ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு மலேசியா, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார். “ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான். “தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாப…
-
- 9 replies
- 1.3k views
-
-
நெடுந்தீவிலுள்ள ஈ.பி.டி.பியின் அலுவலகம் நீக்கப்பட்டமை திடீர் நடவடிக்கை அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. அத்துடன் யாழ். குடாநாட்டிலுள்ள பல அலுவலகங்களை எதிர்காலத்தில் அகற்றுவதற்கு திட்;டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இது திடீர் நடவடிக்கையாகவோ, அவசரப்பட்ட நடவடிக்கையாகவோ நாம் முன்னெடுக்கவில்லை எனவும் ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சி.தவராசா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷியன் அண்மையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் மற்றும் கொல்லப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளரின் மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ந…
-
- 0 replies
- 558 views
-
-
-
- 0 replies
- 263 views
-
-
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது. அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. …
-
- 0 replies
- 180 views
-
-
கிளிநொச்சி பொது வைத்தியசாலை தீ விபத்து: வைத்தியசாலை சாதனங்கள், மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய சேதம் (சி.எல்.சிசில்) கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேற்று (20) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வைத்தியசாலையின் பல சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு மருத்துவமனையின் ஒரு கட்டிடத்தில் முதலில் தீ பரவியது, பின்னர் பல இடங்களுக்கு வேகமாகப் பரவியது, மருத்துவமனை நிர்வாகக் குழுவால் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய கத்தின் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்தின் போது நோயாளிகள் பாதுகாப்பான இட…
-
- 3 replies
- 505 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பணிப்பின் பேரினில் நெடுந்தீவில் இருந்த ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களது வீடுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளனவா என அறியும் நோக்குடன், விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.முன்னதாக சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.அந்த கால எல்லை முடிவடைந்த நிலையிலேயே ஈ.பி.டி.பியினர், மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வீடுகளை இலக்கு வைத்து தேடுதல் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் றெக்சியன் அண்மையில் தீவகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சந்தேகத்தின் பேரில் ஈ.பி.டி.பி. யாழ்.மாவட்…
-
- 0 replies
- 519 views
-
-
-
- 0 replies
- 333 views
-
-
சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகமானது மிகப் பலமான அழுத்தங்களை மேற்கொள்கின்றது. இவ்வாறு அனைத்துலக தொலைக்காட்சி சேவையான Al Jazeera தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்ததன் மூலம் 2009ல் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிறிலங்காவில் தொடர்ந்தும் முன்னாள் …
-
- 0 replies
- 398 views
-
-
ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சில் பதற்றநிலை..! ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளதால், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் சங்கத்தினால் இன்று (புதன்கிழமை) விஹார மஹாதேவி பூங்காவுக்கு அருகில் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவம் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 233 views
-
-
சரணடைந்த புலிகளின் தலைவர்கள் படுகொலை சம்பவத்தை நேரில் கண்ட ஊடகவியலாளர் குற்ற புலனாய்வுதுறையினரால் கைது! ..சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியளாரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். அரச தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று சிறப்பு அறிவித்தலுடன் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு அதிக…
-
- 0 replies
- 1.5k views
-
-
வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தாக்கல்லூரி மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவி பாலியல் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் (16.02.2022 ) ஆறு வருடங்கள் கடந்துவிட்டன. இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவரும் கண்டுபிடிக்கப்பட்டு இது வரை தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அண்மையில் வவுனியா உயர் நீதிமன்றத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள வித்தியாவின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்த நீதிபதி இளஞ்செழியன் எனது மகளின் பாலியல் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு உயிரிழந்த ஹரிஸ்ணவியின் தந்தை கங்காதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வவுனியா உக்கிளாங்குளத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது 16 வயது பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி கட…
-
- 2 replies
- 373 views
-
-
ஜி.எஸ்.பி சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் ஆயினும் ஐரோபிய ஒன்றியத்துடன் சுமுக உறவுகளைப் பேணுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஏற்கனவே எடுத்த முடிவின் படி ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தடையை கொண்டு வருமானால் தமது முடிவு தவறானது என்பதைக் காலம் கடந்து உணர்ந்து கொள்ளும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். http://www.eelamweb.com/
-
- 4 replies
- 1.1k views
-
-
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு 44 சிங்கள, முஸ்லீம் முகாமைத்துவ உதவியாளர்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 44 முகாமைத்துவ உதவியாளர்களும் நேற்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர்களும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லீம்களும் யாழ். மாவட்டத்திற்கு முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ் செயலகத்தில் தற்போது தமிழரல்லாத அதிகாரிகளை அரசாங்கம் அதிகளவில் நியமித்து வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=100832&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 432 views
-
-
இனி சிங்களத்தில் சீட்டு வழங்கப்படமாட்டாது -க. அகரன் போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு புரியாத சிங்கள மொழியில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமையை ஆட்சேபித்தும், தனது மொழி உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்தும் வவுனியா, மன்னார் வீதியைச் சேர்ந்த அன்று பிரசன்னோ என்ற இளைஞர்…
