ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் கைதாகியுள்ளார்! வஹாப் மற்றும் ஜிஹாத் வாதங்களை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து ‘இலங்கை ஜமாஅதே இஸ்லாமி’ அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ரசீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து இவரை கைது செய்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 301 views
-
-
உண்ணாவிரதப் பந்தலை அகற்றி காவல்துறையினர் அட்டகாசம்! 30 Views மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலை அகற்றி காவல்துறையினர் அட்டகாசம் செய்வதாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. சட்டத்தை மதித்து வீதி ஓரத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இன்றி அகிம்சை ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட காவல்துறையினர் செயற்பட்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் நோக்க…
-
- 2 replies
- 691 views
-
-
(எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர் நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தங்களை சந்திக்காமல் சென்றது ஏன் என போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 13வது நாளாக நேற்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் - நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கலே மரியாதை நிமித்தம…
-
- 0 replies
- 268 views
-
-
தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம் – நிராகரிக்கின்றோம் : ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவுக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளது. தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என…
-
- 0 replies
- 351 views
-
-
யாழ். காணி மறுசீரமைமப்பு ஆணைக்குழுவின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன! யாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதி அனுராதபுரத்திற்கு அனுராதபுரம் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தி.விமலன் உறுதிப்படுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்திற்கான காணி சீர்திருத்தத்திற்கான பிராந்திய அலுவலகம் இதுவரை காலமும் யாழ். கச்சேரியிலிருந்து செயற்பட்டு வந்த நிலையில், குறித்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் இரவோடு இரவாக, மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதல…
-
- 0 replies
- 342 views
-
-
யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. இதேவேளை இரத்மலானை- யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே உள்நாட்டு விமான சேவையையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசின் உதவியுடன் 300 மில்லியன் ரூபாய் செலவில், புனித மடு மாதா தேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்…
-
- 0 replies
- 436 views
-
-
சர்வதேசத்தை புறந்தள்ளி செயற்பட்டால் பேராபத்து ஏற்படும் – எச்சரிக்கும் சம்பந்தன்! இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதும் எமது வேண்டுகோளாகும். இதை நாம், 2009இல் போர் நிறைவுக்கு வந்தத…
-
- 10 replies
- 592 views
-
-
உலகில் எங்கும் இலங்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான கொள்கைகளை உடைய நாடு கிடையாது என சர்வோதய அமைப்பின் தலைவர் கலாநிதி ஏ.ரீ.ஆரியரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டுக்கு நாள் தோறும் வெளிநாடுகளில் வேலை செய்து கையில் எந்தப் பணமும் இன்றி பலர் நாடு திரும்புகின்றனர்.எனது மகன் வெளிநாடு ஒன்றின் விமான சேவை நிறுவனமொன்றின் பணிப்பாளர், அவருக்கு கோவிட் இல்லை. அவர் எங்களைப் பார்வையிட வந்து நான்கு ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கின்றார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலுக்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவிட வேண்டும் விமான டிக்கட்டுக்கு சில …
-
- 0 replies
- 429 views
-
-
எங்களது உறவுகளைத் தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது-அ.அமலநாயகி 17 Views “எங்களது உறவுகளை தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது,எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது“ என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். மேலும் வீதியோரங்களில் இருந்து தங்களது உறவுகளை தேடமுடியாத நிலையிலேயே தாங்கள் இன்று கண்ணீர்விட்டு வருவதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பு,மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்…
-
- 0 replies
- 279 views
-
-
http://static2.tamilmirror.lk/assets/uploads/image_09057ea04d.jpgசெ. கீதாஞ்சன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவிலில், 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று (11) காலை சிவராத்திரி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு, இம்முறையே சிவராத்திரி வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன. இதன்போது, முள்ளியவளை, தண்ணீருற்று, குமுழமுனை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலர் வழிபாடுகளில் கலந்கொண்டனர். அத்துடன், அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக, மக்கள் தெரிவித்தனர். Tamilmirror Online || 30 ஆண்டுகளின் பின்னர்…
