Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து பிரதமர் மஹிந்தவின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையை முன்னிட்டு பலாத்கார தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கூறி குறித்த போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார் முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படு…

  2. தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கஜேந்திரன் திட்டவட்டம் 14 Views தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின் செ. கஜேந்திரன். தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: “பொத்துவில் தொடக்கம…

    • 6 replies
    • 903 views
  3. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் முஸ்லிம் தலைவர்களுக்கு மறுப்பு முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ரவூப்ஹக்கீம் ரிசாத் பதியுதீன் உடனான பாக்கிஸ்தான் பிரதமரின் சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு காரணங்களிற்காகவே இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டதன் பின்னால் அரசியல் நோக்கங்கள் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான முடிவுகளை இருநாடுகளையும் சேர்ந்த அரசியல்குழுவொன்றே எடுக்கி…

  4. காணாமல் போனவர்கள் விவகாரம் – உறவுகளின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டும் – அமெரிக்கா 26 Views காணாமல் போயுள்ள தங்களது அன்புக்குரியவர்களை எண்ணி ஏங்கும் உறவுகளின் உணர்வுகளை பொறுப்புள்ள அரசாங்கம் மதித்துச் செயற்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டேப்ளிட்ஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “உங்கள் மகனையோ அல்லது உங்கள் கணவரையோ இழப்பது குறித்து கற்பனை செய்து பாருங்கள். அப்போதே தங்கள் உறவுகளுக்கு என்ன ஆனது? என எதுவுமே தெரியாவர்கள் அனுபவிக்கும் துயரம் உங்களுக்கும் தெரியும்“ என அவா் குறிப்பிட்டுள்ளார். வட பகுதிக்கு வந்துள்ள அமெரிக்க தூதுவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகளைச்…

  5. யாழ்.தீவக மின்திட்ட விவகாரம் – சர்வதேச ஏல விதிகளை சிறீலங்கா பின்பற்ற வேண்டும் 26 Views வடமாகாணத்தின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறியளவிலான மின்னுற்பத்தி செயற்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 3ம் தரப்பினாரால் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று கூறியிருக்கும் சினோசோர் ஹைபிரிட் ( பீஜீங்) டெக்னோலொஜி லிமிட்டெ நிறுவனம், அதன் உண்மைத்தன்மை தொடர்பிலும் விளக்கமளித்திருக்கிறது. இது குறித்து சினோசோர் ஹைபிரிட் (பீஜிங்) டெக்னோலொஜி லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, “அண்மையில் இலங்கையின் வடபகுதியிலுள்ள 3 தீவுகளில் சிறியளவிலான மின்னுற்பத்தித் திட்டத்தை ஆர…

  6. சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/M.K.Sivajilingam-1.jpg தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டிலிருந்த அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! | Athavan News

  7. இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் அவர் இவ்வாறு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார் (adaderana.lk)

  8. பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது – எஸ்.சிவயோகநாதன் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/scv20210223_151128-720x450.jpeg பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் விசாரணைகள் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது என சிவில் அமைப்புக்களின் இணைத்தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் நீதிமன்றக் கட்டளைகளை மீறிச் செயற்பட்டாதாகத் தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு பொலிசாரினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க…

  9. எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை! கருணா திட்டவட்டம் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் விட்டுகொடுக்க மாட்டோம் என மஹிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு அம்பாறை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர், இரவு கல்முனை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வரு…

  10. அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர் நேற்று திங்கட்கிழமை விசாரணைகளை முன்னெடுத்தனர்.இந்நிலையில் அமெரிக்க தூதுவர் நாளையதினம் யாழ்பாணம்வரவுள்ள நிலையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை சந்தேகத்தை ஏற்ப்படுத்துவதாக தெரிவித்த அவர் அரசு இவ்வாறான அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என அவர் தெரிவ…

  11. யாழ். கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிக்க ஆர்னோல்ட் உடன்பட்டிருந்தார்- மணிவண்ணன் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இணங்கியிருந்ததாக தற்போதைய முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே, குறித்த கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும் அதனைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பின்போது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தினைக் கையேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக கலாசார நிலையத்தை இயக்குவதற்கான உத்தியோகத்தர…

  12. வில்பத்து அண்மித்த அழிவில் அரசியல்வாதிகளின் தலையீடு அம்பலம் February 22, 2021 வில்த்து தேசிய பூங்காவின் இடை வலய வனப் பிரதேசம் (Buffer zone) அரசியல்வாதிகளின் உதவியுடன் மேலும் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் குழு குற்றம் சாட்டுகிறது. கற்றாழை பயிர் செய்கைக்காக, வில்பத்து தேசிய பூங்காவில் இடை வலயப் பிரதேசங்கள் மேலும் அழிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய, வில்பத்து தேசிய பூங்காவின் இடை வலயத்தின், ராஜாங்கனய யாய 18 கிராமத்தில் அமைந்துள்ள வனப் பிரதேசம், வரையறுக்கப்பட்ட அவுரா லங்கா தனியார் நிவனத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக, இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்…

  13. தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள் 11 Views எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை விட வலிமையற்றது எனவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் சமர்பிக்கவுள்ள தீர்மானத்தின் பூச்சிய இலக்கம் கொண்ட வரைபு இலக்கு ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. அதில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தைகள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன. தமிழர்கள்…

  14. பாகிஸ்தான் பிரதமரின் வருகை – ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்! பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார். இந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணிக்கு பலவந்த தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் …

  15. புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்த இருவர் கைது! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்த நபர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாரென கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த குறித்த நபரின் தொலைபேசியை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட அமைப்பின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்…

