Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை! முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது. குருந்தூர் மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு குறித்த எழுத்துமூல அறிவிப்பில் கோராப்பட்டுள்ளது. குறித்த 400 ஏக்கர் காணியில், சுமார் 150 ஏக்கர் காணி, தண்ணி முறிப்பு கிராமத்திற்கு உரிய தமிழ் மக்களுடையது என்பதுடன், மிகுதி காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குவதாக கூறப்பட…

  2. வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பெற்றோரால் குழப்பநிலை 52 Views வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகம் இன்று (22) முற்றுகையிடப்பட்டது. அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் பாடசாலை தவணை விடுமுறையையடுத்து அவர்கள் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைக்கப்பட்டிருந்தனர். இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, பாட…

  3. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன், இந்த பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என இயன்றவரை இலங்கை அரசாங்கம் போராடி வருகின்ற நிலையில் அவர்களுடன் இணைந்து ஒரு சில தமிழ் தரப்புக்களும் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த பிரேரணையில் வலு கிடைய…

  4. நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் சீனா- இலங்கை கையெழுத்து! சீனா- இலங்கை ஆகிய இருநாடுகளும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி (சி.பி.எஸ்.எல்) மற்றும் பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா (பி.பி.ஓ.சி) ஆகியற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் அதிகளவு சீனப் பொருட்களே இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்தவகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில், சீன இறக்குமதி, 3.6 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. குற…

  5. சிறிலங்கா மீதான தீர்மானத்தின் பின்னணியில் புலம்பெயர் சமூகம் – அமைச்சர் பீரிஸ் குற்றச்சாட்டு 7 Views “புலம்பெயர் சமூகத்தின் வசமுள்ள அதிகபட்ச பலமும், ஒருங்கிணைப்பு மற்றும் பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தியே இலங்கைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எமது நாட்டின் மக்கள், அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் இது பாதிக்காது” இவ்வாறு கூறியிருக்கின்றார் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தவை வருமாறு: “வெளிவிவ…

  6. புலன்விசாரணைகளை ஆரம்பிக்க அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க அடிப்படை சட்டத்தேவைப்பாடுகள் இல்லாத நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருக்க கூடாது என நாம் எமது வாதத்தை முன் வைத்தோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நீதிமன்ற உத்தரவை மீறி முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்ற அவமதிப்பை மேற்கொண்டார்கள் என பருத்தித்துறை , நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்க கூடாது என கோரி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பிலான விசாரணையில் இன்றைய தினம் திங்கட்கிழ…

  7. யாழ்ப்பாணம் - நல்லூரில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கும் யாழ் மாநகர சபை உறுப்பினருக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நல்லூரில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில் பொலிஸாரின் பாதுகாப்போடு அனுமதி பெறாது கொட்டகை அமைத்து நேற்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் ஏனைய தமிழ் ஆயுத குழுக்களாலும் கடத்தப்பட்டு,கொல்லப்பட்டோருக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ் சிவில் சமுக அமைப்பு எனும் குழுவினரால் குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த இடத்தில் அனுமதி பெறப்ப…

  8. (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குத் தமது கண்டனத்தை வெளியிடும் வகையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனத்தினால் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளத்தின் தேசிய அமைப்பாளர் இஸடீன் கூறியதாவது: இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர் சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாவார். அவர் எமது நாட்டின் மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்த இராணுவத்த…

    • 8 replies
    • 922 views
  9. சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ் சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க அரசாங்கம் தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த புதிய விதிமுறைகள் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பிலும் சேர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தங்கள் இராணுவத்தை பாதுகாக்க மற்ற நாடுகள் சட்டங்களை வகுத்துள்ளன என்றும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார். அதன்படி கொண்டுவரப்படும் புதிய சட்டதிட்டங்களின் படி இராணுவத்தினர் மீது வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது அவர்…

