ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
புதன் 14-11-2007 15:43 மணி தமிழீழம் [மயூரன்] ராஜபக்சவின் வீழ்ச்சி: புலிகளின் எழுச்சிக்கு வழிகோலும் - அமைச்சர் கரு ஜெயசூரிய மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கும் வழிகோலும் என, அமைச்சர் கரு ஜெயசூரிய எச்சரித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய, ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணியின் தலைவரும், சிறீலங்கா பொதுநிர்வாகத்துறை அமைச்சருமான கரு ஜெயசூரிய, அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு, ஒருபொழுதும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் இடம்மளிக்கக் கூடாது என் கோரியுள்ளார். அவ்வாறான நிலை ஏற்படுவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சி பெற்று வலிமையடைவதற்கு வழிகோலும் என்றும், சிறீலங்கா பொதுநிர்வாகத்துறை அமைச்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படும் திருமலையை சிங்களமயமாக்கும் திட்டம் -(அஜாதசத்ரு) [17 - June - 2007] வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தை பெரும்பான்மையினத்தவரை பெரும்பான்மையினமாகக் கொண்ட பிரதேசமாக கபளிகரம் செய்யும் நோக்குடனான பல்வேறு செயற்றிட்டங்கள் அரச தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெளிவுபடுத்தி நிற்கின்றன. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசம் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான விமானக் குண்டு வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல், மோட்டார் தாக்குதல் என்பவற்றாலும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாகவு…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=R0fB8-uVqXc
-
- 2 replies
- 1.3k views
-
-
தினமுரசு வாங்க மறுத்தவர்களை சிறிதர் திரையரங்கு முகாமிற்கு வருமாறு ஈ.பி.டி.பி உத்தரவு www.sankathi.com சிறிலங்கா துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பியினரால் தினமுரசு வார இதழ் வெளியிடப்படுகின்றது. இந்த இதழை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில், யாழ் வேலணைப் பகுதியில் தினமுரசுப் பத்திரிகை வாங்க மறுத்ததாக கூறி 5 பேரின் அடையாள அட்டைகளை ஈ.பி.டி.பி யினர் பறித்துவிட்டு குறிப்பிட்ட 5 பேரையும் யாழ்ப்பாணம் சிறிதர் திரையரங்கிலுள்ள தமது முகாமிற்கு வருமாறு எச்சரித்துள்ளனர். இவர்களது எச்சரிக்கையால் அடையாள அட்டையை பறிகொடுத்தவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
-
- 1 reply
- 1.3k views
-
-
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள், படுக்கையில் தங்கள் வாழ்நாளைக் கழித்து படுக்கைப் புண்ணால் இளம் வயதிலேயே உயிரிழந்து வருகின்றனர் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையால் ஆரம்பிக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, வவுனியா - பம்பைமடுவிலுள்ள வைகறை நிறுவன கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முன்னாள் போராளிகளில் பலர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இதனால் அவர்கள் த…
-
- 4 replies
- 1.3k views
-
-
மகஸின் சிறையில் நடப்பது என்ன? (உண்மையின் பதிவு) வியாழன், 05 மே 2011 10:19 யுத்தத்தின் போதும் சரி, அது நிறைவடைந்த பின்னரும் சரி கைதிகள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சிறைக்குள்ளேயே தங்களது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் சிறைக்குள் படும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணைகள் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்ட சிலரையும் மோப்ப நாய்கள் போல தேடி அலைவது வேறு கதை. கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் மட்டும் சுமார் 120 புலிச் சந்தேகநபர்கள் தடு…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : 2007-06-18 சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பை தேடிச் சம்பாதிக்கும் அரசுத் தரப்பு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டிய விட யங்களில் சர்வதேச சமூகத்தைக் கையாளும் இராஜதந்திரம் பற்றி அறிந்து கொள்ளாமல் கற்றுக்குட்டித்தனத்துடன் நடந்து கொண்டதன் விளைவாக, விபரீதத்தை வாங்கிக் கட்டிக் கொள்ளும் இக்கட்டுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது இந்நாட்டின் அரசாங்கம். தான் இறைமையுள்ள தனி அரசு என்ற தான்தோன்றித்தனத்துடன் கொழும்பு செயற்பட்டதன் பெறுபேறு, பெரும் சர்வதேச அழுத்தமாக அதற்கு எதிராகத் திரும்பியிருக்கின் றது. ஒரே சமயத்தில் மேற்குலகின் பல மட்ட எதிர்ப்பையும், கடும் அழுத்தத்தையும், நெருக்குவாரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தள் ளப்பட்டிருக்கின்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
சனி 05-01-2008 15:10 மணி தமிழீழம் [மயூரன்] மன்னார் - அடம்பன் - பரப்புக்கண்டல் முனைகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன : 4 படையினர் காயம் மன்னார் பரப்புக்கண்டல் பகுதிகளில் காலை 9 மணியளவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை மன்னார் அடம்பன் களமுனைகளிலும் சிறுமோதல்கள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்களின்போது 4 படையினர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசியபாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது.
