ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டாலும், சிறிலங்காவுக்கு ஆபத்து உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிரணியின் பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேன, போர்க்குற்றச்சாட்டுகள் அவற்றுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு விளக்கம் கோரி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஆயுதப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்ற தனது நோக்கை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தூரநோக்குடனான பல விளைவுகளை உள்ளடக்கியதா…
-
- 0 replies
- 320 views
-
-
முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் கிழக்கில் இளம் பெண் கடத்தல் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏறாவூர் பகுதியில் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தனது கணவனுடன் வீதியால் நடந்து வந்துகொண்டிருந்த இளம் பெண்ணே கடத்தப்பட்டுள்ளார். முச்சங்கரவண்டியில் வந்த ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கணவன் மீது தாக்குதலை நடத்திய பின்னர் மனைவியை கடத்திச் சென்றுள்ளதாக மட்டக்களப்பு சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் நிலை தொடர்பில் இதுவரை தகவல்கள் இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். பதிவு.
-
- 0 replies
- 871 views
-
-
வில்பத்து காட்டுக்குச் சென்றபோது காணாமல் போன இராணுவத்தினர், வனவள அதிகாரிகள் உட்பட 8 பேரினது சடலங்களும் நேற்று மீட்கப்பட்டன. அநுராதபுரம்- சாலியபுர இராணுவ முகாமைச் சேர்ந்த கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜயந்த சுரவீர, நகர கட்டளை அதிகாரி மேஜர் அஜித் ஜயரத்ன, கோப்ரல் கபிலகுமார மற்றும் சுரங்க வன வள திணைக்களத்தின் வில்பத்து சரணாலய பொறுப்பதிகாரி வசந்த புஸ்பானந்த, வனவள பரிசோதகர் மஹேஸ் வித்தானகே, வழிகாட்டும் உத்தியோகஸ்தர்களான சந்தன பிரதீப் மற்றும் கெலும் ஜயவர்தன ஆகிய எட்டுப்பேருமே சடலங்களாக நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இவர்கள் அனைவரும் பயணம் செய்த வாகனமும் மீட்கப்பட்டுள்ளது. அதில் துப்பாக்கி சூட்டு சேதங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காட்…
-
- 0 replies
- 569 views
-
-
[Friday, 2011-05-27 16:50:04] மன்னார் பிரதேசச்செயலகம் மற்றும் மன்னார் வலயக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (27.5.2011) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியப் பாடசாலையில் \'நீரும் மனிதனும்\'எனும் தொனிப்பொருளில் தேசிய நீர்க் கலாசார கல்விக் கண்காட்சி நிகழ்வொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காமை மிகவும் வேதனையளிக்கக்கூடிய விடயமென தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் மேற்படி நிகழ்விற்கு அமைச்சர் ஒருவருக்கும்,ஏனைய அதிகாரிகள…
-
- 0 replies
- 486 views
-
-
293 கோடி லாபம் பெறும் நிறுவனத்திடம், வெறும் 2 கோடி பெற்ற மாகாணசபை.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடமாகாணசபையின் பங்களிப்புடன் கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யூலிப்பவர், பீற்றாபவர் நிறுவனங்களின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பில் வடமாகாணசபையில் கடுமையான விவாதம் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபையின் 130வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றுள்ளது. மேற்படி விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில், 2014ம் ஆண்டு யுலிப்பவர், பீற்றாபவர் ஆகிய நிறுவனங்கள்…
-
- 4 replies
- 1.1k views
-
-
பாண்டிச்சேரியில் இருந்து காங்கேசன்துறைக்கு சரக்கு கப்பல் சேவையை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தொடங்குவதற்கு ஹேலிஸ் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. அதன்படி அந்த நிறுவனம் சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மேலும் நான்கு நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரைக்கால் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவையை கடந்த மே 15 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது. எனினும், இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதால், அதன் தொடக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளத…
-
- 0 replies
- 417 views
- 1 follower
