ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
வடக்கில், விவசாயப் பண்ணைகள்... படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார். வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு …
-
- 8 replies
- 724 views
-
-
நல்லூர் கந்தனின்... திருவிழாவை, 100 பேருடன் நடத்துவதற்கு அனுமதி! வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின்படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனவே இந்த வருட ஆலய உற்சவத்தினை திறம்பட செயற்படுத்துவதற்கு அனைத்து தரப்…
-
- 7 replies
- 839 views
-
-
இதுவரையில்... தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று வாய்ப்பு! கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, அவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு- தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலை, ஐ.டி.எச் வைத்தியசாலை, அவிசாவளை வைத்தியசாலை, விஹாரமஹாதேவி பூங்கா ஆகிய இடங்களில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1232521
-
- 0 replies
- 302 views
-
-
24 மணிநேரமும் மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, தன்னை மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இன்று (04) அவர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டுவந்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, கௌரவ சபாநாயகர் அவர்களே, ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்து வைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மல…
-
- 8 replies
- 904 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ கிராம பிரிவை சேர்ந்த 1,417 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுடன் இணைத்து தமிழ் இன விகிதாசாரத்தை குறைத்தமைக்கான பரிசாகவே வவுனியா அரச அதிபராக இருந்த சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் இன விகிதாசாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது .அதற்காகவே காணி அபகரிப்புக்களும் சிங்கள குடியேற்றங்களும் தமிழர் பகுதிகளில் அரங்கேற்றப்படுகின்றன. இதற்கு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களும் எம்.பி.க்களும் சலுகைகளுக்காக துணைபோகின்றனர…
-
- 1 reply
- 354 views
-
-
வி.ரி.சகாதேவராஜா “நாம் சஹ்ரான் அணியைச் சேர்ந்தவர்கள். இன்னும் மூன்று மாதங்களுக்குள் நீ கொலை செய்யப்படுவாய். வாகனத்தில் குண்டுவைத்து, வெடிக்கவைக்கப்படுவாய்” என்றெல்லாம் கொலை அச்சுறுத்தல் விடுத்து, தனது பேஸ்புக்கின் ஊடாக குரல்பதிவை அனுப்புகின்றனர் என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்பாதுகாப்புக் கருதி, குறித்த குரல்பதிவு உள்ளிட்ட சகலஆதாரங்களுடன், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் நான் முறையிட்டுள்ளேன். இரகசியப் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். “எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிடுமானால், அதற்கான முழுப்பொறுப்பையும் எமது சபையில் உள்ள மூவர் பொறுப்பே…
-
- 0 replies
- 271 views
-
-
முல்லைத்தீவில் உள்ள யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு ! கே .குமணன் முல்லைத்தீவு மாவட்டம் சிலாவத்தைப் பகுதியில் உள்ள யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்துக்கு சொந்தமான சுவாமி தோட்டக்காணியில் குடியிருக்கும் மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. யாழ் ஆயர் இல்லத்தில் சுவாமி தோட்டத்துக்கு சொந்தமான தியோகு நகர் பகுதியில் ஏறத்தாழ 95 குடும்பங்கள், முதியோர் சங்கம், முன்பள்ளி, சைவ ஆலயம் பொது நோக்கு மண்டபம் என்பன அடங்கிய தியோகு நகர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் உள்ள மக்களுக்கும், அமைப்புகளுக்கும் சைவ ஆலயத்திற்குமாக யாழ் கத்தோலிக்க திரு அவைக்குரிய காணியை யாழ்ப்பாண…
-
- 4 replies
- 416 views
-
-
அரந்தலாவை பிக்குகள் படுகொலை : சி.ஐ.டி. சிறப்பு விசாரணை : கருணா அம்மானை கைதுசெய்யுமாறு மனுதாரர் கோரிக்கை ! (எம்.எப்.எம்.பஸீர்) அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அரிவித்தார். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்தார். அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரத்தில் , தற்போது உயிருடன் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக உடனடியாக …
-
- 3 replies
- 715 views
-
-
அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கம் எமக்கில்லை ; மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவே போராடுகின்றோம் - சாணக்கியன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதோ நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதோ எமது நோக்கம் அல்ல. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பிரதான நோக்கமே எமக்கு உள்ளது எனவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த சபை ஒத்த…
-
- 0 replies
- 153 views
-
-
11 இளைஞர்கள் கடத்தல்: முன்னாள் கடற்படை தளபதி, கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – சட்டமா அதிபர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. இளைஞர்களைக் கடத்தி, காணாமல் ஆக்கியமை, அவர்களைக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த குற்றப்பத்திரிகையை இரத்து செய்யக்கோரி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ரிட் மனு தாக்…
-
- 0 replies
- 405 views
-
-
எதிர்கட்சியினரின் அமளிக்கு மத்தியில், மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்! கடும் அமளிக்கு மத்தியில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் சட்டமூலம் உள்ளிட்ட 3 சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் கூடிய நிலையில், எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு விவகாரத்தை கூறி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக அவை நடவடிக்கைகள் அவ்வவ்போது ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கிடையில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் உள்ள 41 ஆயுத தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பாதுகாப்பு சட்ட…
-
- 0 replies
- 222 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா குறிப்பிட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒட்சிசன் சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால், குறித்த சிலிண்டர் பாவனை 180க்கும் மேல் அதிகரித்துள்ளது. …
-
- 0 replies
- 223 views
-
-
4 பகுதிகளில் இருந்து... கொழும்பிற்குள், பிரவேசிக்கவுள்ள வாகனப் பேரணிகள்! நாட்டின் 4 பகுதிகளில் இருந்து வாகனப் பேரணிகள் இன்று (புதன்கிழமை) கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. வேதன பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி இந்த வாகனப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி, நீர்கொழும்பு வீதியின் வெலிசரை, கண்டி வீதியின் கடவத்தை அதிவேக வீதி நுழைவாயில், ஹைலெவல் வீதியின் கொட்டாவை, காலி வீதியின் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வாகன பேரணிகள் ஆரம்பமாகவுள்ளன. இன்று முற்பகல் குறித்த பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் புறப்பட்டு, பிற்பகல் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை வந்தடையவுள்ளதாக இலங்…
