Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை இறக்ககண்டி பகுதியில் விமானப்படை விமானமொன்று அவசரத் தரையிறக்கம் (சி.எல்.சிசில்) இலங்கை விமானப்படை விமானிகளின் அடிப்படை பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட செஸ்னா 150 எனும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலை நிலாவெளி கடற்கரைக்கு அருகிலுள்ள இறக்ககண்டி பகுதியில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. இன்று காலை 10.22 மணியளவில் திருகோணமலையிலுள்ள விமானப்படைத்தளத்திலிருந்து புறப்பட்ட விமானம் காலை 10.48 மணியளவில் தரையிறங்கியதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது. இதனால் விமானிகளால் விபத்தை தவிர்க்க முடிந்ததுடன் இரு விமானிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது. …

    • 0 replies
    • 216 views
  2. ஆடை தொழிற்சாலை விவகாரம்- வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் தனிமைப்படுத்தல் சட்டம் நிறைவடையும் வரை முல்லைத்தீவில், ஆடை தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஆடை தொழிற்சாலை விவகாரம்- வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – Athavan News

    • 0 replies
    • 671 views
  3. கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் – இன்று முதல் புதிய நடைமுறை அமுல் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன. பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக ஒருநாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் நடைமுறை நேற்று வரை அமுலில் இருந்த நிலையில், இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் தாமதம் மற்றும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை எடுக…

    • 1 reply
    • 306 views
  4. கடந்த 12 வருடங்களாக... மகனைத் தேடி அலைந்த, தாய் மரணம் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த பன்னிரண்டு வருடங்களாக தேடி அலைந்த தாய், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளார். கடந்த 2009 இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட அவரது மகனான செஞ்சுடர் மாஸ்டர் என்பவரையே இதுவரை காலமும் தேடி வந்த நிலையில், புற்றுநோயினால் இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப்பேச்சாளரும் அ.ஈழம் சேகுவேராவின் தாயாரும் ஆகிய தேவகிஅம்மா என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் விடயத்தில் உரிய நீதி கிடைக்காத நிலையில் உயிரிழந்துள்ள குறித்த தாயாருக்கு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர்,…

  5. தொடரும் சீரற்ற வானிலை – இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேநேரம், 10 மாவட்டங்களின் 88 பிரதேசங்களிலுள்ள 67 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 71 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களில் 6 ஆயிரத்து 177 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806 பேர் 106 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

  6. வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசுக்கு வந்தவினை: சம்பந்தன், விக்கி சுட்டிக்காட்டு • குற்றங்களை புரியாது விட்டால் தீர்மானங்களை பார்த்து அஞ்சுவது ஏன் என்றும் கேள்வி • காலக்கிரமத்தில் இதுபோன்று பலவற்றுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் ராஜபக்ஷவினரின் அரசுக்கு எச்சரிக்கை (ஆர்.ராம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் இதுகால வரையிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றாகவே அமெரிக்க காங்கிரஸால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் …

    • 1 reply
    • 386 views
  7. பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் நிதியுதவி (எம்.மனோசித்ரா) பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். குறித்த அமைச்சர…

    • 27 replies
    • 2.1k views
  8. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டம் தொடர்கின்றது 72 Views வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் தொடர்பில் ‘இலக்கு’ ஊடகத்திற்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில், “எங்களுடைய போராட்டம் இன்றைக்கு 1568 ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகின்றது. தற்போதைய கொரோனா பெரும் தொற்று காரணமாக பயணத் தடை நடைமுறையில் உள்ளதால் போராட்டப் பந்தலில் தற்போது தாய்மார்கள் இல்லை. ஆனாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியின் வீட்டில் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் போராட்டத்தில் உறுதியாக உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தற்போது…

    • 1 reply
    • 373 views
  9. யாழில்... சிகிச்சை நிலையத்துக்கு செல்ல, மறுப்பு தெரிவித்து... எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வைரஸ் தொற்றாளர்கள் யாழ்ப்பாணம்- சுன்னாகம், மயிலங்காடு பகுதியிலுள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குறித்த தொற்றாளர்களுக்கு, இவ்விடயத்தில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியபோதும் அதனை ஏற்காது அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பினை இராணுவத்தினரிடம் சுகாதார துறையினர் வழங்கியுள்ளனர். சுன்னாகம்- மயிலங்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை…

