடவடிக்கை – ஜனாதிபதி! சிறுவர்களின் பாதுகாப்பை கிராம மட்டத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பணியாளர் சேவையில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், அவர்களில் பெரும்பாலானோர் தோட்டப் புறங்களைச் சேர்ந்த சிறுவர்கள் என தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையை தடுப்பதற்கு கிராம அலுவலர் மட்டத்தில் இருந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்திய…
-
- 0 replies
- 168 views
-
-
கொழும்பில் டெல்டா திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது – ஜீவந்தர கொழும்பி டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். நாட்டில் டெல்டா கொவிட் திரிபு எந்தளவு வேகத்தில் பரவிவருகிறது என்பது தொடர்பாக அவர் ருவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஜூலை மாதத்தில் டெல்டா பரவல் தொடர்பான புள்ளிவிரத்தைக் காட்டும் வரைபை இணைத்துள்ள அவர், ஜூலை முதல் வாரத்தில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொவிட் நோயாளர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளில் அல்பா திரிபு கண்டறிய…
-
- 0 replies
- 465 views
-
-
வடக்கில், விவசாயப் பண்ணைகள்... படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார். வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு …
-
- 8 replies
- 716 views
-
-
(எம்.மனோசித்ரா) வைத்தியசாலைகளின் கொள்ளளவை விடவும் அதிக தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நிலைமை டெல்டா வைரஸ் பரவலின் அச்சுறுத்தலை தெளிவாகக் காண்பிக்கிறது. நான்காவது அலையின் நிலைமையே நாடு தற்போது இருக்கிறது. வைரஸ் பரவலுக்கும் தடுப்பூசி வழங்கலுக்கும் இடையிலான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமாயின் குறுகிய காலத்திற்கேனும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதே ஒரேயொரு மாற்று வழியாகும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் உப தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்தார். நாட்டில் தற்போதைய கொவிட் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்…
-
- 1 reply
- 539 views
-
-
24 மணிநேரமும் மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, தன்னை மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இன்று (04) அவர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டுவந்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, கௌரவ சபாநாயகர் அவர்களே, ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்து வைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மல…
-
- 8 replies
- 894 views
-
-
அமெரிக்க தூதுவர் தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை வெளியிடுகின்றார் – கொழும்பு போர்ட் சிட்டி நிறுவனம் August 5, 2021 இலங்கையின் கொழும்பு துறைமுக நகர செயற்திட்டங்கள் குறித்து தவறாக வழிநடத்தும் அறிக்கையை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெளியிட்டுள்ளார் என கொழும்பு துறைமுக நகர நிறுவனம் China Harbour Engineering Company (CHEC) குற்றம்சாட்டியுள்ளது. சமீபத்தில் ஊடகவியலாளர்களுடனான கருத்துப்பரிமாற்றத்தின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ், கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று அமெரிக்காவின் தடைப்பட்டியலில் உள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து எச்…
-
- 2 replies
- 377 views
-
-
கிளிநொச்சியில் திருப்பி அனுப்பப்பட்ட இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள்...! கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதற்கு சென்ற 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யூலை மாதம் 06 திகதியும் அதனை அண்டிய சில நாட்களும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாம் கட்ட சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் போது இரண்டாவது தடுப்பூசி இன்றைய தினத்திற்கு திகதி குறிப்பிட்டது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசியி…
-
- 0 replies
- 257 views
-
-
உயர்கல்வியினை இராணுவமயமாக்குவதனை கடுமையாக எதிர்கின்றோம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் நேற்று புதன்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில் உயர்கல்வியினை இராணுவமயமாக்குவதனை கடுமையாக எதிர்ப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இவ்வாறு தெரிவிகப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர்கல்வியினை இராணுவமயமாக்குவதனையும் தனியார்மயமாக்குவதனையும் எதிர்…
-
- 1 reply
- 378 views
-
-
நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு August 5, 2021 இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு முன்பாகவே நாம் கள நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். தற்போது சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுவதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவருட காலப்பகுதிக்கு முன்பாகவே நகரி…
-
- 0 replies
- 443 views
-
-
அரந்தலாவை பிக்குகள் படுகொலை : சி.ஐ.டி. சிறப்பு விசாரணை : கருணா அம்மானை கைதுசெய்யுமாறு மனுதாரர் கோரிக்கை ! (எம்.எப்.எம்.பஸீர்) அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அரிவித்தார். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்தார். அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரத்தில் , தற்போது உயிருடன் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக உடனடியாக …
-
- 3 replies
- 707 views
-