-
- 1 reply
- 355 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையில் இயங்கும் பதினொரு அமைப்புகள் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை தடைசெய்வதுடன் அந்த அமைப்புகளின் தலைவர்களை கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தைக் கொண்டு புர்காவை உடனடியாக தடை செய்யவும், இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் உள்வாங்கப்பட்டுள்ள வஹாபி, சலபி கொள்கைகளை நீக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்தை சபையில் முன்வைத்து கருத்துக்களை கூறிய போத…
-
- 0 replies
- 407 views
-
-
( ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மத அமைப்பான ஜம்-இயத்துல் உலமா சபை வஹாபிசத்தை அங்கீகரித்துள்ளதாகவும், இஸ்லாமிய வஹாபிசத்தை அடியோடு ஒழிக்க கட்சி பேதமின்று ஒன்றிணைய வேண்டும் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் சபையில் ஆவேசமாக தெரிவித்தார். அதேபோல் இலங்கையில் திட்டமிட்ட முஸ்லிம் மயமாக்கல் இடம்பெற்றுக்கொண்டுள்ளது. நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொ…
-
- 0 replies
- 298 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம் இன்று கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது. எனவே உள்ளக விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்பதை இன்று நிரூபனமாகிவிட்டது எனவும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் இராச்சியம் தோற்றுவிட்டது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொண்டுவந்த சபை ஒத…
-
- 5 replies
- 672 views
-
-
வீட்டுத் திட்ட நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்-அரசாங்கத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் கடிதம் 21 Views தொடங்கப்பட்டு நிறைவுக்கு எட்டாத வீட்டுத்திட்ட நிலுவைத் தொகையை வழங்குமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார். இன்று அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “முன்னாள் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் காலப்பகுதியில் மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக ஆரம்பிக்கப்பட்ட வீட…
-
- 0 replies
- 430 views
-
-
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டம் 20 Views வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு, அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட சுகாதாரப் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அந்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப் பட்டுள்ளன. இதையடுத்து நிரந்தர நியமனக் கடிதம் பெற்ற சுக…
-
- 0 replies
- 246 views
-
-
நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி- அமைச்சர் சரத் வீரசேகர மாலைதீவை சேர்ந்த நால்வர் ஜஹ்ரான் ஹாசிமை பல தடவை சந்தித்தனர் ————— நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என புலனாய்வு பிரிவினர் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இப்ராஹிம் சகோதரர்களும் பல அமைப்புகளும் தாக்குதலை மேற்கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி வழங்கியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். கட்டாரை தளமாக கொண்ட நவ்பர் மௌவலி ஜஹ்ரான் ஹாசிமை தாக்குதலை மேற்கொள்ளுமாறு தூண்டினார்…
-
- 0 replies
- 237 views
-
-
முஸ்லிம் பிரிவினை வாதிகளில் அந்த ஐவர் யார்? உயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பங்களுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ள முஸ்லிம் பிரிவினைவாதிகள் ஐவரையும் அடையாளம் கண்டுக்கொள்வதற்கான விசாரணைகளை துரிதப்படுமாறுமாறு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா, பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு நேற்று (10) பணித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் தேடியறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆனைக்குழுவின் அம்பலப்படுத்தப்பட்ட காரணங்கள் அந்த சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக விசாரணை…
-
- 0 replies
- 359 views
-
-
கடந்த காலத் தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நா.வுக்கு சந்தர்ப்பம்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/Minister-ManikaVasagar-Transnational-Government-of-Tamil-Eelam.jpg கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு ஐ.நா.வுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், உலகெங்கும் போரினாலும் இனப் படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதில் ஐ.நா.வின் தேவை தற்போது கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்பு நிறுத்துவதன் மூலம் கடந்த காலத் தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நா.வுக்கு தற்போது வாய்ப்புக் கிட்டியுள்ளத…
