ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினார் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும் ஆதரவாக 61 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு | Virakesari.lk
-
- 1 reply
- 246 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும்... போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மட்டுமல்லாது அதற்குப் பின்னர் வரும் ஐந்து வருடங்களுக்கும் தனது அரசியல் கொள்கைகளை அமுல்படுத்ததவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். https://athavannews.com/2021/1229455
-
- 7 replies
- 504 views
-
-
கொள்கையை மாற்றிக்கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் யுத்தங்களை தொடுக்காத நிலையில் இந்த நாட்டில் தமிழர்களை எதிரியாக கருதியே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளீர்கள். இந்த நாட்டின் பிரஜைகளையே நீங்கள் எதிரிகளாக நினைத்துள்ளீர்கள் என அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார். இராணுவ மயமாக்கலுக்குள் செல்லும் அரசாங்கம் தனது கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என்றார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை…
-
- 0 replies
- 236 views
-
-
கனகராசா சரவணன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்துடன், சிறுவர்களுக்கு எதிரான 63 வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான 1,513 குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் கடந்த மாதம் 31ஆ ம் திகதிவரையிலான 6 மாதங்களில் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக முயற்சி, சிறுவர்கடத்தல் போன்ற 31 பெருங்குற்றங்களும், 32 சிறுகுற்றங்களுமாக 63 குற்றங்கள் தொடர்பா…
-
- 1 reply
- 330 views
-
-
கொரோனாவுக்கு மத்தியில்... இலங்கையை அச்சுறுத்தும், "TINEA" தோல் நோய்! கொரோனாவுக்கு மத்தியில் இலங்கையில் டீனியா (TINEA) என அழைக்கப்படும் தொல் நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். வட மத்திய மாகாணம் உட்பட பல பகுதிகளில் இந்த தோல் நோய் பதிவாகியுள்ளதாக அனுராதபுரா போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஹேமா வீரகூன் தெரிவித்துள்ளார். ஒரு பூஞ்சையால் ஏற்படும் TINEA என அடையாளம் காணப்பட்ட இந்த நோய் வேகமாகப் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதிப்புகள், மருந்துகளுக்கு ஒவ்வாமை, சுய மருந்துகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் ஆகியவை தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எல்லா வயதினரும் ஆண்கள்…
-
- 0 replies
- 252 views
-
-
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல் வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 03 ஆம் வகுப்பு 1 ( அ ) தரத்திற்கும் , டிப்ளோமாதாரிகளை 03 ஆம் வகுப்பு 1 ( இ ) தரத்திற்கும் இணைத்துக்கொள்வதற்காக கல்வி வலய மட்டத்தில் ஆட்சேர்கும் பொருட்டு ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews…
-
- 0 replies
- 249 views
-
-
2022 ஜனவரி முதல்... பொலித்தீன் பைகள் மீதான தடையை அமுல்படுத்த அமைச்சர் உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொலித்தீன் பைகளை தடை செய்வதற்கான முதல் கட்ட திட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார். பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் அமைச்சு மேற்கொண்ட திட்டத்தின் பிரகாரம் இந்த முன்மொழிவு செய்யப்பட்டது. 2022 ஜனவரி முதல், 10 அங்குல அகலம், ஐந்து அங்குல ஆழம் மற்றும் 16 அங்குல உயரம் அல்லது அதற்கும் குறைவான பொலித்தீன் பைகளுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த சுற்றுச்சூழல் அமைச்ச…
-
- 0 replies
- 156 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கைப் பிரஜைகளின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்துக்களும் உள்ளடக்கப்படும் வகையில் குடியியல் சட்டக் கோவையின் திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளைத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்தவொன்று காரணமாகவும் எந்தப் பிரஜைக்கும் ஓரங்கட்டுதல் ஆகாது என அரசியலமைப்பின் 12 ஆவது சரத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் பெண்கள் ஓரங்கட்டப்பட…
-
- 0 replies
- 238 views
-
-
உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் : கூட்டமைப்பு ஆதரவு அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என அறியமுடிகின்றது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிக்கும் என அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கடந்த மாதம் 22ஆம் எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் கமன்பிலவிற்கு எதிரான…
-
- 1 reply
- 276 views
-
-
