Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘வலிந்து காணாமலாக்கப்படுதலை குற்றமாக்கு’ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது வடக்கு, கிழக்கில் எரிகின்ற ஒரு பிரச்சினையாகும். தமது உறவுகளைத் திருப்பித்தருமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசிடம் கோரி நிற்கின்றனர். ஆனால், அரசு மௌனமாக உள்ளது. ஆகையால், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்படுதலிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலத்தைப் பற்றிய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அவதானிப்புகளில், கூறியிருப்பவற்றை உள்ளடக்கி இச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோ…

  2. 02 MAR, 2025 | 06:52 PM ‘வல்வெட்டித்துறை : ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வெளியிட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/208106

  3. ‘வவுனியா என்பது தமிழீழமா?’ வவுனியா நீதிமன்ற வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியமையானது, ஒரு மாபெரும் அனர்த்தத்துக்கும் அழிவுக்கும் சமமானதாகும் என, அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “வவுனியா என்பது தமிழீழமா, அநுராதபுரம் என்பது தென்பகுதியின் நிஜ பூமியா என்ற கேள்வியைக் கேட்க வைக்கிறது. காரணம், எவ்வித நீதி நியாயமின்றி, வவுனியா நீதிமன்ற வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியமையானது, ஆரோக்கியமான செயல் அல்ல. http://www.tamilmirror.lk/செய்திகள்/வவுனியா-என்பது-தமிழீழமா/175-205606

  4. ‘வாக்குமூலமளிப்பதற்கு கொழும்புக்கு வர முடியாது’ கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, தன்னை விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதும், கொழும்புக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் மன்னார் வந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார். கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு, நேற்று முன்தினம் (30) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், “கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு, இன்று 2 ஆம் திகதி திங்கட…

  5. ‘வாக்குறுதிகளை நிறைவேற்றினால் GSP+ஐ வழங்குங்கள்’ பேரின்பராஜா திபான் இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என முறையாக ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட தூதுக் குழுவிடம் தெரிவித்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக் குழுவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதன் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர், விசேட கலந்துரையாடலொன்றை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், நேற்றுச் …

  6. ‘வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்’ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை, கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றுவதே, தன்னுடைய நோக்கமாகுமென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி டேவிட் பெல்ட்மென்ட், கிழக்கு மாகாணத்துக்கு வருகைதந்திருந்தார். அவர், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநருடன் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ரோஹித போகல்லாகம கருத்து தெரிவிக்கையில், இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் நல்லிண…

  7. ‘வாழ்க்கை சிறப்பாக அமையும்’ “எம்மைப் பற்றியும் சூழலைப் பற்றியும் எமது அரசியல் நிலைமை பற்றியும் அறிந்து கொண்டால் மட்டுமே எமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “பரிசளிப்பு விழா என்பது பாடசாலைகள் தோறும் நடாத்தப்பட வேண்டிய முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வில் ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் பரிசில்களைப் பெறத் தவறிய மாணவிகளும் மற்றும் பரிசில் பெறாத மாணவிகளும் இரு…

  8. ‘வாழ்ந்த இடத்திலேயே இறுதி மூச்சை விடவேண்டும்’ என்பதே மக்களின் நிலைப்பாடு – பிரபாகணேசன் தாம் வாழ்ந்த இடத்திலேயே இறுதி மூச்சை விடவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கேப்பாபுலவு மக்கள் இருப்பதாக ஜனநாயக மக்கள் காங்கிராஸ் தலைவரும் ஜனாதிபதியின் வன்னிக்கான கருத்திட்ட பணிப்பாளருமான பிரபாகணேசன் தெரிவித்துள்ளார். சொந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி 714 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கேப்பாபுலவு மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு சென்று மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மை மற்றும் படையினிரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள…

  9. ‘விக்கி’ உண்மையை சொன்னதால்தான் பேரினவாதிகள் கூச்சல்; கூட்டமைப்பு ஏன் மௌனம்? சிவசக்தி ஆனந்தன் கேள்வி August 27, 2020 வரலாற்றை திரிவு படுத்தி இலங்கையை சிங்கள, பௌத்த நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பயணிக்கின்ற பேரினவாதிகள் விக்கினேஸ்வரனின் கூற்றை ஜீரணிக்க முடியாது கூச்சலிட்டு வருகின்றனர் என்று அக்கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல் நிறைவடைந்தவுடன் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று கோரிநின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று உண்மைக்கு எதிராக கோசங்கள் எழுந்தபோது மௌனித்து நிற்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 9ஆவது பாராளுமன்றத்தின் …

