ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
நாட்டில்... தினமும், 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவு வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்! நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த தொகை ஆண்டுக்கு 1.3 பில்லியன் தொன். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் நூற்றுக்கு சுமார் 40 சதவீதம் வீணடிக்கப்படுகின்றது. சுமார் 5,000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட, சமைக்கப் படாத உணவு ஒவ்வொரு நாளும் குப்பையாக வீசப்படுகிறது. இந்த நிலை நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும்.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1242003
-
- 0 replies
- 240 views
-
-
60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்... பூஸ்டர் தடுப்பூசி! 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதற்கு தொற்று நோய் தொடர்பான தேசிய ஆலோசனைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “30 – 60 வயது பிரிவினருள் நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அத்துடன், புற்றுநோய், சிறுநீரக நோய், சீறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொண்டோர் என நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு மேலதிகமாக சுக…
-
- 0 replies
- 177 views
-
-
முறையான முகாமைத்துவம் இல்லாவிட்டால் பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கை! நாட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட கொரோனா அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதை விட அதிக அபாய நிலைமை ஏற்படக் கூடும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே எச்சரிக்கை விடுத்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் இதுவரையில் 53 சதவீதமானோர் ம…
-
- 0 replies
- 201 views
-
-
சீன சேதனப் பசளையில்... பக்டீரியா காணப்படுவது, இரண்டாவது சோதனையிலும் உறுதி சீனாவில் இருந்து நாட்டிற்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுவதாக இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இதனை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதியை விவசாயத் துறை நிராகரித்துள்ளதாக பணிப்பாளர், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இதுகுறித்து உறுதி செய்யப்பட்டதாக அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். மேலும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவுடன் கூடிய பசளையை விவசாயத் துறை ஒருபோதும் நாட்டிற்குள்…
-
- 0 replies
- 154 views
-
-
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்... முதலாம் திகதி தளர்வு நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1241935
-
- 0 replies
- 143 views
-
-
மாகாணங்களுக்கிடையிலான தடை, இரு வாரங்களுக்கு நீடிப்பு? மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவர் அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை நீக்கப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், சிகை அலங்கார நிலையங்கள், பார்கள், இரவு விடுதிகள் ஆகியன ஒரு மாதத்துக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, மாகாணங்களுக்கிடையில் இன்னும் இரு வாரங்களுக்கு ரயில் மற்றும் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படாது எனவும், மாகாணத்துக…
-
- 1 reply
- 247 views
-
-
வடக்கில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காணி சுவிகரிப்புக்கள் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேவளை பொதுமக்கள் இதனை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார். நிகழ்நிலை ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தற்போதைய சூழலில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கவலைதரும் விடயமாக உள்ளது இதனை அனுமதிக்கக முடியாது இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறேன். அது மட்டுமன்றி வடக்கில் இடம்பெற்று வரும் சம்பங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக …
-
- 0 replies
- 252 views
-
-
இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக நேற்றுமுன்தினம் மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு முன்னால் இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்தியா தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை உலக அரங்கில் தக்கவைத்துக் கொள்வதற்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள பெரிய, சிறிய நாடுகளையெல்லாம் தங்களுடைய (இந்தியா) கண்பார்வையில் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளையெல்லாம் தொடர்ந்து தங்களுடைய (இந்தியா) கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதற்…
-
- 7 replies
- 1.6k views
-
-
அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களென ஒருபோதும் கூறவில்லை - வீரசேகர Published by T. Saranya on 2021-09-29 16:03:51 (இராஜதுரை ஹஷான்) அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என ஒருபோதும் குறிப்பிடவில்லை. அடிப்படைவாத கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு முஸ்லிம் சமூகத்தினரிடமும், முஸ்லிம் அமைப்புக்களிடமும் விடுத்த கோரிக்கை இவ்வாறு திரிபுப்படுத்தப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். பொது மக்களின் பாதுகாப்பு கருதியே சந்தேக நபர்கள் கைது செய்யப…
-
- 0 replies
- 335 views
-
-
லசந்தவின் படுகொலை குறித்து சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் விசாரணை செய்ய தீர்மானம் Published on 2021-09-29 14:13:23 (நா.தனுஜா) சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தை நிறுவி, அதனூடாக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளன. சர்வதேச ரீதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காக, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் 3 முன்னணி அமைப்புக்கள் ஒன்றிணைந்து, அப்படுகொலை வழக்குகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவும…
-
- 0 replies
- 252 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் இடம்பெற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தேவாலயங்களுக்கு மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் விடயத்தை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். ஞானசார தேரரும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுமென கூறியிருந்த நிலையில், தற்போது இலங்கை கடற்படையினராலும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என கூறியுள்ளதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. இலங்கை கடற்படையினர் தவறுதலால் நடந்தவொன்று என உஸ்வெட்டகேயாவ கடற்படை முகாமினர் கூறியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் இலங்கை கடற்படை இராணுவத்தளபதி மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் மன்…