  16. இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மாவை சந்திப்பு இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் போது வடக்குகிழக்கின் அபிவிருத்தி தொடபான இந்தியாவின் நிலைப்பாட்டை மீள வலியுறுத்தியுள்ள தூதுவர் 13 வதுதிருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் அர்த்தப்பூர்வமான அதிகாரப்பகிர்வு என்பதையும் வலியுறுத்தியுள்ளார். Thinakkural.lk

  17. ஜெனீவாவில் இலங்கையை இந்தியா ஆதரிக்கும் - ஜி.எல். பீரிஸ் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது.ஜெனிவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும். அதற்கான அவசியமும் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தமது வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும். இலங்கை நாட்டின் உள்ளக விவாரத்தில் தலையிடவும்.இலங்கைக்கு எதிராக செயற்படவும் மனித உரிமை ஆணையாளருக்கு அதிகாரமில்லை என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் , கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஷ் தெரிவித்தார் பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://vanakkamlondon.com/world/srila…

  18. 5 கோடி செலவில் அபிவிருத்தியாம்..! ஒரு பயனும் இல்லை என்கின்றனர் மீனவர்கள், கேள்வி கேட்டால் விழி பிதுங்கும் அதிகாரிகள்.. நல்லாட்சி அரசாங்க காலத்தில் சுமார் 5 கோடிக்கு அதிகமான தொகை ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட அராலி மேற்கு இறங்குதுறை அப்பகுதி மீனவ அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றப்படாத திட்டமாக முடிவுறுத்தப்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அராலி மீனவ மக்களின் வாழ்வாதார தொழிலாக மேற்கொள்ளப்படும் மீன்பிடி குறித்த இறங்குதுறையைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறித்த அராலி இறங்குதுறை மீனவ அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய தமது இறங்கு துறையை ஆழப்படுத்தி தமது வள்ளங்கள் கட்டுவதற்கு ஏற்ற வகையில் இறங்குதுறையை புனர…

  19. ஜெனிவாச் சவாலை முறியடிப்போம்! - கோட்டா சூளுரை.! "நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாச் சவாலை நாம் முறியடித்தே தீருவோம். புதிய பிரேரணையையும் வலுவிழக்கச் செய்வோம்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத் ‍தொடர்பில் இலங்கை குறித்து விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ள நிலையில் புதிய பிரேரணை ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தநிலையில், ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை நேற்று ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியபோதே …

  20. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வட கிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று (19.02.2021) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகைதந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர். வடக்கில் வல்வெ…

  21. சிறுபான்மை சமூகங்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன – ஐநா 41 Views உலகம் முழுவதும் சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் முதல்நாள் அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். மனித நல்வாழ்வுக்கு பல்லுயிர் அடிப்படை என்பது போல, சமூகங்களின் பன்முகத்தன்மையும் மனிதகுலத்திற்கு அடிப்படை என்பதை சுட்டிக்காட்டிய அவர், சிறுபான்மை சமூகங்கள் கலாச்சார வளர்ச்சிக்கு மு…

  22. பிரேரணை பற்றி பிரித்தானியாவுக்கு ரெலோ கடும் விசனம் தெரிவிப்பு 75 Views எதிர்வரும் மாசி 22 ல் ஆரம்பிக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவின் தலைமையில் இலங்கைமீது கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையின் மாதிரி வடிவம் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணையை பிரித்தானியாவின் தலைமையில் மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்குமுகமாக காத்திரமானதாக அமைந்திருக்கவில்லை என்பதில் ரெலோ கடும் விசனத்தை பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவல்கள் காரியாலயத்திற்கு த…

  23. யாழ்.புங்குதீவிலிருந்து படகுமூலம் மன்னார் சென்ற இந்திய தூதரக அதிகாரிகள்..! மணல் திட்டுக்கள் குறித்து ஆராய்வது ஏன்..? யாழ்.புங்குடுதீவு - குறிகட்டுவானில் இருந்து மன்னார் வரை படகில் இந்திய தூதரக அதிகாரிகள், குடும்பஸ்தர்கள் நேற்றைய தினம் கடல்வழிப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். யாழ்.இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், அவர்தம் குடும்பத்தவர்கள், பிள்ளைகள் என சுமார் 30பேர் நேற்றைய தினம் படகு மூலம் புறப்பட்டு மன்னாரை அடைந்தனர். இவ்வாறு மன்னார் வரை கடலில் பயணித்த தூதரக அதிகாரிகள் மீண்டும் கடல்வழியாகவே யாழ்ப்பாணம் திரும்பினர். யாழில் உள்ள தீவுகள் சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுகளும் அதனைச் சூழவுள்ள கடலும் அனைவரின் கவனத்தையு…

    • 7 replies
    • 854 views
  24. தமிழர்கள் தமது கௌரவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும் – இரா.சம்பந்தன் தமிழர்கள் தமது கௌரவம், சமத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது கௌரவத்தையும் சமத்துவத்தையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். இதனை புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் மிகவும் உறுதியாக வலியுறுத்தியிருக்கின்றோம். குறித்த பிரச்சினை பல வருடக…

  25. உலக சாரணர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது 20 Views உலக சாரணர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.சர்வதேச சாரணர் தின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றன. சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவுல் பிரபு அவர்களின் பிறந்த தினததை சரணர்கள் உலக சாரணர் தினமாக அனுஸ்டிக்கினறனர். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதான நிகழ்வு திருநீற்றுப்புங்காவில் உள்ள பேடன் பவல் சிலையருகே நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 231வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.