ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் மக்கள் பேரவை அழைப்பு June 2, 2020 உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது. இதன் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்கள் குறைந்தபட்சம் இன்னும் 3-4 ஆண்டுகள் வரையாவது தொடருவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் எமது சுகாதார, பொருளாதார, கல்வி, அரசியல், சமூக ஸ்திரத்தன்மையை தக்கவைத்து பாதுகாத்து மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களும் தயார்படுத்தல்களும் உத்வேகம் பெறவேண்டிய ஒரு தேவை எழுந்திருப்பதுடன், இதை குறுகியகால, இடைக்கால, நீண்டகால கண்ணோட்டங்களுடன் ச…
-
- 0 replies
- 275 views
-
-
யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அரசியல் வாதிகள் மற்றும் ஏனையோர் பல்கலைக்கழக பதிவாளரின் அனுமதி பெற்று செல்லவேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள காவலரண்கள் உடனே அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இன்று தெரிவித்தார். யாழ். மாவட்ட பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம் உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடந்து தெரிவிக்கையில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் மற்றும் பொலிஸார் தேவை கருதி நுழைய வேண்டி இருந்ததே தவிர வேறு காரணங்களுக்காக…
-
- 0 replies
- 286 views
-
-
இறுதிக்கட்டப் போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான- நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் வாய்மூல அறிக்கையில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் அவர், தமது ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில், போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கு நம்பகமான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தருஸ்மன் குழுவினால் முன்னர் முன்வைக்க…
-
- 0 replies
- 378 views
-
-
தொடர் வான் தாக்குதல்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி சீர்குலைவு [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 02:29 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவில் தொடரும் வான் தாக்குதல்களால் மாணவர்களின் கல்வி சீர்குலைத்துள்ளது என்று முல்லைத்தீவு மகா வித்தியாலய முதல்வர் செ.அல்பிறட் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினரின் வான் தாக்குதலுக்கு பின்னர் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கைகளாலும் ஆழிப்பேரலையாலும் முல்லைத்தீவு மாணவர்கள் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதல்கள் மாணவர்களை பா…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யமாட்டோம்; ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்' என்று, இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே கொக்கரித்துவிட்டுச் சென்றார். இலங்கையில் மட்டுமல்ல; தமிழகத்திலும் தமிழினத்துக்கு எதிரான சதி வேலைகளில் சிங்கள அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன. சிங்கள அரசு உண்மையில் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறதா? என்கிற கேள்வியோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்தோம். அப்போது, மதுரையில் டிச. 26-ம் தேதி நடக்க இருந்த தமிழீழ அங்கீகார மாநாட்டிற்கான அனுமதி மறுக்கப்பட்ட தகவல் அவருக்கு வந்து சேர்ந்தது. அதுபற்றி தன்…
-
- 0 replies
- 984 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் ஆஜராகினார் -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி. சிசிதரன் யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்றத்தில் இன்று புதன்கிழமை (20) ஆஜராகினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், வணிக முகாமைத்துவபீட பீடாதிபதி ரி. வேல்நம்பி மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இவரை நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) இரவு விசாரண…
-
- 4 replies
- 851 views
-
-
வெலிக்கந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ள கருத்தை ஏற்கமுடியாது எனக் கூறும் எதிர்க்கட்சிகள், வரம்பு மீறி திமிருடன் செயற்படும் கோத்தபாயவுக்கே புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. "நீதிமன்றத்தின் செயற்பாடுகளைத் தன்னிச்சையாகச் செய்வதற்கு கோத்தபாய யார்? அவர் ஒரு சாதாரண அரச அதிகாரி. எனவே, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள்தான் அவர் செயற்பட வேண்டும்'' என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் …
-
- 1 reply
- 732 views
-
-
ம ன்னாரில் நடைபெற்ற தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் என்ற தலைப்பிலான கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இது பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம், கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் என பலதரப்பட்ட மட்டங்களிலான கூட்டமைப்பின் கூட்டங்களில் மறைபொருளாகவும், வெளிப்படையாகவும் இறுக்கி மூடிய கதவுகளுக்குள் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள், மன்னா…
-
- 0 replies
- 286 views
-
-