-
- 0 replies
- 180 views
-
-
மட்டக்களப்பில் இருந்த இறுதி மிசனறியாக இருந்த அமெரிக்க துறவி மரணம் இலங்கை அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையின் கல்வி வளர்ச்சியில் அரும்பணியாற்றியவர்கள் மிசனறிகளாகும். இலங்கையின் பல பாகங்களும் வெள்ளையர்களின் ஆட்சியின்போது பாதிரியார்கள் கல்வியை வழங்குவதற்கு அர்ப்பணிப்பான சேவையினை வழங்கிவந்தனர். இவ்வாறான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகைதந்த ஜேசுசபை துறவியாக இருந்து இறுதிவரையில் சேவையாற்றிய பாதிரியார் ஒருவர் மட்டக்களப்பில் காலமானார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வித்துறைக்கு பெரும்பங்காற்றிவரும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கு 1947ஆம் ஆண்டு வருகைதந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய ஜேசுசபை துறவி அருட்தந்தை லலொயிட் லோறிஸ் தனது 94வது வ…
-
- 0 replies
- 291 views
-
-
மென்மேலும் பட்டப்படிப்புகளை படிக்கும் ஜனாதிபதி முதலில் மனித உரிமைகள் பற்றிய படிப்புக்காக பாலர் பாடசாலை செல்ல வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (9) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது இலங்கைக்கு மட்டுமே எதிரானது என்பது போலத்தான் இங்கே சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், மறுக்கப்படும் மனித உரிமைகளுக்காகவே அந்த அமைப்பு குரல் கொடுக்கிறது. மனித உரிமை என்பது தமிழர்களுக்கு மட்டுமன்றி, அனைத்து இன மக்களுக்கும் பொதுவான ஒன்றாகும். தற்போதைய பிரதமர் தான், முதன் முதலான ஜெனிவாவை இலங்கையர்களுக்கு அன…
-
- 4 replies
- 528 views
-
-
மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்து கலைக் களஞ்சியம் பிரதமரின் தலைமையில் வெளியீடு சைவ தமிழ் மக்களால் மகோன்னத நாளாக அனுஷ்டிக்கப்பட்டுவரும் மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்து கலைக் களஞ்சியம், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்து கலைக் களஞ்சிய உருவாக்கப் பணி 2014 ஆம் ஆண்டில் பன்னிரண்டு தொகுதிகளை நிறைவு செய்திருந்தது. அக்காலப்பகுதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் ஜனாதிபதியாக இ…
-
- 0 replies
- 245 views
-
-
மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு 18 Views உக்குளாங்குளம் மக்கள் குயிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தை அங்கிருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்புபட்ட அதிகாரிகளை விசாரணைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில் தொலைத் தொடர்பு கோபுரம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நகரசபைய…
-
- 0 replies
- 747 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பம் பாராளுமன்ற அமர்வு இன்று (10) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21 ) தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீது பாராளுமன்றத்தில் இன்று (10) ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் மூன்று நாள் விவாதத்தை முன்னெடுப்பதற்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர். இதனடிப்படையில், முதல் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. ஏனைய 2 நாள் விவாதங்களையும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்…
-
- 1 reply
- 374 views
-
-
நாட்டு மக்களை சந்தோசமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு இதற்கு எவர் மீதும் வஞ்சம் காட்டாமல், நீதியான நேர்மையான ஒரு ஆட்சியை இனியாவது ஏற்படுத்தி கொள்ளவேண்டும் அப்போது தான் பௌத்த தர்மத்தை ஏற்று அதன்படி ஆட்சி செய்கின்ற ஒரே நாடு என்ற பெருமையும் உங்களை வந்து சேரும் என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலமை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய ஒரு பகிரங்க கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நமது நாட்டிற்கு பொதுமன்னிப்பு என்பது புதிதான விடயமல்ல. தங்களுக்கு கடிதம் எழுதக்கூடிய பொருத்தமான தருணம் இது என்று நினைக்…
-
- 2 replies
- 455 views
-
-
பிறந்த குழந்தையை பார்க்க ஆண்கள் வாட்டுக்கு சென்றவர் யார்’ “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரான் குழுவுக்கும் ஹக்கீமுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தேர்தலுக்கு அக்குழு உதவியுள்ளது” என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமே தெரிவித்தார். “சம்பவமொன்றில் காயமடைந்த சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவரை பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு ஹக்கீம் சென்றிருந்தார். அந்த விவகாரம் தொடர்பில் தகவல்கள் கிடைத்தவுடன், அவரிடம் விசாரித்துள்ளனர்” என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்க…
-
- 2 replies
- 504 views
- 1 follower
-