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான மொஹமட் கமீர் நிலார் நிஸாம்தீனை விடுவிக்க வேண்டும் என்றுக்கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவரின் நண்பர்களும் உறவினர்களும் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில், குறிப்பு புத்தகம் ஒன்றை வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிஸாம்டீன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை. குறித்த குறிப்பு புத்தகத்தில் நிஸாம்தீனின் கையெழுத்துக்கள் இருக்கவில்லை. இந்தநிலையில் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்தவாறே டியூனியசியாவுக்கு சென்று வந்தார் என்றும் அமெரிக்காவுக்கு சென்று வந்தார் என்று பொய்யான கதை…
-
- 1 reply
- 1.8k views
-
-
'கொழும்பு ஆட்கடத்தல்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு': ஐ.தே.க சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பெரும் தொகை பணம் கேட்டு பொதுமக்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவங்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு" என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளதாவது: "கடத்தல்களில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களின் பெயர் விபரங்களை எமது கட்சி தெரிந்து வைத்துள்ளது. 5 தொடக்கம் 10 மில்லியன் ரூபாய் கேட்டு பொதுமக்களை கடத்தும் அமைச்சர்கள் தொடர்பான தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. எனினும் சில காரணங்களால் அவற்றை நாம் வெளியிட முடியாது.…
-
- 3 replies
- 1.2k views
-
-
Sunday, June 5, 2011, 16:06கட்டுரைகள் ‘முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்’ என்பார்கள். ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரை இது பொய்த்த பழமொழியாகிவிட்டது. வன்னிப் படுகொலைகள் தொடர்பில் உள்ளுரிலாவது சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற வேண்டுமென்ற குறைந்தபட்சக் கோரிக்கை உள்ளுரிலும் சர்வதேசத்திலும் அன்று முன்வைக்கப்பட்படிருந்த போது அனைத்தினையும் புறந்தள்ளி சர்வதேச ஜனநாயகம் பேசிய சிறிலங்கா அரசு இன்று சர்வதேசத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. யுத்தக் குற்றம் தொடர்பாக ஆரம்பத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அன்று சிறிலங்கா அரசு ஏற்று நடந்திருந்தால் பிரச்சினைகள் இன்று இவ்வளவு பெரிதாக விஸ்பரூபம் எடுத்திருக்காமலும் இருந்திருக்கலாம். இந்த விடயத்தில் தங்களது முன்கையை நீட்டாதத…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று (12.01.2015) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலின்போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக மு…
-
- 21 replies
- 3.6k views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்pனர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்சவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பிலான ஆவணங்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக புலனாய்வுப் பிரிவில் மேர்வின் சில்வா இன்று முறைப்பாடு செய்துள்ளார். வெள்ளைவான் கலாச்சாரத்திற்கு கோதபாயவே பொறுப்பு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தாம் யாரையும் பாலியல் ரீதியாக து…
-
- 0 replies
- 568 views
-
-
Tuesday, June 14, 2011, 10:18உலகம், தமிழீழம் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உலகத் தமிழர் பேரவை(GTF) இந்தக் காணொளிகளை இலங்கைக்கு வெளியே கொண்டுவந்து அதனை சனல் 4 தொலைக்காட்சிக்கு கொடுத்துள்ளனர். அவர்களின் தன்னலமற்ற சேவையினை பாராட்டாமல் இருக்கமுடியாது ! ஒரு போரில் கைதாகும் போராளிகளையும் சரி, காயப்பட்ட எந்தவொரு இராணுவ வீரராக இருந்தாலும் சரி அவர்களை மரியாதையுடன் நடத்துவதோடு அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளையும் காலந்தாழ்த்தாது வழங்க வேண்டும் என்பதையே சர்வதேசச் சட்டமும் ஜெனீவா பிரகடனமும் வலியுறுத்துகிறது. ஆனால் இலங்கை இராணுவத்தினர் இவ்விதிகளை மீறியுள்ளதோடு, இறந்த மற்றும் காயப்பட்ட போராளிகளின் உடல்களை அவதூறு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் நிபு…
-
- 0 replies
- 1.9k views
-
-
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப்பயிற்சி நிறுத்தப்படும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரமொன்றை முன் வைக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/articles/2015/01/21/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%…
