ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
நாட்டின் பெயர் தனி சிங்கள பெயராகவும் சிங்களம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும் - சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் (இராஜதுரை ஹஷான்) உத்தேச புதிய அரசிலமைப்பில் நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்தவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரசகரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இரண்டாம் மொழியாக காணப்பட வேண்டும் என்று சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள். அதிகார பகிர்வு எவ்வழியிலும் இடம் பெறகூடாது. ஒற்றையாட்சியின் அம்சங்களை பாதுகாக்க விசேட பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் முன்வைத்த…
-
- 11 replies
- 1.4k views
-
-
தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என்றே பௌத்த தேரர்கள் கூறுகின்றனர் – மனோ தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தமிழர்களுக்கும் அதற்கு உதவுங்கள் என சர்வதேச சமூகத்துக்கும் தேரர்கள் மறைமுகமாகக் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த இன்று (திங்கட்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “கறுப்பு ஜூலை புகழ் கொண்ட ஒரு தேரர் உட்பட பெளத்த தேரர்களின் குழு மூன்று பிரேரணைகளை தேசிய அரங்கில் முன் வைத்துள்ளது. அதன்படி, நாட்டின் பெயரை ‘சிங்களே’ என மாற்றனும், அதிகார பரவலாக்கம் வேண்டவே வேண்டாம், சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி ஆகிய பிரேரணைகளை முன்வைத்துள்ளன. அதாவது இந்த தேரர்கள் மறைமுகமாக, ‘உங்களுக்கு இங்க…
-
- 1 reply
- 521 views
-
-
இலங்கையில் சீனத் தடுப்பூசிகள் இன்று முதல் பாவனைக்கு! இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னர் கூறியதைப்போன்று இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து 6 இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த வாரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இதேவேளை இலங்கை மக்களுக்கு இந்த தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து விசேட நிபுணர் குழுவினால், ஆராயப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும் இந்தத் தடுப்பூசிக்கு உல…
-
- 5 replies
- 770 views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் வீசிய கடும் காற்று கன மழை வீடுகள் பல சேதம் 16 Views முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளில் கனமழையுடன் வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. நேற்று மாலை நான்கு முப்பது மணி அளவில் குறித்த கிழவன்குளம் , பனிக்கன்குளம், மாங்குளம் பகுதிகளில் கன மழை பொழிந்தது. இதன்போது திடீரென வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு பல சேதங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் வீடுகளுக்குளும் மழைநீர் புகுந்து பல பொருட்களும் நாசமாகி உள்ளன. கிழவன்குளம் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக…
-
- 0 replies
- 329 views
-
-
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் யாழிலும், வவுனியாவிலும் போராட்டம் 1 Views மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், மதிய உணவு இடைவேளை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்று ஆளுநருக்கான மகஜரினை கையளித்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கமைய வங்கி ஊழியர்களின் பயிற்சிக் காலத்தை 2 வருடங்களுக்கு மட்டுப்படுத்துக , அதிகாரிகளே பயிற்சிக் காலத்தினை நீடித்து வங்கி ஊழியர்க…
-
- 0 replies
- 311 views
-
-
யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையில் விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்: அரசாங்கம்! யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன் இணைக்கும் விமான நடவடிக்கைகள் இலங்கை வழியாக தொடங்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் யாழ்ப்பாண விமான நிலையம் மூன்று கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருட்களில் நச்சு இரசாயனங்களின் ஆதிக்கம்! By Sayanolipavan இலங்கை மக்கள் உணவுப் பொருட்களின் ஊடாக நச்சுப் பொருட்களை அதிகளவில் உள்ளெடுத்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் அநுருத்த பாதெனிய. உலகில் உணவுகளின் மூலம் இரசாயன நச்சுப் பதார்த்தங்களை மிகக் கூடுதலான அளவில் உள்ளெடுப்பவர்கள் இலங்கை மக்கள்தான் என்ற மற்றொரு அச்சமூட்டும் தகவலையும் மருத்துவர் அநுருத்த பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.பாரதூரமான இந்த அதிர்ச்சி தருகின்ற தகவலானது சாதாரண ஒரு நபரிடமிருந்து வந்திருந்தால் அதை எம்மால் புறக்கணித்து விட முடியும். ஆனால் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க…
