Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்.! சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது. இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர். ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள்…

  2. தடை செய்யப்பட்ட 30 கிருமி நாசினிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விவசாய திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் கிருமிநாசினிப் பதிவாளர் ஆகியோருக்கு தெரிந்த இந்த கிருமிநாசினிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கிருமி நாசினிகளே இவ்வாறு இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. சட்டத்தின் அடிப்படையில் குறித்த 30 கிருமி நாசினிகளும் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பல்வேறு விற்பனைக் குறிகளின் ஊடாக இந்த கிருமி நாசினிகள் இலங்கையில் தொடர்ந்தும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://vannimedia.com/site/news_detail/13307

  3. பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சங்களில் 67 சங்கங்களின் பிரதிநிதிகள் பாரிசில் நேற்று சனிக்கிழமை பேரவையாக ஒன்றுகூடி ஈழத்தில் தமிழ்ப்படை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் சுதந்திரப் போராட்டத்துடன் அறுதியான முறையில் பிணைந்துள்ளோம் என பிரகடனப்படுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 419 views
  4. பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு 107 மில்லியன் ரூபா நிதியுதவி.! சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தினால் மட்டும் முடியாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கு பௌத்த தத்துவம் பெரும் பலமாக உள்ளது எனத் தெரிவித்தார். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். குறைந்த வசதிகளையுடைய விகாரைகளின் அபிவிருத்திக்கு பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தின் கீழ் 107 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. பௌத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு தற்…

  5. மட்டக்களப்பில் காளான் செய்கை மட்டக்களப்பின் 30 விவசாயப் பிரிவுகளில் காளான் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரயம்பதி பிரிவின் விவசாயப் போதனாசிரியர் குந்தவை ரவிசங்கர் தெரிவித்துள்ளார். காளான் செய்கை என்பது வீட்டுத் தோட்டத்தில் உள்ளடங்குகின்றது. இதில் வீட்டுப் பெண்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுகின்றார்கள் எனக் குறிப்பிட்டவர், காளான் உற்பத்தியாளர்களுக்கு கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் நிதி உதவியாக 50,000 ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். http://www.onlineuthayan.com/news/22345

  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 174 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 468 views
  7. ஈழத் தமிழர் படுகொலையைக் தடுக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து தனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதை திருப்பி அனுப்பி உள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாடு மாநில அரசால் 2006 ஆம் ஆண்டுக்கான 'கலைமாமணி' விருது கவிஞர் இன்குலாபுக்கு வழங்கப்பட்டிருந்தது. 'கலைமாமணி' விருது, எனக்கு கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்கவைத்துக் கொள்வதாக அமையும் எனவும் அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருக்கின்றார். ஏற்கனவே இந்திய மத்திய அரசால் வழங்கப்பட்ட 'பத்மசிறீ' விருதினை திருப்பி அனுப்பபோவதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. …

  8. -தீபா அதிகாரி வியட்நாமுக்கு வர்த்தகர் ஒருவரினால் ஏற்றுமதி செய்யப்படவிருந்த உயிருடான சிங்கி இறால்களை பண்டாரநாயக்க விமான நிலையத்திலுள்ள உயிர் பல்லினத்தன்மைப் பிரிவின் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். உயிருடனான 669 சிங்கி இறால்கள் 8 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் நீர்கொழும்பிலுள்ள சிங்கி இறால் ஏற்றுமதிக் கம்பனியின் உரிமையாளராவார். பெரிய சிங்கி இறால்களை அனுமதி பெற்று ஏற்றுமதி செய்ய முடியுமெனினும், 6 சென்ரிமீற்றரிலும் கூடுதல் நீளமான சிங்கி இறால்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67484-2013-05-17-08-31-57.html

  9. பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட அதிகம் பரவும் தன்மை கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) நாட்டின் பல பகுதிகளி ல் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) அதிக பரவும் தன்மை கொண்டது. இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பல பகுதிகளில் அடையாளம் - ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் | Virakesari.lk