-
- 0 replies
- 602 views
-
-
சனல் 04 எதிரொலி – கொழும்பு பங்குச் சந்தை வீழ்ச்சி! Published on June 19, 2011 கொழும்பு பங்குச் சந்தை கடந்த வாரத்திலும் சரிவினை சந்தித்தது. முன்னைய வார முடிவில் 7,231.92 எனக் காணப்பட்ட அனைத்து பங்கு விலைச் சுட்டி, கடந்த வார முடிவில் 7,050.03 என சரிவு கண்டது. இதே போல முன்னைய வார முடிவில் 6,775.88 எனக் காணப்பட்ட மீலங்கா விலைச் சுட்டி, கடந்த வார முடிவில் 6,600.87 என சரிவு கண்டது. குறிப்பாக சர்வதேச அளவில் இலங்கையுடன் தொடர்புடைய சணல் 4 காணொளி விவகாரம் கடந்த வாரத்தில் சூடு பிடித்து இருந்தது. இதன் விளைவாக பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பங்குகளை விற்றதுடன் வார இறுதியிலேயே மீண்டும் கொள்வனவு செய்ய முன் வந்ததனை சந்தைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இவை தவிர மன…
-
- 0 replies
- 619 views
-
-
செவ்வாய் 10-04-2007 03:04 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து வருகின்றன - சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆழ்ந்த கவலை சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து வருவதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீண்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டு, 50 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்;கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவிலுள்ள அனைத்துத் தரப்பினரும் மனித உரிமைகளைப் பேணும் அனைத்துலக சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் எனவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்…
-
- 0 replies
- 603 views
-
-
எலும்புத்துண்டுகளுக்காக ..... Tamils who escaped terror praise SL Army * Tigers shot dead Tamils * Tamils were held hostage by LTTE It is a known fact that during the heavy fighting, the LTTE moved its heavy artillery positions near the safe zones which were declared by the Sri Lankan forces to be no fire zones. The LTTE not only moved its artillery within these no fire zones but also positioned it within the hospital compounds. The Tamils who objected to this move were brutally shot dead, states S Vasudevan, a Tamil of Sri Lankan origin resident in London UK. He states this and challenges many other allegations against Sri Lanka, in a letter sent…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா இலங்கையுடன் ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும், அதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அதிகாரிகள் குறிப்பிடுவதாகவும் அசோசியேட்டட் செய்திச்சேவை-(ஏபீ) தெரிவித்துள்ளது. இலங்கையின் ஏதேச்சாதிகார தலைவரின் ஆச்சரியமளிக்கும் தோல்வியும், ஒடுக்குமறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும், அமெரிக்காவுடன் இலங்கை உறவுகளை மீண்டும் சரிசெய்யும், சீனாவிடமிருந்து தனிமைப்படும் என்ற நம்பிக்கையை ஓபாமா நிர்வாகத்திற்கு அளித்துள்ளது. தென்னாசியாவிற்கான பிரதிவெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் மூலமாக உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவது குறித்த முக்கிய நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்கின்றது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் இலங…
-
- 2 replies
- 440 views
-
-
சமரச முயற்சிகளை வற்புறுத்தாமல் விட்டுப் பிடிக்க சர்வதேச சமூகம் முடிவு அரசும் புலிகளும் பட்டுத் தெளிய அனுமதிக்கலாம் எனத் தீர்மானம். சமாதானத் தீர்வுக்கான அமைதி முயற்சிகளில் அதிக முனைப்புடன் ஈடுபடுமாறு இலங்கை அரசையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் விடாது நச்சரித்து வந்த சர்வதேச சமூகம், அக்கோரிக்கை இரு தரப்புகளினதும் காதுகளில் ஏறாது என்பதைக் கண்டுணர்ந்த நிலையில், மேலும் அந்த வற்புறுத்தலைத் தொடர்வது இல்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. யுத்த முனைப்பில் தீவிரமாக இருக்கும் இரு தரப்புகளையும் மோதவிட்டு, அவை பட்டுத் தெளிந்து, மோதிக் களைத்து வரும் வரை விட்டுப்பிடிப்பது என இராஜதந்திர வட்டாரங்கள் முடிவு செய்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. இராஜதந்திர வ…
-
- 2 replies
- 853 views
-
-