  10. மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது! மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை கட்சியை விட்டு நீக்குவதற்கும், அவர் வகிக்கும் பதவிகளை பறிப்பதற்கும் மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மத்திய செயற்குழு மற்றும் தேசிய சபை ஆகியன ஒப்புதல் வழங்கிய பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் இராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். இதன்போது அவர் கூறியவை வருமாறு, ” தெரிந்து துரோகம் செய்தவர்களிடம் நியாயம்…

  11. ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடயத்தை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பின திஸ்ஸ அத்தநாயக்க, அமர்வின் முடிவில் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இராணுவமயமாக்கல் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டுகிறது என குறிப்பிட்ட அவர் இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த…

    • 0 replies
    • 363 views
  12. மாகாணசபை தேர்தல் குறித்து புதிய சட்டம் விரைவில் – தேர்தல் ஆணையாளர் நாயகம் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து புதிய சட்டத்திற்குத் தேவையான பரிந்துரைகளை அடுத்த சில நாட்களில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமாக அமைந்தாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்ட சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்ற பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய் யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk

    • 0 replies
    • 306 views
  13. அரசிற்கு கர்தினால் விடுத்துள்ள எச்சரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரச தவறிவிட்டால் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தேவ ஆராதணை ஒன்றை அடுத்து மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எந்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயம் கிடைக்கும் வரையில் மக்களுடன் இருப்பதாகவும் நியாயம் நிலை நாட்டப்படுவதை பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசிற்கு கர்தினால் விடுத்துள்ள எச்சரிக்கை (adaderana.lk)

  14. ராஜபக்ஷவுடன் மனம் கசந்து தனிவழி செல்கிறார் விமல் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச அதிரடியான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அவரது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு தீர்மானத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் முன்னணியின் அரசியல் சபைக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக நியமிக்கவேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து ராஜபக்ஷர்களுக்கு இடையிலும் அரசாங்கத்துக்குள்ளும் பொதுஜன பெரமுனவுக்குள்ளும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tam…

    • 2 replies
    • 473 views
  15. எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எனக்கு புற்றுநோய் இருந்தது. அதனை முதல் கட்டத்திலேயே கண்டறிந்தமையினால் குணப்படுத்த முடிந்ததென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியுள்ளதாவது, நான் அரசியலில் மாத்திரம் பிரவேசித்து இருக்காவிட்டால் பணக்கார பெண்மணியாக இருந்திருப்பேன். இதேவேளை நானொரு உண்மையயை கூற விரும்புகின்றேன். எனக்கு சில வருடங்களுக்க…

    • 5 replies
    • 524 views
  16. எம்.சி.சி உடன்படிக்கை குறித்து முக்கிய அறிவித்தல் எம்.சி.சி உடன்படிக்கை குறித்து முக்கிய அறிவித்தலைச் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அதன்படி அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடப் போவதில்லையென என இன்றைய தினம் சட்ட மா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். Thinakkural.lk

    • 0 replies
    • 340 views
  17. பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் அனுமதி இல்லாமல் போதைப்பொருட்கள் எந்த வழிகளிலும் போக முடியாது எனவும் முஸ்லிம் பகுதிகளில் பள்ளிவாசல்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்து அவ்வாறு போதைபொருளை பாவிப்பவர்களை பகிரங்கமாக கொண்டு வந்து பத்து பிரம்படியாவது கொடுப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தால் மிக நன்றாக இருக்கும் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்க…

    • 3 replies
    • 417 views
  18. கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மோசடி!மகஜர் கையளிப்பு! March 22, 2021 கிழக்கு மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பரீட்சாத்திகள் விசனம் தெரிவித்தனர். கிழக்கு மாகாண ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை சேர்த்துக்கொள்ளும் நோக்கில், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இப்போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. அதில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய 03 மாவட்டங்களில் இருந்து சுமார் 600க்கும் மேட்பட்ட பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் …