  10. முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைத் தனது கட்சியின் தலைவராக நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் பலம்பொருந்திய செயலாளர் நாயகம் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அத்துடன் கட்சியை கையளிப்பதில் சொத்து விடங்களும் தங்கியிருப்பதாகவும் மறைமுகமாகத் தெரிவித்தார். க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிய…

  11. ‘விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே’ “மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னணியில் இருப்பது சுயலாப அரசியலன்றி வேறெதுவுமில்லை” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் பாலமுனை வேட்பாளர்களை ஆதரித்து, நேற்றிரவு (14) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, “தேர்தல் பிரசாரங்களில் என்னை நோக்கி சில கேள்விகளைத் தெ…

  12. ‘விட்டுக்கொடுப்புகள் பலவீனமல்ல’ அழகன் கனகராஜ் “ஆட்சிமுறைமை தொடர்பில், மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். பிளவு படுத்தப்பட முடியாத ஒரேநாடு என்ற ஏற்பாடு அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பதுடன், ஒரே நாட்டுக்குள் நிர்வாக அதிகாரங்களைப் பகிரமுடியும் என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விட்டுக்கொடுப்புகளை பலவீனமாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்றும் சுட்டிக்காட்டியது. புதிய அரசியலமைப் பொன்றை இயற்றுவதற்கான எமது ஆதரவை, அதன் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கும் யுத்தத்தின் விளைவான ஏனைய விடயங்களை தட்டிக்கழித்து விடுவதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியது. நாடாளும…

  13. ‘விமர்சிப்பது பிடிக்கவில்லை’ சந்துன் ஏ. ஜயசேகர சட்டமா அதிபர் திணைக்களம், எவராலும் விமர்சிக்கப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அத்திணைக்களத்தை விமர்சிப்பவர்கள், அவர்களைத் தனியே விட்டு, சுதந்திரமாகவும் அழுத்தங்களின்றியும் அவர்கள் பணியாற்ற வழிசெய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டார். எமது சகோதர ஊடகமான டெய்லிமிரருக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள், எந்தவிதக் குறைபாடுகளையும் நான் காணவில்லை” என்றும் அவர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஊழல்மிக்க அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதி…

  14. ‘வியத் மக’ உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்துவர முயற்சி – பிரிவினைவாதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்கிறார் ஜனகன் by : Varothayan வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்துவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘வியத் மக’ அமைப்பின் உறுப்பினர்களை நாட்டுக்குள் அழைத்து வர ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் பலர் தாய்நாட்டுக்கு வருவதற்காக வெளிநாடுகளில் தவித்து வரும் நிலையில், அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று…

    • 0 replies
    • 426 views
  15. ‘விருப்பு வாக்கே இன்று கசக்கிறது’ அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக, விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது அரசாங்கம் விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றி கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். காலி மாவட்ட செயலகத்தில் நேற்று (01) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு விசேட குழுக் கூட்…

  16. ‘விஸ்வமடு கேணலை’ பக்கத்தில் உட்கார வைத்து உரையாடிய மைத்திரி! June 19, 2018 விசுவமடுவில் பரபரப்பாக பேசப்பட்ட இராணுவ கேணல் ரட்ணசிறி ரணவீர பண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளார். அண்மையில் பொலனறுவவிற்கு விஜயம் செய்த மைத்திரி, தனது மகனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு நிகழ்வொன்றை பார்த்து ரசித்துள்ளார். விசவமடுவில் இருந்து அம்பேபுஸ்ஸ முகாமிற்கு மாற்றப்பட்டிருந்த இராணுவ கேணலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். அவருடன் மைத்திரி சிறிது நேரம் சம்பாஷித்துக் கொண்டிருந்தார். http://www.pagetamil.com/8901/

  17. ‘வீ’ எப். எம் வானொலியின் பிரதம நிறைவேற்று அதிகாரிமீது தாக்குதல் 02 செப்டம்பர் 2011 ‘வீ’ எப். எம் வானொலியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ருவன் சுகததாச மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தற்போது கிடைத் செய்திகள் தெரிவிக்கின்றன. பொரலஸ்கமுவ, கங்காராம வீதியிலுள்ள அவரது வீட்டிற்குள் இன்றிரவு ஏழு மணியளவில் திடீரென உட்பிரவேசித்த இனந்தெரியாத குழுவொன்றோ அவர்மீது தாக்குதல் நடத்தி விட்டுச் சென்றுள்ளது. இவர்கள் தாக்குதல் நடத்துவதற்காக WP/ GA 1893 என்ற இலக்கத்தைக் கொண்ட ஜீப் வண்டியிலேயே வந்துள்ளனர். படுகாயமடைந்த ருவன் சுகததாச தனியார் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ‘வீ’ எப். எம் வானொ…