-
- 1 reply
- 385 views
-
-
தன், பிப்ரவரி 17, 2010 04:54 | மறைச்செல்வன், ஐரோப்பா “இலங்கையின் விவகாரங்களின் விசாரணைகளில் போதிய வளர்ச்சி இல்லை” – ஐ.நா உரிமைப் பற்றிய தலைமை சமீபத்தில் டப்ளின் நகரில் (U.N.H.C for Human Rights)> திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் , இலங்கையில் தேசிய மட்டத்தில் விசாரணைகள் (போர்க்குற்றம் பற்றிய) எதுவும் நடைபெறவில்லை எனக் கூறினார். இதை ஆமோதிப்பது போல, பி.பி.சி-க்கு அளித்தப் பேட்டியில், கோத்தபைய இராஜபக்சேவும், இலங்கையில் எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் நடத்தத் தான் விடமாட்டேன் எனக் கூறினார். இந்த முக்கியமான இரு அறிக்கைகளையும் சேர்த்து நோக்குமிடத்து சர்வதேச “பூர்த்தி செய்கிற” (complimentary) சட்டங்களை அமுல் படுத்தப் போதிய அளவு சட்ட வலுவை அவை கொண்டிருக்கின்றன என வாஷி…
-
- 0 replies
- 763 views
-
-
ஹட்டனில் பழமை வாய்ந்த தேவாலயத்தில் விபத்து.! ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டத்தின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. குறித்த இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த தேவாலயம் இந்த தோட்டத்தில் 31.05.1987ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இத் தேவாலயத்தில் வாராந்த ஆராதனை பூஜைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வ…
-
- 0 replies
- 329 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியில் போட் டியிடவுள்ள முன்னாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளு மன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியும் மற்றும் ஐந்து வேட்பாளர்களும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சிவநாதன் கிஷோரும் நேற்று ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை இவர்கள் நேற்று முன் தினம் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது. நன்றி தமிழ்மிரர்
-
- 6 replies
- 800 views
-
-
ஆளும் தரப்பு எம்.பிக்களை தேர்தலுக்கு தயாராகுமாறு பணிப்பு தேர்தல்களுக்குத் தயாராகுமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளது கூட்டு அரசின் தலைமைப்பீடம். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவு தொடர்பில் உயர் நீதிமன்றின் விளக்கம் சாதகமாக வராத பட்சத்தில் அதற்கு மாற்றீடாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக் கலாம் என்று உயர்மட்டத்தினர் சுட்டிக்காட்டியதை யடுத்தே அரச தலைமைப்பீடம் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளது. 20ஆவது திருத்தச் சட்டவரைவைக் கைவிடவேண்டிய நிலை ஏற்படுமென சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அரச தலைம…
-
- 0 replies
- 287 views
-
-
யாழ். நெடுந்தீவில் சிறுமியைக் கொலைசெய்த குற்றவாளியே ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண்ணையும் கொலை செய்துள்ளார் - விசாரணையில் அம்பலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24 ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி பட்டப்பகலில் வீடு புகுந்து ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பி…
-
- 7 replies
- 749 views
-
-
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!! .ஜெனரல் சரத் பொன்சேகாவை கைதுசெய்த நடவடிக்கையை தலைமையேற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறும் தேவையிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் மானவடு இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக மானவடுவை தவிர ஏனைய அனைத்து இராணுவ அதிகாரிகளிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் மேஜர் ஜெனரல் மானவடு ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
வடக்கு மாகாணத்தில் வெளிவரும் உதயன் நாளிதழ் நிறுவனத்திடம் 500 மில்லியன் (50கோடி) ரூபா கோரி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார். கடந்த காலத்தில் தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசனே தராகி சிவராம் படுகொலையைச் செய்தவர் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் விவசாய அமைச்சர் போதைவஸ்து கடத்தலுடனும் தொடர்புபட்டவர் எனவும் செய்தி வெளியிட்டிருந்தது. இக்காரணங்களைக் குறிப்பிட்டு, இவ்விவகாரங்களில் தன்னைக் குறிப்பிட்டு திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக, வடக்கு விவசாய அமைச்சரின் சட்டத்தரணியூடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 30 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபா பணத்தினைச் செலுத்தாவிட்டால் நீதிமன்றத்தினூடா…
-
- 0 replies
- 491 views
-
-
மகிந்தவிற்கெதிரான போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளானவா் வைத்தியசாலையில் March 22, 2022 நேற்று முன்தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் வருகைக்கு எதிராக யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறையினாின் தாக்குதலுக்குள்ளான முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். காவல்துறையினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது பேருந்தின் வாசல்படியிலிருந்து காவல்துறை…
-
- 0 replies
- 163 views
-
-
தெற்கு, மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், நாளை மறுநாள் (31) கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், எதிர்வரும் 31ம் திகதி தொடக்கம் பெப்ரவரி 2ம் திகதி வரை சிறிலங்காவிற்கு விஜயம் செய்வார். இவர், சிறிலங்காவில் அதிகாரிகளைச் சந்தித்து, போருக்குப் பிந்திய நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட, இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார்.…
-
- 0 replies
- 338 views
-
-
4 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 இந்திய மீனவர்கள் கைது (adaderana.lk)
-
- 0 replies
- 284 views
-
-
நமது இனம் திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது... சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிரியும், துரோகிகளும் தான் அதை செய்கின்றார்கள் என்றிருந்தால், இன்றோ... அதை நாமே செய்துகொண்டிருக்கின்றோம். தமிழரின் தலைமைத்துவம் ஒற்றைக் கேள்விக்குறிக்குள்ளேயே அடங்கிவிட்டிருக்கின்றது. ஈழ தேசத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெறவில்லை என்பதனை தற்போதைய சர்வதேச நிகழ்வுகள் எடுத்தியம்பும் நிலையில், புலிகளின் பின் நாம்தான் தமிழருக்கான பிரதிநிதிகள் என்று முளைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல கூறமைப்பாய் சிதறி நிற்கின்றது. ஒன்றுபட்டு குரலெழுப்பி தமிழரின் உரிமையைக் காக்க வேண்டியவர்கள் இன்று கூறுபட்டுக் குழப்பி நிற்பது வேதனைக்குரியது. இங்கு யார் பிரிந்தார்கள்; பி…
-
- 3 replies
- 720 views
-