-
- 0 replies
- 261 views
-
-
தம்பட்டை பகுதியில் அதிரடிப்படைமுகாம் எதற்கு? மட்டு.மாவட்ட எம்.பி.இரா.சாணக்கியன் கேள்வி (வி.ரி.சகாதேவராஜா) மக்கள்செறிந்துவாழும் தம்பட்டையில் அதிரடிப்படைமுகாம் அமைக்கப்பட்டுவருகின்றது. மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் செல்கின்றோமா? அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. எமது வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குகள் பெற்றெடுத்த ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை.இதுதானா ஆளுந்தரப்பு தமிழ்அரசியல்வாதிகளின் அபிவிருத்தி? இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.. சாணக்கியன் எம்.பி. மேலும் க…
-
- 0 replies
- 213 views
-
-
மிருசுவிலில் 40 ஏக்கர் மக்கள் காணியை இராணுவத்திற்காக அபகரிக்க முயற்சி – எதிர்த்து போராட்டம்! தென்மராட்சி – எழுதுமட்டுவாள் வடக்கு (ஜே/34) கிராம சேவகர் பிரிவில் மிருசுவில், ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணியை 52வது இராணுவ படைப் பிரிவின் பயிற்சி முகாம் அமைப்பதற்காக நில அளவீடு செய்து சுவீகரிக்கும் முயற்சி இன்று (5) சற்றுமுன் முன்னெடுக்கப்பட்டது. நில அளவைத் திணைக்களத்தினால் இந்த நில அளவீட்டு சுவீகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இந்த சுவீகரிப்பு முயற்சியை முன்னதாக அறிந்த நிலையில் காலை 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்ற காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் திரண்டு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…
-
- 0 replies
- 365 views
-
-
ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஹம்பந்தோட்டை கம்பாஹா, பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அந்த போராட்டத்தின் போது உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் விதமாக பல நிகழ்வுகளை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது இதற்கமைய இன்று மாலை 3.30 மணியளவில் குறித்த மாவட்டங்களில், மக்கள் விடுதலை முன்னணியினை சார்ந்தவர்களின் ஆதரவின் கீழ் நினைவுச் சடங்குகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஹிங்குரகொட பகுதியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். நாட்டின் வரலாற்றிலும் தமிழ் …
-
- 0 replies
- 307 views
-
-
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேங்காய் எண்ணெயின் ஆபத்து குறித்து எச்சரிக்கும் விஜயதாச ஒரு பில்லியன் தேங்காய் எண்ணெய் துகள்களில் 10 க்கும் மேற்பட்ட எப்லடொக்சின் துகள்கள் இருந்தால், அது மனித உடலுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேங்காய் எண்ணெய் தொடர்பில் விஜயதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “பரிசோதிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகளில், ஆறு மாதிரிகள் 10 மற்றும் 14 இன் எப்லடொக்சின் மதிப்பை விட அதிகமாக இருந்தன, அவை ஐந்து மதிப்பை மீறின. அதில் எட்டு மாதிரிகளில் எப்லடொக்சின் இல்லை. அதாவது ஒரு பில்லியன் தேங்காய் எண்ணெய் துகள்களில் 10 க்கும் மேற்பட்ட எப்லடொக்சின் துகள்க…
-
- 1 reply
- 198 views
-
-
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை -இந்தியா கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புது டில்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சமீபத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு எந்தவொரு ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என தெளிவாகக் கூறியதாகக் குறிப்பிட்டார். உலகின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பல நாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதி கடந்த வாரமும் நடந்துள்ளன என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. மேலும் எந்தவொரு நாடும…