  18. ‘வீட்டுத் திட்டத்தை பறிக்க த.தே.கூ முயற்சி’ -செ.கீதாஞ்சன் வடக்கு மாகாணத்தில், தன்னால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டப் பணிகளுக்குத் தடங்கலை ஏற்படுத்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முயல்கிறது என, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். முல்லைத்தீவில், அவரது அமைச்சால் நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவையின் போதே, இக்கருத்துகளை அவர் வெளிப்படுத்தினார். இந்நிகழ்வில் முன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர், வடக்க…

    • 2 replies
    • 800 views
  19.  ‘வீதியில் இறங்கும் மாணவர்களுக்கு அருணாச்சலத்தின் அருமை தெரியாது’ ஜே.ஏ.ஜோர்ஜ் ‘பல்கலைக்கழகங்களின் அருமை தெரியாததன் காரணமாகவே பல்கலைக்கழக மாணவர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவது மட்டுமன்றி தமது காலத்தை வீணடிக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பொன்னம்பலம் அருணாச்சலத்தின் வரலாற்றை எடுத்துக் கூறவேண்டும்’ என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். சேர்.பொன்னம்பலம் அருணாச்சலத்தின் 93ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

  20.  ‘வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பு?’ ஜே.ஏ.ஜோர்ஜ் “கேப்பாப்புலவு மக்கள் 22 நாட்களாக, வீதியில் அமர்ந்து சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, தமது காணிக்காகப் போராடிவருகின்றனர். இவ்வாறு வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பானது?” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எஸ். சிறிதரன் கேள்வியெழுப்பினார். தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தொ…

  21. ‘வெடிபொருட்கள் சவாலாக உள்ளன’ -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி – முகமாலை பகுதியில், யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக, மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும், யுத்த சூனிய பிரதேசமாகவும் காணப்பட்ட முகமாலைப் பகுதியில் தொடர்ந்தும் வெடிபொருள் அச்சம் காணப்படுகின்றது. “இவ்வாறு, இப்பகுதியில் வெடிபொருட்களில் சிக்கி பெறுமதி மிக்க மனித உயிர்கள் கொல்லப்படுவதுடன், பலர் தமது உடல் அவயங்களையும் இழக்க நேரிடுகின்றது. …

  22. ‘வெடியரசன் கோட்டை’ பௌத்த தூபியாகிறதா? யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டைப் பாகங்களை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன. இந்த விளம்பரத்தில் ‘ பல்வேறு தொல்பொருள் கலைப்…

  23. ‘வெளிநாட்டு நீதிபதிகளால் தீர்வைப் பெறமுடியும்’ “வெளிநாட்டு நீதிபதிகளை உள்நாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பில் சிலர் மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், “எமது நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் நீதிபதிகளாக கடமையாற்றுகின்றனர். நாம் எதிர்மறையாகச் சிந்திக்கின்றபோது, நடுநிலைக் கருத்துகளைப் பெற வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார். “ஒரு விடயத்தில் என்ன நன்மை உள்ளது என்பதன் அடிப்படையில் ஆராய்ந்தே நாம் செயற்பட வேண்டும். இதற்கமையவே, வெளிநாட்டு நீதிபதி விடயத்திலும் செயற்பட வேண்டும். எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ள தோற்றம் பெற்று முடிந்த பல…

  24. ‘வெள்ளை வான்’ சம்பந்தமாக என்னிடமும் ஆதாரங்கள் உள்ளன – விக்கிரமபாகு கருணாரட்ண டிசம்பர் 28, 2019 மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பிரபலமான வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக தன்னிடமும் ஆதாரங்கள் உள்ளதாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் டாக்டர் விக்கிரமாகு கருணாரட்ண கூறியுள்ளார். கொழும்பு பிரிவின் முன்னாள் டி.ஐ.ஜி.யும் பின்னர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் ஆகப் பதவி மாற்றப்பட்ட புஜித் ஜயசுந்தர அவர்கள் வெள்ளை வான் பயங்கரவாதம் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டதாலேயே குருநாகலைக்கு சடுதியாக இடம் மாற்றப்பட்டார் என டாக்டர் கருணாரத்ன மேலும் தெரிவித்தார். நீண்ட காலத்துக்கு முன்னர் தமிழர் ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பாக அவரது சகோதரி கேட்டுக்கொண்டதையடுத்து தா…

    • 2 replies
    • 963 views
  25. ‘வெள்ளை வேன்’ விவகாரம்: ராஜிதவை கைது செய்வது ஏற்புடையதல்ல – சுமந்திரன் ‘வெள்ளை வேன்’ விவகாரம் என்பது கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ராஜித சேனாரத்னவை சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்ய முயற்சிப்பது ஏற்புடையதல்ல என கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளைத் தமிழ்…

    • 3 replies
    • 560 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.