தேசியத்துக்கு முன்னின்றவர்களை சமூகத்தில் ஏற்றுக்கொள்ள எந்தவிதமான அமைப்புகளும் இல்லை – அருட்தந்தை மா.சத்திவேல் July 19, 2021 நாங்கள் தேசியம் பேசுகின்றோம். ஆனால் எங்களுடைய தேசியத்துக்கு முன்னின்றவர்களை சமூகத்தில் ஏற்றுக் கொள்வதற்கு எந்த விதமான செயற் பாடுகளும், அமைப்புகளும் இல்லை என அருட்தந்தை மா.சத்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து சமூக நீதிக்கான செயற் பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப் பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்தினருக்கு தகவல் தெரிவிக்கையில், அரசியல் கைதிகள் விடுதலையாகி (விடுதலையாகி என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்.) நீதிமன்ற செயற் பாட்டுக்க…
-
- 1 reply
- 318 views
-
-
மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார் சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறை…
-
- 15 replies
- 819 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்... வடக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை! யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களின் பின்னர் சந்தேகநபர்கள் ஐவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, ஐவருக்கும் எதிராக பயங்கரவாத சட்டத்தின் பிரிவின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரம், சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாததால் வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்…
-
- 0 replies
- 217 views
-
-
அரசாங்கத்தினால் வழங்கப்படும் முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் – உதய ஹேமந்த அரசாங்கத்தினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்த கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை திருகோணமலை காவல் துறை பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், முச்சக்கரவண்டிகள் அனைத்தும் கிராமப் பகுதி காவல்துறை நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாரிய வாகனங…
-
- 0 replies
- 282 views
-
-
கொழும்பு – ஷாங்காய் விமான சேவைகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம் கொழும்பில் இருந்து ஷாங்காய் செல்லும் சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸின் விமான சேவைகள் ஜூலை 26 முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஜூலை 6 ஆம் திகதி கொழும்பிலிருந்து தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்திற்கு சென்ற MU714 என்ற விமானத்தில் சென்ற ஆறு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொழும்பு-ஷாங்காய் விமான சேவைகள் இடைநிறுத்தப்படும் அதே நேரத்தில் கொழும்பு-குன்மிங் விமான சேவைகளும் அடுத்த வாரம் முதல் இரத்து செய்யப்படும் என அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1229574 கொரோனாவை தந்தவனுக்கே.... திருப்பி கொடுப்பப…
-
- 0 replies
- 219 views
-
-
யாழ்.மாவட்ட மக்களிடம் பொறுப்புணர்வில்லை.! மாவட்டம் இன்று ஆபத்தில் இருப்பதற்கு மக்கள்தான் காரணம் - சவேந்திர சில்வா யாழ்.மாவட்டத்தில் ஆங்காங்கே உருவாகியிருக்கும் கொரோனா கொத்தணிகளுக்கு யாழ்.மாவட்ட மக்களுடைய பொறுப்பற்ற செயலே காரணமாகும். என இராணுவ தளபதியும் தேசிய கொவிட்ட தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். பருத்தித்துறை கொத்தணி தொடர்பில் கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது மிக கட்டாயமான ஒரு விடயமாகும். ஆனால் பெரும்பாலானோர் அதை மதிப்பதில்லை. அதற்கு யாழ்ப்பாணமும் விதிவிலக்கல்ல. கொரோனா 1ம், 2ம் அலைகளின் தாக்கம் ஏற்பட…
-
- 9 replies
- 630 views
-
-
கடலட்டைப் பண்ணை உருவாக்கம் ; அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசெளகரியங்களை ஏற்படுத்தும் - கடற்றொழிலாளர்கள் அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ளுகின்ற நோக்கோடு அரசியல்வாதிகள் சிலரினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசெளகரியங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினை தோற்றுவித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் கடலட்டைப் பண்ணை உருவாக்கும் திட்டம் தொடர்பாக அண்மைக்காலமாக வெளியாகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்ககும் போதே கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி இரணைமாதா நகர் கடற்றொழிலாளர் பொது மண்டபத்தில்…
-
- 0 replies
- 257 views
-
-
‘மேதகு’ திரைப்படத்தை தரவிறக்கிய இருவர் கைது (சி.எல்.சிசில்) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘மேதகு’ தமிழ்த் திரைப்படத்தை இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய் தனர் என்ற குற்றச்சாட்டில், நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா, ஹாவாஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைது செய்யப் பட்டுள்ளனர். நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் வியாபார நிலையமொன்றை நடத்தி வரும் நபரொருவரும் அவரது நண்பர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, கார்கில்ஸ் கட்டிட வளாகத்திலுள்ள பிரதான ச…
-