  10. முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலய'த்தின் மீது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர், அதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையடுத்து தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்கான புதிய உபாயம் ஒன்றைக் கையாள்வதற்குத் தயாராகி வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான பாரிய முன்நகர்வை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர், தரைவழியாக முன்நகர முனையும் இரண்டு முனைகளிலும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பதாகத் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்கரை மணலும், புலிகள் அமைத்திருக்கும் பாரிய மணல் அணைகளைத் தாண்டிச் செல்வதும் அதில் பெருமளவுக்குப் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளும் படை…

    • 0 replies
    • 1.1k views
  11. பௌத்த துறவியாகும் முஸ்லிம் சிறுவன் : இலங்கையில் வரலாற்று சம்பவம் திம்புலாகல வன ஆச்சிரமமொன்றில் இணைக்கப்பட்ட 7 வயதுடைய முஸ்லிம் சிறுவனொருவன் பௌத்த துறவியாக திருநிலைப்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து திம்புலாகல வன ஆச்சிரமத்தின் தலைமை தேரர் மிலானே சிறியலங்கார தேரர் தெரிவிக்கையில், இவ்வாறு ஆச்சிரமத்தில் இணைக்கப்பட்ட சிறுவனின் தாய் வெளிநாடொன்றில் வசித்து வருகிறார். தந்தையாரான ஹமீட் ஸ்மைல் என்பவர் மகனை இங்கு கொண்டு வந்து இணைத்தார். குறித்த மாணவன் தற்போது இரத்தினபுரி சிறி சுதர்சனலங்கார என்ற நாமத்தில் தேரராக திருலைப்படுத்தப்பட்டு, சிங்கள, தமிழ் மற்றும் பௌத்தத்தை கற்கும் சிறுவர்களுடன் குற…

  12. 'ஒன்றுபடாவிட்டால் துரோகிகளாக பார்க்கப்படுவோம்' எஸ்.நிதர்ஸன் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கருத்து முரண்பாடுகள் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டின் நலனுக்கான ஒன்றிணைந்து செயற்படுவது போன்று, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்படத் தவறுவோமாக இருந்தால் துரோகிகளாக அல்லது துரோகம் செய்தவர்களாகவே பார்க்கப்படுவோம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 8ஆவது சர்வதேச வர்த்தக் கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வுகள், யாழ். பொது நூலக கேட்போர் க…

  13. மட்டக்களப்பு மாவட்ட, குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், விக்கிரகம் மற்றும் ஆலய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் மாங்காடு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரக திருட்டு மற்றும் கிரான்குளம் ஐயனார் ஆலய உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பரிவிலுள்ள குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்! கடந்த ஒரு சில வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்களி…

  14. இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டும்! இலங்கை தமிழர்களுக்கு கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் அதிகாரம் உள்ளிட்டவைகள் கிடைத்திட இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய மக்களவை உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார். அமெரிக்கா மக்களவை குழு அமைப்பு அழைப்பு விடுத்ததை ஏற்று அமெரிக்கா சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பைஜெயந்த் பாண்டா, சுப்ரியா சுலே, உதய்சிங், பிரதாப்சிங் பஜ்வா, பிரேம்தாஸ், பக்தசரண்தாஸ் உள்ளிட்ட எம்.பி குழுக்கள் அரசு முறை பயணமாக ஒரு வார காலம் அமெரிக்கா சென்றுள்ளனர். அதோடு, அங்குள…

    • 4 replies
    • 567 views
  15.  ‘அகதிகளை அகதியாக்காதீர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “1995ஆம் ஆண்டு அகதிகளாகி, வவுனியா பூந்தோட்டம் முகாமில், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்ற மக்களை அங்கிருந்து 30 கிலோமீற்றருக்கு அப்பால், குடியமர்த்தி அவர்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் நேற்று, இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள வவுனியா பூந்தோட்டம் முகாம் தொடர்பில், கேள்வியெழுப்பியிருந்த சுனில் ஹந்துநெந்தி எம்.பி , குறுக்கு கேள்வியை எழுப்பியே மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாகக் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.…