  19. சிறுபான்மையினருக்கு எதிரான புதிய ஒழுங்கு விதிகளுக்கு முன்னணி சட்ட வல்லுநர்கள் கண்டனம்! March 21, 2021 உலகின் பல நாடுகளிலுள்ள முன்னாள் நீதியரசர்கள், முன்னணி சட்ட வல்லுநர்கள், சட்டத்துறை பேராசிரியர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உறுப்பினர்களாக இருக்கும் பன்னாட்டு சட்டவாளர்கள் ஆணையம் (ஐ சி ஜே), இலங்கையின் தீவிரவாத சித்தாந்தங்களிலிருந்து விடுபடும் ஒழுங்கு விதிகளை கடுமையாக கண்டித்துள்ளனர். மிகவும் கொடூரமான இந்த ஒழுங்குவிதிகள் வகைதொகையின்றி நிர்வாக ரீதியாக வழக்கு விசாரணையின்றி மக்களைத் தடுத்து வைக்க வழி செய்கிறது. இந்த ஒழுங்குவிதிகள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரைச் சமமற்ற வகையில் இலக்கு வைக்கக் கூடும் என்று ஐ சி ஜே எச்ச…

  20. சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே முன்னுரிமை! சீன கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும்போது இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் முன்னுரிமை வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார். சீன அரசாங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது இலங்கை சீனாவிலிருந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காகவே சீன அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில் இலங்கையிலுள்ள சீன பிரஜைகளின் எண்ணிக்கை குறித்தும் இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1203699

    • 8 replies
    • 676 views
  21. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை – வாக்கெடுப்பு இன்று! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த பிரேரணைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. விவாதத்தின் நடுவில், சில நாடுகள் தலையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு பெரும்பாலும் நாளை இடம்பெற வாய்ப்புள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான ஜேர்மனி, கனடா, வட…

  22. இலங்கையை ஐ.சி.சிக்கு பாரப்படுத்த உதவுமாறு கோரி தென்னாபிரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம்! 14 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த உதவுமாறு கோரி தென் ஆபிரிக்காவுக்கான மேன்முறையீட்டுக் கடிதம் ஒன்றை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரெழுச்சி இயக்கம் இன்று அனுப்பிவைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென் ஆபிரிக்காவானது உலகின் அதிகாரம்மிக்க நாடுகளில் ஒன்றாகவும், இனவொதுக்கலின் வலிக்கு உட்பட்டும், சர்வதேச விவகாரங்களில் ஈடுபாட்டைக் கொண்டும் உள்ளதுடன் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த புரந்துணர்வையும் கொண்டுள்ளதால், ஐக்கிய இராச்சி…

  23. சிங்கள மக்களை இந்தியா தொடர்ந்து காப்பாற்றும் – சிறீலங்கா நம்பிக்கை 71 Views மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவின் ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதாக இந்தியா தொடர்ந்து தெரிவித்துவருவதால் அது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணைக்குழுவில் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என தாம் நம்புவதாக சிறீலங்காவின் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். எனினும் கொரம்பகேயின் இந்த கருத்துக்கு ஆதரங்கள் இல்லை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. செயலாளரின் இந்த கருத்து தொடர்பில் தான் எதனையும் கூற விரும்பவில்லை என சிறீலங்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் பேச்சாளர் எடோஸ் மத்தியூ புன்னூஸ் தெரிவித்துள்ளார். …

  24. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த முக்கியமான ஒலிநாடா ஒன்றை பெற்றுக்கொள்ளவே தான் கடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் சுஜீவ கமகே தெரிவித்துள்ளார். சென்ற பத்தாம் திகதி கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குறித்த ஊடகவியலாளர் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இதன்போது தான் கடத்தப்பட்ட முறை தொடர்பாக சுஜீவ கமகே விளக்கமளித்தார். தான் பணியாற்றும் சியரட்ட என்ற செய்தி இணையத்தளத்திற்குத் தான் எழுதுவதற்காகச் சேர்த்து வைத்திருந்த அரசாங்கம் பற்றிய ஒலிநாடாவை அழிப்பதே கடத்தல்காரர்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார். கறுப்பு நிற வாகனம் ஒன்றில் தன்னைக் கடத்தி சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை செய்த…

  25. சுயநிர்ணய உரிமையை ஐ.நா. பெயரளவில் வைத்திருப்பதால் பயனில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான திட்டமிடல் தொடர்பான பொது விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையை பெற்றிட நியாயமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள உரித்துடையவர்கள் என விய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.