ACF தொண்டு ஊழியர்கள் படுகொலைச் சம்பவம் குறித்து பாதுகாப்பு தரப்பிலிருந்து முரண்பட்ட சாட்சியங்கள: மூதூரில் ஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 தன்னார்வ தொண்டர்கள் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு தரப்பினர் அளித்து வரும் சாட்சியங்கள் முரண்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு சாட்சியமளித்த அதிகாரிகள் மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். படுகொலைச் சம்பவம் குறித்து வடக்கு கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிற்கு 6ம் திகதி அறிவிக்கப்பட்டதாக நேற்றைய தினம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. எனினும்…
-
- 0 replies
- 577 views
-
-
எதிர்வரும் 26 ஆம் நாள் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவிருக்கும் சிறிலங்கா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிகெட் போட்டியை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகமும் Refugee Action Collective எனும் அமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் இந்த சிறிலங்கா கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் தமிழ்மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ் ஏதிலிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. 'பல்லாயிரக்கணக்கில் வேற்றின மக்கள் கூடும் இந்த விளையாட்டு நிகழ்வில் எமது கவனயீர்ப்புப் போராட்டத்தைச் செய்வதன்மூலம் சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவதே எமது போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்' என தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சா…
-
- 3 replies
- 480 views
-
-
முழங்காவிலில் தொடரும் காடழிப்பு - நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் தொடர்ச்சியாக மரங்கள் அழிக்கப்பட்டு களவாக எடுத்துச் செல்லப்படுவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கரியாலைநாகபடுவான், தென்னியங்குளம் செல்லும் வீதியில் அமைந்துள்ள காடுகளில் மீள்குடியேற்றத்தின் பின்னர், களவாக மரங்கள் அழிக்கப்பட்டு பிற இடங்களுக்குக் கொண்டுச் செல்லப்படுகின்றன. இம்மரங்கள் அழிப்புத் தொடர்பாக முழங்காவில் பொலிஸார் கண்டு கொள்வதில்லை எனவும் அழிக்கப்படும் மரங்கள் ஏ-32 வீதி வழியாகவும் பூநகரி சங்குப்பிட்டிப் பாலம் வழியாகவும் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரி பரந்தன் வீதி வழியாக கிளிநொச்சி மரக்காலைகளுக்கும் கொண்டுச் செல்லப்படுக…
-
- 0 replies
- 296 views
-
-
கூட்டமைப்புடன் இணைந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்! by : Benitlas தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று(வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருகோணமலையில் உள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் தமிழ் பிரதிநிதித்துவத்தினை காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாம் இருப்பதாக வரதன் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளை சிதறடித்து பெரும்பான்மையை குறைத்துக்கொள்…
-
- 0 replies
- 516 views
-
-
'மனித உரிமை'களுக்கு அடிப்படையானது 'சுயநிர்ணய உரிமை'யே; அதற்காகவே நாம் போராடுகின்றோம்; இது பயங்கரவாதம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 534 views
-
-
பல்கலைக்கழக மாணவர் கைது விவகாரம்: உயர்நீதிமன்றை நாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்! வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களான வி.பவானந்தன், ப.தர்ஷானந்த், க.ஜெனமேஜெயந், எஸ்.சொலமன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த மாத முற்பகுதியில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்துக்கு முரண…
-
- 2 replies
- 514 views
-
-
சமாதியை கடக்கும் போது சத்தமில்லை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதனைச் செய்தாலும், அவருடைய பெற்றோர்களான எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகிய இருவரும் நாட்டுக்கு செய்த சேவையை மறக்கமுடியாது. ஆகையால்தான், அவர்களின் சமாதிக்கு கௌரவம் செலுத்தினோம் என்று பாதயாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/178299/சம-த-ய-கடக-க-ம-ப-த-சத-தம-ல-ல-#sthash.W3TSzYFE.dpuf
-
- 1 reply
- 558 views
-
-
ஊருக்குள் புகுந்த முதலை சிக்கியது! மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்துவந்த முதலையொன்று அப்பகுதி மக்களினால் பிடிக்கப்பட்டது. பாலமீன்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த நிலையிலேயே நேற்று (29) மாலை குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 அடி நீளமான முதலையானது நீண்ட நாட்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்திவந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://newuthayan.com/ஊருக்குள்-புகுந்த-முதலை/
-
- 0 replies
- 759 views
-
-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் பணியாளர்களும் இருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.சென்னையில் 13.12.08 சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போராட்டத்தை தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழின உணர்வாளரான இயக்குநர் சீமான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர். இயக்குனர் சீமான் ஆற்றிய உரையின் ஒளிப்பதிவுப் பகுதிகளைக் காண: http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 2 replies