  16. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதிப் பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதி சிறிலங்காப் படையினரால் நான்கு புறங்களாலும் முற்றாகச் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில் ஜோர்தானில் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னுடைய பயணத்தை இடைநிறுத்திக்கொண்டு நாளை காலை அவசரமாக கொழும்பு திரும்புகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 464 views
  17. வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற பிரதேசங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவ தாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 33 ஆயிரத்து 584 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளதென குறிப்பிட்ட அவர், மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கம்பன் கழக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமற்போனோர் விவகாரம் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி ன்றன.குறித்த விசாரணைகள் ந…

    • 0 replies
    • 255 views
  18. உறவுகளைத் தேடி உண்ணாநோன்பிருக்கும் தாய்மாருக்கு ரெலோ ஆதரவு 28 Views காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேச நீதி கோரி திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோயிலுக்கு முன்பாக முன்னெடுத்திருக்கும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. குறித்த விடையம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ”போரின் இறுதியில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு ஐ நா மனிதவுரி…

  19. ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்ததற்காகவும் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த இந்திய அரசாங்கத்தைக் கண்டித்தும் தமிழ்நாடு தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 418 views
  20. மட்டு. காணி ஆணை­யாளர் மீதான துப்­பாக்கிப் பிர­யோகம்: சி.ஐ.டி.சிறப்புக் குழுவின் விசா­ர­ணை­களில் பல தக­வல்கள்; 30 பேரிடம் வாக்குமூலம் (எம்.எப்.எம்.பஸீர்) காணி மறு­சீ­ர­மைப்பு ஆணைக்குழுவின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பணிப்­பாளர் நேச­குமார் விமல்ராஜ் மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக பொலிஸ் தலை­மை­ய­கத்­தினால் அனுப்­பப்பட்ட குற்றப் புல­னாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) சிறப்பு பொலிஸ் குழு­வா­னது கொலை முயற்சி தொடர்பில் பல தக­வல்­களை சேக­ரித்­துள்­ளது. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதி­ரி­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆரச்­சியின…

  21. இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. இலங்கையைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணமும் வல்லரசுகளிற்கு இல்லை. இதை கோட்டாபய இராஜபக்ச என்ற இளைப்பாறிய முன்னைய இராணுவ அதிகாரி புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பௌத்த பிக்குகள் சிலர் கூறும் தப்பான சரித்திரத்தை முன்வைத்து தப்பான முடிவுகளுக்கு அவர் வரக் கூடாது என உறைக்கும்படி சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன். அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதிலில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், கேள்வி: இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகார…

  22. இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு உடந்தையாக இருந்த இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மன்மோகன்சிங்குக்கு இராமதாஸ் கடிதம் இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு துணையிருந்த இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இந்தியப் பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகள். உங்களுக்கு இருக்கும் திறமையையும் அனுபவத்தையும் கொண்டு அரசு நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும், கொள்கைகளை வகுப்பதிலும் புதிய தரங்களை ஏற்படுத்துவீர்கள் என்று ந…

    • 3 replies
    • 861 views
  23. 13ஆம் அரசமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்குத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21342

    • 0 replies
    • 316 views
  24. 08/06/2009, 11:28 [பிரித்தானியச் செய்தியாளர்] வணங்கா மண் கப்பலைத் திருப்ப அனுப்ப ஆலோசனை? “வணங்கா மண்” கப்பலிலுள்ள மனிதாபிமான அத்தியாவசியப் பொருள்களை இறக்கவிடாது, கப்பலைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. இதேவேளை, பொருள்கள் இறக்கப்பட அனுமதிக்கப்படலாம் எனவும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு என, புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் சேகரிக்கப்பட்ட 884 மெட்றிக் தொன் அத்தியாசியப் பொருள்கள் அனுப்பி வைப்பட்டிருந்தன. இந்தப் பொருள்களையும், அதனை ஏற்றிச்சென்ற கப்பலையும் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ள சிறீலங்கா அரசு, பொருள்களை இறக்க விடாது, கப்பலை திருப்பி அனுப்புவதற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.