-
- 3 replies
- 1.3k views
-
-
நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு இன்றோடு மூன்று மாதங்களுக்கு மேலாகின்றது.இப்போதும் அவர்களின் வாழ்க்கை கிழிந்த கந்தல் துணியாக முட்கம்பி வேலிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அவர்களின் கண்ணீர், மழை வெள்ளமாக மாறி அவர்களையே மீண்டும் அதில் மூழ்கவைத்தகொடுமை சில வாரங்களுக்கு முன் நடந்தேறியது.இனியும் தொடரும்.இதைக்காண்பாரும் இல்லை.கேட்பாரும் இல்லை.குரல் கொடுப்பாரும் இல்லை.இதுதான் மானதோடும் வீரத்தோடும் வாழ்ந்த ஈழத்தமிழனின் இன்றைய நிலை. இது இப்படியிருக்க,சிறிலங்கா பாசிச ராணுவ அரசின் திரைமறைவு படுகொலை அவலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. உலகெங்கிலும் இதுவரை நிகழ்ந்திராத கேவலமான போர்க்குற்றங்களை புரிந்த "சிற…
-
- 1 reply
- 1.3k views
-
-
திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் - தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்! ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி, “ எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு. நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான். ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான். இன்னைக்கு காலையில அ…
-
- 9 replies
- 1.3k views
-
-
Share [ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 07:07.09 AM GMT ] ‘கடந்த வாரம் கனடிய அரசு அறிவித்துள்ள “சுப்பர் விசா” திட்டமானது ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே ஆகும். இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடிய தமிழ் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னி தெரிவித்தார். இந்த புதிய முறையை நாம் அறிமுகம் செய்யாவிட்டால் இன்னும் சில வருடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்களை “ஸ்பொன்சர்” செய்யும் விண்ணப்பங்கள் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். ஒட்டாவா மாநகரிலிருந்து தொலைபேசி மூலமாக குடிவரவு அமைச்சர் திரு ஜெய்ச…
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=4][/size] [size=4]கொழும்பில் திடீரெனப் பெருமளவு தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளதை சிறிலங்கா காவல்துறையும், பிராணிகள் நல அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. கொழும்பு விகாரமாதேவி பூங்கா பகுதியில் காணப்பட்ட 10 வரையிலான தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளன. இந்தநிலையில், கொழும்பிலுள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர், ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவதை உறுதி செய்துள்ளார். அதேவ…
-
- 7 replies
- 1.3k views
-
-
கொழும்பு விழா: பங்கேற்கும் நடிகர்கள் படங்களுக்கு தென் இந்தியாவில் தடை! சனிக்கிழமை, மே 29, 2010, 10:15[iST] சென்னை: கொழும்பு விழாவில் இந்திய திரை நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்போர் படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது, என தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு நிர்வாகிகள் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் இது தொடர்பாக இந்த விழாவை நடத்தும் முக்கிய அமைப்பான இந்திய ஐ.ஐ.எப்.ஏ. நிர்வாகிகளைச் சந்தித்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாகவும் தென்னிந்திய திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 4,5,6 ஆகிய தேதிகளில் இலங்கையில் இந்த…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஐ.நா.வின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது?: 'ஆனந்த விகடன்' கேள்வி [வியாழக்கிழமை, 08 ஒக்ரோபர் 2009, 03:25 பி.ப ஈழம்] [க.நித்தியா] ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார ஏடான 'ஆனந்த விகடன்' கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விகடன் குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார ஏட்டில் நிஜ 'வில்'லன் யார்? எனும் தலைப்பில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமர் மன்மோகன்சிங்கும், ஆளும் காங்கிரசின் தலைவி சோனியா காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - தமிழனைப் பொறுத்தவரை- இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (15.07.2016) திறந்துவைத்துள்ளார். போசாக்கான பாரம்பரிய உணவுகளை நுகரும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு விவசாய அமைச்சு மாவட்டம் தோறும் அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்களை அமைத்து வருகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திறந்துவைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்கிவரும் நிலையில், தற்போது கிளிநொச்சியிலும் அம்மாச்சி திறந்துவைக்கப்பட்டுள்ளது. 5.5 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில…