- 2.3k views
-
-
ஐவருக்கு மாத்திரமே அனுமதி இனிவரும் காலங்களில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணியொருவரை வழியனுப்புவதற்கு 5 பேர் மாத்திரமே, விமான நிலையத்தின் பயணிகளை வழி அனுப்பி வைக்கும் பகுதிக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவரென, விமான நிலைய ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். அத்துடன், விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், அவர் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஐவரகக-மததரம-அனமத/175-252859
-
- 0 replies
- 349 views
-
-
தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார். அண்மையில் நூல் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்; தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நூல் சட்டத்திற்கு புறம்பான நூல் அல்ல என நீதிபதிகள் தீர்ப்புரைத்துள்ளனர். இத்தனை தடைகளை கடந்த இந்நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அந்நூலில் இருந்து சிலப் பகுதிகள…
-
- 1 reply
- 1.2k views
-
-
அபிவிருத்தி குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பதை விட காணி உரிமையை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன். காணி உரிமை விடயத்தில் நாம் கவனயீனமாக இருப்போமானால் அதனால் முஸ்லீம் சமூகம் அபிவிருத்தியை இழந்தும் நிலங்களை இழந்தும் ஒரு அநாதையான சமூகமாக மாறிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்வு வியாழக்கிழமை(16) இரவு அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது . இதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் மேற்கண்டவாறு கு…
-
- 0 replies
- 269 views
-
-
பதவி விலகுவாரா மேர்வின்: களனி தொகுதி அமைப்பாளாராக பஷில்? By General 2013-01-11 12:30:20 களனி தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக பதவி விலகும்படி அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவலவின் கொலை மீதான விசாரணைகள் முடியும் வரை மேர்வினின் தொகுதி அமைப்பாளர் பதவியின் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இப்பதவிக்கு பஷில் ராஜபக்ஷவை தற்காலிகமாக நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹசித்த மடவலவின் கொலையுடன் மேர்வின் சில்வாவே த…
-
- 1 reply
- 312 views
-
-
அவளுக்கு ஒரு வாக்கு தேர்தல் பிரச்சாரம் யாழில் ஆரம்பம் July 23, 2020 அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் பெண் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. வடமாகாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் பெண்களின் கூட்டினைவில் ஆரம்பமானது. குறித்த பிரச்சார பணி குறித்து செயற்பாட்டாளர்களான எஸ். தீபா. ஜ.நாகநந்தினி, சஹானா, லயன் ஆனந்தி ஆகியோர் குறிப்பிடுகையில், “பெண்கள் அரசியலில் ஈடுபடல் வேண்டும். எமது உரிமை குறித்து பெண்களால் தான் பேச முடியும். எந்தக் கட்சி என்று நாம் குறிப்பிடவில்லை. ஆனால் ஆளுமையான கெட்டித்தனமுடைய பெண்களை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் மூன்று விருப்பு வாக்கு…
-
- 0 replies
- 501 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் நாளும் தொடரும் திட்டமிட்ட சிறிலங்காவின் இனப்படுகொலை: த.தே.கூ. [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 07:19 மு.ப ஈழம்] [ப.தயாளினி] வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலை நாள்தோறும் தொடர்கின்றபோதும் அனைத்துலக சமூகம் மௌனம் காத்து வருவதுடன் சிறிலங்காவுக்கே படைத்தரப்பு உதவிகளையும் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: - டிசம்பர் 17 இல் வட்டக்ககச்சி பகுதியில் 4 முறை சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் 5 மாத குழந்தை மற்றும் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் ஏதிலிகளாயினர். - டிசம…
-
- 0 replies
- 404 views
-
-
இங்கிலாந்தில் நிதி மோடியில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்ட்ட ஸ்ரீலங்கா மாணவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நிறுவனமொன்றில் இருந்து 2 இலட்சம் பவுண்ஸ் நிதியை மோசடி செய்வதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் குறித்த மாணவருக்கும் இந்தியர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் தலா 22 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வணிக கற்கைகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகைதந்த குறித்த ஸ்ரீலங்கா மாணவன், விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தண்டனை காலம் நிறைவடைந்த பின்னர் உடனடியாக அவர் நாடு கடத்தப்படுவார் என பிரித்தானிய அதிகாரிகள் குறிப்…
-
- 0 replies
- 376 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளாது நுகேகொடை வழியாக தும்முல்ல சந்தியின் ஊடாக கொள்ளுபிட்டி வரை வந்த பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொள்ளுபிட்டி சந்தியில் வைத்து இந்த கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/180845/பல-கல-க-கழக-ம-ணவர-கள-ன-ப-ரண-ம-த-கண-ண-ர-ப-ப-க-ப-ரய-கம-#sthash.vpdN4nHd.dpuf
-
- 0 replies
- 214 views
-