-
- 1 reply
- 366 views
-
-
இந்தியாவிலிருந்து கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்! ShanaSeptember 29, 2021 (கல்லடி குறூப்நிருபர்)இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நல்லிண கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,நாங்கள் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அரியானா மாநிலத்திற்கு சென்றிருந்தோம், அரியானா மாநிலத்தின் ஆள…
-
- 0 replies
- 236 views
-
-
முன்னாள் போராளி கைது! கைக்குண்டு மீட்புடன் தொடர்பு என்கிறது பொலிஸ்! கொழும்பு, நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். புலிகள் அமைப்பில் இருந்தபோது இவர் இம்ரான் – பாண்டியன் படையணியில் செயற்பட்டுள்ளார் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர். நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையின் மலசலக்கூடத்திலிருந்து கடந்த 14 ஆம் திகதி கைக்குண்டொன்று மீட்கப்பட்டது. இதனையடுத்து திருகோணமலை உப்புவெளி பகு…
-
- 1 reply
- 246 views
-
-
சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல. எனவே, இவ்விதமான அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமடைய தேவையில்லை என பாது…
-
- 0 replies
- 182 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் தமிழ் மக்களுடன் கலந்துரையாட வேண்டும் – காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் தமிழ் மக்களுடன் விளிம்பில் இருந்து மையம் நோக்கியதாக கலந்துரையாட வேண்டும் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வவுனியாவில் ஆயிரத்து 685ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.தமிழர் தாயகப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்குச் சென்று காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் அவல நிலையை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்ப…
-
- 0 replies
- 153 views
-
-
இலங்கை கோயிலில் பல நூற்றாண்டு தமிழ், தெலுங்கு செப்பேடு - யாழ். பல்கலை பேராசிரியர் கண்டுபிடிப்பு ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NAGULESWARAN PRAVEEN இலங்கையின் வடமத்திய மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தமிழ் பிரதேசமொன்றுக்கான சான்றுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கண்டுபிடித்துள்ளார். பொலநறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். வரலாற்றுத் தொடக்க காலத…
-
- 1 reply
- 323 views
- 1 follower
-
-
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் இயங்கும்... நீர் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சுத்திகரித்த குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை ) நடைபெற்றது. அதன் போது , மாநகர சபை உறுப்பினர் வ. பார்தீபன் “மாநகர சபை எல்லைக்குள் அனுமதி இன்றி சுத்திகரிக்கப்பட்ட நீர் விற்பனை நிலையங்கள் பல இயங்கி வருகின்றன அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ” என கோரி பிரேரணையை சபையில் முன் வைத்தார். அதனை சபை ஏக மனதாக ஏற…
-
- 1 reply
- 300 views
-
-
அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிக்க... 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது மத்திய வங்கி கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2 அரச வங்கிகள் ஊடாக இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க இதற்கு மேலதிகமாக அதிக பணம் தேவைப்பட்டால் இலங்கை மத்திய வங்கி அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241801
-
- 2 replies
- 252 views
-
-
திருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் !! திருகோணமலை வரோதயனகரில் 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவர் இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர் தாம் உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் விசாரிக்க சென்றபோது குறித்த நடவடிக்கையை தாம் முன்னெடுக்கவில்லை என பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தில் அவரது மனைவி மற்…
-
- 2 replies
- 352 views
-
-
யாழ். மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி யாழ் மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதே வேளை பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சபையின் ஆரம்பத்தில் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அது மாத்திரமின்றி தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து கடந்த 23 ஆம் திகதி யாழ் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தை காவல்துறையினர் காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் …
-
- 0 replies
- 193 views
-
-
தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பயணிகளுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை – அரசாங்கம் இலங்கைக்கு எதிர்மறையான PCR அறிக்கையுடன் வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் விமான நிலையத்தில் மற்றொரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கமைய முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பெறப்பட்ட பிசிஆர் சோதனை அறிக்கை எதிர்மறையாக இருந்தால், அவர்கள் மீண்டும் விமான நிலையத்தில் சோதிக்கப்படாமல் சமூகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமை…
-
- 1 reply
- 222 views
-
-
பொதுமக்களுக்கு... இலவசமாக வழங்கப்படவுள்ள, ‘சுவ தரணி’ மருந்துப் பொதி கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு! பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ‘சுவ தரணி’ சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி அவர்களினால் உத்தியோகபூர்வமாக இந்த ‘சுவ தரணி’ மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கப்பட்டது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய பயணித்து ஆரோக்கியமான ம…
-
- 0 replies
- 292 views
-
-
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிப்பு! அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241777
-
- 0 replies
- 162 views
-
-
பிரம்மாஸ்திரம் நிகழ்ச்சிக்கு எம். ஏ. சுமந்திரன் வழங்கிய செவ்வி
-
- 0 replies
- 233 views
-
-
(நா.தனுஜா) இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிகள் குழுவை இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை நிறுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மாறாக அவ்வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்சார் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினைத் தொடர்ந்து வழங்குவது குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக நாட்டை வந்தடைந்திருக்கும் ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்…
-
- 2 replies
- 502 views
-