  10. இலங்கை ஒரேவேளையில் இரண்டு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது – ஐநா பிரதிநிதி கொரோனா வைரஸ் பரவல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவற்றால் இலங்கை ஒரேவேளையில் இரண்டு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு உதவவேண்டும் என இலங்கைக்கான ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இலங்கை தொடரும் பெருந்தொற்றையும் தனது கரைகளில் உருவாககூடிய கடல்சார் பேரழிவையும் எதிர்நோக்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பலம் மற்றும் மீளஎழுச்சி பெறும் திறன் ஆகியவற்றை எதிர்பார்க்கும் அதேவேளை உலகில் உள்ள இலங்கையின் சகாக்…

  11. மனித உரிமை மீறல்கள்: அமெரிக்காவிடம் இலங்கை அரசு முக்கிய கோரிக்கை இலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டாமென அமெரிக்க வெளிவிவகார குழுவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவின் ஊடாக குறித்த கோரிக்கையை இலங்கை அரசு முன்வைத்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் சபையில், இலங்கை குறித்த யோசனையொன்றை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் முன்வைத்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி, மேலும் 4 உறுப்பினர்கள் ஊடாக இலக்கம் 413 என்ற குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெ…

  12. புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு..! மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனே இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார். மேலும், தனது மகனை நேற்றிரவு கைது செய்து கொண்டுசென்று, அடித்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாமென உயிரிழந்தவரின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்து வருகை தந்த மாவட்ட நீதவான் நீதிபதி கருப்பையா செல்வராணி சம்பவம் தொடர்பாக ஏறாவூர…

  13. யாழ்ப்பாணத்தில் சீன கொடி ஏற்றப்பட்ட விவகாரம் -வெளிவிவகார அமைச்சு கருத்து 29 Views யாழ்ப்பாணத்தில் கட்டிடமொன்றில் சீன கொடி ஏற்றப்பட்டமை குறித்து தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன கட்டுமான நிறுவனத்தின் கட்டிடத்திலேயே சீன கொடி காணப்பட்டதாக டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. இதுவரையில் இது குறித்து தனக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். விசேட நிகழ்வுகளின் போதே தேசியகொடிகள் ஏற்றப்படலாம்,என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இந்த சம்பவம் உள்ளுரில் பொறுப்பாக உள்ள உள்ளுராட்சியின் நியாயாதிக்கத்தின் கீழ் வருகின்றத…

  14. ஒரு மில்லியன்... "சினோபார்ம்" தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கை ஆரம்பத்தில் 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து நன்கொடையாகப் பெற்றது. இந்த தடுப்பூசிகள் ஆரம்பத்தில் இலங்கையில் வசிக்கும் சீன நாட்டினருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் சீன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பின்னர், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அத…

  15. கொரோனா வைரஸ், பரவலை கட்டுப்படுத்துவதற்கு... 286 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது- அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்றிட்டத்திற்கு இதுவரை 286 பில்லியன் ரூபாயை, அரசாங்கம் செலவிட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் செயற்றிட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல மேலும் கூறியுள்ளதாவது, ‘அரசாங்கம் தடுப்பூசிக்காகவே பாரிய தொகையினை செலவிட்டுள்ளது. மேலும் நிவாரணப் கொடுப்பனவும் உரியவாறு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டு கால…

  16. நாடு ஆபத்தான நிலையை நோக்கி நகர்வதாக GMOA எச்சரிக்கை 15 Views புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட ‘புத்தாண்டுக் கொத்தணியில்’ இருந்து இதுவரையில் சுமார் 97 ஆயிரம் கோவிட் – 19 தொற்றாளர்கள் இனங்காணப் பட்டிருக்கிறார்கள். அதேபோன்று இதுவரையில் நிகழ்ந்த 1,608 கொரோனா மரணங்களில் சுமார் 974 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் அடையாளங்காணப் பட்டவர்களாவர். எனவே மொத்த கொரோனா மரணங்களில் 60 சதவீதமானவை புத்தாண்டுக் கொத்தணியின் போது இனங்காணப்பட்ட நோயாளர்களை உள்ளடக்கியதாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண…