-
- 1 reply
- 285 views
-
-
இருக்கைகளின் எண்ணிக்கைக்கு, அமையவே... பேருந்துகளில் பயணிக்க முடியும் – அவசர எச்சரிக்கை! பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. பேருந்துகளில் இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்…
-
- 1 reply
- 216 views
-
-
கொத்தலாவல சட்டத்தில் நான்கு திருத்தங்கள் – சுதந்திர கட்சியின் யோசனை ஜனாதிபதியிடம் ! கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. சுதந்திரக் கட்சியினால் குறித்த சட்ட வரைபை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பிரிந்துரைகளே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்வாங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் குறித்த கடிதத்தின் பிரதிகள் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கும் அ…
-
- 0 replies
- 170 views
-
-
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – நட்டஈடு வழங்குவதற்காக 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக இதுவரையில் 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தற்போது வழங்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கு முறையான மற்றும் ஒழுங்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/12323…
-
- 0 replies
- 329 views
-
-
கொரோனாவால் உயிரிழந்தவர்களில், பலருக்கு... இரண்டிற்கும் மேற்பட்ட நோய் தாக்கம் – அரசாங்கம் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களின் தாக்கமே காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் டொக்டர் ரமேஷ் பத்திரண இதனை குறிப்பிட்டார். கொரோனா தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பெரும்பாலானவர்களுக்கு கொமொர்பிடிட்டி எனப்படும் பிற சிக்கல்களும் இருந்ததாக கூறினார். மேலும் இறந்தவர்களில் சிலர் தடுப்பூசி போடப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் ரமேஷ் பத்திரண கூறினார். இதேவேளை நேற்றுடன் முடிவடைந்த கடந்த ஒரு…
-
- 0 replies
- 139 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் உருவான மூன்றாவது கொவிட் பரவல் அலையில் மாத்திரம் 2 இலட்சத்து 14 426 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , 3962 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன. 2020 மார்ச் மாதம் ஆரம்பமான முதலாவது அலையில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்த நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 3394 ஆகவே காணப்பட்டது. அதனையடுத்து 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஆரம்பமான இரண்டாவது அலையில் 596 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு , 95 948 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இவற்றுடன் ஒப்பிடும் போது மூன்றாவது அலையில் காணப்படும் தரவுகளானது டெல்டா திரிபு பரவலுடன் உருவாகியுள்ள அபாய நிலைமையை தெளிவுபடுத்துவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்த…
-
- 0 replies
- 263 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீளவேண்டும் என்றால் சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். சிங்கள புத்திசாலி மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம், ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை. அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சபையில் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/94770/thumb_large_cv_viki.jpg பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…
-
- 0 replies
- 312 views
-
-
நாங்கள் இறக்கும் தருவாயிலும் எமது பிள்ளைகளைத் தேடும் போராட்டம் தொடரும்: அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ShanaAugust 3, 2021 அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயிர்ப்புப் போராட்டமொன்று சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி திருமதி த.செல்வராணி தலைமையில் திருக்கோவில் குடிநிலம் செல்வ விநாயகர் முன்றலில் இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் எனப் பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, தாயின் கண்ணீர்ப் பயணத்திற்கு முடிவு கொடு, பத்து மாதம் சுமந்த வயிறு பற்றி எரிகின்றதே எங்கள் …
-
- 2 replies
- 275 views
-
-
“தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரம் வாழ் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” August 3, 2021 அந்தமான் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரம் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2021/164174
-
- 0 replies
- 295 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில்... கொடிச் சீலைக்கான, காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் இடம்பெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி, மாட்டுவண்டியின் ஊடாக நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகை மற்றும் காளாஞ்சி கையளிக்கப்பட்டன. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவு…
-
- 0 replies
- 427 views
-
-
முல்லைத்தீவில்... பெரும்பான்மையினரின், ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசாங்கம் முயற்சி- ரவிகரன் முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் அரசாங்கத்தின் சில திணைக்களங்களினாலும் படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக துரைராசா ரவிகரன் மேலும் கூறியுள்ளதாவது, “வட்டுவாகலை அண்மித்த பகுதிகளில் 617 ஏக்கர் காணிகள் கடற்படை வசமும் 400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராணுவத்தின் வசமும் உள்ளன. மேலும் பெரிய விகாரை ஒன்றையும் அப்பகுதியில் அமைத்து, பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றனர். இதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியி…
-
- 0 replies
- 274 views
-
-
ஆசிரியர் மற்றும் அதிபர்களின்... சம்பளத்தை அதிகரிக்க முடியாது – காமினி லொக்குகே நாட்டின் தற்போதைய நிலையில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை ஏகமனதாக முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கைகளை நிறைவேற்ற 56 பில்லியன் ரூபாய் தேவை என கூறியுள்ளார். இருப்பினும் நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் தற்சமயம் 56 பில்லியன் ரூபாய் நிதியை செலவழிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் பிரச்சினை குறித்து எதிர்வரும் வரவு ச…
-
- 0 replies
- 201 views
-
-
‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில்... ஹிஷாலினியின், அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்! நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழுவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, ஹிலாலினியின் அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ச…
-
- 20 replies
- 1.8k views
-