- 0 replies
- 326 views
-
-
கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை குறித்து இன்றையதினம் விவாதம்! எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்றைய தினம் (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்று முற்பகல் 10 மணிமுதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது. அத்துடன், நாளைய தினமும் விவாதம் இடம்பெற்று நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்…
-
- 0 replies
- 233 views
-
-
புலிகளால் சேர்க்கப்பட்ட சிறுவர்களை நினைவுகூருவது தவறா? – பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி விடுதலைப் புலிகள் சிறுவர்களை பலவந்தமாக அவர்களது இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் மரணமான அச்சிறுவர்களின் பெற்றோர் அவர்களை ஏன் நினைவு கூர முடியாது? ஒரு நாடு, ஒரு சட்டம் என்றால், தெற்கில் ஜே.வி.பி காலத்தில் படையினரால் கொல்லப்பட்ட ஜே.வி.பியினரை நினைவு கூர முடியுமென்றால், ஏன் தமிழ் மக்களால் அவ்வாறு முடியாது? இவ்வாறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது அமர்வில் சாட்சியமளித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பினார். ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது விசாரணை அமர்வு கடந்த 14 ஆம் திகதி அன்று பி.எம்.ஐ.சி.எச் மண்டபத்தின் துலிப் கூட்ட அறையில் …
-
- 1 reply
- 319 views
-
-
கூட்டமைப்பினருக்கும்... இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும். இடையில் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த விடயம் குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்று காலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் வேறு அலுவலர்களும் திரு. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக இலங்கை தமக்கும் வழங்கியிருக்கும் வாக்குறுதிகளின் …
-
- 12 replies
- 688 views
-
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ முகாமில் பயிற்சி – சரத் வீரசேகர இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கான முன்மொழிவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்துள்ளார். இராணுவ முகாம்களில் குறித்த தலைமைப் பயிற்சி வழங்கப்படும் என்றும் இது போன்ற பயிற்சிக்கு சிறந்த இடம் அது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலைமைப் பயிற்சி என்பது இளைஞர்களை இராணுவதிற்குள் இணைக்கும் முயற்சி அல்ல என்றும் அது நாட்டில் சிறந்த ஒழுக்கம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2021/1229107
-
- 3 replies
- 323 views
-
-
“பலவிடயங்களை சகித்துக்கொண்டே கூட்டமைப்பில் இருக்கின்றோம்” - விக்கி தரப்புடனான கலந்துரையாடலின் போது ரெலோ (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக்கட்சியினுள் ஒன்றாக இருக்கும் ரெலோ பல விடயங்களை சகித்துக்கொண்டு தான் அதனுள் இருக்கின்றது என்று விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் ரெலோவின் முயற்சியின் மற்றொரு கட்டமாக விக்னேஸ்வரன் தரப்பினை அவருடைய யாழ்.இல்லத்தில் ரெலோ சந்தித்திருந்தது. இதன்போது, விக்னேஸ்வரன் தரப்பில் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழரசுக்கட்சியின் கடந்தகாலச் செயற்பாடுகளை சுட்டிக்காட்டினார்கள். குறிப்பாக, …
-
- 1 reply
- 402 views
-
-
கிளிநொச்சியில்... ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு கிளிநொச்சியில் ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிதிப் பங்களிப்பில், நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் உருவாக்கப்பட்ட ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இயக்கி’ உணவு விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இந்த உணவகத்தில் பாரம்பரிய உணவுகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி…
-
- 14 replies
- 801 views
-
-
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டுள்ளது - சித்தார்த்தன் July 17, 2021 ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த காரணத்தி னாலேயே அவை பிரிவை நோக்கி செல்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் இடம் பெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அனைவரது அர்பணிப்புக்களும், உயிர் தியாகங்களும் வீண் போய் விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது. இன்று ஒரு பின்னடைவான நிலமைக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ளனர். இதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய …
-
- 0 replies
- 249 views
-
-
வல்வை நகரசபைத் தலைவர் பதவி துறக்கிறார் July 18, 2021 வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அந்தக் கட்சியின் நகர சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழ் தேசியக் கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில் அவர்களுடன் இணைந்து செ…
-
- 0 replies
- 322 views
-