  17. பெயர் பலகையில் சிங்களத்தை நீக்கியது இந்தியா 99 Views இலங்கையின் தென்பகுதியை ஆக்கிரமித்துவரும் சீனா அதன் நிறுவனங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அறிவித்தல் பலகைகளில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழை நீக்கி சீன மொழியை புகுத்தி வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் பிரசன்னத்தால் சினமடைந்த இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகத்தின் பெயர்பலகையில் இருந்து இலங்கையின் மற்றுமொரு உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தை நீக்கி தனது மொழியான இந்தியை புகுத்தியுள்ளது. இது தற்செயலாக மேற்கொள்ளப்பட்டதா அல்லது சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களை காப்பாற்ற இந்தியா முயன்று வருகின்றதா என கொழும்ப…

  18. மட்டக்களப்பு- இருதயபுரத்தில் விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு மட்டக்களப்பு- இருதயபுரம் பகுதியிலுள்ள செவிப்புலனற்றோர் அலுவலகம் ஒன்றிலிருந்து, விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருதயபுரம்- ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த செபஸ்டியான் ஜெயந்தன் குரூஸ் (49வயது) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மட்டு.மாவட்ட செயலகத்தில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் இவர், செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்…

  19. சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமணம்; வவுனியாவில் மண்டபம் ‘சீல்’ வைக்கப்பட்டது 5 Views வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் நேற்று மாலை ‘சீல்’ வைத்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டமையுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், அங்கு …

  20. “எக்ஸ்பிரஸ் பெர்ள்” அனர்த்தம்- பிரித்தானிய தொழிநுட்ப உதவியை இலங்கை கோரியுள்ளது! June 5, 2021 இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், சாரா ஹல்டனுக்கும் (Sarah Hulton)ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இடையிலான சந்திப்பொன்று, நேற்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சிக்கு, பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் அவதானம் செலுத்த…

  21. கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூட கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம்! கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு கரைச்சி பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், அடைத் தொழிற்சாலை நிர்வாகம் இதற்கு ஒத்துழைக்காவிடின் நீதிமன்ற்ததை நாடவும் சபை அங்கிகாரம் வழங்கியுள்ளது. கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன. மேலும், கரைச்சி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் ப…

  22. மாகாண மட்டத்தில்... ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை – கல்வி அமைச்சு பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இத்தகைய பாடசாலைகள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இத்திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வியை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களின் எண்ண…

  23. தென் அமெரிக்க நாடுகள்... மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்களுக்கு தற்காலிக தடை! கடந்த 14 நாட்களில் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்தது அனைத்து விமான நிறுவங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தேமிய அபேவிக்கிரம தெரிவித்தார். இம்மாதம் முதலாம் திகதி முதல் விமான நிலையங்கள் அனைத்தும் மீளத் திறக்கப்பட்டன போதும் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு இதற்கு முன்னர் விதித்திருந்த தற்காலிக தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் கொரோனா தொற்ற…

  24. மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கு... யாழில் இருந்து மீன் விநியோகம்! மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கும் மீன்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் மற்றும் பல பகுதிகளில் உள்ள கடல்களில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் நீர்கொழும்பில் உள்ள ஒரு மையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மீன்களை மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலில் கப்பல் தீ விபத்துக்குள்ளானதால், நீர்கொழும்பு முதல் பானந்துறை வரையிலான கடற்பரப்பில் மீன் பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் துறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http…

    • 1 reply
    • 340 views
  25. பயணத்தடையில் பட்டிணியால் தவிக்கும் வவுனியா கற்குளம் மக்கள் 29 Views கொரோனா வைரஸ்தாக்கத்தை தணிக்கும் முகமாக இலங்கை அரசினால் பயணத்தடை முடக்கநிலை அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா பல கிராமப்புறங்களில் வாழும் தினக்கூலி மக்கள் தொழில்வாய்ப்பின்றி குடும்பத்துடன் பட்டிணியால் வாடிவருகின்றனர். வவுனியா பிரதேச செயலகப் பிரிவுற்குட்பட்ட சிதம்பரபுரம் கற்குளம் படிவம் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விறகுவெட்டுதல், மேசன்வேலை, கூலிவேலைகளுக்கு சென்று அதன்மூலம் பெறப்படுகின்ற வருமானத்தில் குடும்பச் செலவை நகர்த்திச் செல்லும் மக்கள் தற்போதைய பயணத்தடை காரணமாக உணவின்றி பட்டிணியால் பெரும் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.