-
- 0 replies
- 257 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்தில் பணிபுரியும் 1000 சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி! கொழும்பு மாநகர சபையில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, கொழும்பு துறைமுக நகரத்தில் பணிபுரியும் 1000 சீன பிரஜைகளுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். சீனா நன்கொடையாக வழங்கிய 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கடந்த வாரம் இலங்கைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1207570
-
- 0 replies
- 343 views
-
-
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சஹால் மங்கல்ய நிகழ்வு புத்தருக்கு முதல் அறுவடை வழங்கும் வருடாந்திர சஹால் மங்கல்ய நிகழ்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அனுராதபுரத்திலுள்ள ஜெய ஸ்ரீ மகா போதியில் குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. 54ஆவது தேசிய சஹால் மங்கல்யாவை, விவசாய அமைச்சகம் மற்றும் வேளாண் சேவைகள் துறை ஆகியன இணைந்து, அட்டமாஸ்தானதிபதி டாக்டர் வென் பல்லேகம சிரினிவாச நாயக்க தேரர் வழிகாட்டலில் நடத்தின. பெரும்பாலான விவசாயிகள், சஹால் மங்கல்யாவில் கலந்துகொண்டு, ஆசீர்வாதங்களைப் பெற்றனர். மேலும் பாரம்பரியத்தின் படி, தங்கமுலாம் பூசப்பட்ட கிண்ணத்தில் நிரப்பப்பட்ட அரிசி, ஜெய ஸ்ரீ மகா போதி முன் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து…
-
- 0 replies
- 180 views
-
-
வெள்ளைவானை விட்டது வேறு எவரோ | என்னை பற்றி வெள்ளை வானை வைத்து பொய் பரப்பினர் – ஜனாதிபதி கோத்தாபய By Sayanolipavan என்னைப் பற்றி பொய்களைப் பரப்ப ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரம் உள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளினால் செய்யப்படுகின்றது. முன்னர் வெள்ளை வான்கள் மற்றும் சுறாக்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டேன். இப்போது சூழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.இவ்வாறு இன்று (3) வவுனியாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.வெடிவைத்தகல்லு கிராமத்தில் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,“இந்தவறிய மக்களின் பிரச்சினைகள் சிலருக்கு புரிவதில்லை. அவர்கள் இங்கு வருவதுமில்லை. மஹிந்த ஜன…
-
- 1 reply
- 445 views
-
-
இனப்படுகொலை விவகாரம் -சுமந்திரனின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் கண்டனம் 45 Views அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என மறைக்காதீர்கள் என சுமந்திரனின் கருத்துக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் பதில் அளித்துள்ளார். இனப்படுகொலை நடைபெற்றதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், “இனப்படுகொலை என்பது நேற்று இன்று நடந்தது இல்லை இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற ஒரு விடயம்.…
-
- 1 reply
- 438 views
-
-
மேய்ச்சல் தரை காணிகளை குறி வைத்து அபகரிக்கும் பெரும்பான்மையினர் 55 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரமுந்திரிகைச் செய்கை என்ற பெயரில் மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கந்தர்மல்லிச்சேனை, வெட்டிப்போட்டசேனை உட்பட பல பகுதிகளில் இவ்வாறான மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுத…
-
- 0 replies
- 397 views
-
-
போரில் பாதிக்கப்பட்ட மக்களின் சிறுதோட்டப் பயிற்செய்கையையாவது அரசு ஊக்குவிக்குமா..? 71 Views 1990 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்கள் வவுனியாவில் பூந்தோட்டம், அடப்பங்குளம், சிதம்பரபுரம் போன்ற பல கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களிலும், இந்தியாவிலும் அகதிகளாக வாழ்ந்தனர். அவர்களின் ஒரு தொகுதியினருக்கு மதவாச்சியையும், வவுனியாவையும் இணைக்கும் பிரதான வீதியில் வவுனியா நகர்ப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவில் 2000ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டு 100 குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் காணி வழங்கப்…