-
- 10 replies
- 1.3k views
-
-
Tuesday, January 25th, 2011 | Posted by admin விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் யாழில் அரசியல் நடவடிக்கை! இலங்கை அரசாங்கத்தினால் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனப்படுகின்ற நபர் யாழ்ப்பாணத்தில் அரசியல் சந்திப்புக்களை நடத்திவருவதாக தெரியவருகின்றது. கடந்த மூன்று நாட்களின் முன்னர் யாழ்.பல்கலைக்கழக உயர் நிலை விரிவுரையாளர்களைச் சந்தித்த அவர் அபிவிருத்திக்கு ஒத்துழைக்குமாறு கேட்டிருக்கின்றார். கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டும் செல்லாத விரிவுரையாளர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கே.பி மிரட்டல் பாணியில் அவர்களை உடனடியாக வருமாறு அழைத்ததாக பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து தெரியவந்திருக்கின்றது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
புதுச்சேரி: இயக்குநர் சீமான் மீது புதுச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காக்க வேண்டும்இ போரை நிறுத்த வேண்டும் என்று கோரி புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்களை கடந்த 12ம் தேதி இயக்குநர் சீமான் சந்தித்தார். மாணவர்களிடையே அவர் பேசுகையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து சீமான் மீது புதுச்சேரி போலீஸார்இ சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி)இ பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் (1பி)இ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் (124) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளுமே ஜாமீனில் வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
விக்கிலீக்ஸ் உரிமையாளர் இலங்கையில் இருந்திருந்தால் சாம்பலும் மிஞ்சியிருக்காதாம்! சுனில் ஹந்துநெத்தி தெரிவிக்கிறார் சனி, 09 ஏப்ரல் 2011 08:53 விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் உரிமையாளர் இலங்கையில் இருந்திருந்தால் அவரது சாம்பலும் மிஞ்சியிருக்காது என ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகத்துறை மீதான தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் தணிக்கையுடனேயே உரையாற்றும் நிலைமை உருவாகியுள்ளது. இணையத்தளங்களை தணிக்கை செய்ய முடியுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? என்று நடாளுமன்றத்தில் சுனில் ஹந்தன்நெத்தி கேள்வி எழுப்பினார்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிங்களவர்களைப் போன்று தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை - இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு பெரம்பலூர் - இலங்கையில் சிங்களவர்களைப் போன்ற தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இராதாகிருட்டிணன் இலங்கை மத்திய பகுதியில் கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய சகோதரி கவுசல்யாவைப் பார்ப்பதற்காக துறைமங்கலம் புதுக்குடியிருப்பு வந்தார். அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. தமிழகத்திற்கு வருவதற்காக நான் விமான நிலையம் வந்தபோதுதான் விமான…
-
- 1 reply
- 1.3k views
-
-
படகு மூலம் இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்த முயன்ற இருவர் இராமேஸ்வரத்தில் கைது. இராமேஸ்வரம் பகுதியில் படகு மூலம் இலங்கைக்கு வெடி பொருட்களைக் கடத்த முயன்ற இருவரை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து குண்டுகளைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் , வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன . கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேக நபர்களும் தனுஷ்கோடியைக் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணை குறித்த இரு சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றிருக்கலாம் என இந்திய கடற்படையினர் சந்தேகிப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவித்தன. -Tamilwin-