மூதூரில் கிறிஸ்தவ மதகுருவால் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்: திருமலையில் ஐந்து சிறுமிகள் மீது பாலியல் வல்லுறவு [sunday, 2011-07-03 19:37:24] திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரால் சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பிட்ட சிறுவனைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய கிறிஸ்தவ மதகுரு தற்போது தலைமறைவாகியுள்ளார். இதேவேளை,திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து சிறுமிகள் பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சிறுமிகள் பதினொரு வயதிற்கு கீழ்ப்பட்டவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது. கோமரன்கடவை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் குச்சவெளி …
-
- 2 replies
- 895 views
-
-
Published By: DIGITAL DESK 3 10 AUG, 2023 | 11:19 AM யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியின் கீழான பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ்.நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள உணவகங்கள் திடீர் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் போது யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றும், பண்ணை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டு, பொது சுகாதார பரிசோதகரால், யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய தீர்வு யோசனையை முன்வைத்தால் புலிகளை பலவீனமடையச் செய்யலாம் [26 - April - 2007] -சோசலிச மக்கள் முன்னணி தெரிவிப்பு -டிட்டோகுகன்- இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைத்து விடுதலைப் புலிகளை அதனுள் சிக்கவைக்கும்போதே, அவர்களை ஆயுதங்கள் மூலமும் பலவீனமடையச் செய்ய முடியுமென சோசலிச மக்கள் முன்னணி சுட்டிக் காட்டுகிறது. லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை மக்கள் கட்சி உட்பட 5 கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் சோசலிச மக்கள் முன்னணி நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர் விதாரண …
-
- 11 replies
- 2.9k views
-
-
[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 08:25 GMT ] [ தி.வண்ணமதி ] ஐ.நா வழங்கியிருக்கும் தகவலின் அடிப்படையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களில் 63 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழேயே வாழுகிறார்கள். இவ்வாறு ஐநாவின் மனிதார்ந்த செயற்பாட்டிற்கான பணிகளை இணைக்கும் செயலகத்தின் இணையத்தளமான IRIN வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்குவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக நிறுவனங்களும் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துவந்தாலும்கூட மீள்குடியேறிய மக்கள் வாழ்வினைத் தொடர்வதற்குத…
-
- 0 replies
- 675 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் நாளைய தினம் கொழும்பில் உள்ள மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கெனவே குறித்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து காத்திரமான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக நாளைய இந்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெர…
-
- 2 replies
- 1.8k views
-
-
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சன்ன குணதிலக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை கடற்படையின் தொண்டர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் சூட்டும் நிகழ்வு நேற்று (18) மாலை பூஸ்ஸ கடற்படை உயர்…
-
- 0 replies
- 116 views
-
-
தமிழ் எம்.பி.க்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை: இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேட்டி மானாமதுரை, மே 1: இலங்கையில் தமிழ் எம்.பி.க்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழர் தேசிய இயக்க மாநிலப் பொதுச்செயலர் கா. பரந்தாமன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் விடுதலைப் புலிகள் மூன்றாவது முறையாக விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்போது அவர்களது பலம் இலங்கை அரசுக்குத் தெரிந்திருக்கும். புலிகளை ஆதரிக்கும் தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழகத்தில் ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகள் பேசி வரும் நிலையில்…
-
- 1 reply
- 794 views
-