ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றிய தீர்மானமே தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு காரணம் – மனோ June 24, 2021 சில தினங்களுக்கு முன் வந்த ஐரோப்பிய ஒன்றிய GSP+ தொடர்பான தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையர் கூறிய கருத்து மற்றும் செப்டம்பரில் ஆணையர் வெளியிட உள்ள இலங்கை பற்றிய “வாய்மொழி அறிக்கை” ஆகியவைதான், ராஜபக்ச அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நீண்டகாலம் “சிறையில் இருக்கும், தமிழ் கைதிகள் விடுதலை பற்றி நேற்று முதல் நாள் அமைச்சர் நாமல் சபையில் விசேட அறிவிப்பு செய்தார். கடத்த சில வாரங்களுக்கு முன், எம்பீக்கள் சார்ள்ஸ், ஸ்ரீதரன் ஆகியோர் முன்னெடுப்பில், த…
-
- 0 replies
- 260 views
-
-
சிறைச்சாலைகளில் உள்ள மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டதைப் போன்று தங்களுக்கும் விடுதலை வழங்கவேண்டுமெனவும் அல்லது மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் கோரி இவ்வாறு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. துமிந்த விடுதலையின் எதிரொலி; மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில்…! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 0 replies
- 303 views
-
-
(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்றம் இன்று புதன் கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக கடந்த பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசன வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகாெண்டார். சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க காலை 10.00 மணிக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண…
-
- 7 replies
- 4k views
-
-
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: சுதந்திர கட்சி (எம்.மனோசித்ரா) ஆளுங்கட்சியின் கூட்டணிக்குள் இருந்தாலும் பாரபட்சமான முறையிலேயே பங்காளி கட்சிகள் வழிநடத்தப்படுகின்றனர். எவ்வித கலந்துரையாடல்களுக்கோ தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களிலோ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். அரசாங்கத்திற்குள் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து வினவிய போதே பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வீரகேசரிக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா ப…
-
- 11 replies
- 2.2k views
-
-
(நா.தனுஜா) இலங்கையில் சீன இராணுவம் கால்பதித்து விட்டதா? என்று மக்களைத் தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பதாக உண்மையை அறிந்துகொள்ளவேண்டும். இராணுவத்தினர் அணியும் ஆடையின் நிறத்தையொத்த ஆடைகளை அணிந்திருப்பவர்கள் சீனத்தொழிலாளர்களேயன்றி, அவர்கள் சீன இராணுவத்தினர் அல்ல என்று இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தெரிவித்திருக்கிறது. திஸ்ஸமஹாராமய வாவி அபிவிருத்தி நடவடிக்கைகள் சீன - இலங்கைக் கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளமையையும் சீன இராணுவத்தின் சீருடையையொத்த சீருடை அணிந்த சீனப்பிரஜைகள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பிலும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு 'இலங்கையில் சீன இராணுவம் கால்பதிக்கின்றதா?' என்ற தலைப்…
-
- 0 replies
- 218 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம்-அமைச்சர் அலி சப்ரி 18 Views இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அராப் செய்தி நிறுவனத்திற்கு (Arab News) அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவிக்கையில், முன்னைய அரசாங்கம் இல்லாமல் செய்வதாக வாக்குறுதியளித்த – ஆனால் நிறைவேற்றாத – 1979 ஆண்டு நடைமுறைக்கு வந்த வலுவான பயங்கரவாத தடைச்சட்டம், நபர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என சந்தேகம் உருவானால் அவரை நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்வதற்கும் சோதனையிடுவதற்கும் அனுமதிக்கின…
-
- 0 replies
- 448 views
-
-
LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர்களின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அல்லது வழக்குகளை விசார…
-
- 31 replies
- 1.5k views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லட்சுமன் பிரேமச்சந்திராவின் மனைவி சுமனா பிரேமசந்திர கண்டித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திராவின் கொலை தொடர்பாக 2016 ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா, இன்று சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார். இது குறித்து சுமனா பிரேமச்சந்திரா கூறுகையில், “கொலையாளி வெளியில் சுதந்திரமாக உள்ளார்... நீதியை மதிக்காத ஒரு நாட்டின் மீது சூரியன் பிரகாசிக்காது. ” மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் துமிந்த சில்வா மீது வழங்கப்பட்ட ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிக…
-
- 0 replies
- 284 views
-
-
பசில் ராஜபக்ஷ... நாடு திரும்பினார் வெளிநாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். பசில் ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைக்காக, மே மாதம் 12ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்றிருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1224614
-
- 2 replies
- 2.4k views
-
-
“என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது! June 23, 2021 தான் குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன் 15 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறையில் இருக்கிறார் அவருக்கு அந்தத் தண்டனையே போதுமெனவும் தெரிவித்தார். சபாநாயகர் தலைமையிலான நேற்றையப் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஒரு தடவை நான் வழக்கு விசாரணைக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்றிருந்தேன். நீதிமன்றத்தில் எனக்கு அரு…
-
- 38 replies
- 2.3k views
-
-
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 48 மில்லியன் ரூபா நிதியுதவி (நா.தனுஜா) கொழும்புத்துறைமுகத்திற்கு அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் 200,000 யூரோ நிதியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இலங்கை ரூபாவில் சுமார் 48 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்த நிதியுதவியின் மூலம் கப்பல் தீப்பரவலால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை புத்தளம், மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1…
-
- 4 replies
- 439 views
-
-
மீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு! இலங்கையில் நேற்று (புதன்கிழமை) இரவு 10.00 மணி முதல் மீளவும் பயணக்கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கோரியுள்ளார். அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றவர்கள் மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும…
-
- 0 replies
- 202 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினராக... பதவியேற்றார், ரணில்! நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் இன்று சத்தியப்பிரமாணம்! தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய அமர்வின் ஆரம்ப நிகழ்வாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பி…
-
- 3 replies
- 395 views
-
-
நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் - சுரேன் ராகவன்! By கிருசாயிதன் June 23, 2021 பாராளுமன்றத்தில் இன்று (23) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், சர்ச்சைக்குரிய அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார். தமிழ் அரசியல் கைதிகள் குறித்த விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். "ஆம், நான் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாய்தான். பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையினராக இருப்பதை விட எனது அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். ” என்றார். http://www.battinews.co…
-
- 3 replies
- 785 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மொழியில் வழங்கப்படாதமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் குற்றம் சுமத்தியதுடன், தமிழ் மொழியை அரச மொழியாக அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொண்டும் இன்றுவரை எமது மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் ஆவேசப்பட்டார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சுமந்திரனின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தவறுக்கு மன்னிப்புக்கேட்பதாக அறிவித்ததுடன் உடனடியாக இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, சிறப்புரிமை பிரச்சினை ஒன்…
-
- 3 replies
- 451 views
-
-
முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட் ) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை அரசவளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளது. இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதே…
-
- 24 replies
- 832 views
-
-
சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. 1990.06.19 அன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினத்தை தியாகிகள் தினமாகப் பிரக…
-
- 38 replies
- 2.7k views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. கொவிட்-19 வைரஸ் பரலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் நாட்டு மக்கள் நாளாந்தம் பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் விரைவில் வீதிக்கிறங்கி போராடுவார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார். நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிய எதிர்பார்ப்பின் மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின…
-
- 0 replies
- 235 views
-
-
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி, திங்கட்கிழமை இணைய வழி வாயிலாக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்த மாணவர்கள் www.maco.jfn.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊ…
-
- 0 replies
- 149 views
-
-
ஜெனிவா தீர்மானத்தில் முன்னேற்றம் இல்லை – இலங்கை குறித்த பிரதான நாடுகளின் குழு June 23, 2021 “ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திலுள்ள முக்கியமான விடயங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை” என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய நாடுகளின் குழு கவலை தெரிவித்திருக்கின்றது. கனடா, ஜேர்மனி, பிரிட்டன், வட மசிடோனியா, மலாவி, மொன்ரிகுறோ ஆகிய நாடுகளின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும், சிறுபான்மை மதத்தவர்கள் உள்ளிட்டவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அதன் 46/1 தீர்மானம் இலங்கையைக் கோரியிருந்தது. மார்ச் மாத …
-
- 1 reply
- 276 views
-
-
கனகராசா சரவணன் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அதில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது.அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். மணல் லொறியொன்றின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது. இராஜா…
-
- 9 replies
- 916 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. June 23, 2021 செவ்வாய்க்கிழமை (22-06-2021) நாடாளுமன்றில் தமிழர் தரப்பின் குரலாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்ச 22-06-2021 பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையில், ‘பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து இந்த விடயத்தை உங்கள் அரசியல் லாபங்களுக்கு பாவிக்காதீர்கள் எனத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 231 views
-
-
பிள்ளையான் போன்று, அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன் பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர், இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்து பேசிய இரா.சாணக்கியன், பயங்கரவாத தடைச்சட்ட…
-
- 0 replies
- 162 views
-
-
(நா.தனுஜா) இந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இருதரப்புக் கலந்துரையாடலின்போது, பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டிணைவு (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு), இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பு அமைப்பு (அயோரா) உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த இருதரப்புக் கலந்துரையாடல் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடல் சிறப்பானதாக அமைந்தது. இதன்போது இருதரப்பு நிகழ்ச்சிநிரல் மற்றும் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்தோடு பிம்ஸ்டெக், …
-
- 0 replies
- 375 views
-
-
கடலுணவு விற்பனை அமைச்சர் டக்ளஸ் முட்டுக்கட்டை – தம்பட்டி கடற்தொழிலாளர்கள் விசனம்! June 22, 2021 “நாம் கடற்றொழில் ஊடாக பிடிக்கும் கடலுணவுகளை இதுவரை காலமும் சுயமாக விற்பனை செய்து வந்தோம். தற்சமயம் கடற்றொழில் அமைச்சரின் தலையீடுகள் காரணமாக எம்மால் சுயமாக விற்பனை செய்ய முடியாதுள்ளது” என தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் சார்பில் சிவநேசபிள்ளை சிவச்செல்வன், சந்திரன் ரவிவர்மன் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கும் போது, “நாங்கள் எங்களுடைய சுய விருப்பின் பெயரில் கடலுணவுகளை உள்ளூர் வியாபாரிகளுக்கு…
-
- 1 reply
- 312 views
-