-
- 2 replies
- 1.3k views
-
-
'புலிகளை முற்றாக தோற்கடிக்க முடியும் என்று கூறும் மஹிந்த எதற்காக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப் பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுக்கிறார்? அரசின் நிலைப்பாடு அடிக்கடி இலவ்வாறு மாறுவதற்கான கராணம் என்ன?' இவ்வாறு பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பினார் ரவி கருணாநாயக்க. மேலும் : வடக்கில் படையினரால் கைப்பற்றபட்ட சில இடங்களை புலிகள் மீண்டும் கைப்பற்றிவிட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த யுத்தத்தை மூன்று மாதங்ளில் முடிப்போம். நான்கு மாதங்களில் முடிப்போம் என்று அரசு சொல்லலாம். அது சாத்தியமல்ல. பயங்கரவாதத்தை முற்றதாக ஒழித்துக்கட்டப் போகிறோம் என்று மஹிந்த கூறுகிறார். மறுபுறம் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அமைதிப்பேச்சுக்கு வருமாறு அவர…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாடு பிரிவினைக்கு உள்ளாக வேண்டுமென்று வாதிடுமுன்னர் சிங்களத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்து அவர்களின் உண்மைச் சொரூபத்தை வெளிக்கொண்டுவருவது சிறந்தது' [06 - December - 2008] [Font Size - A - A - A] கலாநிதி ஆ.க.மனோகரன் * எழுதிய "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்; ஒருவரலாற்றுப் பார்வை 1948 2007' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த ஞாயிறு மாலை கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றபோது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய வெளியீட்டுரை 1926 ஆம் ஆண்டில் "ஒக்ஸ்ஃபொட்" சர்வகலாசாலையில் பயின்று வெளிவந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அவ்வாறு அவர் கூ…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முகப்பு பகுதியில் மீண்டும் இராணுவக் குடியிருப்பு என அடையாளப்படுத்தும் பெயர் பலகையால் வலி,வடக்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த பெயர் பலகை முன்னரும் ஒருதடவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறிது காலம் அகற்றப்பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் வாயிலில் வளைவு அமைக்கப்பட்டு அதன்மேல் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக ஆட்சியினை கைப்பற்றியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசு வடமாகாணத்தில் படையினரினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் மக்களுடைய நிலங்களை விடுவிப்பதாக வாக்குறுதி வழங்கியிருக்கும் நிலையில், வலி,வடக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
பைற் சீரோ' விமான அழிப்பு குண்டுகள் இராணுவ வீரரின் வீட்டிலிருந்து மீட்பு யுத்தத்தில் விமானத் தாக்குதல்களின்போது விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும் குண்டுகள் அண்மையில் இராணுவ வீரர் ஒருவரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் பற்றி விபரமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப, பிந்தெனிய பிரதேசத்தில் அறுகம்மன கிராமத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து விமானங்களைத் தாக்கியழிக்கும் 15 குண்டுகள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த வீடு பிந்தெனிய பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் சேவை செய்யும் இராணுவ வீரர் ஒருவரின் வீடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட 15 விமான அழிப்புக் குண்டுகளும் பைற்…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்குவது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில், மத்திய அரசால் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பாயம், வைகோ கருத்து தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்ததால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (30) விசாரணைக்கு வந்…
-
- 4 replies
- 1.3k views
-