-
- 1 reply
- 357 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமையை ஒரு தரப்பினரது குறுகிய நோக்கிற்காக இரத்து செய்ய முடியாது. மாகாணசபை தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. தேர்தல் முiறைமைக்கு தீர்வு கண்டதன் பிறகு மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். மினுவாங்கொட பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. பழைய தேர்தல் முறையிலா அல்லது புதிய தேர்தல் முறையிலா மாகாணசபை தேர்தலை நடத்துவத…
-
- 1 reply
- 415 views
-
-
ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே எதிர்ப்பதாக கூறி எதிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் அத்தீர்மானத்தினை நிராகரிக்க முடியாது. காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் எனவும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றவகையில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு நாங்கள் இரையாக மாட்டோமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்~ தெரிவித்…
-
- 4 replies
- 468 views
-
-
யாழ்ப்பாணத்தில் இழுத்து மூடும் அபாய நிலையில் 30 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் மாத்திரம் அறுபது பாடசாலைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாயநிலை காணப்படுவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் யோ.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். அண்மையில் மீசாலை தெற்கு மதுவன் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இத் தகவலை குறிப்பிட்டார். இது குறித்து மேலும் கூறுகையில், தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளில் இணையும் மாணவர் தொகை வெகுவாக குறைவடைந்துள்ளது. மீசாலை கிழக்கில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இவ்வருடம் முதலாம் தரத்திற்கு …
-
- 34 replies
- 2.6k views
-
-
சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரியை தாக்க முடியுமா? நபரொருவர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவரினால் காரணமின்றி தாக்குதலோ அல்லது அதிகாரத்தை பயன்படுத்தும் செயற்பாடோ இடம்பெற்றால் அது தொடர்பில் குறித்த நபருக்கு பொலிஸில், பொலிஸ் தலைமையகத்தில் அல்லது பொலிஸ் உயரதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அதேபோல், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவும் அல்லது உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கொன்றை தாக்கல் செய்யவும் முடியும் என அவர் குறிப்பிட்டார். அவ்வாறு இன்றி சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரிக்கு எதிராக செயற்பட முடியாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். சமூக…
-
- 3 replies
- 938 views
-
-
ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கம்: மலையக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் – இராதாகிருஷ்ணன் April 4, 2021 Share 28 Views ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ” இலங்கையில் மத்திய மாகா…
-
- 0 replies
- 413 views
-
-
இழுவைப் படகுகளினால் மோதப்பட்டு உயிருக்கு போராடிய மீனவர்கள்- மாதகலில் சம்பவம் 17 Views நேற்றைய தினம் கடலுக்கு தொழிலுக்கு சென்ற மாதகல் பகுதி மீனவர்கள் இருவர் பபயணித்த படகு இந்திய இழுவைப் படகுகளினால் மோதப்பட்டு சரிந்துள்ளது. குறித்த மீனவர்கள் 15 மணிநேரத்தின் பின்னரே தேடிச் சென்ற மீனவர்களால் இன்று காப்பாற்றப்பட்டனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் மீன்பிடி நடவடிக்கைக்காக ஒரு படகில் நேற்று சென்றிருக்கின்றனர். இன்று காலை வரையில் அவர்கள் கரை திரும்பாத நிலையில் அவர்களைத் தேடி மாதகலைச் சேர்ந்த மீனவர்கள் சென்றிருக்கின்றனர். அதன் போது, கடலில் வலை மிதக்கப்பயன்படுத்தப்ப…
-
- 0 replies
- 288 views
-
-
காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியும் – அலுவலகம் தேவையில்லை – அரசாங்கம் காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அதனை இரத்து செய்ய நேரிடும் எனவும் கூறினார். கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்…
-
- 0 replies
- 237 views
-